சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel steps up operations in Gaza

இஸ்ரேல் காசாவில் நடவடிக்கைகளை அதிகரிக்கிறது

By Patrick O'Connor
8 June 2010

Use this version to print | Send feedback

நேற்று காலை காசா கடலோரப்பகுதிக்கு அருகே, நான்கு பாலஸ்தீனிய போராளிகளை இஸ்ரேலிய கடற்படை கமாண்டோக்கள் கொன்றனர். இந்நடவடிக்கை மே 31 அன்று ஒன்பது துருக்கி பணியாளர்கள் கொலை செய்யப்பட்டபின் எழுந்த பெருகிய விமர்சனத்தை பொருட்படுத்தாமல் அப்பகுதியில் சட்டவிரோத முற்றுகை தொடரும் என்ற செய்தியை பாலஸ்தீனிய மக்களுக்கும் உலகத்திற்கும் அனுப்பும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் செயற்பாடாகும்.

சமீபத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள், அல் அஹ்ஷா மாவீரர் படைப்பிரிவின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் காலை 4.30க்கு நீர்மூழ்கி உடையில் காசாவின் Nureirat அகதிகள் முகாம் அருகே நீர்நிலையில் ஒரு படகில் இருந்தனர். இஸ்ரேலிய இராணுவம் இவர்கள் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முயன்றனர் என்று கூறியது. ஆனால் அல் அஹ்ஷா மாவீரர் படைப்பிரிவு இதை மறுத்ததோடு அவர்கள் "கடற்படைபிரிவின்" உறுப்பினர்கள், பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் என்று கூறியது.

நிகழ்ச்சியை பற்றி விவரங்கள் இன்னும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில், இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியர்களை கொல்வதற்குப் பதிலாக அவர்களை காவலில் பிடிக்க எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. நான்கு உடல்களும் மத்தியதரைக்கடலில் இருந்து எடுக்கப்பட்டு, பின்னர் மத்திய காஸாவில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பாலஸ்தீனிய சுகாதார அதிகாரி மொவியா ஹாஸானைன், Haaretz பத்திரிகையிடம் இறந்தவரில் இருவரின் தலையில் பல துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருந்தன என்றார்.

இதில் தொடர்பு கொண்டிருந்த இஸ்ரேலிய துருப்புக்கள், விஷேடபடைப்பிரிவான Shayetet ஐ சேர்ந்தவை, அதுதான் மாவி மர்மரா உதவிக் கப்பல்மீது குருதி கொட்டிய தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பைக் கொண்டிருந்தது. பெயரிட விரும்பாத ஒரு இராணுவ அதிகாரி இஸ்ரேலின் இராணுவ வானொலியில், "இது அவர்கள் கடந்த வாரம் கொண்டிருந்த கடினப் பணியைத் தொடர்ந்து ஊக்கம் தரும் ஒரு செயலாகும்" என்றார்.

இக்கருத்து இஸ்ரேலிய அரசாங்கம், இராணுவம் இரண்டும் சர்வதேச சட்டத்திற்கு முழு மதிப்பின்மையை காட்டுவதற்கு ஒரு அடையாளமாகும். சியோனிச அரசாங்கம் பெருகிய முறையில் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அது கடுமையான உள்நாட்டு சமூக, அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகுவின் உறுதியற்ற கூட்டணி அரசாங்கம் பெரிதும் இராணுவ அமைப்பு மற்றும் வலதுசாரிக் குடியேறியவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் நம்பியுள்ளது. உதவிகள் எடுத்து வந்த கப்பல் தொடரணி மீதான தாக்குதல் பற்றி அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, பின் நடந்தது பற்றி வந்துள்ள எந்தக் குறைகூறலையும் பிடிவாதமாக நிராகரித்துள்ளது என்பவை இஸ்ரேலிய வெளியுறவுக் கொள்கையின் குற்றம்சார்ந்த தன்மை மற்றும் பொறுப்பற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாவி மர்மரா உதவிக் கப்பல் கொலைகளை பற்றி ஒரு சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொள்ள நெத்தன்யாகு மறுத்துவிட்டார். "வருங்கால நிகழ்வுகளுக்கு ஒரு பிரச்சினைக்குரிய முன்னோடியை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை" என்று பிரதம மந்திரி அப்பட்டமாக அறிவித்து, பாலஸ்தீனியர்கள் மீது இன்னும் அதிக இஸ்ரேலிய குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

ஞாயிறன்று லிகுட் மந்திரிசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தன்னுடைய அரசாங்கம் "கோல்ட்ஸ்டோன் போன்ற" விசாரணை தாக்குதலைப் பற்றி நடத்தப்படுவதற்கு உடன்பாடாது என்று நெத்தன்யாகு கூறினார். இது 2008-09 ல் காசாமீது இஸ்ரேல் நடத்திய மூன்று வார குண்டுவீச்சு பற்றி ஐக்கிய நாடுகள்சபை நடத்திய விசாரணை பற்றிய குறிப்பு ஆகும். அவ்விசாரணை போர்க் குற்றங்கள் செய்யப்பட்டன என்ற முடிவிற்கு வந்தது. அந்த விசாரணை மூத்த இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மீது அழுத்தத்தை அதிகரித்தது -- அவர்களில் பலரும் இப்பொழுது கைதுசெய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் ஐரோப்பாவிற்கு பயணிப்பதில் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

பல மூத்த அதிகாரிகள் இப்பொழுது விசாரணைக்கு தங்கள் எதிர்ப்பு குறித்து வாஷிங்டனின் ஆதரவை நாட முற்பட்டு, அமெரிக்க அரசியல், இராணுவத் தலைவர்களும் தங்கள் குற்ற நடவடிக்கைகளுக்காக விசாரணையை எதிர்கொள்ளக்கூடிய பயமுறுத்தலை எழுப்பியுள்ளனர். பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் தொழிற்கட்சி மந்திரிகள் கூட்டம் ஒன்றில் கூறினார்; "ஆப்கானிஸ்தானில் ஏதேனும் நடக்கும்போது அமெரிக்கர்கள் ஒவ்வொரு முறையும் ஏதேனும் விசாரணைக் குழுவை நியமிக்கின்றனரா?. இஸ்ரேலின் அமெரிக்காவில் உள்ள தூதர் மைக்கேல் ஓவன் "Fox News Sunday" இடம் கூறியது: "தன்னை விசாரித்துக் கொள்ளும் திறனும் உரிமையையும் இஸ்ரேல் கொண்டுள்ளது, ஒரு சர்வதேச குழுவினால் விசாரிக்கப்பட வேண்டியதில்லை. உதாரணமாக ஆப்கானிஸ்தானில் ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு அமெரிக்கா விரும்பாது என்றுதான் நான் நினைக்கிறேன்."

ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் நிர்வாகம் காசா உதவிக் கப்பல் தொடரணி மீது நடைபெற்ற தாக்குதலால் தூண்டிவிடப்பட்டுள்ள நெருக்கடியில் இஸ்ரேலின் முக்கிய உடந்தையாகத்தான் இயங்கியது. கடந்த வாரம் ஐ.நா.வில் நிலைமையை கட்டுப்படுத்த உதவியபின், வாஷிங்டன் இப்பொழுது மாவி மர்மரா தாக்குதல் பற்றி ஒரு இஸ்ரேலிய உள் விசாரணைக்கு ஒப்புதல் கொடுக்க தயாரிப்புக்களை அது செய்கிறது.

நேற்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அது முறையாக நிகழ்ச்சி பற்றி விசாரிப்பதாக அறிவித்துள்ளது. இதைத்தவிர, Haaretz பத்திரிகை நெத்தன்யாகு விரைவில் "அரசாங்க விசாரணைக்குழு" ஒன்றை அறிவிப்பார் என்றும் அதில் மூத்த இஸ்ரேலிய நீதிபதிகள், இரு சர்வதேச நீதிபதிகள், குறைந்தது ஒருவராவது அமெரிக்கர், பார்வையாளர்களாக இருப்பர் என்றும் தெரிவித்துள்ளது. செய்தித்தாள் கூற்றின்படி, "இக்குழு கமாண்டோ தாக்குதலில் பங்கு பெற்ற படையினர் அல்லது அதிகாரிகளை விசாரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது" என்ற முடிவை அவர் எடுத்துள்ளார். பெயரிடப்பட விரும்பாத மூத்த அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலிய, துருக்கிய பிரதிநிதிகள் தொடர்புடைய "விசாரணைக் குழுவை" அமைப்பது பற்றி விவாதிக்கின்றனர் --அவர்கள் Haaretz இடம், "இஸ்ரேலிய படையினர் விசாரணைக்குட்படாத வகையில் தக்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்கள்.

என்ன நடந்தது என்பது பற்றிய எவ்வித இஸ்ரேலிய விசாரணையும் ஒரு மூடிமறைப்பாகத்தான் முடியும். ஒரு வினா எழுப்பப்படலாம் --அரசாங்கத்தின் கூற்றான இஸ்ரேலிய கமாண்டோக்கள் தவறு ஏதும் செய்யவில்லை, தற்காப்பிற்காகத்தான் "பயங்கரவாதிகளுக்கு" எதிராகச் செயல்பட்டனர் என்பது உண்மையானால், சம்பந்தப்பட்ட படையினர் ஏன் வினாவிற்கு உட்படுத்தப்படக் கூடாது? கமாண்டாக்களுக்கு கேடயப் பாதுகாப்பு அளிப்பது மூடி மறைத்தலுக்கு மற்றுமொரு சான்றாகும்; இது துருப்புக்கள் உதவிகள் கொண்டுவந்த கப்பல் தளத்தில் ஏறியபோது எடுத்த செயல்களுடன் இயைந்துதான் உள்ளது; அப்பொழுது அவர்கள் கப்பலில் இருந்தோரின் புகைப்பட கருவி, பதிவு செய்யும் கருவிகள் அனைத்தையும் பறிமுதல் செய்திருந்தனர்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரமும் காசாவிற்குள் நிலைமை பற்றிய சர்வதேசக் கண்காணிப்பு தேவை என்று பெருகியுள்ள விடையிறுப்பிற்கு எதிராகத் அணிதிரட்டப்பட்டுகிறது. நெத்தன்யாகுவும் அவருடைய சக மந்திரிகளும் எந்த மனிதாபிமான நெருக்கடியும் இல்லை என்று திமிர்த்தனமாக உறுதியளிக்கின்றனர். உண்மையில் பாலஸ்தீனியப் பகுதி உலகின் மிக வறிய பகுதிகளில் ஒன்றாகும். இஸ்ரேலிய முற்றுகையால், காஸா ஒரு பெரிய சிறைக்கூடம் போல்தான் செயல்பட்டு வருகிறது.

உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் மலைக்க வைக்கும் 44 சதவிகிதம் ஆகும். மக்களில் 80 சதவிகிதத்தினர் உணவு, வருமான உதவியை நம்பியுள்ளனர். "மிக வறியவர்கள்" என்று வரையறை செய்யப்பட்டுள்ளவர்கள், அதாவது தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினருக்கோ உணவிற்கு வகை செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 100,000 ல் இருந்து 300,000 க்கு கடந்த 12 மாதங்களில் உயர்ந்து விட்டது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நிகர நிலை 2,500 டாலர் என்று 1998-99 ல் இருந்ததில் இருந்து கடந்த ஆண்டு 600 டாலர் ஆகக்குறைந்துவிட்டது.

காஸாவில் முன்பு வளர்க்கப்பட்டிருந்த மிகக்குறைந்த தொழில்துறை உற்பத்திகூட அடிப்படை இயந்திரம், உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுவிட்டதால் சரிந்துவிட்டது. அதேநேரத்தில் விவசாயத்துறையும் நெருக்கடியில் உள்ளது. அதற்குக் காரணம் ஏற்றுமதிகள் மீது இஸ்ரேல் விதித்துள்ள தடையாகும். அடிப்படை நுகர்பொருட்கள், ஐ.நா. மற்றும் உதவி அமைப்புக்கள் கொடுப்பதை தவிர, மிக உயர்ந்த விலையில்தான் பெறமுடியும். ஏனெனில் அவை எகிப்தில் உள்ள ஆபத்தான நிலத்தடி வழிகள் மூலம் கடத்திக் கொண்டுவரப் படுகின்றன.

இஸ்ரேலிய அரசாங்கம் சுமத்தியுள்ள ஒரு காட்டுமிராண்டித்தன கூட்டு தண்டனையினால் காஸாவின் 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 2006ல் நடந்த பாலஸ்தீனிய அதிகாரத் தேர்தல்களில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கர்களின் ஆதரவு, நிதி ஆகியவற்றைப் பெற்றிருந்த ஃபாத்தா வேட்பாளர்கள் ஹாமாஸிடம் தோற்றுவிட்டனர். இதை எதிர்கொள்ளும் விதத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அனைத்துப் பாலஸ்தீனிய அதிகார நிதியங்களையும் முடக்கிவிட்டன. இது அடிப்படைப் பணிகள், அரசாங்க உள்கட்டுமானம் ஆகியவற்றை காஸாவிலும் மேலைக் கரையிலும் தேக்கிவிட்டன. அதே நேரத்தில் வாஷிங்டன் ஹாமாஸ் எதிர்ப்பு ஆட்சிசதிக்கான இரகசியத் தயாரிப்புக்களுக்கு தலைமை தாங்கியுள்ளது. ஃபாத்தாவிற்குள் இருக்கும் பிரிவுகளுக்கு பணத்தையும் ஆயுதங்களையும் கொடுத்துள்ளது. இந்தத் தந்திரோபாயங்கள் இடைவிடாப் பூசலை ஜூன் 2007ல் பாலஸ்தீனியப் பிரிவுகளுக்கு இடையே தூண்டியது. ஹாமாஸ் காஸாவில் ஃபாத்தாவை முறியடித்தது. அமெரிக்க இதை எதிர்கொள்ளும் விதத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர் என்று இழிந்த முறையில் குற்றம்சாட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து "Operation Cast Lead", டிசம்பர் 2008 ல் இருந்து ஜனவரி 2009 வரை காசா மீது இஸ்ரேலிய தாக்குதல் நடைபெற்றது. அதில் 1,400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, மற்றும் ஒரு 20,000 பேர் வீடிழந்தனர். இக்குற்றம் நிறைந்த தாக்குதல் அடிப்படைச் சமூக உள்கட்டுமானத்தை இலக்கு வைத்தது. அதில் மின் நிலையங்கள், நீர் மற்றும் கழிவுநீர்ப் பிரவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிவை இலக்கு கொள்ளப்பட்டன. கடந்த மாதம் ஐ.நா.வளர்ச்சித்திட்டம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஓராண்டிற்குப் பின்: காசா விரைவில் மீட்பு மற்றும் மறுகட்டமைப்பிற்கு உதவி தேவை" என்ற தலைப்பில் உள்கட்டுமான சேதங்களில் 25 சதவிகிதம்தான் திருத்தப்பட்டுள்ளதாக அறிந்துள்ளது.

"இந்த முற்றுகை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், அழிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட சேதங்களை சீர்படுத்த பெரும் தடையாகி உள்ளது." என்று அறிக்கை முடிவுரையாகக் கூறியுள்ளது. "Cast Lead இன்போது அழிக்கப்பட்ட 3,425 வீடுகளில் எதுவுமே மறு கட்டமைக்கப்படவில்லை, 20,000 மக்களை வெளியேற்றியுள்ளது. பள்ளி வசதிகளின் சேதங்களில் 17.5 சதவிகிதம்தான் பழுது பார்க்கப்பட்டுள்ளன. இது கூடுதலான சிரமத்தை ஏற்கனவே அழுத்தம் உடைய காசாவின் கல்வி முறையில் கொடுத்துள்ளது. அங்கு பல தசாப்தங்களாக பள்ளிகளில் இரு பிரிவுகளாக மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு வந்தது.

"உள்கட்டுமான திருத்தல்கள் பின்னடைவை கண்டுள்ளது. மின்சார வலைப்பின்னலில் ஏற்பட்ட சேதங்களில் பாதிதான் பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இது கணிசமாக மின் வெட்டுக்களுக்கு தொடர்ந்து வகை செய்கிறது; போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு எந்த சீர்செய்தலும் நடக்கவில்லை. பொருளாதாரப்பிரிவில், சேதம் அடைந்துள்ள விளைநிலங்களில் கால்பகுதி பழைய நிலைக்கு வந்துள்ளது. தனி வணிகங்களில் 40 சதவிகிதம்தான் சீர்பார்க்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் தொழிலில் இஸ்ரேல் விதித்துள்ள தடைகளால் அனைத்தும் கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. இன்னும் கவனமாகப் பார்த்தால், பழுதுபார்க்கப்படாத உள்கட்டுமானம் அடிப்படைத் தேவைகளுக்கும் காஸா மக்களுக்கும் மிகவும் இன்றியமையாதவை ஆகும். பெரும் சேதங்களுக்கு உட்பட்டுள்ள அல்-வாபா, அல் குட்ஸ் மருத்துவமனைகள் சீரமைக்கப்படல் பொருட்கள் இல்லாததால் தாமதப்படுகிறது. பிந்தையதில் பணி பெப்ருவரி 2010ல் தான் தொடங்கியது."

இஸ்ரேலிய அரசாங்கம் வேண்டுமென்றே இந்த நெருக்கடியை தோற்றுவித்தது. அப்பொழுதுதான் ஹாமாஸ் தலைமையிலான அரசாங்கம் காஸாவை ஆளும் தகமை தடைக்கு உட்படும். மக்களிடையே அதன் அரசியல் ஆதரவு குறைமதிப்பிற்குட்பட்டுவிடும் என்ற அடிப்படையில் இது செய்யப்படுகிறது. நெத்தன்யாகுவும் அவருடைய சக மந்திரிகளும் பாலஸ்தீனிய மக்கள் பால் தாங்கள் சுமத்தும் மகத்தான இடர்களைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதற்கு இவ்வாறு செய்கின்றனர். இதே விதத்தில்தான் மாவி மர்மரா தாக்குதல் நிரூபித்துள்ளபடி, உதவிக்கு வரும் பணியாளர்களையும் நடவடிக்கையாளர்களையும் காஸா முற்றுகையைத் தக்க வைப்பதற்காக கொல்லுவதிலும் அவர்களுக்கு எந்த மனஉறுத்தலும் இல்லை.