சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

General Petraeus takes command as killing in Afghanistan escalates

ஆப்கானிஸ்தானில் கொலைகள் அதிகரிக்கையில் ஜெனரல் பெட்ரீயஸ் தலைமையை எடுத்துக்கொள்கிறார்.

By Bill Van Auken
6 July 2010

Use this version to print | Send feedback

வார இறுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான போரின் கட்டுப்பாட்டை முறையாக எடுத்துக் கொண்ட ஜெனரல் டேவிட் பெட்ரீயஸ் இராணுவம் போர்விதிகளை மாற்றிக் கொண்டு, இன்னும் தடையற்ற விதத்தில் அமெரிக்கத் தரைப்படைக்களுக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதல்கள், பீரங்கி குண்டுவீச்சுக்கள் பயன்படுத்தப்படும் என்ற குறிப்புக்களைக் காட்டினார்.

அத்தகைய மாற்றம் ஆப்கானியக் குடிமக்கள் படுகொலைக்கு உள்ளாவதை அதிகம் விரிவுபடுத்தும் என்ற பொருள் ஆகும். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படைகள் குடிமக்களைக் கொல்லுவது ஆப்கானிஸ்தானில் எழுச்சியை எரியூட்டியுள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தலையிட்டதில் இருந்து எப்பொழுதும் இல்லாத வகையில் இப்பொழுது அது வலுவாக உள்ளது.

ஜூலை 4ம் தேதி “கட்டுப்பாடு மாற்ற” நிகழ்வில் பெட்ரீயஸ், ஒபாமா நிர்வாகத்தினால் 10 நாட்களுக்கு முன்பு அவரும் அவருடைய உதவியாளர்களும் Rolling Stone இதழில் வெளிவந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தகவல்படி உயர் அதிகாரிகளை தாக்கியதை அடுத்து பேசியதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னைய தளபதி ஸ்ரான்லி மக்கிறிஸ்டல் கொண்டிருந்த தலைமையை எடுத்துக் கொண்டார்.

அதிகாரிகள் பிரிவில் சிவில் அதிகாரத்திற்கு உள்ள இகழ்வுணர்வை பிரதிபலித்தாலும், கட்டுரை மக்கிறிஸ்டலை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றும் முடிவிற்கு அது ஒரு இரண்டாம் தரமான காரணம்தான். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பெருகும் மக்கள் எதிர்ப்பை அடக்கத் தோற்றது இன்னும் முக்கியமான காரணம் ஆகும். அத்தோல்வி கடந்த பெப்ருவரி மாதம் மர்ஜாவில் நடந்த முற்றுப்பெறாத் தாக்குதல், மற்றும் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட காந்தகார் முற்றுகை ஒத்திவைக்கப்பட்ட முடிவிலும் பிரதிபலித்தன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆயுத ஆற்றலை வரம்பிற்கு உட்படுத்தி பொதுமக்கள் இறப்புக்களை குறைக்கும் வடிவமைப்பு கொண்ட போர் விதிகள் புதிதாக செயல்படுத்தியதற்கும் மக்கிறஸ்டல் மீது பெருகிய வெளிப்படையான குறைகூறல் இருந்தது.

ஞாயிறு நிகழ்ச்சியில் பெட்ரீயஸ் “சமீபத்திய மாதங்களில் உறுதியான விரோதியை எதிர்கொண்ட விதத்தில் காணப்பட்ட முன்னேற்றம் பல விதங்களில் பதவிநீக்கப்பட்ட தனக்கு முன்பு இருந்தவரின் கண்ணோட்டம், ஆற்றல், தலைமை ஆகியவற்றின் விளைவு” என்று அறிவித்த விதத்தில் மக்கிறிஸ்டலைப் புகழ்ந்தார்.

புதிய தலைமை முறையாக அமெரிக்கக் கட்டுப்பாட்டின் தலைவர் என்னும் பதவியில் இருந்து குறைந்த அந்தஸ்து உடையாதாகும்; முன்பு பெட்ரீயஸ் மக்கிறிஸ்டலின் உயரதிகாரியாக இருந்து ஆப்கானிஸ்தான, ஈராக்கிய ஆக்கிரமிப்புக்களுக்கு பொறுப்பைக் கொண்டிருந்தார்; இந்த “முன்னேற்றத்தை” நியாயப்படுத்த அதிக அழுத்தம் அவருக்கு இருந்தது. தன்னுடைய உரையில் ஆப்கானிஸ்தானில் பெருகிய தடுப்பு முறைகள், செல் தொலைபேசிகள் ஏற்பட்டுள்ளதைப் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதில் உண்மை என்னவென்றால், போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு மிக மோசமான மாதத்தை ஜூன் கண்டது. அமெரிக்கர்கள் 60 பேர் உட்பட மொத்தம் 102 துருப்புக்கள் இறந்து போயினர், பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.

ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டை தான் எடுத்துக் கொண்டது, “கொள்கை அல்லது மூலோபாயத்தில் மாற்றம் என்று இல்லாமல், நபர்களின் மாறுதலைத்தான் பிரதிபலித்தது” என்று பெட்ரீயஸ் வலியுறுத்தினார். உண்மையில் முன்பு இராணுவத்தின் சிறப்புப் படைகளின் தலைவர் என்ற முறையில் மக்கிறிஸ்டல் தொடர்ந்திருந்த எழுச்சி-எதிர் கொள்கைகளுடன் அவர் நெருக்கமாக அடையாளம் காணப்படுகிறார்.

வாஷிங்டன் தொடரும் துல்லியமான மூலோபாயம் நோக்கங்கள் எவை என்பது புதிய தலைவரால் அதிகம் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆரம்பத்தில் அவர் “அல் குவைதா மற்றும் அதன் தீவிர நட்பு இணையங்களுக்கு மீண்டும் ஆப்கானிஸ்தானில் புகலிடம் நாடும் திறனை” குறைப்பதற்குத்தான் போரை அமெரிக்கா நடத்துகிறது என்று வலியுறுத்தினார். போரின் தொடக்கப் பின்னணியில் போலிக்காரணமாக இருந்த இது அவ்விதத்தில் அதிகம் பயனற்றுப் போயிற்று என்பது அமெரிக்க அதிகாரிகளே நாடு முழுவதும் 100 பேருக்கும் மேலான அல்குவைதா உறுப்பினர்கள் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட விதத்தில் அப்பட்டமாயிற்று.

ஆனால் தொடர்ந்து பேசுகையில் பெட்ரீயஸ் அமெரிக்கப் படைகளின் பணி “ஆப்கானிய மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது” என்றும், “தலிபானின் எழுச்சியை குறைத்து எழுச்சியாளர்களின் புகலிடங்களை அகற்றுவது” என்றும் அறிவித்தார். வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க துருப்புக்கள் நாட்டை வெற்றி கொண்டு ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக் காட்டும் மக்கள் எழுச்சியை அடக்குவது என்பதே.

ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க இலக்குகள் மாறாமல் இருக்கும் என்று வலியுறுத்துகையில், பெட்ரீயஸ் தான் எங்கு இந்த இலக்குகள் தொடரப்பட வேண்டும், “எங்கு நயமான செயல்கள் தேவைப்படும் என்பதை நிர்ணயிக்க இருப்பதாகத்” தெரிவித்தார்.

பரிசீலனையில் உள்ள “நயமான செயல்கள்” கடந்த கோடை காலத்தில் பொதுமக்கள் இறப்புக்கள் குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு மக்கிறிஸ்டல் அறிமுகப்படுத்திய போர்விதிகளை மையமாகக் கொண்டுள்ளன. நாட்டை ஆக்கிரமித்துள்ள 100,000 அமெரிக்கத் துருப்புக்கள் பயன்படுத்த வேண்டிய தீவிர ஆயுதங்களைப் பற்றி இவ்விதிகளில் அமெரிக்கப் படைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாவர் என்ற நிலை ஏற்பட்டால் ஒழிய, பீரங்கித் தாக்குதல், வான்வழித் தாக்குதல்கள் ஆகியவை மக்கள் இருப்பதாகக் கருதப்படும் கட்டிடங்கள் மீது நடத்தப்படக்கூடாது எனக் கூறப்பட்டு இருந்தன.

இத்தடைகளுடன் “தைரியமான நிதானப் போக்கு” என்று தான் கூறியிருந்ததையும் மக்கிறிஸ்டல் இணைத்திருந்தார்; அத்துடன் விஷேட சிறப்பு மரணப்படைகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் மக்கிறிஸ்டல் கூறியிருந்தார்; இவைதான் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மிக மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்படக் காரணமாக இருந்தன.

துருப்புக்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் மொதுமக்கள் பாதுகாப்பு ஒரு அக்கறையாக இருந்தபோதிலும், “நீங்களும் நம் ஆப்கானிய பங்காளிகளும் தளத்தில் கடுமையான நிலைமையில் இருக்கும்போது நாம் உங்கள் பாதுகாப்பிற்கு அனைத்து இருப்புக்களையும் பயன்படுத்த வேண்டும்.” என்று பெட்ரீயஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கருத்து அமெரிக்கா ஆப்கானிய பொதுமக்களை கொல்லுவதை தவிர்ப்பதற்காக தன் துருப்புக்களின் உயிர்களை இழக்கப்போவதில்லை என்பதைத் தெரிவிக்கிறது.

ஞாயிறன்று நிகழ்த்திய உரையில், புதிய தளபதி எழுச்சியின் புதிய தந்திரோபாயங்களை கண்டித்தார்: இவை குழந்தைகள் உட்பட பொதுமக்களை அமெரிக்க தலைமையிலான துருப்புக்கள் கொல்வதை நியாயப்படுத்துவது போல் தோன்றின.

“எழுச்சியாளர்கள் எந்தத் தந்திரோபாயத்தையும் கொள்வர்; உண்மையில் ஒன்றும் தெரியாத குழந்தைகளை தாக்குதல் நடத்தப் பயன்படுத்துகின்றனர்; பலமுறையும் நிரபராதியான மக்களைக் கொல்கின்றனர், அடிக்கடி ஆப்கானிய குடிமக்களுக்கு நாம் ஊறு விளைவிக்கும் நிலைமையை ஏற்படுத்துகின்றனர்.”

இக்கருத்தில் கூறப்படாத உட்குறிப்புக்கள், குழந்தைகளும் இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும், ஏனெனில் “விவரம் தெரியாத” விதத்தில் அவர்கள் எழுச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகின்றனர், குடிமக்கள் கொலை செய்யப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் தவறு அல்ல என்பதாகும்; ஏனெனில் வேண்டுமென்றே எழுச்சியாளர்கள் அத்தகைய கொலைகள் தவிர்க்க முடியாதவை போன்ற “சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றனர்.”

அத்தகைய “நிலைமை” பற்றிய சமீபத்திய தகவல் வார இறுதியில் கொடுக்கப்பட்டது; அமெரிக்கத் தலைமையிலான துருப்புக்கள் காந்தகார் மாவட்டத்தில் தொடர்ச்சியான வளாகங்களில் ஒரு தலிபான் தளபதியை தேடிச் சோதனைகள் நடத்தியபோது. ஒரு வளாகத்தில் எழுச்சியாளர்கள் என்று கருதப்பட்ட சந்தேகத்திற்கு உரியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்போது துருப்புக்கள் வளாகத்தில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண், உட்பட பல குடிமக்களையும், கொன்றனர்.

ஆப்கானிய மக்கள் ஏற்கனவே பெட்ரீயஸ் வருகை அவர்களுக்கு எதிரான தீவிர இராணுவ வன்முறை அச்சுறுத்தல் என்றுதான் காண்கின்றனர் என்று காபூலில் இருந்த வந்த தகவல் கூறுவதாக Los Angeles Times தெரிவிக்கிறது.

“ஆப்கானிஸ்தானில் தலைமைக்கட்டுப்பாட்டு மாற்றம் சாதாரண மக்களை இன்னும் கவலைக்கு ஆழ்த்தியுள்ளது. தங்களுக்கு நடுவே உள்ள வெளிநாட்டுத் துருப்புக்களுடன் தொடர்பு கொள்வது இன்னும் ஆபத்து என்று உணர்கின்றனர்” என்று டைம்ஸ் கூறியுள்ளது. “ஏற்கனவே பல மோட்டார் ஓட்டுபவர்களும் ஒரு மேலை வாகனத் தொடரணியைக் காணும்போது அல்லது ஒரு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகே வரும்போது, தாங்கள் தற்கொலைத் தாக்குதல் பிரிவினர் என நினைக்கப்பட்டு கொல்லப்பட்டுவிடுவோமா என்ற பயத்தில் உறைந்து போகின்றனர்.”

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தந்திரோபாயங்களின் மாற்றத்தை அடிக்கோடிடும் வகையில், கட்டுப்பாட்டு மாற்றத்தின் போது காபூலுக்கு வந்திருந்த செனட் இராணுவக்குழு உறுப்பினர்களின் அறிக்கை இருந்தது.

ஞாயிறன்று செனட்ட்ர் ஜோசப் லிபர்மன் “விரைவில்” போர்விதிகளை மாற்றுமாறு பெட்ரீயஸுக்கு அழைப்பு விடுத்தார்.

“Fox News Sunday” யில் பேசிய முன்னாள் ஜனநாயக கட்சியில் இருந்து கனக்டிக்கட்டின் சுதந்திர உறுப்பினராகிய லிபர்மன் புதிய ஆப்கானிய தளபதி தன்னிடம் தற்பொழுதைய விதிகளைப் “பரிசீலிப்பது” பற்றி உறுதியாக இருப்பதாகக் கூறினார் என்று தெரிவித்தார்.

“இறுதியில் நாம் இங்குள்ள அமெரிக்கத் துருப்புக்களின் பாதுகாப்பை பற்றி கவலை கொண்டுள்ளோம்” என்றார் லிபர்மன். துப்பாக்கிச் சூட்டை எதிர்நோக்கி நிற்கும் துருப்புக்கள் வான் ஆதரவிற்குக் காத்திருக்கக் கூடாது என்றார்.

லிபர்மானின் கருத்துக்கள் அரிஜோனா குடியரசு செனட்ட்ர் ஜோன் மக்கெயினாலும் எதிரொலிக்கப்பட்டன; காபூலில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர், “தளபதி பெட்ரீயஸ் போர்விதிகள் முழுவதையும் ஆய்கிறார். ஒருவேளை சில மாற்றங்கள் வரும். அப்படித்தான் ஒரு உணர்வை எங்களுக்கு அவர் கொடுத்துள்ளார்.” என்று கூறினார்.

அமெரிக்க இராணுவம் “சரியான மூலோபாயத்தைக் கொண்டுள்ளது” என்று கூறிய மக்கெயின், “இன்னும் கடின காலங்க்ள் வரும், குறுகிய காலத்திற்கு இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் கூடும்” என்று எச்சரித்தார்.

ஜூலை 4ம் தேதி உரையின் முடிவில், பெட்ரீயஸ் அமெரிக்கா “ஒரு நீடித்த உறுதியை அமெரிக்கா ஆப்கானிஸ்தானிற்கு அளிக்கும், இந்த தொடர்ந்த முயற்சி நீண்ட காலத் தன்மையில் இந்நாட்டு மக்களுக்கு உதவும் விதத்தில் அமையும்” என்றார்.

இத்தகவல் தெளிவாக உள்ளது. “தொடர்ந்து”, “நீடித்த”, நீண்ட கால” முயற்சி என்பது நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறுவது ஜூலை 2011ல் தொடங்கும் என்று ஒபாமா ஆப்கானிய விரிவாக்கத்தின்போது அறிவித்தற்கு அப்பாலும் தொடரரும் என்பதே அது.

காங்கிரஸிற்குக் கொடுத்த சாட்சியத்தில் பெட்ரீயஸ் ஜூலை 2011 காலக்கெடு 30,000 விரிவாக்கப் படைகளுக்குத்தான் பொருந்தும், அதுகூட தள நிலைமையைப் பொறுத்து இருக்கும் என்று வலியுறுத்தினார். எவரும் அமெரிக்கப் படைகள், “விளக்கை அணைத்துவிட்டு, நமக்குப் பின் கதவுகளை மூடிவிடும் என்று நினைக்க வேண்டாம்” என்று அவர் எச்சரித்தார்.

ஆப்கானிய இராணுவத் தலைமையை குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருங்காலத்தில் நிறுத்தப்படலாம் என்ற கணிசமான ஊகத்திற்கு உட்பட்டுள்ள பெட்ரீயஸுக்குக் கொடுத்ததில், ஒபாமா ஆப்கானிய போரைக் காலவரையின்றி தொடரும் அரசியல் போராட்டத்தை நடத்துபவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுதான் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியுடைய சொந்த நிலைப்பாடு என்பது மன்ற ஜனநாயகக் கட்சியினர் படையை திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணை ஜனாதிபதியால் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு திருத்தத்தின் மூலம் கேட்டுக் கொண்ட நலிந்த முயற்சிக்கு விடையிறுப்பு ஆகும்.

இது போர் தொடர்வதற்கு தேவையான நிதி அளிப்பதற்கு வாக்குகளை உத்தரவாதப்படுத்திய மன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் திருந்த தந்திரோபாயங்கள் போருக்குப் பெரும் மக்கள் எதிர்ப்பைத் திசைதிருப்பும் ஒரு முயற்சிதான்.