சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Beyond BP

பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும் அப்பால்

Joe Kishore
23 June 2010

Use this version to print | Send feedback

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவாகிவிட்ட மெக்சிகோ வளைகுடாவிலுள்ள Deepwater Horizon எண்ணெய்க் கிணறு தோண்டும்போது ஏற்பட்ட வெடிப்பு நடந்த இரு மாதங்களுக்கும் மேல் கடந்துவிட்டது. நாட்டின் முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பகுதிகளில் ஒன்றை நச்சுப்படுத்திய வளைகுடாப் பகுதியில் பாரியளவில் வெளித்தள்ளப்பட்ட எண்ணெயின் அளவு இன்னும் முழுமையாக அறியப்படவில்லை; ஆனால் குறைந்தபட்சம் பல மில்லியன் காலன்கள் கணக்கில்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆரம்ப வெடிப்பில் 11 பேர் இறந்து போயினர். ஒரு முக்கிய தொழில்துறை வளைகுடா மீன்பிடித்தல், இறால் பிடித்தல் என்பது காலவரையற்று, கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கான வேலைகள், மீன்பிடித்தல், சுற்றுலாவை நம்பியிருந்தவை இழக்கப்பட்டுவிடும். பல முழு உயிரினங்களும் ஆபத்திற்குட்பட்டுவிட்டன, இதன் நீண்டகால விளைவுகள் கணிப்பிடமுடியாதது. இன்னும் எண்ணெய் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கிறது.

சுற்றுச் சூழல், பொருளாதார அழிவு ஆகியவற்றின் பரந்த பரிமாணங்கள் கூட்டாட்சி அரசாங்கத்தின் பரிதாபத்திற்குரிய நடவடிக்கைகளுக்கு முற்றிலும் தீவிரமானதும் மற்றும் முக்கியமானதுமான எதிரிடைத் தன்மையாக உள்ளன. ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் பேரழிவிற்கு அடித்தளத்தில் உள்ள காரணங்களைத் தவிர்த்து பொதுமக்களின் சீற்றத்தை நாடு முழுவதும் பெருநிறுவன எதிர்ப்பு உணர்வுடன் ஒன்றிவிடாமல் தடுத்துவிடுவது என்று உள்ளது.

இப்பிரச்சாரம் வித்தியாசமான வடிவங்களை எடுத்துள்ளது. சில இழிந்த முறையில் மற்றவற்றைவிட “வெகுஜனரஞ்சகமானவை” ஆக உள்ளன.

கடந்த வார இறுதியில், ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் செய்தி ஊடகத்தினர் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஹேவர்ட், அவருடைய நிறுவனத்தின் எண்ணெய் தொடர்ந்து வளைகுடாவிற்குள் கசிந்து பெருகுகையில், ஒரு ஒய்யாரப் படகுப் போட்டியில் பங்கு பெற்றது பற்றி இகழ்வுணர்வுடன் உரைத்தனர் (அவருடைய சொந்தப் படகும் போட்டியில் இருந்தது). இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களைப் பற்றி ஹேவர்டின் பொருட்படுத்தாத்தன்மை இழிவானதுதான், பொதுச்சீற்றத்தின் ஒவ்வொரு கூறுபாடும் அவர்மீது பாய்வதும் தக்கதேதான். அதே நேரத்தில் அவருடைய நடவடிக்கைகள் உலக பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் செயற்பாடுகளை முற்றிலும் பிரதிபலிப்பவை என்பது அறியப்பட வேண்டும்.

ஒபாமா நிர்வாகத்தின் உண்மையான பார்வை தலைமை அலுவலர் ரஹ்ம் எமானுவலால் சுருக்கமாகக் கூறப்பட்டது; ஹேவர்ட் ஒரு “மோசமான பொது உறவு நடவடிக்கைக்கு” குற்றம் சாட்டப்படக்கூடியவர் என்று அவர் குறைகூறினார். அதாவது, பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் நிர்வாகிகள் கடந்த காலத்தில் அதுவும் பேரழிவிற்கு வித்திட்ட செலவினக் குறைப்புக்கள் மூலம் ஓரளவு திரட்டப்பட்டு பெற்றுவந்த மகத்தான செல்வம் பிரச்சினை அல்ல என்பது ஒருபுறம் இருக்க, அவருடைய செயற்பாடும் பிரச்சினை இல்லை, அதை செய்துள்ள நேரம்தான் என்ற தவறு பொருளில் கூறியுள்ளார்.

ஒய்யாரப் படகில் சொகுசாக பயணித்ததை எதிர்கொண்டுள்ளது, பிரிட்டிஷ் பெற்றோலியத்தை ஒரு கொள்கையற்ற நிறுவனம், மோசமானவர்களில் ஒருவர் என சித்தரிக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதி ஆகும். நிர்வாகம் எப்படியும் பிரிட்டிஷ் பெற்றோலியம் தான் பொறுப்பு என்று கூறினால், நிகழ்வு ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடியது, வணிகம் வழக்கம்போல் தொடரலாம் என்பதுதான் நம்பிக்கை. இதையொட்டி ஆழ்கடல் எண்ணெய் தோண்டும் செயற்பாடும் தொடர்ந்து விரிவடைந்து முன்னேறலாம்.

இதுதான் கடந்த வாரம் தொடர்ச்சியான “பொது உறவு“ நிகழ்வுகள் என்று நிர்வாகத்தாலேயே ஏற்பாடு செய்யப்பட்டவற்றின் நோக்கம் ஆகும். ஒபாமா வளைகுடாவிற்கு பயணித்தது, செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றியது, அடுத்த நாள் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் நிர்வாகிகளுடன் பேசியது என்பன இதில் அடங்கும். இவற்றில் இருந்து வெளிவந்தது, ஒரு $20 பில்லியன் காப்புநிதி நிறுவப்பட்டது, ஆண்டிற்கு $5 பில்லியன் வீதம் 4 ஆண்டுகள் கொடுக்கப்பட உள்ளது.

கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில் இருந்து வளங்கிய உரையில் ஒபாமா, பேரழிவிற்கு “பிரிட்டிஷ் பெற்றோலியம் விலை கொடுக்க வேண்டும்” என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அறிவித்தார்.

ஆனால் இந்த நிகழ்வுப்போக்கின் விளைவு நிர்வாகம் பெருநிறுவனம் மற்றும் நிதிய உயரடுக்கிற்கு அடிபணிந்து நிற்பதை அம்பலப்படுத்தியுள்ளதுடன், ஒரு முன்னோடியில்லாத பேரழிவை தீவிரமாக எதிர்கொள்ள இயலாத நிர்வாகத்தின் தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.

முதலில் $20 பில்லியன் நிதி என்பது கசிவின் விளைவுகளை சந்திப்பதற்கு சற்றும் போதுமானதல்ல. பொருளாதாரப் பாதிப்பு பற்றிய எந்தப் புறநிலை நடவடிக்கைக்குமான விலை பல பில்லியன் டாலர்கள் அல்லது அதற்கும் அதிகமாகக் கொண்டிருக்கும். “பிரிட்டிஷ் பெற்றோலியத்தை விலை கொடுக்க வைப்பது”, அதே நேரத்தில் ஒபாமா வலியுறுத்தியுள்ள “பிரிட்டிஷ் பெற்றோலியத்தை ஒரு வலுவான, நீடிக்கும் திறனுடையதாக தொடர வைத்தல்” என்று இரு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று எதிரிடையான அறிவிப்புக்கள் ஆகும்.

பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் தலைவர் கார்ல்-ஹென்ரிக் ஸ்வன்பெர்க் (இப்பொழுது மக்களை “சிறியவர்கள்” என்று பலமுறை குறிப்பிட்டதற்காக வளைகுடாப் பகுதியில் ஏளனத்திற்குள்ளானவர்), உடன்பாட்டுடன் நிதி கென்னத் பீன்பெர்க் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இவர் அரசியல் நடைமுறையின் நம்பிக்கைக்கு உகந்த பிரதிநிதியாவார். Agent Orange, மற்றும் அஸ்பெஸ்டாஸ் பொறுப்பு நிதிகளை நிர்வகிப்பில் பீன்பெர்க் உதவியுள்ளார். இதைத்தவிர செப்டம்பர் 11 இழப்பீட்டு நிதியை நிர்வாகம் செய்துள்ளதுடன், ஒபாமாவின் “ஊதிய ஜார் மன்னர்” என்றும் வங்கிப் பிணை எடுப்புக்களுக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் பெற்றோலியத்தை வார இறுதிக்குள் உடனடியாக பீன்பெர்க் புகழ்ந்தார்: பல முறையும் (அற்பத் தொகையான) $100 மில்லியனை வழங்கியதற்கு “பிரிட்டிஷ் பெற்றோலியத்திற்கு உரிய பெருமை” கொடுக்கப்பட வேண்டும் என்றும் பல முறை வலியுறுத்தினார். இதற்கிடையில் உள்ளூர் வணிகங்களும் தனிநபர்களும் நிறுவனத்திடம் இருந்து நிதியைப் பெறுவதில் தாங்கள் கொள்ளும் மகத்தான இடர்களைப் பற்றி கசப்புடன் குறைகூறியுள்ளனர்.

இந்த நிகழ்வுப்போக்கை விரைவுபடுத்துவதற்கு பதிலாக, ஒரு நிதியத்தை நிறுவதல் என்பது பிரிட்டிஷ் பெற்றோலியத்திற்கு பாதுகாப்புக் கொடுக்கத்தான் உதவும். அதே நேரத்தில் ஏராளமான மக்கள் பிரிவடைந்து விழுந்துவிடுவர், தாங்கள் அனுபவித்த இழப்புக்களுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லாத இழப்பீட்டு உடன்பாடுகளில் கையெழுத்திடத் தள்ளப்படுவர்.

இரண்டாவதாக, அரசாங்கம் பேரழிவிற்கு “பிரிட்டிஷ் பெற்றோலியத்தை விலை கொடுக்க வைக்கும்” என்ற கூற்று வெடிப்பை ஒட்டி எழுந்த மத்திய அரசின் இயலாவின்மையை மூடிமறைப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டதாகும்.

பேரழிவின் பரப்பு ஒரு நிறுவனத்தின் இருப்புக்களை விட மிக அதிகம் பரந்துள்ளது. எண்ணெய் வெடிப்பிற்கு எந்த முக்கிய நடவடிக்கையும் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுடன் தொடங்கியிருக்கும். பின்னர் உடனடியாக மத்திய அரசு கசிவு நிறுத்துதல் மற்றும் தூய்மைப்படுத்தும் முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் இருந்து, ஒபாமா நிர்வாகம் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் பொறுப்பில் இருக்கட்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. இந்த எண்ணெய் பெருநிறுவனத்திடம்தான் தொழில்நுட்பத் திறனும் அழிவை எதிர்கொள்ளும் திறனும் உண்டு என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், ஒரு முக்கிய நடவடிக்கையில் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது ஒரு தொடக்கமாகத்தான் இருந்திருக்கும். ஒரு அவசரகால முறையில் மகத்தான பொதுப் பணிகள் திட்டம், சமூக ஆதாரங்கள் திரட்டப்படல் என்பது தேவையாக இருந்திருக்கும். நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பேரழிவின் விளைவினால் வேலையின்றி வாடுபவர்கள் கசிவை நிறுத்த திரட்டப்பட்டுத் தூய்மை நடவடிக்கைகளும் தொடக்கப்பட்டிருக்க வேண்டும். நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவில் இருந்தும் அறிவியல் வல்லுனர்களின் குழுக்கள் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு விடையிறுப்பு தக்க முறையில் காணப்பட்டிருக்க வேண்டும்.

பிரிட்டிஷ் பெற்றோலியம் ஒரு விதிவிலக்கல்ல. அடுத்த பேரழிவு வரை இந்த நிறுவனம் எங்கும் படர்ந்துள்ள பெருநிறுவனக் குற்றத்தின் மிக அதிகமாக அறியப்பட்ட பொது முகமாக இருக்கும். குறிப்பாக பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் மற்ற பெரிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்துடனும் மிக அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள், முறைகள் ஆகியவற்றின் இழப்பில் இடைவிடா இலாப உந்துதலை ஒட்டித்தான் செயல்படுகிறது.

இந்தப் பேரழிவு பிரிட்டிஷ் பெற்றோலியத்தில் நடக்கலாம் என்றால், அது எந்த நிறுவனத்திலும் நடக்கலாம் என்றுதான் பொருள்படும். உண்மையில் இலாபத்தை அவர்கள் தொடர்ந்து அடைவதற்காக, எரிசக்தி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணெய் கசிவுகள், மாசுபடுத்துதல், ஆபிரிக்காவில் பேரழிவு, உலகம் வெப்பமயமாக்கப்படல், உலகெங்கிலும் தொடர்ச்சியான நிலக்கரிசுரங்க வெடிப்புக்கள், அமெரிக்கா முழுவதும் வீடுகளில் பயன்பாட்டு வசதிகளை நிறுத்துதல் என்று பல கொடுமைகளை நிகழ்த்தியுள்ளன.

எரிசக்தி தொழிலைத் தேசியமயமாக்குதல் என்பது ஒரு அவசியமான நடவடிக்கையாகத் தேவைப்படுகிறது. உலகப் பொருளாதாரம் செயல்பட முற்றிலும் தேவையான இந்த ஆதாரங்கள், சமூகத்தேவை நலன்களுக்கான ஜனநாயகமுறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

உலக எரிசக்தி உற்பத்தி வளர்ச்சிக்காக பகுத்தறிவார்ந்த திட்டம் செயல்படுத்தப்படுவது இந்நிறுவனங்கள் தனிப்பட்ட சொத்துக்குவிப்பு, இலாப உந்துதல் ஆகியவற்றிற்காக நடைபெறும் இடையறா செயல்களுக்கு அடிபணிய வைக்கப்படும் வரை முடியாதது ஆகும்.

இலாபமுறை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் மூலம் இச்செயல்கள் நடத்தப்பட முடியாது.

வளைகுடா எண்ணெய் நெருக்கடி, இதற்கு முன் வந்த நிதிய நெருக்கடிபோல், ஒரு பரந்த வெகுஜன சோசலிச இயக்கத்தின் தேவையை முன்வைக்கிறது. அதன் நோக்கம் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுதலாக இருக்கும். இவ்விதத்தில்தான் நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், அடுத்த பேரழிவை தவிர்க்கவும் முடியும்.