சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Chinese workers revolt against the unions

சீனத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக எழுச்சி செய்கின்றனர்

John Chan
17 June 2010

Use this version to print | Send feedback

சீனத் தொழிலாளர்கள் ஹொண்டா ஆலைகளிலும் பிற ஆலைகளிலும் குறைந்த ஊதியம் மற்றும் கடுமையான பணி நிலைமைகளுக்கு எதிராக சமீபத்தில் நடத்திய வேலைநிறுத்தங்கள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான விடயங்களை எழுப்பியுள்ளன. ஆரம்பத்தில் இருந்தே வேலைநிறுத்தங்கள் ஒரு ஆரம்ப கிளர்ச்சி வடிவத்தை கொண்டுள்ளன. இவை நிர்வாகத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் எதிராக என்று மட்டும் இல்லாமல், வெளிப்படையாக பெய்ஜிங் ஆட்சிக்கு தொழில்துறை பொலிசார் போல் செயல்படும் ACFTU எனப்படும் அனைத்துச் சீன தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் உள்ளன.

பல பூசல்களில் சுயாதீன அமைப்புக்கள் அல்லது தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக வெளிப்பட்டுள்ளது. போஷனில் உள்ள ஹொண்டா மின்கடத்தி ஆலை மற்றும் ஜோங்காஹனில் உள்ள ஹொண்டா லாக் ஆலையிலும் தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்திற்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தனிப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து, ACFTU அதிகாரிகள் "மத்தியஸ்தர்கள்" என்று குறுக்கிட விரும்பும் முயற்சிகளை நிராகரித்தனர். ACFTU இனை "முதலாளித்துவத்தின் விசுவாசமான நாய்கள்", "தொழிலாள வர்க்கத்தின் துரோகிகள்" என்று தொழிலாளர்கள் கசப்புணர்வுடன் கண்டித்துள்ளனர்.

சீனாவில் வெடித்துள்ள வேலைநிறுத்தங்கள் ACFTU அமைப்பிற்கு எதிராக என்பதைத் தவிர வேறு எந்தவிதத்திலும் நடைபெற்றிருக்க முடியாது. 1949ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த ஆட்சி சோசலிசத்தை உண்மையான அடித்தளமாக கொண்டிருக்கவில்லை, ஆனால் ஸ்ராலினிச அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆழ்ந்த விரோதப் போக்கை கொண்டிருந்தது. நகரங்களில் நுழைந்தவுடனேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய இராணுவங்கள் சுயாதீனத் தொழிலாளர்கள் போராட்டங்கள் அனைத்தையும் நசுக்கினர். புதிய ஆட்சி பணியிடங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டவருவதற்கு ஒரு அதிகாரத்துவ வழிவகையாக ACFTU வை நிறுவியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்கு எதிராகக் கொண்ட வர்க்க விரோதம் அது 1978ல் வெளிப்படையாக முதலாளித்துவச் சந்தை முறையை தழுவியதில் இருந்து தீவிரமாகியது. 1980 களில் போலந்தில் பாரிய Solidarity இயக்கத்தைக்கண்டு பீதி அடைந்த பெய்ஜிங் தொழிலாள வர்க்கத்தின்மீது தன்னுடைய பிடியை இறுக்க முற்பட்டது. 1982ல் அது அரசியலமைப்பில் பெயரளவிற்கு இருந்த வேலைநிறுத்த உரிமையைக் கூட அகற்றி மக்கள் ஆயுதப்படையை (Peoples Armed Police) உள்நாட்டு அமைதியின்மையை அடக்குவதற்கு நிறுவியது. 1989ல் ஜனநாயக உரிமைகளுக்குப் போராடிய மாணவர்ளுடன் தொழிலாளர்கள் சேர்ந்தபோது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாப்பாட்டக்காரர்களை தியனன்மென் சதுக்கத்தில் அடக்குவதற்கு டாங்குகளையும் துருப்புக்களையும் அனுப்பியது.

படுகொலையைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஜியாங் ஜெமின் ACFTU உடைய பணியைக் கோடிட்டுக் காட்டினார். "தொழிலாளர்களுடைய பொருளாதாரக் குறைகள்தான் பெரும் அக்கறை ஆகும். தொழிலாளர்கள் எழுச்சி செய்து கிளர்ந்தால் நமக்குப் பெரிய பிரச்சினை ஏற்படும். தொழிற்சங்க அமைப்புக்கள் எச்சரிக்கையாக இருந்து அவர்கள் ஒரு சீன வகையிலான Solidarity அல்லது அதேபோன்ற அரசியல் குழுக்களை அமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

தியனன்மென் சதுக்கப் படுகொலை சர்வதேச மூலதனத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு தேவையான எந்த வழிவகையையும் பயன்படுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது என்பதற்கான அடையாளம் ஆகும். வெளிநாட்டு மூலதனம் பரந்த குறைவூதிய தொழிலாளர் தொகுப்பின் நலன்களைப் பயன்படுத்திக்கொள்ள நாட்டிற்குள் வெள்ளமெனப் புகுந்தது. 1990 களில் ACFTU அரசாங்க நிறுவனங்கள் மொத்தமாக தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக நடந்த பல வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்களை அடக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இதில் பல மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த தசாப்தத்தில் ACFTU தனியார் துறையில் ஆக்கிரோஷமாக விரிவாக்கம் செய்து, உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு தொழில்துறை பொலிஸ் போல் செயல்பட்டு வருகிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இதேபோன்ற தடைகளைத்தான் எதிர்கொள்கின்றனர். AFL-CIO அமெரிக்காவில், அல்லது ACTU ஆஸ்திரேலியாவில் சீன ACFTU ஐவிட வேறுவிதமாக தோன்றியிருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் கடந்த 30 ஆண்டுகளாக அரசாங்கம் மற்றும் நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக ஒத்துழைக்கும் பணியைப்புரியும் அமைப்புகளாக மாறி தொழிலாளர் வர்க்கத்தின் எந்த சுயாதீன நடவடிக்கைகளையும் நசுக்குகின்றன. இலாபமுறையை தொழிற்சங்கங்கள் எப்பொழுதும் காத்து, சமூக ஒழுங்கிற்கு எதிரான பரந்த எழுச்சி எதையும் தடுக்கும் வகையாக சிறு சலுகைகள் கொடுப்பதைப் பயன்படுத்தியுள்ளன. ஆனால் உலகளாவிய உற்பத்தி முறை அதிகமானதில் இருந்து, தொழிற்சங்கங்களின் இலக்கு சீர்திருத்த கோஷமான "ஒரு நாள் நியாயமான வேலைக்கு, ஒரு நாள் நியாயமான ஊதியம்" என்று இல்லாமல் "சர்வதேசப் போட்டித்தன்மை"க்கு உதவுதல் என்ற முடிவில்லாத முயற்சியாக உள்ளது. முதலாளிகள் சார்பில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும் பணிநிலைமைகளையும் தியாகம் செய்து மற்ற இடங்களில் உள்ள தொழிலாளர்களுடன் போட்டித்தன்மை கொண்டு அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

கருத்தியல்ரீதியாக, தொழிற்சங்கங்கள் தேசியவெறி, பாதுகாப்புவரிகளுக்கு பெரும் ஆதரவு கொடுக்கின்றன; இவை ஒரு நாட்டின் தொழிலாளர்கள் பிற இடங்களில் உள்ள அவர்களுடைய சகோதர, சகோதரித் தொழிலாளர்களுக்கு எதிராக முடுக்கிவிடுகின்றன. சமீபத்தில் சீனாவில் நடந்த வேலைநிறுத்தங்களின்போது, AFL-CIO ஒபாமா நிர்வாகத்தை சீனத் தொழிலாளர்களின் உரிமையை அடக்குவது "நியாயமற்ற {வணிக) நலன்" கீழ் வருமா என்று விசாரிக்குமாறு கோர கருதியது. வேறுவிதத்தில் கூற வேண்டும் என்றால், அமெரிக்க தொழிற்சங்கங்கள் சீனத் தொழிலாளர்கள் பெரும் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் உட்பட இரக்கமற்ற முறையில் சுரண்டப்படுவது பற்றிச் சிறிதும் அக்கறைகாட்டவில்லை. AFL-CIO வின் ஒரே அக்கறை அவர்களுடைய "உரிமைகளில்", இப்பிரச்சினையை அமெரிக்க முதலாளித்துவத்தின் வலுவற்ற பிரிவுகளைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்த முடியுமா என்பதுடன், வேலைகள், ஊதியங்கள், மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்களின் நலன்களை அழிப்பதில் தங்கள் பங்கில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதும்தான்.

சீனாவில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளைப் போலவே அமெரிக்காவிலும் பிறநாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் மிக அடிப்படை உரிமைகளை தொழிற்சங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதில் மூலம்தான் பாதுகாக்க முடியும். இவை அடிப்படையில் சீன பொலிஸ்-அரசாங்க ACFTU போல்தான் செயல்படுகின்றன. தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களுடன் கட்டிவைத்துள்ள பல மத்தியதர வகுப்பு முன்னாள் தீவிரவாத அமைப்புக்களில் இருந்து முழு உடைவு தேவைப்படுகிறது. சீனாவில் ஹொண்டா ஆலைகளில் நடந்தது போல், போராட்டத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான தொழிலாளர்கள் அடிமட்டக் குழுக்களாக தேர்ந்து எடுப்பதுதான் முதல் படியாகும். அதன் பின் இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிற தொழிலாளர் பிரிவுகளை நாடுவது ஆகும். இவ்விதத்தில்தான் ஒரு சக்தி வாய்ந்த சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கம் சுரண்டலின் ஆதராமாக இருப்பதை அகற்றக் கட்டமைக்கப்பட வேண்டும்--அதாவது இலாப முறைக்கு எதிராக.

சீனாவில் இத்தகைய போராட்டம் பல முக்கிய அரசியல் வினாக்களை எழுப்புகிறது. தொழிலாளர்களின் பக்கத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் பலர் "சுயாதீன தொழிலாளர் சங்கங்களுக்கான" கோரிக்கையை அதுவே முடிவு என்பது போல் எழுப்புகின்றனர். பெய்ஜிங் தொழிலாளர்கள் தன்னாட்சி கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஹால் டாங்பாங், 1989 எதிர்ப்புக்களில் முக்கியப் பங்கை வகித்தவர், இப்பொழுது "அரசியலற்ற" சுயாதீன தொழிலாளர் சங்கங்கள், முதலாளிகளுடன் "கூட்டு பேச்சுவார்த்தைகளுடன்" நிறுத்திக்கொள்ளுபவை தேவை என்று வாதிடுகிறார். அவருடைய China Labour Bulletin, மே மாதத்தில் பெய்ஜிங்கில் உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அத்தகைய தொழிற்சங்கங்களை இன்னும் திறமையான செலவுக்குறைவு உள்ள வழிவகையாக எழுச்சி பெறும் தொழிலாளர்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் வழிவகையாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சீனத் தொழிலாளர்கள் மற்ற நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் அனுபவங்களில் இருந்து படிப்பினை பெறுவது முக்கியமாகும். AFL-CIO 1930களில் அமெரிக்க கார்த் தொழிலாளர்களின் வெகுஜன உள்ளிருப்புப் போராட்டங்களில் தனது மூலத்தை கொண்டிருந்தது, இதேபோல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அது சோசலிஸ்ட்டுக்களை சூனிய வேட்டையாடியபோது, தொழிற்சங்கங்களை அரசியலற்றதாக்கி, தொழிலாளர்களை ஜனநாயக கட்சிக்குத் அடிபணிய வைத்தது. இன்று இத்தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தோடும் பெருநிறுவனத்தோடும் இணைந்து செயல்படுகின்றன. ஒபாமா நிர்வாகத்தின் GM, Chrysler ஐ பிணை எடுப்புடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்த ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கம் (UAW), இப்பொழுது பெருநிறுவன நிர்வாகக் குழுக்களில் அதிக பங்குகளைக் கொண்டுள்ளது. ஊதியங்களையும் பணி நிலைமைகளையும் சரிவிற்கு உட்படுத்திய உடன்பாடுகளுக்கு உதவியாக இருந்து இவற்றைப் பெற்றது.

இன்னும் நாட்டிற்கு அருகே, கொரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு (KCTU), 1980களில் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக தென் கொரியத் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களுக்காக வெளிப்பட்டது. பொலிஸ்-அரச அடக்குமுறையை எதிர்கொண்டதில் அதன் தலைவர்கள் காட்டிய தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அவர்களுடைய அரசியல் முன்னோக்கு முதலாளித்துவத்தின் வடிவமைப்பிற்குள் தொழிற்சங்க உரிமைகளை அடையவேண்டும் என்ற வரம்பைக் கொண்டிருந்தது. 1990 களில் KCTU சட்டபூர்வமாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் வேலை என்ற முறையை அகற்றுவதற்கான எதிர்ப்பை அடக்கியதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு KCTU ஜனாதிபதி லீ ம்யுங்-பக்கின் வலதுசாரி அரசாங்கத்துடன் சாங்யோங் கார் ஆலையில் நீடித்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அது பொலிசை அனுப்பியபோது ஒத்துழைத்தது.

முக்கியமான படிப்பினை போர்க்குணமிக்க போராட்டம் மட்டும் போதாது என்பதுதான். உலகப் பொருளாதார நெருக்கடியின் இரண்டாம் கட்டம் வருகையில், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் ஏதேனும் ஒருவிதத்தில் தங்கள் வாழ்க்கைத் தரங்களின் மீது இதே சர்வதேசப் பெருநிறுவனங்களால் தோற்றுவிக்கப்படும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர். தங்கள் உரிமைகளுக்கு அவர்கள் போராடத் தொடங்கியதும், அவை அரசாங்கத்திற்கும் பெருநிறுவன உயரடுக்கிற்கும் தொழில்துறை பொலிஸ் போல் இயங்கும் தொழிற்சங்கங்களை எதிர்கொள்ளுகின்றன. தொழிற்சங்கங்களைச் சீர்திருத்தும் பிரச்சினை அல்ல இது. அவை இயல்பாக முதலாளித்துவத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னின்று நடத்த இயலாதவை. மாறாக ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் இந்த அதிகாரத்துவங்களுக்கு எதிராக ஒரு உணர்மையுடன் கூடிய எழுச்சியை அமைப்பது ஆகும். தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைக் பாதுகாப்பதற்கு ஒரே வழி முதலாளித்துவத்தை அகற்றுவதற்கு ஒரு பொதுப்போராட்டத்திற்காக உலகளவில் ஒன்றுபட்டு ஒரு சில செல்வக்கொழிப்பு உடையவர்களின் இலாப நலன்கள் என்பதற்குப் பதிலாக, மனிதகுலத்தின் பெரும்பான்மையின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் சமூகத்தை மறு கட்டுமைப்பதுதான்.