சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government witch-hunts partner of niqab-wearing woman

நிக்காப் அணிந்த பெண்ணின் துணைவரை பிரெஞ்சு அரசாங்கம் பெரும் தொல்லைக்கு உள்ளாக்குகின்றது

By Antoine Lerougetel
18 June 2010

Use this version to print | Send feedback

ஏப்ரல் 2ம் திகதியில் இருந்து ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு வெறித் தொல்லை நடவடிக்கையை அல்ஜீரியாவில் இருந்து வந்து பிரெஞ்சு பிரஜாயுரிமை பெற்றவரான Lies Hebbadj க்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இச்செயலானது அரசாங்கம் குடியேறுபவர்களை அவர்கள் பிரெஞ்சு பிரஜா உரிமை பெற்றுள்ள அந்தஸ்த்தை நினைத்தபோது அகற்றும் உரிமையை அளிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கும். ஓராண்டிற்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்கள் கருத்தைத் தூண்டும் வடிவமைப்புக் கொண்டிருந்த பர்க்கா அல்லது நிக்காப் என்னும் முழு முகத்தை மறைக்கும் ஆடைகளை தடைசெய்யும் பிற்போக்குத்தன பிரச்சாரத்தின் தொடர்ச்சி ஆகும்.

ஜூன் 9ம் திகதி நான்ந் குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒரு பொலிஸ் காவல் வாகனத்தில் இரு மோட்டார் சைக்கிள் பொலிஸ் பாதுகாப்புடன் 48 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டபின், ஹெபட்ஜ் அழைத்துச் செல்லப்பட்டார். பலதாரத் திருமணம், உதவிநலனைப் பெறுவதில் மோசடி, தன்னுடைய இறைச்சிக் கடை மற்றும் டாக்சி வியாபாரங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வேலைக்கு வைத்துள்ளது என்ற குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அவருடைய துணைவியாரும் நான்கு குழந்தைகளின் தாயாருமான Sandrine Mouleres ஐ, ஜூன் 7ம் தேதி உதவிநலன்களை பெறுவதில் மோசடி செய்தது பற்றி கேள்விகள் கேட்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார், மறுநாள் காலை 1 மணிக்கு, பொலஸ் காவலில் 18 மணி நேரம் இருந்தபின் அவர் விடுவிக்கப்பட்டார். அரசாங்க வக்கீல் அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனை "வெற்றிகரமானது" என்று கூறிப்பிட்டார்; ஆனால் எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது கொண்டுவரப்படவில்லை, ஏனெனில் "மோசடி மற்றும் சமூக நல உதவிகள் ஆகிய அவர் பற்றிக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவருடைய விளங்கங்கள் திருப்திகரமாக இருந்தன."

அரசாங்கத்தின் பர்க்கா, நிக்காப்-எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு Mouleres உடைய எதிர்ப்பானது ஒரு அரசியல் பதிலடிச் செயலாகும். ஏப்ரல் 2ம் திகதி, பர்க்காவைத் தடைசெய்ய வேண்டும் என்னும் அரசியல் செய்தி ஊடகப் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் போலிசார் மூலர்ஸ் காரோட்டும் போது முழு முகத்தை மறைக்கும் நிக்காப் திரையை அணிந்ததற்காக 22யூரோக்கள் அபராதம் விதித்தனர். அது அவருடைய பார்வைக்குத் தடுப்பு ஏற்படுத்தியது என்றும் கூறினர். பிரான்ஸில் இத்தகைய குற்றச்சாட்டு இப்பொழுதுதான் முதல் முதலாகக் கூறப்பட்டது. பொலிசார் தனக்கு எதிராக பாகுபாட்டு மனப்பான்மை காட்டுவதாகக் கூறி அபராதம் கட்ட அவர் மறுத்துவிட்டார். பின்னர் Hebbadj இவருக்கு ஆதரவாக வந்தார்.

France Info வலைத் தளம் கொடுக்கும் தகவலானது: "இவருடைய நான்கு பெண் துணைவிகளும், இவர்களில் ஒருவர் தான் முறையான சட்டப்படியான மனைவி, சமூகநல உதவியை பெறுதலில் மோசடிக்காகவும், சில ஏமாற்றுதலுக்காகவும் விசாரணைக்குட்படுத்தப்பட அழைக்கப்பட்டுள்ளார்கள்."

உள்துறை மந்திரி Brice Hortefeux உடனடியாக இப்பொழுது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு Hebbadj இன் பிரஜாவுரிமையைப் பறிக்கும் வாய்ப்புப் பற்றியும் பிரச்சினை எழுப்பியுள்ளார். ஒரு உத்தியோகபூர்வக் கடிதத்தில் அவர் "Hebbadj நான்கு மனைவிகளுடன் வாழும் பலதார மண முறையில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்கள் மூலம் 12 குழந்தைகளைப் பெற்றுள்ளதாகவும்" அவர் "சமூக நல உதவிகள் மோசடி செய்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும்" எழுதியுள்ளார்.

கன்சர்வேடிவ் நாளேடான Le Figaro வின் சட்ட வல்லுனர்கள் தற்பொழுது ஒரு கொடுக்கப்பட்ட பிரஜாவுரிமையானது அரச சபையின் மூலம் தான் பறிக்கப்பட முடியும் என்றும், அதுவும் நாட்டின் நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்கிறார் என்று குற்றவாளியாக காணப்பட்டதன் பின்னர் தான் அல்லது பயங்கரவாத நடவடிக்கை அல்லது ‘பிரெஞ்சு குடிமகனாக இருக்கும் பண்பிற்கு தகுதியற்ற" நடவடிக்கைகளின் பின் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்னும் Hortefeux, Besson க்கு உளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருப்பது அத்தகைய பிரஜாவுரிமை பறிப்பானது "ஒரு நபர் நாடற்ற நிலைக்குத் தள்ள வழிவகுக்குமானால்" அது செய்யப்படக்கூடாது என்ற விதி இருப்பதும் ஆகும். இதையும் அரசாங்கம் சட்ட உரிமைத் தொகுப்பில் கவனம் செலுத்த வேண்டிய கூறுபாடாக இருக்கலாம்.

Hebbadj "பல பெண்களுடன் உறவுகள்" வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார், ஆனால் ஒருவரைத் தான் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மூன்று மற்றய பெண்களை சமய முறையில் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும், இது சிவில் சட்டப்படி அங்கீகாரம் பெறவில்லை என்றும் பிரெஞ்சு சட்டப்படி மனைவிகள் என்று கருதப்பட முடியாது.

தினசரி பத்திரிகையான Liberation ஏப்ரல் 26 பதிப்பில் Hortefeux க்கு Hebbadj கொடுத்த பதிலை மேற்கோளிட்டுள்ளது: "என் அறிவிற்கு எட்டியவரையில், பிரான்ஸில் பல பெண்களுடன் உறவுகள் சட்டவிரோதம் அல்ல, இஸ்லாமிலும் அல்ல. ஒருவேளை கிறிஸ்துவ மதத்தில் இருக்கலாம், ஆனால் பிரான்ஸில் அல்ல.... ஒருவர் பல பெண்களுடன் உறவுகள் வைத்திருப்பதற்காக குடியுரிமையை இழக்க வேண்டும் என்றால், ஏராளமான பிரெஞ்சு மக்கள் தங்கள் குடியுரிமைகளை இழப்பர்."

குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு வெறிப் பிரச்சாரம், இதில் பர்க்காவிற்கு எதிரான சட்டம் ஒரு அடிப்படைக் கூறுபாடு ஆகும், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியினால் ஜூன் 22, 2009ல் "பிரான்ஸில் பர்க்காவிற்கு வரவேற்பு கிடையாது" என்று அறிவித்த பின் இயற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதி ஆண்ட்ரூ ஜெரான் தலைமையில் இருந்த பர்க்கா திட்ட நோக்கம் அனைத்துப் பாராளுமன்றக் கட்சிகளாலும் நிறுவப்பட்டது--இதில் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, Jean-Luc Mclenchon உடைய இடது கட்சி மற்றும் பசுமைவாதிகள் ஆதரவும் இருந்தன.

பர்க்காவிற்கு எதிரான முதலாளித்துவ இடதுகளின் பங்கு அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு திறந்து விட வழிவகுத்துள்ளது.

இது தேசிய சட்டமன்றத்தில் பொது இடத்தில் பர்க்கா அல்லது முழு முகத்திரை அணிவதை தடைசெய்யும் ஒரு சட்டத்திற்கு அழைப்புவிடும் தீர்மானம் மே 11ம் திகதி UMP யால் கொண்டுவரப்பட்டதில் சோசலிஸ்ட் கட்சியும் ஆதரித்து வாக்களித்ததில் உச்சக்கட்டத்தை அடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள், இடது முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சட்டமன்றத்தில் வாக்களிக்க வராத நிலையில் இது ஒருமனதாக இயற்றப்பட்டது.

இந்த வாக்கு மார்ச் 30ம் தேதி நாட்டின் மிக உயர்ந்த நிர்வாக நீதிமன்றமான State Council பர்க்காவைத் தடைசெய்யும் சட்டத்திற்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தும், அதை மீறி வந்தது ஆகும். அந் நீதிமன்றம் கூறியிருந்தது: "முழு முகத்தை மறைக்கும் திரையை அணிவது பொதுத் தடைக்கு உட்பட்டால், அல்லது பொது இடத்தில் முழுமையாக ஒருவரின் முகத்தை மறைக்கும் விதத்தில் அணியப்படும் திரை தடைக்கு உட்படுத்தப்படுவது தீவிர இடர்களைச் சந்திக்கும், இது நம் அரசியலமைப்பு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் மரபிற்கும் எதிரானது."

குடியேறுபவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இப்பொழுது பிரான்ஸிலும் ஐரோப்பா முழுவதும் சுமத்தப்படுகின்ற கடுமையான சிக்கன நடவடிக்கைகளில் இருந்து முடிவுறாத முறையில் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும். மேலும் ஜனநாயக உரிமைகளை அழித்து ஒரு பொலிஸ் அரசாங்கத்தை வளர்ப்பதில் ஒரு முக்கியமான படி இதுவாகும். இவை பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமானது ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கிலும் நடத்தும் ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளை நியாயப்படுத்தவும் உதவுகின்றன.

அரசாங்க அதிகாரிகள் குடியுரிமைகளுக்கு எதிரான தங்கள் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜூன் 9ம் திகதி, நீதிமன்றத்திற்கு Hebbadj மீதான குற்றச் சாட்டுக்களை கேட்க அழைத்துச் செல்லப்பட்டபோது, Hortgefeux, "குடியுரிமைச் சட்டத் தொகுப்பு" மாற்றத்தைப் பற்றிய தன் விருப்பத்தை அறிவித்து, "நடைமுறையில் இருக்கும் பலதார முறைக்கு எதிராகப் போரிடவேண்டும், இதையொட்டி குடியுரிமை பெற்றுள்ளவர் பலதாரத் திருமணம் செய்து கொண்டால் அவருடைய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார்.

இதன்பின், Hortefux ஒரு வெளிநாட்டவர் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்றபின், அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் அவர் "நடைமுறையில் பலதாரத் திருமண உறவில் வாழ்ந்து அதை சமூக உதவி நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வது" சரியானது அல்ல என்று மீண்டும் கூறினார். குடியுரிமை என்பது "பேசத்தகாத வினா" அல்ல என்றும், "மற்ற ஒப்பந்தங்களைப் போல், முறிக்கக்கூடிய ஒப்பந்தம் தான்" என்றும் கூறினார்.

ஆளும் UMP (Union for a Popular Movement) ன் பொதுச் செயலாளர் Xavier Bertrand கூறினார்: "பலதார திருமணம் சட்டங்களுக்கு எதிரானது, குடியரசின் கொள்கைகளுக்கு எதிரானது, எனவே பலதாரம் நிரூபணம் ஆனால், ஒரு நபர் பிரெஞ்சுக்காரராக தொடர்ந்து இருக்க முடியாது."

உண்மையில் 1993 வரை, பிரான்ஸில் வசித்து வந்த ஆப்பிரிக்கத் தொழிலாளர்களுக்கு பலதார திருமணம் சட்டபூர்வமாக இருந்தது.

Figaro கட்டுரை ஒன்று குடியேற்ற மந்திரி எரிக் பெசோன் குடியேற்றச் சட்டவரைவு செப்டம்பர் 25ல் பாராளுமன்றத்தில் இயற்ற இருப்பது, திருத்தப்படலாம், ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் அவ்வாறு விரும்பினால், அதையொட்டி குடியுரிமை பெற்றதை உதவி நல மோசடிக்காக, பலதாரத் திருமணத்திற்காக அல்லது தீவிர வன்முறைச் செயல்களுக்காக இரத்து செய்யப்படலாம் என்றார்.

செய்தித்தாள் கருத்துக்கள் கூறுகிறதாவது: "ஆனால் பலதாரத் திருமணம் நிரூபிக்கக் கடினமானது. இரு சிவில் அதாவது சட்டப்படி திருமணங்கள் செய்து கொள்ளுபவர்கள் அபூர்வம்."

ஆயினும் கூட அரசாங்கம் பலதாரத் திரமணத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. Le Nouvel Observateur, Hortefeux ஐ மேற்கோளிட்டுள்ளது; குற்றவியல் சட்டத் தொகுப்பில் உள்ள வரையறை பலதாரத் திருமணம் பற்றியது, உண்மையுடன் ஒத்திருக்கவில்லை. ஏனெனில் பிரான்ஸில் நடைமுறையில் சட்டபூர்வமாக எவரும் பலதாரத் திருமண நிலையில் இல்லை." "சட்டமானது சமய திருமணங்களையோ, பகிர்ந்து கொள்ளப்படும் நலன்களுக்காக ஒன்றாக வாழ்பவர்களில் நிலைமையையோ கருத்திற் கொள்ளுவதில்லை, உண்மையில் "நடைமுறை பலதாரத் திருமணம் பற்றி. இதனால் ஒரு மனிதன் மனைவிகள் பெறும் சமூக நலன்களில் இருந்து வாழமுடியும் விதத்தில் வகைசெய்து கொள்ள முடியும்."

Hortefeux சமூகப் பாதுகாப்பு பற்றிய அக்கையைக் காட்டுவதாகக் கூறும் பாசாங்குத்தனம் அவருடைய அரசாங்கத்தின் நடப்பிலுள்ள சிக்கன நடவடிக்கைத்திட்டங்கள், வங்கிகள் பிணை எடுப்பிற்கு அவருடைய அரசாங்கம் கொடுக்கும் ஆதரவினால் அடிக்கோடிடப்படுகிறது. இவை ஐரோப்பா முழுவதும் வங்கிகளைத் திருப்தி செய்ய அரசாங்க நிதிகளைக் கொள்ளை அடிக்கின்றன. அரசாங்க நிதியங்கள் பற்றிய கவலைகளைப் பற்றிய இழிந்த கூற்றுக்களை அகற்றினால், Hortefeux ன் நிலைப்பாடு கீழுள்ளது போல் தான் இருக்கும்: சட்டம் அவரை குடியேறுபவர்கள் மீது இலக்கு கொள்ள உதவவில்லை என்றால், அது மாற்றப்பட வேண்டும், அதையொட்டி பிற்போக்குத்தன முஸ்லிம்-எதிர்ப்புப் பிரச்சாரம் தொடரப்படலாம்.