சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama endorses Netanyahu as “man of peace”

ஒபாமா நெத்தன்யாகுவை “சமாதானத்திற்கான மனிதர்” என்று ஒப்புதல் கொடுக்கிறார்

By Chris Marsden
8 July 2010

Use this version to print | Send feedback

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு “சமாதானத்தை விரும்புகிறவர்”, “சமாதானத்திற்காக இடர்களை எதிர்கொள்ள விருப்பம் உடையவர்” என்று செவ்வாயன்று ஜனாதிபதி பாரக் ஒபாமா செவ்வாயன்று பாராட்டினார்.

இஸ்ரேலியத் துருப்புக்கள் எட்டு துருக்கியச் செயற்பாட்டாளர்களையும் மற்றும் ஒரு துருக்கிய-அமெரிக்க இரு நாட்டு குடியுரிமையுடைய குடிமகனும் கொல்லப்பட்ட தாக்குதலை மாவி மர்மாரா காசா உதவிக்கு வந்த கப்பல் தொடரணி மீது மே 31 அன்று தாக்குதல் நடத்தி ஐந்து வாரங்களுக்குப் பின்னரும் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின்னர் அவர் இவ்வாறு கூறினார். வெள்ளை மாளிகைக் கூட்டம் மேற்குக் கரையில் மற்றொரு சுற்று இஸ்ரேலியக் குடியிருப்பு விரிவாக்கத்திற்கு முன்னதாக நடந்தது.

கூட்டத் தினத்தன்று, மனித உரிமைகள் குழுவானது B’T salem 30,000 மக்களைக் கொண்டுள்ள யூதர்கள் குடியிருப்பு இப்பொழுது மேற்குக் கரையில் அனைத்து நிலங்களிலும் 42 சதவிகிதத்திற்கு மேலாகக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, இதில் 21 சதவிகிதம் பாலஸ்தீனியர்கள் தனியாகச் சொந்தமுடைய நிலமும் அடங்கியுள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

மார்ச் மாதம், துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் ஜேருசலம் சென்றிருந்தபோது, இஸ்ரேல் இன்னும் 1,600 யூதர்கள் வீடுகளை கட்ட இருப்பதாக நெத்தன்யாகு அறிவித்த பின், நெத்தன்யாகுவுடன் சேர்ந்து ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்த இருந்ததை ஒபாமா இரத்து செய்தார். செப்டம்பர் மாதம் இன்னும் கட்டிடங்கள் கட்ட இருப்பதின் மீது “ஓரளவு முடக்கம்” இருப்பது முடியும் தறுவாயில் உள்ளது. இன்னும் அதிகம் கட்டுவதற்கான தன் விருப்பத்தை இஸ்ரேல் தெளிவாக்கியுள்ளது.

மாவி மர்மரா தாக்குதலுக்காக துருக்கியிடம் மன்னிப்புக் கோரவும் நெத்தன்யாகு மறுத்துள்ளதுடன் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதையும் நிராகரித்தார். வாஷிங்டன் ஆதரவுடன், இஸ்ரேல் அதன் சொந்த விசாரணையை நடத்துகிறது. இதற்கு ஓய்வு பெற்ற இஸ்ரேலிய தலைமை நீதிமன்ற நீதிபதி தலைமை தாங்குகிறார். இஸ்ரேலிய விசாரணைக் குழு ஒரு அரசாங்க விசாரணைக் குழுவின் அந்தஸ்தைக்கூட பெறவில்லை.

தற்காலிகமாக அமெரிக்க-இஸ்ரேலிய உறவுகளின் அழுத்தங்கள் கசப்பைக் கொடுத்துள்ளபோதிலும், ஒபாமா மத்தியக் கிழக்கு பற்றிய கொள்கையில் குடியரசு கட்சி ஜனாதிபதி புஷ் நிர்வாகத்துடையதுடன் அடிப்படையில் தொடரும் தன்மையை மீண்டும் தெளிவாக்கி இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவின் இரு-கட்சித் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள உறவு “முறிக்க முடியாதது”, நீடிப்பது என்று ஒபாமா விவரித்தார். “இது நம் பாதுகாப்பு நலன்கள், நம் மூலோபாய நலன்களைத் தழுவி நிற்பது, நாட்கள் செல்லச் செல்ல இது மிக மிக நெருக்கமாக அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.

நெத்தன்யாகு மற்றும் இஸ்ரேலை மீண்டும் உயர்த்தி வைப்பதற்கு ஒபாமா அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவை காசாப் பகுதியில் சர்வதேச அளவில் பாலஸ்தீனிய மக்கள் மீது இழைத்துள்ள துன்பங்களைப் பற்றி வெகுஜன சீற்றத்தின் இடையே வந்துள்ளன. கிழக்கு ஜேருசலத்தில் தொடர்ந்த யூதக் குடியிருப்புக் கட்டுமானங்கள் பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை என்பதோடு ஓரளவு முடக்கம் விரிவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தவும் இல்லை.

மாறாக, ஓரளவு காசா முற்றுகை நீக்கப்பட்டு, மாவி மார்மாராவிற்குப் பின் குறைந்த அளவு நுகர்வோர் பொருட்கள் அனுமதிக்கப்பட்டது எப்படி இஸ்ரேல் “பல மாதங்களாக நிதானத்தைக் காட்டுகிறது என்பதற்கு” ஒரு உதாரணம் என்றும், “நாம் நேரடிப் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தக்க சூழ்நிலையை இது உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் பாராட்டினார்.

முன்னதாக நெத்தன்யாகுவிற்கு தான் மூக்குடைப்பு கொடுத்தது பற்றிய வினாக்களுக்குச் செய்தியாளர் கூட்டத்தில் அவர், “உங்கள் கேள்வியின் அனுமானம் அடிப்படை தவறு, அத்துடன் நான் முற்றிலும் உடன்பாடு கொள்ளவில்லை” என்றார். “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் வழங்கிவரும் ஒவ்வொரு பொது அறிக்கையையும் நீங்கள் கவனித்தால், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கு இடையே உள்ள சிறப்பு உறவு எப்பொழுதும் உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவரும். இஸ்ரேலுக்கு நம் பாதுகாப்பு உறுதி என்பது தளராதது. உண்மையில் அதை மறுக்கும் வகையில் எந்தக் கொள்கைகளும் இல்லை எனலாம்.” என்றார்.

“நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அவரைப் பார்த்ததில் இருந்தே பிரதம மந்திரி நெத்தன்யாகுவை நம்பி வருகிறேன். ஒரு கடின அயலவர்கள் பகுதியைக் கொண்டுள்ள பெரும் சிக்கலான நிலைமையை அவர் சமாளித்துவருகிறார்.” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

இஸ்ரேலியச் செய்தி ஊடகம் ஒபாமா இஸ்ரேலின் அணுசக்தித் தடுப்புத் திறனைக் பாதுகாத்து வருவதின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் அறிவிக்காத வகையில் அதன் அணுசக்தி திட்டம் கொண்டிருப்பது 2012 மத்திய கிழக்கு பிராந்திய மாநாட்டிற்கு ஒரு அச்சுறுத்தல் என்ற கருத்தை ஒபாமா நிராகரித்தார்.

ஒரு வெள்ளை மாளிகை அறிக்கை விளக்கியது: “அனைத்து நாடுகளும் தாங்கள் பங்கு பெறலாம் என்ற நம்பிக்கை உணர்வு கொண்டால்தான் மாநாடு நடக்கும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதுடன் இஸ்ரேலைத் தனிமைப்படுத்திப் பேசுவது அத்தகைய மாநாடு கூட்டப்படுவதைக் கடினமாக்கிவிடும்.”

ஒரு அசாதாரண பிராய்ட்டிச வகைப் பிழையில், ஒபாமா செய்தியாளர்களிடம் கூறினார்: “அதன் அளவு, வரலாறு, இருக்கும் பிராந்தியம் ஆகியவற்றை நோக்குகையில், எங்களுக்கு எதிராக கொடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்—அதற்கு எதிராக என்ற நிலையில், இஸ்ரேல் ஒரு பிரத்தியேகமான பாதுகாப்புத் தேவைகளைக் கொண்டிருக்கிறது. அச்சறுத்தல்கள் அல்லது அப்பகுதியின் கூட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை அது பெற்றிருக்க வேண்டும். எனவேதான் இஸ்ரேல் பாதுகாப்பு பற்றி நாங்கள் அசையாத உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளோம்.” (வலியுறுத்தல் நம்முடையது.

“வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலின் அணுசக்தித் தெளிவற்ற தன்மை பற்றி இத்தகைய தெளிவான கருத்தை வெளியிட்டதில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்” என்று YNet தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் Haaretz நிருபர் Natasha Mozgovaya அவருடைய அறிக்கை இஸ்ரேலுக்கு “ஒரு பெரும் விருந்து” என்று அழைத்துள்ளார்.

நெத்தன்யாகுவிற்கு ஒபாமா கொடுத்துள்ள பெரும் புகழாரம் மற்றும் இஸ்ரேலுடன் பூசல்களைக் களைந்து கொள்ளுவது என்பவை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஒத்துழைப்பு உறுதியாக இருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தால் முதலில் உந்துதல் பெறுகிறது. இரு தலைவர்களுமே ஐ.நா.பாதுகாப்புக்குழு கூடுதல் பொருளாதாரத் தடைகளை சுமத்திய பின்னர், ஈரானிடம் அதன் அணுசக்தி நோக்கங்கள் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தும் முயற்சிகள் பற்றி விவாதித்ததாகக் கூறியுள்ளனர்

நெத்தன்யாகுவுடன் ஒபாமா பேச்சுக்களுக்கு சில மணித்தியாலம் முன்பு, பின்லாந்திற்குச் சென்றுள்ள இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி Avigdor Lieberman “ஈரானியர்கள் அணுவாயுதத் திறனைக் கொண்டால், நாம் மத்திய கிழக்கு முழுவதும் ஒரு கிறுக்குத்தனமான ஆயுதப் போட்டியைக் காண்போம், அதன் விளைவுகளை பற்றி நான் நினைக்கக்கூட விரும்பவில்லை.” என்று எச்சரித்தார். “இது வளைகுடா நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். மத்திய கிழக்கிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும்.

இஸ்ரேலுக்கு இத்தனை வெளிப்படையான ஆதரவை ஒபாமா கொடுப்பது, அரபு அரசாங்கங்கள் மற்றும் துருக்கிய ஆட்சியின் ஆதரவினால்தான். இஸ்ரேலின் தூண்டுதல் தன்மை உடைய நடவடிக்கைகள் மற்றும் பாலஸ்தீனியர்களை மிருகத்தனமாக நடத்துவது, மத்திய கிழக்கில் மேலாதிக்கத்தை அடைவதற்கான தன் திட்டம் பற்றி அரபு நாடுகள் ஒத்துழைக்காமல் போகலாம் என்ற கவலையை அமெரிக்கா கொண்டுள்ளது. ஆனால் அரேபிய முதலாளித்துவ அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க வகையில் தங்கள் ஆதரவைக் காட்டியுள்ளன.

பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் டெல் அவிவிற்கு முன்னோடியில்லாத வகையில் சலுகைகளைக் கொடுக்க முன்வந்துள்ளார். தன்னுடைய எடுபடி ஆட்சிக்கு வாஷிங்டன் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக இது நடக்கிறது. லண்டனைத் தளமாகக் கொண்ட அரபு மொழி செய்தித்தாள் Al Ahram அப்பாஸ் சில அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி அமெரிக்க சிறப்புத் தூதர் ஜோர்ஜ் மிட்செலிடம் எழுத்துமூல திட்டங்கள் சிலவற்றைக் கொடுத்துள்ளார். இதில் பாலஸ்தீனிய, ஜேருசல எல்லைகளும் அடங்கியுள்ளது. இந்த அறிக்கை அப்பாஸின் பத்தா ஒரு நில மாற்றத்தைப் பரிசீலிக்கும், அது இஸ்ரேலை பெரும்பாலான யூதக் குடியிருப்புக்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கும். இதற்கு ஈடாக பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜேருசலத்தின்மீது கட்டப்பாடு கொள்வர். விதிவிலக்காக பழைய நகரம் மற்றும் WailingWall ன் யூதப் பகுதிகள் இருக்கும்.

இது நிராகரிக்கப்பட்டால், (அநேகமாக அப்படித்தான் போகும்), அவர் கூறும் ஒரே மாற்றீடு அரபு லீக் நாடுகள் மீண்டும் 2002 அரபு சமாதான முயற்சிக்கு மறு இசைவு கொடுக்கும். ஐ.நா.பாதுகாப்புக்குழுவிடம் 1967 போருக்கு முந்தைய எல்லைகளை தளமாகக் கொண்ட ஒரு பாலஸ்தீனிய நாடு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கேட்கும்.

பாலஸ்தீனியர்களக்கு ஆதரவாக அவர்களுடைய வாடிக்கையான வெற்றுச் சொற்களுக்குப் பின்னணயில் அரபு லீக் நாடுகள் இன்னும் நெருக்கமாக வாஷிங்டன் மற்றும் டெல் அவிவுடன் ஒத்துழைக்கின்றனர். ஒபாமா நெத்தன்யாகுவை பார்ப்பதற்கு முன்னதாக, அவருடைய நிர்வாகம் மூன்று அரபு நாடுகளான எகிப்து, ஒமன், துனிசியா ஆகியவற்றிற்கு 500 மில்லியன் பவுண்டுகள் இராணுவத் தளபாடங்கள் விற்பனைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் விமானப் பாதுகாப்பு உயர்தரம், விமானங்கள், கடற்படைக் கப்பல் ஆதரவு, ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும். சவுதி அரேபியா 75, F-15 போர் விமானங்களைக் கேட்டுள்ளது, மற்றும் பிற விமானங்களை 10 பில்லியன் டொலர் மதிப்பிற்கு நவீனப்படுத்துவது ஆகியவை பற்றியும் வாஷிங்டன் பரிசீலித்து வருகிறது. இக்கோரிக்கை சௌதி அரேபிய மன்னர் அப்துல்லா கடந்த மாதம் வாஷிங்டனுக்கு வந்திருந்த போது ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்கா கிட்டத்தட்ட 13 பில்லியன் டொலர் ஆயுதங்களுக்கான கோரிக்கைகளை அரபு நாடுகளுக்குக் கொடுக்க ஒப்புதல் கொடுத்தது. அத்தகைய இராணுவ, வணிக ஏற்பாடுகள்தான் ஈரானிய சக்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொது விருப்பத்துடன் இணைந்துள்ள நிலையில், இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் பற்றிய அரபு லீக்கின் அணுகுமுறையை உண்மையில் உறுதி செய்யும்.

அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துணை ஆலோசகரான பென் ரோட்ஸ் அத்தகைய உடன்பாடுகள் இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் கூடுதலான இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு குறுக்கே வராது என்றும், இஸ்ரேலிய இராணுவம் “அதன் தரமுள்ள இராணுவக் கூரிய தன்மையை தக்க வைத்துக் கொள்ளும்….. Iron Dome போன்ற திட்டங்கள் [ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டங்கள்] அதற்கு உதவும் என்றும், நம் பாதுகாப்புக் குழுக்களுடன் நெருக்கமான தொடர்பும் உதவும்” என்றும் கூறினார்.

“ஈரானிய அச்சுறுத்தலை ஒட்டி, இப்பகுதியில் உள்ள நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வலுப்படுத்த உறுதியளிக்கும் விதத்தில் நாம் கொடுக்கும் உதவிகள் உள்ளன என்று நாம் நம்புகிறோம்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்கா கிட்டத்தட்ட 10 பில்லியன் டொலர் ஆயுதங்கள் விற்பனையை துருக்கிக்கு அளிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசத் துருக்கி மாவி மார்மா பற்றி அதன் போக்கில் நிதானம் காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். திங்களன்று ஸ்பெயினுக்கு உத்தியோகபூர்வமாகச் சென்றிருந்தபோது, “துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் உறவுகள் புதுப்பிக்கப்படவில்லை என்றால் துருக்கி மத்திய கிழக்கு சமாதான வழிவகைப் பேச்சுக்களில் பங்கு கொள்வதை கடினமாக்கும்,” “இது இப்பகுதியில் உறுதிப்பாட்டிற்கு பாதிப்பைக் கொடுக்கும்” என்றார்.

உள்நாட்டுச் சீற்றத்தை அடுத்து அதன் மரபார்ந்த நட்பு நாடான இஸ்ரேல் மீது அங்காரா அதன் குடிமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து எதிர்ப்புக்களை தெரிவிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. இந்த எதிர்ப்பில், 56 பில்லியன் டொலர் மதிப்புள்ள 16 ஆயுத விற்பனைகள் முடக்கம், தூதரைத் திரும்பப் பெற்றது, இஸ்ரேலிய இராணுவ விமானங்களுக்கு வான்வழி மறுத்தல் ஆகியவை அடங்கும்.

கடந்த வார இறுதியில் வெளியுறவு மந்திரி அஹ்மத் டவுடோக்லு அவருடன் கிர்கிஸ்தானுக்குப் பயணித்திருந்த ஒரு சிறு செய்தியாளர் கூட்டத்தில் இஸ்ரேல் மாவி மர்மரா பற்றி மன்னிப்பு கோரவில்லை என்றால் துருக்கி அதன் உறவுகளைத் துண்டிக்கும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால் மந்திரி கூறியது தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்று துருக்கிய அதிகாரிகள் விரைவில் திருத்தினர். ராய்ட்டர்ஸிடம் அங்காராவின் கோரிக்கை பூர்த்தி செய்ய்பட்டால் உறவுகள் முன்னேற்றம் அடையும் என்றுதான் மந்திரி கூறினார் என்று தெரிவித்தனர்.

துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வணிகம் 2008ல் உயர்ந்த அளவான 3.3 பில்லியன் டொலர் 2002ல் இருந்த 1.4 பில்லியன் டொலரிலிருந்து அடைந்தது. அப்பொழுது நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி துருக்கியில் முதன்முதலாகப் பதவிக்கு வந்தது. கடந்த ஆண்டு இஸ்ரேலும் துருக்கியும் மந்தநிலை இருந்தபோதிலும், 2.5 பில்லியன் டொலர் வணிகம் நடத்தின.

மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் Jerusalem Post இடம் அங்காரா இஸ்ரேலுடன் உறவுகளைத் துண்டிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் “மத்திய கிழக்கில் உறுதியை நிலைக்க வைக்க அத்தகைய செயல் உதவாது என்று அமெரிக்கா நினைக்கிறது” என்றனர்.

“ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்றால், அவர்கள் அமெரிக்காவின் கோபத்தைப் பெறுவர்” என்று அதிகாரிகள் கூறினார். இதைத்தவிர, ஐரோப்பிய ஒன்றியமும் அத்தகைய நடவடிக்கையை எதிர்க்கும், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகும் துருக்கியின் வாய்ப்புக்களைப் “புதைத்துவிடும்” என்றும் கூறினார்.