சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Divisions in G-20 open on summit eve

உச்சி மாநாட்டிற்கு முன்னதாக G20 ல் பிளவுகள்

Nick Beams
24 June 2010

Use this version to print | Send feedback

இந்த வார இறுதியில் டோரோன்டோவில் நடக்கவிருக்கும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே கணிசமான பிளவுகள் வெளிப்பட்டுள்ளன.

இப்பிளவுகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக நிதிய ஊக்கப் பொது நடவடிக்கைகளின் தொடர்ந்த பங்கு பற்றியும், அதிக ஏற்றுமதி உபரிகள் இருக்கும் நாடுகள்—குறிப்பாக சீனா, ஜேர்மனி ஆகியவை—உள்நாட்டு நுகர்வை அதிகமாக விரிவாக்கி அதையொட்டி உலகத் தேவைக்கு ஏற்றம் கொடுக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கை பற்றி மையம் கொண்டுள்ளன.

வாஷிங்டன் மற்றும் பேர்லினில் இருந்து கடந்த சில நாட்களாக வரும் அறிக்கைகள் பிரச்சனையின் தன்மையைக் குறைத்துக்காட்ட விரும்பினாலும்—இல்லாவிடின் ஒரு தகவலின்படி உச்சிமாநாடு “உரக்கக் கூச்சலிடும் போட்டியாக” மாறிவிடும்—வேறுபாடுகள் ஆழ்ந்துதான் வேரூன்றியுள்ளன.

இவை முதலில் ஜூன் 4-5 நடைபெற்ற G20 நிதி மந்திரிகள் கூட்டத்தில் வெளிப்பட்டன. அப்பொழுது ஆரம்ப எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக, இறுதி அறிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றம் கொடுக்கும் அரசாங்க ஊக்கப்பொது நடவடிக்கைகளுக்கு பதிலாக அரசாங்கக் கடன் தேவைகள், பற்றாக்குறை பற்றியும் வலியுறுத்தியிருந்தது. இப்படி தொனியில் ஏற்பட்ட மாறுதல் ஐரோப்பாவில் “அரசாங்கக் கடன்” நெருக்கடியின் பாதிப்பில் பிரதிபலித்தது. இது லெஹ்மன் பிரதர்ஸ் சரிவைத் தொடர்ந்ததை விட தீவிர நிதிய நெருக்கடியை தூண்டும் அச்சுறுத்தலை கொண்டது.

“ஐரோப்பிய நெருக்கடி” நிதிச் சந்தைகளிலிருந்து வந்த உத்தரவு என்று ஐரோப்பிய அரசாங்கங்களால் பார்க்கப்பட்டது. செப்டம்பர் 2008 க்குப் பின்னர் வெடித்த உலக நிதிய நெருக்கடியினால் ஏற்பட்ட பெரும் கடன்களை தீர்க்கும் பணி இனி ஒத்திவைக்கப்பட முடியாது என்று போயிற்று. தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் கடுமையாகக் குறைக்கும் நோக்கத்தை உடைய தொடர்ச்சியான கடும் சிக்கன நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டியதாயிற்று.

ஆனால், இத்திருப்பம் ஒபாமா நிர்வாகத்தில் கவலைகளை எழுப்பியது, ஏனெனில் அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு ஏற்றம் கொடுத்து மீட்கும் முயற்சிகள் ஐரோப்பியச் சந்தைகள் வரண்டுபோனால் பாதிப்பிற்கு உட்படக்கூடும். அமெரிக்க நிதி மந்திரி டிமோடி கீத்னர் எழுதிய கடிதம் ஒன்று ஐரோப்பாவில் “கொள்கை சரிசீர் செய்தல்” என்பது “மீட்பின் வேகத்தைக் குறைத்துவிடக்கூடும்” என்ற அச்சங்களை உரைத்தது. ஜனாதிபதி ஒபாமா இதன் பின் G-20 தலைவர்களுக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதினார்; டோரோன்டோவில் “மிக அதிக முன்னுரிமை” “மீட்பைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்கு” அளிக்கப்பட வேண்டும் என்று அதில் அறிவித்திருந்தார்.

“ஒரு வலுவான, நிலைத்திருக்கக்கூடிய மீட்பு சீரான உலகத் தேவையின் கீழ் தான் கட்டமைக்கப்பட முடியும்” என்று அவர் எழுதினார். “G20 பொருளாதாரங்களில் கணிசமான வலுவற்ற தன்மைகள் உள்ளன. தனியார் துறையின் நலிந்த தேவை பற்றியும் ஏற்கனவே அதிக வெளிநாட்டு நாணய உபரிகள் கொண்ட சில நாடுகள் அதிகமாக ஏற்றுமதியை நம்பியிருப்பது பற்றியும் நான் கவலை கொண்டுள்ளேன்…[2009 செப்டம்பர் மாதம் G20 மாநாடு நடைபெற்ற] பிட்ஸ்பர்க்கில் நாம் வெளி உபரிகள் கொண்ட நாடுகள் உள்நாட்டு வளர்ச்சிக்கான ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று ஒப்புக் கொண்டோம்.”

இது ஜேர்மனி, சீனா பற்றி ஒரு நேரடிக் குறிப்பு ஆகும். அவைகள் உலகப் பொருளாதாரத்தின் இரு மிகப் பெரிய ஏற்றமதி செய்யும் நாடுகள் ஆகும். இதற்கு விடையிறுக்கையில் ஜூன் 19ம் திகதி சீனா தான் தன்னுடைய நாணயம் பற்றி இன்னும் வளைந்து கொடுக்கக்கூடிய கொள்கையைத் தொடர இருப்பதாகவும், இதையொட்டி யுவான் அமெரிக்க டாலருக்கு எதிராக உயரும், நீண்டகாலமாகத் தொடர்ந்த அமெரிக்க நிர்வாகங்களால் கூறப்படுவதற்கு ஏற்ப இது இருக்கும் என்று கூறியது. ஒரு வரையறுக்கப்பட்ட யுவான் மறு மதிப்பீட்டை அனுமதிப்பதின் மூலம் சீன ஆட்சி டோரோன்டோவில் தாக்குதலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

ஒபாமாவின் கடிதம் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் அரசாங்கத்திடம் வேறுவித விடையிறுப்பைக் கண்டது. அவரும் அவருடைய மந்திரிகளும் தங்கள் அரசாங்கத்தின் முடிவான €80 பில்லியன் யூரோ மதிப்புடைய செலவு வெட்டுக்களை அடுத்த நான்கு ஆண்டுகளில் செய்யும் திட்டம் ஒன்றைக் கொண்டுள்ள முடிவு பற்றி பொதுவில் பாதுகாத்துப் பேசினார்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய மேர்க்கெல் கூறினார்: “நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியை நாம் அடைய முடியவில்லை என்றால், அதற்குப் பதிலாக மீண்டும் பணவீக்கம் நிறைந்த வளர்ச்சியைத் தோற்றுவித்தால், மற்றொரு நெருக்கடியை நாம் அதற்கு விலையாகக் கொடுப்போம்.” நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிள மேர்க்கலுக்கு ஆதரவு கொடுத்துப் பேசினார்: “மிகக் கூடுதலான பொதுப் பற்றாக்குறைகள், ஐரோப்பாவில் மட்டும் இல்லாமல் [அதிக மூடி மறைத்தல் இல்லாத அமெரிக்கா பற்றிய குறிப்பு], இந்த நெருக்கடியின் முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை எவரும் தீவிரமாக மறுக்க முடியாது. எனவேதான் அவை குறைக்கப்பட வேண்டும்.” ஜேர்மனி பிட்ஸ்பேர்க்கில் அடையப்பட்ட உடன்பாடுகளைக் கைவிட வேண்டும் என்ற உட்குறிப்பான குறைகூறலையும் நிராகரித்தார். “நாங்கள் சர்வதேச விவாதத்தை எதிர்கொள்ளத் தயார், பெரும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜேர்மனியின் பொருளாதார மந்திரி Rainer Bruderie, இன்னும் நேரடியாக வெளிப்படையாகப் பேசினார். “நிதிய உறுதிப்பாட்டிற்குப் பொது வரவு-செலவுச் திட்டம் சமநிலையில் இருப்பது முற்றிலும் அவசியமாகும். இதை நாம் நம்முடைய அமெரிக்க நண்பர்களிடம் கூற வேண்டும்.”

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் Jean-Claude Trichet உடைய ஆதரவையும் ஜேர்மனிய அரசாங்கம் பெற்றது. திங்கள் இரவு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் சிக்கனத் திட்டம் நிதியச் சந்தைகளின் கோரிக்கைகளால் உந்துதல் பெற்றது என்பதைத் தெளிவாக்கினார். அரசாங்கச் செலவு வெட்டுக்கள் நம்பிக்கையை மீட்பதற்கு முக்கியமாகும். ஒரு வரவு-செலவு திட்டக் கொள்கை என்பது, “ஒரு கண்ணோட்டத்தில் வரம்புகளைக் கொண்டிருக்கும் என விளக்கலாம்; [ஆனால்] உண்மையில் நம்பிக்கையை கட்டமைக்கும் கொள்கைதான் அது என்று நாம் கூறமுடியும்” என்றார் அவர். பொது நிதியங்கள் நிலைத்திருக்க முடியாத பாதையில் சென்றால், “முதலீட்டாளர்கள் ஆதாயம் பெறுவது கடினம் என்பதை அறிந்து கொள்வர்.”

டோரோன்டா கூட்டம் ஒரு நேரடி மோதல் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது—குறைந்த பட்சம் பகிரங்கமாகவேனும், ஆனால் அடித்தளத்தில் உள்ள வேறுபாடுகள் தீர்க்கப்பட மாட்டாது.

பைனான்சியல் டைம்ஸிடம் பேசிய புஷ் நிர்வாகத்தில் இருந்த ஒரு முன்னாள் G20 பேச்சுவார்த்தைகள் நடத்துபவரான Dan Price, பெரும் சக்திகளிடையே அதிகரித்துள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டினார். “G-20 இன் ஒற்றுமைத் தன்மை, கடந்த உச்சிமாநாடுகளின் அடையாளமாகவும் அவற்றின் திறனின் அடையாளமாகவும் இருந்தது, இப்பொழுது நாடுகள் பெருகிய முறையில் தங்கள் பாதையில் செல்கையில், நலியத் தொடங்கிவிட்டது.” “இதற்கு முன்பு எந்த G20 மாநாட்டிற்கு முன்பும் இத்தனை தலைவர்கள் பல கடிதங்களை மற்ற நாடுகளுடைய குறைபாடுகளை சுட்டிக் காட்டி எழுதியதில்லை” என்றார் அவர்.

உச்சி மாநாட்டின் உடனடி விளைவு எப்படி இருந்தாலும், பூசல்கள் தீவிரமாகப்போவது உறுதி. ஜூன் 15 வெளிவந்த கருத்துரை ஒன்றில்—நிதியச் சிக்கன உந்துதல் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை சுட்டிக் காட்டிய தொடர் கட்டுரைகளில் ஒன்றில்—பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் யூரோப்பகுதியை ஒரு “பெரிய ஜேர்மனியாக” மாற்றுவது என்பது “அமெரிக்கா மீது ஒரு வணிகப் போர் நடத்தும் செயலுக்கு ஒப்பானது ஆகும். எத்தனை காலம் அமெரிக்கா உபரி நாடுகளின் பாசாங்குத்தனத்தை பொறுத்தக்கொள்ளும். அவை கடன் வாங்கியவர்களை பற்றாக்குறைகளுக்கு குறைகூறுகின்றன. ஆனால் அவற்றை ஒட்டித்தான் இவற்றின் உபரிகள் தவிர்க்க முடியாமல் உள்ளன? இனி அதிக நாட்கள் அப்படி முடியாது என்பது என்னுடைய நினைப்பு….’

உலகத் தலைவர்கள் மட்டும் பகுத்தறிவைக் காணத் தயார் என்றால், முதலாளித்துவம் ஒரு பகுத்தறிவார்ந்த மேலாண்மைக்கு உட்படுத்தப்பட முடியும் என்ற வெற்று நம்பிக்கையான “தங்க வழிவகையை” எப்பொழுதும் தேடும் வொல்ப் குறுகிய காலத்தின் வலுவான வளர்ச்சியை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கு பெரும் பற்றாக்குறைகளுக்கு இடமளிக்கிறார்.

ஆனால், இறுதிப் பகுப்பாய்வில், அரசாங்கங்கள் பகுத்தறிவார்ந்த கொள்கைகளைப் பின்பற்ற இயலாததின் விளைவு ஒன்றும் பிளவுகளை ஏற்படுத்தவில்லை. மாறாக இவை உலக முதலாளித்துவ அமைப்பு முறையில் உள்ள அடிப்படையான, தீர்வு காண முடியாத பொதுநிலை முரண்பாடுகளைத்தான் வெளிப்படுத்துகின்றன—எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பொருளாதாரம் முழுவதற்கும் தேசிய-அரச முறைக்கும் இடையே உள்ளவை பற்றி. நெருக்கடியை எதிர்கொள்கையில் ஒவ்வொரு முதலாளித்துவ சக்தியும் தன் நிலைமையை உயர்த்திக்கொள்ள முற்படும் விதத்தில் சந்தைகளுக்கான போராட்டம், இலாபங்களுக்கான போராட்டம் ஆகியவற்றை அதன் போட்டியாளர்களின் இழப்பில் காண முற்படுகிறது. இது ஒவ்வொரு நாடும் மற்றவற்றுடன் போராட வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.

இதன் பொருள் பின்பு என்பதை விட முன்னரே இந்த வார இறுதியில் வரவிருக்கும் G20 உச்சி மாநாட்டிற்கு முன்பே வந்தவிட்ட “சொற்போர்” இன்னும் தீவிர பொருளாதார ஏன் இராணுவ மோதல்களுக்குக் கூட வழிவகுக்கும் என்பதுதான்.