சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

From stimulus to austerity: An international class-war policy

ஊக்கப் பொதியில் இருந்து சிக்கன நடவடிக்கைக்கு: ஒரு சர்வதேச வர்க்கப்-போர் கொள்கை

Barry Grey
22 July 2010

Use this version to print | Send feedback

பொருளாதார ஊக்கப் பொதிக் கொள்கைகளில் இருந்து மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு திரும்பியுள்ளதன் மூலம் சர்வதேச முதலாளித்துவம் அதன் சமூகக் கொள்கையில் மேலும் வலதுநோக்கி திரும்பியுள்ளமையை கடந்த சில மாதங்களில் காணக்கூடியதாக உள்ளது. நிதியப்பற்றாக்குறையை குறைத்தல் என்ற பெயரில் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால சமூக நலன்கள் மீது பாரிய தாக்குதலை செய்துவருகின்றது.

இக்கொள்கைகளின் நீண்டகால நோக்கம் நலன்புரி அரசை அகற்றி, பழைய முதலாளித்துவ சக்திகளின் போட்டித் தன்மையை மீண்டும் நிறுவும் விதத்தில் அந்த நாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் இந்தியா, சீனா போன்ற எழுச்சியடைந்துவரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் வறிய நிலைக்கு தள்ளுவதாகும். உலகின் மக்களுடைய வாழ்க்கைத்தரம் சமமான முறையில் ஏற்றமடைய வேண்டும் என்பதற்கு பதிலாக சரிய வேண்டும் என்ற நோக்கம் முதலாளித்துவ அமைப்புமுறையின் மீதான குற்றச்சாட்டாகும்.

திங்களன்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் “பெரும் சமூகம்” பற்றி ஆற்றிய உரை இந்த மாற்றத்திற்கு உதாரணமாகும். இது தொழிலாள வர்க்க வறுமை டிக்கன்சியன் (Dickensian) கால நிலைமைகளுக்கு திரும்ப வேண்டும் என்ற பிரகடனம் ஆகும்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் சமூகநலச் செலவுகளை 85 முதல் 100 பில்லியன் பவுண்டுகள் குறைக்கும் திட்டத்தின் மிருகத்தன தாக்கங்களை மூடிமறைக்கும் விதத்தில் காமெரோன் தன்னுடைய “பெரும் சமூகம்”, ஒரு “பெரிய கலாச்சார மாற்றம்”, மக்களுக்கு “அதிகாரம் கொடுத்து” “விடுதலையளிக்கும்” என்று விவரித்தார். இது தனியார்மயமாக்கப்படல் மற்றும் அரசாங்கம் நடத்தும் சமூகநலப் பணிகளைத் தூக்கி எறிதல் மூலம் சாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தேசியக் கருவூலங்களை வங்கிப்பிணை எடுப்புகளுக்காக கொள்ளையடித்து, தொழிலாள வர்க்கத்திற்கு எந்த உண்மையான தீவிர நிவாரணத்தையும் கொடுக்காத 2008-09 ஊக்கப்பொதிக் கொள்கையிலிருந்து இன்றைய சிக்கனத் திட்டங்களுக்கு மாற்றம் என்பது, மே மாதம் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் அறிவித்த 750 பில்லியன் யூரோ பிணையெடுப்புடன் இணைந்துள்ளது. இந்த நிதியம் கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற யூரோப்பகுதி நாடுகள் செலுத்துமதியில் தாமதத்தை தவிர்க்கவும், யூரோவின் உடைவின் அச்சுறுத்தலை பாதுகாக்கவும் நிறுவப்பட்டது.

இது பொதுநிதிகளில் இருந்து வங்கிகளுக்கு மற்றொரு பாரிய பண கைமாற்றை பிரதிபலிக்கிறது. Pimco என்னும் பத்திர முதலீட்டு நிறுவனத்தின் மஹம்மத் எல்-எரியன் கூறியுள்ளது போல், “ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மூலம் அரசாங்கத்துறை, முன்பு தனியார்துறை வைத்திருந்த கடன்களுக்கு அதன் இருப்புநிலைக் குறிப்பில் பொறுப்பேற்று, அதனால் தனியார் முதலீட்டாளர்கள் நெருக்கடியிலிருந்து சாதாரணமான முறையில் வெளிவர அனுமதித்துள்ளது.”

இந்த நிதியம் நிறுவப்பட்டபோது, வங்கிகளின் மோசமான கடன்கள் சமூகநலத் திட்டங்கள், வேலைகள், ஊதியங்கள், ஓய்வுதியங்கள் ஆகியவற்றில் மிருகத்தனமான வெட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தின்மீது சுமத்தப்படும் விதத்தில் ஈடுகட்டப்படும் என்று முக்கிய ஐரோப்பிய அரசாங்கங்கள் உடன்பட்டன. “மீட்பை” தொடரும் பேச்சுநிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக “வரவு-செலவுத் திட்ட உறுதிப்படுத்தல்” என்ற கோரிக்கைதான் எங்கும் எழுப்பப்பட்டது.

இந்த மாற்றம் ஜூன் முதல் வாரம் G20 நிதி மந்திரிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டு, டொரோன்டோவில் போன மாத இறுதியில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் ஒப்புதலும் பெற்றது.

முதலாளித்துவம் தன் வர்க்கக் கொள்கையை இயற்றுவதில், கிரேக்கத்தில் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் மகத்தான மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டும் தொடர்ந்து பல சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்கிய கிரேக்க அனுபவத்தினால் தைரியமடைந்துள்ளது.

கிரேக்கத்தில் ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கட்டுப்படுத்தி, பிரிக்கும் விதத்தில் பல ஒருநாள் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை தொழிற்சங்கம் நடத்தியதில் நம்பிக்கை கொண்டிருந்தது. இதற்கு ஈடாக தொழிற்சங்க அதிகாரத்துவம் குட்டி முதலாளித்துவ “இடது” அமைப்புக்களான ஸ்ரானினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் Syriza வின் முக்கிய உதவியை அளித்தன. இந்த அமைப்புக்கள் சமூகக் வெட்டுகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு தொழிற்சங்கங்களுக்கு அடிபணிந்த விதத்தில்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தன.

இதே வித அனுபவம்தான் போர்த்துகல்லிலும் ஸ்பெயினிலும் இருந்தன; அங்கு சமூக ஜனநாயக அரசாங்கங்கள் சமூகநலக் குறைப்புக்கள், பணி நீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் என்று ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தன. பரந்த தொழிலாளர் எதிர்ப்பு தொழிற்சங்கங்களால் நசுக்கப்பட்டன.

பொருளாதார, சமூகக் கொள்கைகளில் மாற்றத்தை எதிர்கொள்ளும் விதத்தில் தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களும் வந்துள்ளன. இவை சர்வதேச அழுத்தங்களின் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன. மே மாதம் பிரிட்டனில் கமெரோன் தலைமையிலான பழமைவாத.- தாராளவாத கூட்டரசாங்கம் பதவியில் இருத்தப்பட்டது.

ஜூன் மாதத் தொடக்கத்தில், G20 நிதி மந்திரிகள் கூட்டம் நடத்திய அதே வாரத்தில், ஜப்பானிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா இராஜிநாமா செய்து அவருக்குப் பதிலாக நாவோடோ கன் பதவியேற்றார்; அவர் உடனே ஒரு சிக்கன நடவடிக்கை திட்டத்தை அறிவித்தார். அதில் விற்பனை வரி 5 சதவிகிதத்தில் இருந்து இருமடங்காக ஆக்கப்பட்டது. அத்துடன் பெருநிறுவன வரி விகிதமும் 40ல் இருந்து 25 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டது.

ஜூன் மாத இறுதியில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ருட் தொழிற்கட்சி அமைப்பிற்குள்ளேயே ஆட்சி சதிமூலம் அகற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜூலியா கில்லார்ட் பிரதமரானார். அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆஸ்திரேலியாவின் ஆதரவை மறுஉறுதி செய்தது மட்டுமின்றி, கில்லார்ட் ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனங்கள் மீது திட்டமிடப்பட்டிருந்த வரியை அகற்றியதுடன் கடும்சிக்கன கொள்கைகளுக்கு மாறுவது பற்றியும் அறிவித்தார்.

ஐரோப்பாவில், மேற்கே அயர்லாந்தில் இருந்து கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா வரை பெரும் வரவு-செலவு குறைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் மிகவும் பொருளாதார வலிமை உடைய ஜேர்மனியில் 80 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களை சுமத்தியுள்ளது. பிரான்ஸ் ஓய்வூதியங்களில் பெரும் குறைப்புக்களை செய்ததுடன், உள்ளூர் அரசாங்க வரவு-செலவுத் திட்டங்களிலும் 10 சதவிகித குறைப்பை ஏற்படுத்திவிட்டது.

750 பில்லியன் யூரோ மீட்புப் பொதி மற்றும் அதை மீட்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தின் செலவில் தொடங்கியிருப்பது, தற்காலிகமாகவேனும் ஐரோப்பிய முதலாளித்தவத்தின் தன்னம்பிக்கையை புதுப்பித்துள்ளது. 2010ன் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்க டாலரோடு ஒப்பிடும்போது 15 சதவிகிதம் சரிந்த யூரோ, கடந்த இரு மாதங்களில் மீண்டும் புத்துணர்ச்சி பெற்ளறுள்ளது. 1.30 டாலருக்கு 1 யூரோ என்பதில் இருந்து இது 10 சதவிகித இழப்பை ஈடுகட்டிவிட்டது.

ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய சிக்கன நடவடிக்கைகளின் காலம் மற்றும் வேகம் குறித்து ஐரோப்பாவுடன் எதிர்ப்புக்களை கொண்டிருந்தாலும், அதேபோன்ற ஊக்கப் பொதியில் இருந்து வரவு-செலவுத் திட்ட குறைப்பு மாற்றத்தைத்தான் அதுவும் செய்துவருகிறது. மாநிலங்களுக்கு அற்ப கூட்டாட்சி உதவி கொடுக்கவிருந்த திட்டங்களைக் கூட அது கைவிட்டுவிட்டது. பல வாரங்களாக கூட்டாட்சி கொடுத்துவந்த நீண்டகால வேலையற்றோருக்கான உதவி நலன்களை வாரத்திற்கு அதிகமாக தாமதப்படுத்தியமை அவற்றை முற்றிலும் தகர்த்துவிடுவதற்கான தயாரிப்பு ஆகும்.

நிர்வாகமும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சித் தலைமையும் மறைமுகமாக வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் நலன்களை பற்றி ஒரு “விவாதத்திற்கு” ஊக்கம் கொடுக்கின்றன. இதில் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் உதவி “வேலை செய்யாமல் இருப்பதற்கு ஒருவித ஊக்கம்”, “ஒரு புதிய நலன்” என்று விவரிக்கப்படுகிறது. இது பல மில்லியன் பணிநீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பணவருமானம் ஏதுமின்றி வாடுபவர் பற்றியும், அரசு சிந்தனைக்கு ஏற்ப பொதுமக்கள் மனநிலையை உருவாக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பாரிய வேலையின்மை என்பது தொழிலாளர்களை வறுமைநிலை ஊதியங்களைப் பெறுவதற்கும், வேலையை விரைவாக செயல்படுத்துவதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச முதலாளித்துவம் மிகவும் நனவான முறையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதன் போரைத் தீவிரப்படுத்தி வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நெரிப்பதில் தொழிற்சங்கங்கள் புரியும் முக்கிய பணியைப் பற்றி அது நன்கு அறியும். சமீபத்தில் பெத்தென்கூர் ஊழல் பற்றிய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி பொருளாதார நெருக்கடியின்போது தொழிற்சங்கங்கள் “மிகப் பொறுப்புடன்” செயல்பட்டுவருவது பற்றிக் குறிப்பாக பாராட்டிப் பேசினார்.

இதேபோல் ஆளும் வர்க்கம் கிரேக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, சிரிசா, பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற பல குட்டி முதலாளித்துவ இடது அமைப்புக்களின் முக்கிய அரசியல் பங்கு பற்றியும் நன்கு அறிந்துள்ளது.

இந்த அமைப்புக்களின் முக்கிய அக்கறை சமூக ஜனநாயகக் கட்சி, “தொழிற்கட்சி” மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கு வெளியே போராட்டத்தினுள் தொழிலாள வர்க்கம் நுளையும் ஆபத்து பற்றியதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவை அத்தகைய போக்கை தடுப்பதில் உறுதி கொண்டுள்ளன.

தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்தின் ஏஜண்டுகளான இந்த துரோக அமைப்யுகளின் பிற்போக்குத்தன பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முற்படும் என்று சோசலிச சமத்துவக் கட்சி எதிர்பார்க்கிறது. அத்தகைய ஒரு உடைவிற்கும், மேலும் திவாலாகிவிட்ட முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தொழிலாள வர்க்கம் தன் கையில் அதிகாரத்தை எடுப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியமைக்கவும் நாங்கள் திட்டவட்டமாக போராடுகின்றோம்.