சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Honda Lock strike in China continues as industrial unrest spreads

தொழில்துறை அமைதியின்மை பரவுகையில் சீனாவில் ஹொண்டா லாக் வேலைநிறுத்தம் தொடர்கிறது

By John Chan
12 June 2010

Use this version to print | Send feedback

தென்சீன போஷான் நகரில் ஹொண்டாவின் மின்கடத்திகள் மற்றும் புகைபோக்கி அமைப்புமுறை ஆலைகளில் கணிசமான ஊதிய உயர்வை வென்றவை மற்றும் ஜோங்கோஷனில் ஹொண்டா லாக் தொழிலாளர்களில் நடைபெற்றுவரும் தொழில்துறை நடவடிக்கைகளுடன் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வேலைநிறுத்த நடவடிக்கைகள் என்று தொடரப்படுகின்றன. அதிக ஊதியங்கள், சி்றந்த பணி நிலைமைகள், பாதுகாப்பான வேலைகள் என்று ஷாங்காய், ஜுஹாய் மற்றும் ஜியன் நகரங்களில் அரசாங்க மற்றும் வெளிநாட்டு உடைமையில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர்கள் கோருகின்றனர்.

1,700 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள ஹொண்டா லாக் வேலைநிறுத்தம் தீவிரமாகிறது. நேற்கு காலை தொழிலாளர்கள் ஆலைக்கு முன் ஒரு சிறு எதிர்ப்பு ஊர்வலத்தை கறுப்பு உடை அணிந்த கலகப்பிரிவு பொலிசாரை மீறி நடத்தினர். தொழிலாளர்களுடன் மோதாமல் பொலிசார் இடத்தைவிட்டு நீங்கினர். ஆயினும் கூட ஒலிபெருக்கிகள் மூலம் தொழிலாளர்கள் 100 யுவனான் ஊதிய உயர்வை ஏற்கவில்லை என்றால் "தீவிர விளைவுகளைச்" சந்திக்க நேரிடும் என்று ஹொண்டா நிர்வாகம் எச்சரித்தது. பல ஹொண்டா லாக் தொழிலாளர்களும் இப்பொழுது உள்ளூர் உத்தியோகபூர்வ குறைந்தபட்ச ஊதியமான மாதம் ஒன்றிற்கு 900 யுவானை (அமெரிக்க $132, 42 மணி நேர வாரத்திற்கு) சம்பாதிக்கின்றனர். அவர்கள் இன்னும் 800 யுவான்கள் அதிகாரிப்பு மாத ஊதியத்தில், அதாவது 89 சதவிகிதம் அதிகம் கோருகின்றனர்.

வியாழனன்று South China Morning Post, "நாங்கள் 200 யுவானுக்கு உடன்படுவோமா? வழியில்லை. 300? முடியாது! 400! அதற்கும் வாய்ப்பு இல்லை" என்று ஆலை சுற்று வேலி அருகே தொழிலாளர்கள் கோஷமிட்டதாகத் தெரிவித்துள்ளது. ஹூனானில் இருக்கும் 32 வயது பெண் தொழிலாளி கூறினார்: "எங்களுக்கு நான்ஹாய் ஹொண்டா தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் அதே ஊதிய விகிதம் வேண்டும். ஒரு சென்ட் கூட குறையக்கூடாது." குவாக்சியில் இருக்கும் 33 வயது தொழிலாளர் தான் ஏன் வேலை நிறுத்தத்தில் சேர்ந்தேன் என்று செய்தித்தாளிடம் கூறினார்: "நான் வண்ணம் பூசும் பிரிவில் உள்ளேன். உள்ளே சுவாசிக்கும் காற்றின் நிலை மிக மோசம். நான்கு ஆண்டுகளாக நச்சுப் புகைகளைத்தான் நுகர்ந்து கொண்டிருக்கிறேன். மாதத்திற்கு 1,800 யுவான்கள்தான் பெறுகிறேன். ஊதியத் தரம் மிக மிகக் குறைவு."

தொழிலாளர்களுக்கு தங்குமிடம் கொடுக்கப்படுவதில்லை, அருகில் இருக்கும் அடுக்கு வீடுகளில் வசிக்க வேண்டும். அவை பொதுவாக வாடகை, மற்ற வசதிகளுக்கு என்று மாதத்திற்கு $44 [300 யுவான்] என உள்ளன.

ஹொண்டா லாக் தொழிலாளர்கள் கடுமையான பணியிட நிலைமைகளினால் ஆத்திரமூட்டப்பட்டுள்ளனர். எட்டு மணி நேரத்திற்கு நின்று வேலைசெய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், கருவுற்றிருக்கும் மகளிர் கடைசி மூன்று மாத காலத்திற்குத்தான் உட்கார அனுமதிக்கப்படுவர். தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் பேசக்கூடாது, கழிவறைக்குச் செல்லுமுன் அனுமதிச்சீட்டுப் பெற வேண்டும், ஏன் அவர்கள் நீர் குடிப்பதுகூட நிர்வாகத்தால் கண்காணிக்கப்படுகிறது. புதன் கிழமை காலை ஒரு நிறுவனப் பாதுகாப்புக்காவலர் ஒரு பெண் தொழிலாளியை ஆலைக்குள் அவர் அடையாள அட்டை அவருடைய சட்டையில் தவறாக இணைக்கப்பட்டிருந்தாகக் கூறி உள்ளே அனுமதிக்கப்படவில்லை, பெண் தொழிலாளி எதிர்ப்புத் தெரிவிக்கையில் காவலர் அவரைக் கீழே தள்ளியதை அடுத்து இந்த வேலை நிறுத்தம் தொடங்கியது;

ஹொண்டா லாக் ஊழியர்கள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தொழிலாளர் குழு ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த தொழிலாளர்களின் அமைப்பு அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ACFTU என்னும் அனைத்துச் சீன தொழிற்சங்கக் கூட்டமைப்பிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது; சிலர் ஒரு புதிய சுயாதீன தொழிற்சங்கம் தேவை என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். "ACFTU தொழிற்சங்கம் எங்கள் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று பெயரிடாத வேலைநிறுத்தக்காரர் நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார்; "நாங்கள் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சொந்த தொழிற்சங்கத்தை அமைக்க விரும்புகிறோம்."

இத்தகைய போக்குகள் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தின்மீது எந்த சுயாதீன அமைப்பும் கூடாது என்று விதித்துள்ள தடைக்கு ஒரு நேரடியான சவால் ஆகும்; இது 1949 மாவோவின் விவசாயிகள் படை அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து நடைமுறையில் உள்ளது.

நேற்று பைனான்சியல் டைம்ஸ்: "வேலைநிறுத்தங்கள் தொடரும் அனைத்து ஆலைகளிலும், சாதாரண உடை அணிந்து தொழிலாளர்களை கண்காணிக்கும் பொலிசும், நிருபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது." என எழுதியது. சீனா முழுவதிலும் நடக்கும் வேலைநிறுத்த அலையின் முழு அளவும் தெளிவாகத் தெரியவில்லை- சில முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அல்லது தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன; பிற போராட்டங்கள் வேண்டுமேன்றே அரசாங்கச் செய்தி ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

குவாங்டாங் மாநிலத்தில் உள்ள ஜுஹாயில் வியாழனன்று கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்கள் ஒரு Flextronica ஆலையில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் வாங்கும் 2,000 யுவானை ஒட்டி தங்கள் ஊதியங்களும் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தம் செய்தனர். அமெரிக்கர்களுக்கு சொந்தமான Flextronics, பாக்ஸ்கானுக்கு அடுத்து, உலகின் இரண்டாம் மிகப் பெரிய வெளியிட மின்னணுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனம் ஆகும்; இதில் 30,000 தொழிலாளர்கள் ஜுஹாய் ஆலையில் உள்ளனர். பாக்ஸ்கானில் இருப்பதைப் போல் ஒரு மிருகத்தன உற்பத்தி ஆட்சிமுறைக்கு தாங்கள் அடிமையாக உள்ளோம், ஆனால் மாதம் 965 யுவான் மட்டும்தான் பெறுவதாகத் தொழிலாளர்கள் குறைகூறியுள்ளனர். பல தொழிலாளர்கள் தற்கொலை புரிந்து கொண்டதை அடுத்து நிர்வாகம் ஊதிய உயர்வை வழங்க முன்னர் இந்த ஊதியம் பாக்ஸ்கானுக்கு ஒப்பாக இருந்தது.

ஷாங்காயில் மின்னணுப் பொருட்கள் தயாரிக்கும் பெருநிறுவன பாக்ஸ்கானின் TPO Displays என்னும் நிறுவனத்தில் உள்ள 2,000 தொழிலாளர்கள் புதன் அன்று ஆலையை நான்ஜிங்கிற்கு மாற்றிச் செல்ல இருப்பதாக வந்துள்ள நிறுவன வதந்திகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர். இத்தொழிலாளர்கள் LCD திரைகளை கைத்தொலைபேசிக்காகவும் GPS கருவிகளுக்காகவும் தயாரிக்கின்றனர்.

ஷாங்சி மாநிலத்தில் உள்ள ஜியனில் ஜப்பானின் Brother நிறுவனம் இரு தையல் இயந்திர ஆலைகள் ஜூன் 3 ம் தேதி அதிக ஊதியம், பிற நலன்களைக் கேட்டு 900 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததின் விளைவாக மூடப்பட்டுள்ளன. ACFTU ஆலைகளின் தலைவர் தொழிலாளர்கள் கடந்த வியாழனன்று ஜப்பானிய நிர்வாகம் சலுகைகளைக் கொடுத்தபின் மீண்டும் பணிக்கு வர உடன்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஜியாங்சி மாநிலத்தில்ள்ள ஜியுஜியாங்கில், ஒரு தைவானிய உடைமையில் உள்ள விளையாட்டுத்துறைக் கருவிகள் தயாரிப்பு ஆலையில் 8,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கடந்த சனிக்கிழமை அன்று ஒரு பெண் தொழிலாளி அடையாள அட்டையை குத்திக் கொண்டுவராதது அவர் ஆலையில் நுழைவதில் இருந்து தடைக்குட்படுவதில் முடிந்தது. இதனால் நடந்த வாதங்களில் பாதுகாப்புக் காவலர்கள் தலையிட முயன்ற மற்றொரு தொழிலாளியை அடித்தனர். அவர் அக்காயங்களால் இறந்துவிட்டார் என்ன வதந்திகள் வெளிவந்ததும், ஆலைத் தொழிலாளர்களின் அடக்கி வைக்கப்பட்ட சீற்றம் திங்களன்று வெளிப்பட்டு, தொழிற்சாலை பாதுகாப்புக் காவல்துறை அலுவகம், ஆலைக் கதவு, கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொருக்கினர். 200 பொலிஸ் அதிகாரிகள் வந்து தொழிலாளர்களை தாக்கிய பாதுகாப்புப் பிரிவுக் காவலரை கைது செய்ததோடு வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது. உற்பத்தி மீண்டும் தொடங்கும் வரை பொலிசார் ஆலையில் இருந்தனர்.

ஹுபெய் மாநிலத்தில் சுயிஜௌ நகரத்தில் 400 தொழிலாளர்கள் தங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜவுளி ஆலைக்கு முன் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆலை ஒரு தனியார் வணிக உரிமையாளருக்கு விற்கப்பட்டுள்ளது; அவர் உற்பத்தியை புதுப்பிக்க முடியவில்லை; மாறாக தொழிலாளர்களுடைய ஓய்வூதியங்கள், பிற நலன்களை கொள்ளையடித்தார். உள்ளூர் அதிகாரம் மீண்டும் நிறுவனத்தை வாங்கியது, ஆனால் அதை ஒரு நிலசொத்துக்கள் விற்பனையாளரிடம் விற்றது. தொழலாளர்கள் கடந்த மாதம் இந்த விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

சர்வதேச நிதியச் செய்தி ஊடகம் சீனாவில் எழுச்சிபெற்றுவரும் தொழிலாளர் இயக்கத்தை தொடர்ந்து பெரும் கவலையுடன் கண்காணிக்கிறது.

புதன் கிழமை பைனான்சியல் டைம்ஸில் ரொம் மிட்சல் கொடுத்துள்ள கருத்து உலக விநியோக சங்கிலிகளுக்கு தொழில்துறை நடவடிக்கை ஏற்படுத்தும் தடை, ஊதியச் சலுகைகள் கொடுப்பது போன்றவைகளுக்கு சேதம் கொடுப்பதைப் போன்ற சேதங்களைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். "உலக அளிப்புச் சங்கிலியின் சிக்கல் வாய்ந்த தன்மை பார்த்து வியக்கக் கூடியதுதான்: ஆனால் அதற்கும் ஒரு விலை உண்டு. மில்லியன் கணக்கானவர்கள் தொடர்புள்ள மிகவும் படர்ந்துள்ள ஒரு அமைப்புமுறையின் இயல்பான உறுதியற்றதன்மை, அதன் வருங்காலத்துடன் பிணைந்துள்ள நிறுவனங்களில் பரந்த எதிர்மறையான பின்விளைவுகளை விரைவில் ஏற்படுத்தக் கூடும்." என்றார்.

வியாழனன்று BusinessWeek சீனத் தொழிலாளர்களின் இளைய தலைமுறை, "தங்கள் பெற்றோர்களைவிட உலகப்போக்குகள் பற்றி நன்கு அறிந்துள்ளனர்; இதற்குக் காரணம் பரந்த அளவில் இணைய தளம் மற்றும் கைத்தொலைபேசி பயன்பாடுகள் இருப்பதுதான்." என்றார். டான்குவானில் உள்ள ஜேர்மனிய ஆலை உரிமையாளரான Frank Jaeger, ஒவ்வொரு தொழிலாளியும் தானே தொழிற்துறை வக்கீல் போல் உள்ளார். என்னுடைய மனித உரிமைகள் அதிகாரியை விடத் தங்கள் உரிமைகளை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்." என்று குறைப்பட்டுக்கொண்டார். தென் சீனாவில் உள்ள அமெரிக்க வணிகச் சங்கத்தின் தலைவர் Harley Seyedin, "எல்லா இடங்களிலும் இணைய தள சேவைகள் கிடைக்கின்றன, தொழிலாளர்கள் தகவல்களை அறிகின்றனர். அவர்கள் கூடுதல் ஊதியங்களைக் கேட்கத் தலைப்பட்டுவிட்டனர். குறைவூதிய ஊதியக்காலம் முடிந்துவிட்டது." என்றார்.

ஹாங்காங்கின் Economic Daily நேற்று, "நாடு முழுவதும் வேலை நிறுத்தங்கள் பரவக்கூடும்" என்று எச்சரித்தார். சில பெருநிறுவனங்கள் ஊதிய உயர்வைக் கொடுக்க முடியுமே ஒழிய, அதற்கும் சில வரம்புகள் உள்ளன என்று அது கூறியுள்ளது. பிற இடங்களில் அதிக இலாப வாய்ப்புக்கள் உள்ளன என்றால் சீனாவில் இருந்து சர்வதேச நிறுவனங்கள் வெளியேறக்கூடும். அதே நேரத்தில் பல சிறு, நடுத்தர நிறுவனங்கள் 20 அல்லது 30 சதவிகித ஊதிய உயர்வைக் கொடுத்தால் சரிந்துவிடும். பெய்ஜிங் உள்நாட்டு நுகர்விற்கு ஊக்கம் கொடுத்தல் முக்கியம்தான் என்றாலும், அதிக ஊதியம் கொடுப்பது பெரும் இடர்களை ஏற்படுத்தும். "சீனாவில் உள்ள தற்போதைய சமூக அழுத்தங்கள் நிலைமையில், வேலைநிறுத்தங்கள் ஏனைய சமூக துன்பங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களாக வளர்ச்சியடைந்து இருக்கும் சமூக அமைப்பு மற்றும் அரசாங்த்திற்கு எதிரான அமைதியின்மை என்று கூட வளரும். இது சமூக உறுதியை குலைத்துவிடும்." என்று விளக்கியுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருகும் வேலைநிறுத்த அலை கொடுக்கும் ஆபத்துக்கள் பற்றி நன்கு தெரியும். தற்பொழுது இது ஒரு மெல்லிய நூலில் நகர்ந்துகொண்டிருக்கிறது. பரந்த எதிர்ப்பு இயக்கத்தை தூண்டக்கூடும் என்ற பயத்தினால் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடுவதில் தயக்கம் காட்டுகிறது. அதே நேரத்தில் கடந்தகாலத்தில் அது செய்தது போல் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு வன்முறை மோதலுக்கும் தயாரிப்புக்களை நடத்திவருகிறது.