சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

Bangladesh government cracks down on protesting garment workers

பங்களாதேஷ் அரசாங்கம் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது பாய்கின்றது

By Sarath Kumara
5 July 2010

Use this version to print | Send feedback

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த புதன் கிழமை 20,000க்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தகர்க்க பொலிசார் பொல்லுகள், கண்ணீர் புகை, இரப்பர் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சும் இயந்திரங்களையும் பயன்படுத்தினர். சிறுவர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் காயமடைந்ததாக சாட்சிகள் தெரிவித்தன. குறைந்த ஊதியம் மற்றும் பயங்கரமான வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக தொடரும் வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பிரதான சந்தியான ரொகேயா அதிவேகப் பாதையை நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக தடுத்தனர்.

பங்களாதேஷில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்கள், அநேகமாக பெண்கள், உலகில் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களில் அடங்குவர். ஒரு அமெரிக்க தொடர்பாடல் நிறுவனம், இந்தத் தொழிலாளர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு 22 அமெரிக்க சதங்களையே பெறுவதாக கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தது. உணவு மற்றும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்த போதிலும், ஆகக் குறைந்த சம்பளம் 1994க்கும் 2006க்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகரிக்கப்படவில்லை. அத்துடன் கடந்த நான்கு வருடங்களாகவும் சம்பள அதிகரிப்பு இல்லை. மாதம் 1,662 டகாவில் இருந்து 5,000 டகா (72 அமெரிக்க டொலர்) வரை ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோருகின்றனர்.

வாரக் கடைசியில் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தியதை அடுத்து, அஷுலியா மாவட்டத்தில் உள்ள மூன்று அவுட்ரைட் குரூப் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்த புதன் கிழமை ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. தொழிலாளர்கள் மத்தியில் போராளிக் குணம் வளர்ச்சி கண்டுவருவதை கோடிட்டுக் காட்டும் வகையில், ஒரு மணித்தியாலத்துக்குள் போராட்டம் பெருக்கெடுத்தது. பொலிசார் தாக்கிய போது, தொழிலாளர்க்ள கற்களை வீசியும் வாகனங்களை கவிழ்த்தும் தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தனர். இது “முழு பிரதேசத்தையும் ஏறத்தாழ மோதல்களமாக” மாற்றியது என டெயிலி ஸ்டார் செய்தி வெளியிட்டிருந்தது.

சம்பள உயர்வு கோரி வாரக்கணக்காக நடக்கும் ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் முயற்சியில் பிரதமர் ஷெய்க் ஹஸினாவில் அரசாங்கம் மீண்டும் மீண்டும் பொலிஸை அணிதிரட்டுகின்றது. ஜூன் 21 மற்றும் 22ம் திகதிகளில், பத்தாயிரக்கணக்கான ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் டயர்களை எரித்தும் மரங்களை சரித்தும் டாகா-தங்காய்ல் அதிவேகப் பாதையை தடுத்ததை அடுத்து தொழிலாளர்களுக்கும் கலகம் அடக்கும் பொலிசாருக்கும் இடையில் பல மணித்தியாலங்கள் மோதல்கள் நடந்தன. ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையை சேதமாக்கியதோடு, ஒன்றில் பொருட்களை சூறையாடி வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

இந்தப் போராட்டம் ஏனயை தொழிற்சாலைகளுக்கும் பரவும் என பீதியடைந்த பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (BGMEA) மாவட்டத்தில் 250 தொழிற்சாலைகளை மூடியது. பி.ஜி.எம்.ஈ.ஏ. தலைவர் அப்துஸ் சலாம் முர்ஷெடி, “வன்முறை ஆர்ப்பாட்டங்கள் தொழிற்துறையின் எதிர்காலத்தை இடருக்குள்ளாக்கும்” என கவலை வெளியிட்டதோடு “பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள் அரசை ஸ்திரமற்றதாக்குதவற்கு முயற்சிக்கின்றார்கள்” என்றும் கூறிக்கொண்டார். அரசாங்கம் தொழிலாளர்கள் மீது பாய்வதாக பி.ஜி.எம்.ஈ.ஏ. வுக்கு வாக்குறுதியளித்த பின்னர் ஜூன் 23 அன்று தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

சர்வதேச பொருளாதார பின்னடைவின் தாக்கத்தின் கீழ், அரசாங்கம் மற்றும் தொழில் வழங்குனர்களும் குறைந்த ஊதியத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஜூன் 22 அன்று, தொழில் அமைச்சர் கான்த்கர் மொஷாராஃப் ஹொசைன், ஆடைத் தொழிற்சாலைகள் அஷுலியா, நர்யன்கனிஜ் மற்றும் கஸிபூர் என்ற மூன்று வலயங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தார். அங்கு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் குழுக்களும் உள்ளூர் அர்சாங்க அரசியல்வாதிகளும் மேற்பார்வை செய்வார்கள். அடுத்த நாள், பொலிசாரை தாக்கியதாகவும் தொழிற்சாலைகளை சூறையாடியதாகவும் குற்றஞ்சாட்டி பெருந்தொகையான அடையாளந்தெரியாத தொழிலாளர்கள் மீது பொலிஸ் வழக்குப் பதிவு செய்தது.

பல இளம் ஆடைத் தொழிலாளர்கள், பெரும்பாலானவர்கள் 16-30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், ஆகக் குறைந்த சம்பளத்தைக் கூட பெறுவதில்லை. “வியட்னாம், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஓடர்களுக்காக போட்டியிடும் முயற்சியில்” 20-30 வீதம் வரை சம்பளத்தை தொழிற்சாலைகள் வெட்டிக் குறைத்ததாக ஜஸ்ட் ஸ்டைல் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. தொழிலாளர்கள் இரண்டு மாத சம்பளத் தாமதத்தையும் எதிர்கொள்கின்றனர். “ஆடைத்தொழிற்துறையில் பயிற்றப்படாத தொழிலாளர்கள் மேலும் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு மாதம் வெறும் 800 டகா (11.50 அமெரிக்க டொலர்) மட்டுமே வழங்கபடுவதாகவும் அவர்கள் அடிக்கடி 14-16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதாகவும்” அந்த இணையம் தெரிவித்துள்ளது.

உணவு, தங்குமிடம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி உட்பட அடிப்படை தேவைகளைக் கூட தொழிலாளர்களால் சமாளித்துக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கைச் செலவு ஆண்டுக்கு 10-15 வீதம் அதிகரிக்கின்றது. சர்வதேச தொழில் அமைப்பு 2007ல் நடத்திய ஆய்வின்படி, தொழிலாளர்களில் 89 வீதமானவர்கள் நாளொன்றுக்கு 8 மணித்தியாலத்துக்கும் மேலாக வேலை செய்கின்றனர். 90 வீதமானவர்கள் தூங்கும் கட்டிலையே பங்கிட்டுக்கொள்வதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன.

தொழிற்சாலை நிலைமைகள் பயங்கரமானதும் பாதுகாப்பற்றதுமாகும். டெயிலி ஸ்டார் கூறுவதன்படி, 1990களில் இருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் 240 பேர் உயிரிழந்துள்ளனர். சில சம்பவங்களில், தொழிற்சாலை கேட்டுகள் மூடப்பட்டிருந்ததால் தொழிலாளர்கள் தீயில் இருந்து தப்ப முடியாமல் தடுக்கப்பட்டனர். அவர்களை எச்சரிப்பதற்கு முன்னெச்சரிக்கை முறைமைகள் அங்கு கிடையாது. அவசர ஒளி அமைப்புக்கள் மற்றும் தீயனைப்பு முறைமைகள் கிடையாது. போதுமானளவு தண்ணீர் தாங்கிகள் இல்லை. மாடிப்படிகளில் பொருட்கள் நிறைத்து வைக்கப்பட்டுள்ளன.

சம்பளத்தை உயர்த்துவது, தமது இலாப எல்லையை குறைப்பதற்கு அல்லது சந்தைகளை இழப்பதற்கு வழிவகுப்பதால், பங்களாதேஷ் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதை எதிர்க்கின்றனர். அவை குறைந்த சம்பளத்தால் ஈர்க்கப்பட்ட மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், எச் அன்ட் எம், ஸாரா, பிரிமார்க், அஸ்டா, டெஸ்கோ, கப் அன்ட் வால் மார்ட் போன்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்தேசியக் கம்பனிகளுடன் சர்வதேச ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன.

2005 தொடக்கத்தில், பல்-நூலிழை உடன்படிக்கையின் முடிவை அடுத்து, உலக சந்தைக்கான போட்டி உக்கிரமடைந்ததோடு 2008 பூகோள பொருளாதார பின்னடைவுடன் மேலும் மோசமடைந்தது. இந்த சர்வதேச உடன்படிக்கை ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றுமதி ஒதுக்கீட்டை வழங்யிருந்தது. இப்போது பங்களாதேஷ், மிகவும் அபிவிருத்தி செய்யப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் பெரும் பொருளாதார அளவுகளை கொண்ட ஏனைய நாடுகளின், குறிப்பாக சீனாவின், உற்பத்தியாளர்களுடன் நேரடியாகப் போராடுகின்றது. பங்களாதேஷ் ஆடை ஏற்றுமதி 2010 ஜனவரி-ஏப்பிரலில் ஒரு வீதம் வீழ்ச்சி கண்டுள்ள அதே வேளை, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இந்தியா, சீனா, வியட்னாம் மற்றும் இந்தோனேஷியா வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

அரசாங்கம் கடந்த ஆண்டு ஏற்றுமதி வருமானத்தில் 80 வீதத்தை, 12 பில்லியன் டொலர் பெறுமதியை ஈட்டிய ஆடை ஏற்றுமதியிலேயே கனமாக தங்கியிருக்கின்றது. சம்பளத்தை குறைத்து வைத்திருக்கும் அதே வேளை, செயிக் ஹஸீனா கடந்த நவம்பரில் குறிப்பாக ஆடை உற்பத்தி கம்பனிகளுக்கு ஒரு ஊக்குவிப்பு பொதியை அறிவித்தார். ஏப்பிரலில் ஒரு றில்லியன் டாகா பெறுமதியான இரண்டாவது பகுதி பொதியை நிதி அமைச்சர் அபுல் மால் அப்துல் முஹித் அறிவித்தார்.

அரசாங்கம், முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுமாக மூன்று பகுதியினர் அடங்கிய சம்பள குழுவொன்று ஏப்பிரல் 28 அன்று அமைக்கப்பட்டு ஒன்பது கூட்டங்களை நடத்தியிருந்தாலும் எந்தவொரு பலனையும் அடையவில்லை. நியூ ஏஜின் படி முதலாளிமார் மாதம் 1,887 டகாக்களை மட்டுமே வழங்கத் தயாராக உள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதை தடுப்பதற்காக, ஜூலை முடிவில் அரசாங்கம் ஒரு குறைந்தபட்ச சம்பள கட்டமைப்பை அறிவிக்கும் என தொழில் அமைச்சர் மொஷாராஃப் ஹொசைன் தெரிவித்தார்.

ஜூன் 23 எழுதிய கருத்துரை ஒன்றில், பங்களாதேஷ் உட்பட சர்வதேச ரீதியில் குவிந்துவரும் வேலை நிறுத்த அலையைப் பற்றி பைனான்சியல் டைம்ஸ் பரந்தளவில் கவலை தெரிவித்திருந்தது. “வன்முறையான தொழிலாளர் அமைதியின்மை, ஜப்பானுக்கு சொந்தமான கார் பாகங்கள் உற்பத்தி நிலையம் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளும் அண்மையில் ஒரு தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களை எதிர்கொண்ட சீனாவுக்கு மட்டும் வரையறுக்கப்படாமல், பங்களாதேஷ் மற்றும் வியட்னாம் போன்ற ஆசியாவின் மலிவு உற்பத்தி தளங்களுக்கும் பரவி, பூகோள பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் போல் உள்ளது என பொருளியளார்கள் தெரிவிக்கின்றனர்,” என அது குறிப்பிட்டிருந்தது.

பங்களாதேஷில் அல்லது வேறு ஒரு நாட்டில் உள்ள தொழிலாள வர்க்கம் முதலாளத்துவத்தின் உலகம் பூராவுமான நெருக்கடிக்கு பொறுப்பாளிகள் அல்ல, மற்றும் அதன் சுமைகளை தாங்க அவர்களை நெருக்க முடியாது. ஒருவருக்கு எதிராக இன்னொருவரை போட்டியிட நெருக்குவதற்கு மாறாக, வங்குரோத்தடைந்துள்ள இலாப முறைமைக்கு முடிவு கட்டுவதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் ஆசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.