சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Coalition deal in NRW means cuts in jobs and services

ஜேர்மனி: வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியா கூட்டணி உடன்பாடு வேலைகள், சேவைகள் இழப்பைக் குறிக்கிறது

By Dietmar Henning
10 July 2010

Use this version to print | Send feedback

இரண்டே வாரங்களில், வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளின் கூட்டணியான புதிய அரசாங்கம் ஒரு வேலைத்திட்டம் பற்றி உடன்பட்டுள்ளன. இரு கட்சிகளும் இந்த ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த உறுதிகளுக்கு முற்றிலும் மாறான விதத்தில், இன்னும் கூடுதலான சமூகநலச் செலவுக் குறைப்புக்களும் வேலைகள் வெட்டும் இக்கூட்டணியின் மைய நோக்கம் என்பதை இத்திட்டம் வெளிப்படுத்துகிறது.

கொள்கையின் பல கூறுபாடுகளும் 89 பக்க ஆவணத்தில் மறைமுகமாகத்தான் உள்ளன. கல்வி பற்றிக் கூறப்பட்ட சில உறுதிமொழிகளை இதை அடைய முற்படுகிறது. ஆனால் அவற்றிற்கு நிதி எப்படி அளிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை. மாநிலத்திற்கான வரவு-செலவுத் திட்டம் “கணிசமான இடர்களை உள்ளடக்கியுள்ளது” என சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் எழுதியுள்ளதுடன், அதையொட்டி “கணக்குகள் உடனடிச் சோதனைக்கு” உட்படுத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர். கடந்தகால அனுபவத்தின்படி இத்தகைய “கணக்குகள் உடனடிச் சோதனைக்கு” என்பது “வெளி கட்டுப்பாடுகளை ஒட்டி” தவிர்க்க முடியாத பெரும் குறைப்புக்கள் என்ற பொருளைக் கொடுக்கும். கூட்டணிக்கு உண்மையான முதல் சோதனை 2011 இற்கான மாநில வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக இருக்கும்.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஹனலோர கிராவ்ட் அறிவித்தார்: மாநிலம் பொருளாதார, நிதிய நெருக்கடியின் விளைவை ஒட்டி “பாரியளவு பணத்தை” கொடுக்க வேண்டியுள்ளது. மாநிலத்தின் சொந்த வங்கியான WestLB க்கான செலவே பல பில்லியன்கள் இருக்கும். WestLBயில் மாநில அரசு மிக அதிக பங்குகளை —(கிட்டத்தட்ட 38 சதவிகிதம்)— கொண்டுள்ளது. முதலீட்டாளர்களை காப்பாற்ற உத்தரவாத வழிவகையில் பல பில்லியன்களை கொடுத்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் வினவப்பட்டதற்கு, கிராவ்ட் வங்கி மீட்பில் மாநிலத்தின் சரியான தொடர்பு பற்றிய விவரத்தைக் கூற மறுத்துவிட்டார்.

சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைவாதிகளும் பொறுப்பற்ற ஊக வணிகத்தால் ஏற்பட்ட வங்கியின் இழப்புக்கள் ஈடுசெய்யப்படும் என்பதை கூட்டணி அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக்கியுள்ளன. “WestLB ஐ பிரிப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல”. மாறாக வங்கி மற்ற மாநில வங்கிகளுடன் ஒரு ஒருங்கிணைப்பு முறையின் பகுதியாக இணைக்கப்படவுள்ளது.

இதன்பின் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைவாதிகளும் இன்னும் வெட்டுக்கள் தவிர்க்க முடியாதவை என்று பின்வருமாறு கூறுகின்றன: “நிதிய மற்றும் சமூகப் பொருளாதாரத்திற்கான விளைவுகளும் அவற்றைக் கடப்பதற்கான கொள்கையும், மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் பங்கு கொள்ளத்தயார் என்பதையும் அதற்குத் தங்கள் பங்கை தரமுடியும் என்பதையும் அவர்களின் ஆதரவு காட்டுகிறது. ஆனால் அவர்கள் —மிகச் சரியாகவே— இது உகந்த, நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.”

மாநிலத்தின் புதிய நிகரக் கடன் 6.6 பில்லியன் யூரோக்களில் இருந்து ஒன்பது பில்லியன் யூரோக்களுக்கும் மேலாக விரைவில் உயரும் என்று Spigel Online தகவல் கொடுத்துள்ளது. மாநிலத்திற்கு “ஒரு பெரும் சுமை” இருப்பது பற்றி கிராப்ட் கூறியுள்ளார். “2011ல் இருந்து மாநில வரவு-செலவுத் திட்டத்தை முறையாக உறுதிப்படுத்துவதுதான் திட்டம்” என்று Spiegel Online எழுதுகிறது.

அத்தகைய உறுதிப்படுத்தல் எப்படி நடத்தப்படும் என்பது பற்றி கூட்டணி உடன்பாடு தெளிவாகக் கூறவில்லை; ஆனால் பொதுப்பணி வேலைகள் ஆபத்திற்குட்படும் என்பதில் சந்தேகம் இல்லை. “மாநிலத்திற்கு சேமிப்புத் திறன்கள் எங்குள்ளன என்பது பற்றி நாம் இடைவிடாமல் சோதிப்போம், குறிப்பாக அதிகாரத்துவத்தை குறைக்கும் விதத்தில் வரக்கூடிய சேமிப்புக்கள் பற்றி.” என்று உடன்பாடு கூறுகிறது. “அதிகாரத்துவத்தை குறைத்தல்” என்னும் சொற்றொடர் பணிநீக்கம் என்பதுடன் இணைந்ததாகும்.

செய்தி ஊடகத்தில் பரந்த முறையில் கூறப்பட்டுள்ள கல்வித் துறை பற்றிய தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழிகள் எப்படிச் செயல்படுத்தப்பட முடியம் என்பது கூட முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது.

பள்ளியை விட்டு நீங்கும்போது கொடுக்கப்படும் சான்றிதழ்களில் உள்ள ஆசிரியர்களின் குறிப்புக்கள் உடனடியாக அகற்றப்பட உள்ளன. ஆனால் இப்பிற்போக்குத்தன, புதிரான செயற்பாடு இரத்து செய்யப்படுவது நிர்வாகத்திற்கு செலவு எதையும் கொடுக்காது. சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைவாதிகள் ஒரு பருவத்திற்கு 500 யூரோக்கள் கல்விக்கட்டணம் என்பதை 2011/2012 குளிர்காலப் பருவத்தில் இருந்து அகற்ற விரும்புகிறது. ஆனால் பல்கலைக் கழகங்கள் கிட்டத்தட்ட இழக்கக்கூடிய 260 மில்லியன் யூரோக்கள் எப்படி ஈடுகட்டப்பட முடியும் என்பது பற்றி ஏதும் தெரியவில்லை.

இன்னும் கூடுதல் பள்ளி மணிநேரம் பற்றிய முடிவு உள்ளூர் மட்டத்திற்கு விடப்படுகிறது. “நாங்கள் எவரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை” என்று கல்வி மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ள சில்வியா லோர்மான் (பசுமைக்கட்சி) அறிவித்தார். மாறாக உயர்நிலைப்பள்ளிகள் எப்பொழுது தேர்வுகள் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு எட்டு ஆண்டுகள் தேவையா அல்லது ஒன்பது ஆண்டுகளா என்பதை அவையே முடிவெடுக்க வேண்டும்.

மழலையர் பள்ளியில் இலவச குழந்தைப் பாதுகாப்பு என்னும் உறுதி, “படிப்படியாக” அறிமுகப்படுத்தப்படும். இதன் முதல் படி மழலையர் பள்ளியின் கடைசி ஆண்டு இலவசம் என்று ஆக்கப்படுவது ஆகும். நகரசபைகள் இச்செலவை ஏற்காமல் இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூட்டணி உடன்பாடு கூறுகிறது: “புதிய மாநில அரசாங்கம் பழைய கடன்களால் குறிப்பாக சுமைக்குட்பட்டுள்ள உள்ளூர் சபைகளுக்கு உதவி கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும்.”

ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள நிதியத் தகுதியின் அடிப்படையில்தான் இருக்கும்.

எரிசக்தி பற்றிய கொள்கையில், பசுமைவாதிகள் குறிப்பாக எந்தக் கொள்கையையும் ஏற்கத் தயாராக உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் பசுமைவாதிகள் புதிய நிலக்கரி ஆற்றலில் உற்பத்தி செய்யும் எரிசக்தி நிலையங்கள் கட்டமைப்பை எதிர்த்திருந்தனர். உடன்பாடு கூறுவதாவது: “வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் கிட்டத்தட்ட 60 சதவிகித CO2 வெளிப்பாடுகள் முக்கிய எரிசக்தி நிலையங்களில் இருந்து மின் உற்பத்தியானால் தோன்றுகின்றன.” ஆனால் புதிய நிர்வாகம் இன்னும் கூடுதலான நிலக்கரிச் சார்பு மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்படுவதை நீதிமன்றத்திற்கு விடுகிறது. அத்தகைய நிலையங்களை எதிர்க்கும் ஏராளமான மக்கள் எதிர்ப்புக்கள் இதையொட்டி புறக்கணிக்கப்படுகின்றன.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் மக்களின் இழப்பில் வரவு-செலவுத் திட்டத்தை உறுதிப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களை நம்பியுள்ளன. “வரவிருக்கும் ஆண்டுகளில் பொது நிர்வாகங்கள் மாற்றங்களையும் சுமைகளையும் எதிர்கொள்ளும். இவை ஒன்றுக்கு ஒன்று எதிரிடையான வகையில் கட்டுப்படுத்தப்பட முடியாது, ஒன்றோடொன்று இணைந்த முறையில்தான் முடியும்.” என்று கூட்டணிப் பங்காளிகள் எழுதியுள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சி தொழிற்சங்கங்களுக்கு கொடுத்துள்ள உறுதி மொழியான வடக்கு ரைன்/வெஸ்ட்பாலியா மீண்டும் “ஜேர்மனியில் தொழிலாளர் பங்கு என்று வரும்போது முதல் மாநிலமாக இருக்க வேண்டும்” என்பதை கிராவ்ட் வலியுறுத்தியுள்ளார்.

முதல் கட்டமாக அவர் LPVG எனப்படும் மாநில ஊழியர்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளார்: “அதிகார நிலையங்களிலும், நிர்வாகத்திலும் ஊழியர்களுடன் நம்பிக்கை நிறைந்த ஒத்துழைப்புத்தான் தளம் என்பது மீட்கப்பட வேண்டும்.”

இந்த LPVG 2007ல் முந்தைய கன்சர்வேடிவ் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (CDU-FDP) யூர்கன் ருட்கர்ஸ் இன் தலைமையிலான மாநில அரசாங்கத்தால் மாற்றப்பட்டிருந்தது. அந்த மாற்றத்தின் பொருள் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் குழுக்களும் தொழிலாளர்கள் இடம்மாற்றப்படுவது, எச்சரிக்கை கொடுப்பது, ஒப்பந்தங்கள் கலைக்கப்படுவது, தனியார்மயமாக்கப்படுவது ஆகியவற்றில் தொடர்பைக் கொண்டிரா என்று அர்த்தப்படும். இப்பகுதிகளில் தொழிற்சங்க பொறுப்புக்கள் குறைக்கப்பட்டு அரச நிர்வாகத்திடம்தான் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கும்.

தங்கள் பங்கிற்கு தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி சிறுபான்மை அரசாங்கத்திற்கு தெளிவான ஆதரவைக் கொடுக்கின்றன. DGB எனப்படும் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு 2010 ஜூன் மாதம் முன்வைத்த 15-பக்க ஆவணத்தில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தனியார்துறை, பொதுத்துறைப் பணிகள் தொழிற்சங்கங்கள் பங்கு பெறுவதின் மூலம்தான் வருங்காலத்தில் வெற்றி பெற முடியும் என்று அறிவித்துள்ளது. “பொருளாதார நெருக்கடியைப் பொறுப்புடன் சமாளிக்கையில் கொண்ட அனுபவங்கள்” இதைத்தான் காட்டுகிறது.

“நல்ல பணி”என்னும் தலைப்பில் DGB, “மாற்றம், வேலை கொடுக்கும் அமைப்புக்கள் வளர்ச்சி, முன்னேற்றம்” என்பதை (கடந்த காலத்தில் இந்த வழிவகை பலமுறையும் தொழிற்சங்கங்களால் வேலைகளை அகற்றப்பயன்படுத்தப்பட்டுள்ளது) கோருகிறது. தொழிற்சாலைக் குழுக்கள் இத்துறையில் குறிப்பான பயிற்சியைப் பெறும். DGB இத்திட்டம் “நோக்குநிலை பற்றிய ஆலோசனை—நெருக்கடியில் தொழிற்சாலைக் குழுக்களால வளங்கப்படும் புதிய ஆதரவு” என்பது தொடரப்பட வேண்டும் என்று கோருகிறது.

DGB யின் பட்டியிலில் உள்ள 15 பிரிவுகளில் நான்கு (முதல் பக்கம் உட்பட) பொலிஸ் தொழிற்சங்கம் (GDP) எழுப்பியுள்ள சிறந்த கருவிகள், பொலிஸ் பிரிவை வலுப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளைப் பற்றிக் கூறுகிறது.

DGBயின் பிராந்திய தலைவர் Guntram Schneider (SPD) புதிய தொழிற்துறை மந்திரியாகிறார். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் முக்கிய வட்டத்தில் Norbert Romer ம் உள்ளார். இவர் நீண்டகாலமாக சுரங்கத் தொழிற்சங்கம் IGBCE ல் அதிகாரத்துவத்தில் இருந்தவர். சமூக ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்னும் முறையில் அப்பிரிவில் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியவர்.

எதிர்க்கட்சியின் வாக்குகளையும் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினரின் சிறுபான்மை அரசாங்கம் நம்பியிருப்பதால் இடது கட்சியும் முக்கிய பங்கை வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியாவில் கொண்டிருக்கும். இடது கட்சியின் தலைவர் Gesine Lotzsch ஏற்கனவே சிறுபான்மை அரசாங்கத்திற்கு தன் கட்சியின் உறுதியான ஆதரவை உத்தரவாதமளித்துள்ளார். “நாங்கள் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான்” என்று ஒரு செய்தியாளருடன் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் தன் கட்சிக்கும் இடையே “80 சதவிகித உடன்பாடு” இருப்பதாகக் கூறிய அவர் இரு வாரங்களுக்கு முன்பு SWR2 வானொலி நிலையத்திற்கு கூறினார்: “நம் கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்பு ஏற்படவில்லை என்றால் அது அரசியலளவில் அபத்தமாகும்.”

மாநிலக் கூட்டணிக்கு ஆதரவு என்பதைக் கொண்டுள்ள நிலையில் Paul Schäfer ஞாயிறன்று இடது கட்சியின் மாநாட்டில் தலைவர் என்ற பதவிக்கு வேட்பாளராக நிற்கத் திட்டமிட்டுள்ளார். Schäfer, ஸ்ராலினிச ஜேர்மனியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (DKP) நீண்ட நாளைய உறுப்பினர் ஆவார். அவர் “வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியாவில் இப்பொழுது நிறையச் செய்யமுடியும்” என்று அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடது கட்சியின் பாதுகாப்புக் கொள்கை செய்தித் தொடர்பாளராக Schäfer இருந்துள்ளார்; மேலும் 2005இல் இருந்து பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். சூடானில் ஜேர்மனிய துருப்புக்கள் தலையிடுவதற்கு அனுப்பப்படுவதற்கான ஆதரவு தரும் வாக்கை இவர் அளித்திருந்தார். இடது கட்சி அடிக்கடி சமூக ஜனநாயகக் கட்சியிடம் முடியாது என்று கூறும் நிலைக்குக் காரணம் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினர் சுற்று வட்டத்திற்கு மிகவும் நெருக்கமாகப் போய்விடுவோமோ என்ற அச்சம்தான் என்றார். அவருடைய கருத்தில் “சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரிடம் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு இது சரியான நேரம் இல்லை.”

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகள் சனிக்கிழமையன்று நடத்த இருக்கும் மாநாட்டில் கூட்டணி உடன்பாடு உறுதி செய்யப்படும் அதன் பின் ஹனலோர கிராவ்ட் ஜேர்மனியில் மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தின் பிரதம மந்திரியாக செவ்வாய் அல்லது புதனன்று தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் ஒரு முன்னாள் நிர்வாக ஆலோசகராக இருந்தவர்; 1993ல் தான் சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார்.

புதிய அரசாங்கத்தில் 10 மந்திரிகள் இருப்பர்; இதில் மூன்று பதவிகள் பசுமை வாதிகளுக்குச் செல்லும். தற்போதைய பசுமைக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரான Sylvia Lohrmann கல்வி மந்திரியாகவும், துணைப் பிரதமராகவும் இருப்பார். பசுமைவாதிகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைச்சரகப் பொறுப்புக்களையும் மேற்கொள்வர். மிக முக்கியமான அமைச்சரகங்கள் (நிதி, பொருளாதாரம், தொழிலாளர் துறை, உள்துறை ஆகிவை உட்பட) சமூக ஜனநாயகக் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.