சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Fears of a Chinese economic slowdown

சீனப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு பற்றிய அச்சங்கள்

By John Chan
1 July 2010

Use this version to print | Send feedback

சீனப் பொருளாதாரத்தை பற்றிப் பெருகிய உறுதியற்ற தன்மை உலகப் பங்குச் சந்தைகளில் தீவிர சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சொத்துக்கள் ஊகம் மற்றும் அரசாங்கத்தின் ஊக்கப் பொது நடவடிக்கைகள் பற்றி கவலைகள் அதிகரித்துள்ளதுடன் நாட்டின் மலரும் கார்த் தொழிலில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் குவிந்திருப்பதும் கவலைகளை அதிகரித்துள்ளன.

அமெரிக்காவில் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட Conference Board என்னும் அமைப்பு சீனாவிற்கான முக்கிய பொருளாதாரக் குறியீட்டை (Leading Economic Index for China) திங்களன்று வெளியிட்டுள்ளதானது உடனடித் தூண்டுதலுக்கு காரணம் ஆகும். ஏப்ரல் மாதம் முதலில் 1.7 சதவிகிதம் குறியீட்டில் ஏற்றம் என்று காட்டப்பட்டது பின்னர் திருத்தப்பட்டு 0.3 சதவிகிதம் தீவிர குறைப்பிற்கு உட்பட்டது. இது சீனாவில் இரண்டாம் அரை ஆண்டில் வளர்ச்சிக் குறைவு பற்றிய அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது. Conference Board முதல் காலாண்டில் இருந்த 12 சதவிகித வளர்ச்சியில் இருந்து ஆண்டு வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதம் எனக் குறைந்துவிடும் என்றும் கணித்துள்ளது.

பெய்ஜிங்கில் Conference Board China Centre லேயே உள்ள பொருளாதார வல்லுனர் பில் ஆடம்ஸ் செய்தி ஊடகத்திடம் கூறினார் : “[குறியீடு] எழுச்சிப் போக்கு கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து நிதானமாகத்தான் உள்ளது. இது விரைவான வளர்ச்சி வரும் என்ற முன்கருத்தைக் கொள்வதற்கு வலுவான அடிப்படையைக் கொடுக்கவில்லை. குறியீட்டின் பெரும்பாலான கூறுபாடுகள் அதிகரித்துள்ளன, ஆனால் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் எதிர்பார்ப்புக்கள் சரிந்தன. மேலும் முந்தைய ஆறு மாதங்களில் பெரும்பாலும் புதிய ஏற்றமதிக்கான கோரிக்கைகளும் வரவில்லை.”

ஐரோப்பிய வங்கிமுறை, அமெரிக்க நுகர்வோரின் வலுவற்ற தன்மை, வேலையின்மை புள்ளி விவரங்கள், ஆகியவற்றுடன் வளர்ச்சியைப் பற்றிய திருத்தத்தின் செய்தியும் சேர்ந்த நிலையில் உலகப் பங்குகள் சரியத் தொடங்கின. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் எவ்விதக் குறைப்பும் சீனப் பொருட்கள் மீதான தேவையை பாதிக்கும் என்பதால் சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய அச்சங்கள் அதிகரித்தன. உலக வங்கியும் சீனாவில் வளர்ச்சிவிகிதம் குறையும் என்றும் இந்த ஆண்டு அது 9.5 சதவிகிதம் என்றும் 2011ல் 8.5 என இருக்கும் என்றும் கணித்துள்ளது.

செவ்வாயன்று ஷாங்காய் கூட்டுக் குறியீடு 108.23 புள்ளிகள் அல்லது 4.3 சதவிகிதம் சரிந்தன. இது மே 17ம் திகதிக்குப் பின்னர் மிகக் குறைந்த நிலை என்பதுடன் 14 மாதங்களில் மிக மோசமான சரிவு ஆகும். ஷாங்காய் கூட்டுக் குறியீடு இந்த ஆண்டு 22 சதவிகிதக் குறைவைக் கண்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக சீனாவில் ஏற்பட்ட அதிக வளர்ச்சி விகிதங்கள் அரசாங்கத்தின் பெரும் ஊக்கப்பொதித் திட்டங்களால் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றுள் 2008ம் ஆண்டு கடைசியில் இருந்து வங்கிக் கடன் கொடுத்தலில் பெரும்விரிவாக்கம் அடங்கியிருந்தது. 2009ல் வங்கிகள் 9.6 டிரில்லியன் யுவான்களை (அமெரிக்க$1.4 டிரில்லியன்) கடன் கொடுத்தது. அரசாங்கம் இந்த ஆண்டு குறைவாகக் கடன் கொடுக்க வேண்டும் என்ற வரம்பை விதித்திருந்தாலும், இலக்கு அப்படியும் 7.5 டிரில்லியன் யுவான் என்று உள்ளது. ஏற்றுமதிச் சந்தைகளில் உள்ள சரிவு மற்றும் உற்பத்தித் திறனில் முதலீடுகள் செய்யும் வாய்ப்புக்கள் குறைவு என்றுள்ள நிலையில், எளிதாகப் பெறப்பட்ட கடன்களில் பெரும்பகுதி சொத்து ஊக வணிகர்களால் வீட்டு விலைகளை உயர்த்த பயன்படுத்தப்பட்டன.

சீனாவில் உள்ள சொத்துக் குமிழி சரியக்கூடும், அதையொட்டி நாட்டின் நிதிய முறையில் பெரும் பாதிப்புக்கள் வரக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன. Nomura Holdings இல் ஒரு பொருளாதார வல்லுனராக இருக்கும் Sun Mingchun, புளூம்பேர்க் தொலைக்காட்சியில் ஜூன் 16 அன்று சீனாவில் சொத்து விலைகள் அடுத்த 12-18 மாதங்களில் 20 சதவிகிதம் கூட சரியலாம் என்று எச்சரித்தார். கடந்த ஆண்டு இது 22 சதவிகிதம் உயர்ந்திருந்தது.

சொத்துக்கள் விலைகளில் ஒரு சரிவு என்பது பெரிய கடன் நெருக்கடி வரும் என்ற அச்சுறுத்தைலைக் கொடுக்கிறது. தேசிய தணிக்கை அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்று பல உள்ளூராட்சிகள் தங்கள் மொத்த வருவாயைப் போல் 100 முதல் 365 சதவிகிதம் கடன்களைக் கொண்டுள்ளன என்று காட்டுகிறது. 18 தணிக்கை செய்யப்பட்ட மாநிலங்கள், 16 நகரங்கள் மற்றும் 36 மாவட்டங்களின் கடன்கள் மொத்தமாக 2.7 டிரில்லியன் யுவான் அல்லது $410 பில்லியன் என்று உள்ளன. இவற்றில் 40 சதவிகிதம் 2009 கடன் கொடுத்தல் அதிகரிப்பால் ஏற்பட்டது. மொத்த உள்ளூராட்சிக் கடன்கள் இப்பொழுது 6 முதல் 11 டிரில்லியன் யுவானாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

China Confidential ஆய்வு என்பதில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளதின்படி, உள்ளூராட்சி முதலீட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களில் 294 பில்லியன் டாலர் மோசமாகப் போகலாம் என்று தெரிகிறது. இத்தகைய பெரும் நிதிய நெருக்கடி இடர் நாட்டின் குழம்பம் நிறைந்த தலைமறைவு வங்கி முறையால் பெரிதாகிறது. ஏனெனில் அது அதிக ஈவு விகிதங்களை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களால் ஏற்றம் பெற்றுள்ளது. அதுவும் உத்தியோகபூர்வ அடையாளத் தரம் 2.25 சதவிகிதம் தான் என்று உள்ள நிலையில். பைனான்சியல் டைம்ஸ் கருத்துப்படி இந்த உவப்பற்ற நிதியச் சந்தையின் மதிப்பு 647 முதல் 1,290 பில்லியன் டாலர், அல்லது மே மாத இறுதியில் முறையாக கடன் பாக்கி இருந்தவற்றுள் 10 முதல் 20 சதவிகிதம் ஆகும்.

அதே நேரத்தில் மலிவான கடனும் உயரும் வீடுகள் விலைகளும் பணவீக்கத்திற்கு எரியூட்டுகின்றன. இது மே மாதம் ஹொண்டா கார் உதிரிப்பாக ஆலைகளில் தொடங்கி வெடித்துள்ள வேலைநிறுத்தங்களும் ஒரு முக்கிய காரணி ஆகும். சீனாவின் மத்திய வங்கி கடந்த வாரம் வெளியிட்டுள்ள நுகர்வோர் அளவை விடையிறுத்தவர்களில் 58.9 சதவிகிதத்தினர் தற்போதைய விலைவாசி அதிக நிலையில் உள்ளதாக நினைக்கின்றனர் என்று கண்டறிந்துள்ளது—இது கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகம் என்பதுடன் முந்தைய காலாண்டை விட 7.9 சதவிகிதப்புள்ளிகள் உயர்ந்துள்ளன. விடையிறுத்தவர்களில் மிக அதிகமாக 72.5 சதவிகிதத்தினர் வீட்டு விலைகள் “ஏற்கத்தக்கவை அல்ல” என்று கூறியுள்ளனர்.

சீன ஆளும் வட்டாரங்களிலும் சர்வதேச அளவிலும் அதிக ஊதியக் கோரிக்கைகளுக்கு எப்படி விடையிறுப்பது என்பது பற்றிய விவாதம் நடைபெறுகிறது. பெரும்பாலானவற்றுள், வேலைநிறுத்தங்கள் கணிசமான ஊதிய உயர்விற்கு வகை செய்துள்ளன. பல உள்ளூராட்சிகள் உத்தியோகபூர்வ குறைந்த பட்ச ஊதியங்கள் உயர்த்தப்பட்டதை அறிவித்துள்ளன. சில வர்ணனையாளர்கள் உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்றம் கொடுக்க ஓரளவு குறைவான ஊதிய அதிகரிப்பிற்கு வாதிட்டிருக்கையில், மற்றவர்கள் சலுகைகள் சீனாவை ஒரு குறைவூதியத் தொழிலாளர் அரங்கு என்பதின் மதிப்பைக் குறைத்துவிடும் என்ற அச்சங்களை தெரிவித்துள்ளனர். அனைவரும் ஆட்சி சமூக அமைதியின்மையைக் கட்டுப்படுத்தவேண்டும், முதலாளித்துவ ஒழுங்கிற்கு வரும் எவ்விதச் சவாலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிறு பிரதமர் வென் ஜியாபாவோ உள்ளூராட்சிகளுக்கும் நிறுவனங்களுக்கும் “இணக்கமான வேலை உறவுகளை” கட்டமைக்கும் விதத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் ஊதிய ஏற்றங்கள் “உற்பத்தி அதிகரிப்பிற்கு இயைந்த விதத்தில் தான் இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வேறுவிதமாகக் கூறினால், குறைந்த ஊதிய அதிகரிப்பைப் பெறுவதற்குக் கூட தொழிலாளர்கள் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதாகும்.

அதிக ஊதியங்கள் ஏற்கனவே நிறுவனங்களை கிழக்குக் கடலோரப்பகுதிகளில் இருந்து உட்பகுதியில் இருக்கும் குறைவூதியப் பகுதிகளுக்கு நகர்வதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இந்த வாரம் 300,000 வேலைகளை ஷென்ஜென்னில் இருந்து ஹெனன் மாநிலத்தில் உள்ள புதிய ஆலை ஒன்றுக்கு மாற்றவிருக்கும் திட்டத்தை Foxconn அறிவித்துள்ளது. இந்நிறுவனம் அதன் பெரும் வளாகத்தில் நிறைய தற்கொலைகள் நடந்தது பற்றி செய்தி ஊடகக் கவனம் ஏற்பட்டபின் ஷென்ஜென்னில் ஊதியங்களை உயர்த்தும் கட்டாயத்திற்கு உட்பட்டது. பல முக்கிய மேலை நிறுவனங்கள், ஆப்பிள் உட்பட, பாக்ஸ்கான் ஊதிய உயர்வை ஈடுகட்ட அதிக விலை நிர்ணயிக்க அனுமதிப்பதில் தயக்கம் காட்டுகின்றன.

கடந்த வாரம் ஷாங்காயில் ஒரு அரங்கத்தில் பேசிய கோல்ட்மன் சாஷ்ஸின் நிர்வாகி Fred Hu அதிக ஊதியங்கள் சீனாவில் ஏற்றுமதித் தொழிலுக்கு யுவான் மதிப்பு உயர்த்தப்படுவதை விடக் கூடுதலான அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்று அறிவித்தார். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா அல்லது வியட்நாம் போன்ற குறைவூதிய நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுவது பற்றி பரிசீலிப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

வேலைநிறுத்தங்கள் அதிக சமூக எதிர்பார்ப்புக்களுக்கு பெய்ஜிங் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் Hu கூறினார். தன்னுடைய வாதத்தை அடிக்கோடிடும் வகையில் அவர் கிரேக்கத் தொழிலாளர்கள் பற்றி இகழ்வுணர்வுடன் கூறினார்: “கிரேக்கக் கடன் நெருக்கடி இறுதியில் அரசாங்கம் அதிகம் செலவழிக்கும், கூடுதலான சமூக நலச் செலவுகள் கிடைக்கும், சேமிப்பை விட நுகர்வும், கடினமாக உழைக்க வேண்டும் என்ற விருப்பமின்மை என்பவற்றின் சமூக உளரீதியான மோசச் சிந்தனைத் தொகுப்பின் விளைவு என்றும், இதுதான் நாட்டில் கடன்கள் தவறு ஏற்பட்டதற்குக் காரணம்.”

ஹு இன் கருத்துக்கள் அவருடைய பேச்சை வெளியிட்ட Caijin ல் ஆன்லைனில் கோபமான எதிர்க் கருத்துக்களைத் தூண்டின. ஒருவர் ஹுவை மேலே முதலாளித்துவத்தினரின் “இடைத்தரகர்” என்று கண்டித்தார். மற்றொரவர் அவரை பட்டினி கிடந்த விவசாயிகளை சூப் அருந்தவேண்டும் என்று கூறிய முட்டாள் சீனப் பேரரசர் ஒருவருடன் ஒப்பிட்டனர்—வேறுவிதமாகக் கூறினாரல், அன்றாட வாழ்வுடன் எவ்விதத்தொடர்பும் இல்லாத ஒரு நபருடன். மூன்றாமவர் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் “சமூகப் பங்கீட்டு முறையில் உள்ள தீவிர சமத்துவமின்மையை” பிரதிபலிக்கின்றன என்றும் “வரலாற்றளவில் தொடர்ச்சியான வேலைநிறுத்த அலைகளுக்குப் பின்னர் அரசியல் கொந்தளிப்புக்கள் ஏற்பட்டு அரசாங்கச் சரிவுகளுக்கு வழிவகுத்துள்ளன“ என்றும் எச்சரித்தார். இந்த கட்டுரைத் தொகுப்பினர் அரசாங்கம் வேலநிறுத்தங்களில் நடுநிலையில் நின்று தலையிட வேண்டுமே ஒழிய வேலைநிறுத்தங்களை அடக்குவதோ செல்வ மறுபங்கீட்டை சரிசெய்தலோ கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஹுவின் கருத்துக்கள் அதிக மறைப்பில்லாமல் சீன அரசாங்கங்களுக்கு வேலைநிறுத்தங்களை நசுக்க வேண்டும் என்ற முறையீடுகள் ஆகும். இதுவரை பெய்ஜிங் பெரிய விதத்தில் பொலிஸ் நடவடிக்கைகளை வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராகத் தொடர்வதில் தயக்கம் காட்டினாலும்—அது இன்னும் பெரிய அமைதியின்மையைத் தூண்டும் என்ற அச்சத்தில்—அது பொலிசை எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவிட்டுள்ளது, தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் இயக்கம் வெளிப்பட்டால் அதை அடக்குவதற்குப் பயன்படுத்த தயங்காது.