சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Why was General McChrystal fired?

ஜெனரல் மக்கிறிஸ்டல் ஏன் பணிநீக்கம் செய்யப்பட்டார்?

Barry Grey
25 June 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி ஒபாமா மற்ற சிவில் அதிகாரிகள் பற்றி மக்கிறிஸ்டல் மற்றும் அவருடைய உதவியாளர்கள் Rolling Stone ல் இழிவான கருத்துக்களைக் கூறிய கட்டுரை தான் அவர் பணி நீக்கம் பெற்றதற்கு பிரதான காரணம் அல்ல என்பது அமெரிக்க ஸ்தாபனத்திற்குள் அவர் பணிநீக்கம் பற்றிய விடையிறுப்பின் விளைவுகளில் இருந்து காணப்படலாம்.

மாறாக இக்கட்டுரை, வாஷிங்டனின் காலனித்துவ வகைப் போருக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் எதிர்ப்பை அடக்குவதில் அமெரிக்க இராணுவம் பெற்றுள்ள தோல்வியில் இருந்து வெளிவந்துள்ள ஆழ்ந்த நெருக்கடியை முன்வைத்துள்ளது எனலாம். கடந்த பெப்ருவரி மாதம் மார்ஜா மீது நடத்திய தாக்குதலில் தோல்வி அடைந்ததில் இருந்து மக்கிறிஸ்டலின் தலைமைக்கு ஒபாமா நிர்வாகத்திற்குள் அதிருப்தி பெருகி வந்துள்ளது. இந்த மாதம் முன்னதாக காந்தகார் மீதான தாக்குதலைக் குறைந்தது மூன்று மாதங்களுக்கேனும் தாமதப்படுத்துவது என்று அறிவிக்கப்பட்ட முடிவு சங்கடம் கொடுக்கும் பின்னடைவு என்று பரந்த முறையில் காணப்பட்டது.

எழுச்சி-எதிர்ப்பு போர் முறையில் ஒரு இரக்கமற்ற செயற்பாட்டாளர் என்று மக்கிறிஸ்டல் புகழ் ஒருபக்கம் இருந்தபோதிலும்கட, ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் கொலை செய்யப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தாலும், சமீபத்தில் ஜெனரல் ஆப்கானிஸ்தான் செயற்பாடுகளின் திறமை அவர் சாதாரண மக்கள் இறப்பு பற்றி மிக அதிகமாகக் கவலை கொண்டதால் குறைமதிப்பிற்கு உட்பட்டு பெருகிய குறைகூறலுக்கு இலக்காயிற்று.

அந்த அக்கறை எவ்விதத்திலும் மனிதாபிமான அக்கறைகளுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. மாறாக அது இரக்கமற்ற கணக்கீட்டை தளமாகக் கொண்டது—Rolling Stone கட்டுரை மக்கிறிஸ்டலின் “எழுச்சிக் கணக்கை” குறிக்கிறது—அதாவது ஒவ்வொரு நிரபராதியின் கொலையிலும் பத்து புதிய எதிரிகள் தோற்றவிக்கப்படுகின்றனர் என.

மைக்கல் ஹாஸ்டிங்ஸ் எழுதிய இக்கட்டுரை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க சிவில் அதிகாரிகளைப் பற்றி மக்கிறிஸ்டலும் அவருடைய உதவியாளர்களும் கூறிய கருத்துக்களை பற்றி ஒப்புமையில் சுருக்கமாக விவரிக்கிறது. எதிர்பார்க்கக்கூடிய விதத்தில் இவை நயமற்று இருப்பதுடன் பென்டகன் ஒருபுறம் இருக்க, ஒபாமாவிற்கே வியப்பை அளித்திருக்க முடியாது. அவர்களுக்கு மக்கிறிஸ்டலைச் சூழ்ந்துள்ளவர்களின் பாசிச, இழிந்த தன்மை நன்கு தெரியும். ஜெனரலின் ஊழியர்களை ஹாஸ்டிங்ஸ், “பொறுக்கி எடுக்கப்பட்ட கொலைகாரர்கள், ஒற்றர்கள், மேதைகள், நாட்டுப்பற்றாளர்கள், அரசியல் செயலர்கள் மற்றும் அப்பட்டமான கிறுக்கர்கள்” என்று சுருக்கமாக விவரிக்கிறார்.

ஒபாமா, துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் மற்றும் சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் ஆகியோரைப் பற்றி மக்கிறிஸ்டல் கூறிய கருத்துக்கள் பெரும் செய்தி ஊடகக் கவனத்தை ஈர்த்தன. ஆனால் ஹாஸ்டிங்ஸ் மக்கிறிஸ்டல் தங்கள் கைகளைக் கட்டிப்போடும் விதத்தில் வான் தாக்குதல்கள், குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றை சிவிலிய இலக்குத் திறன் உள்ளவை மீது வரம்புபடுத்தும் போர் விதிகளைச் செயல்படுத்துவது பற்றி அமெரிக்க படையினர்கள் கொண்டுள்ள புகார்களுக்கு அதிக இடத்தை ஒதுக்கியுள்ளார். இவை அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிய குடிமக்கள் வீடுகளில் நுழையும் திறனைக் கூட வரம்பிற்கு உட்படுத்தியுள்ளன.

“மக்கிறிஸ்டல் ஒரு போர்ப்பகுதியில் அமெரிக்க இராணுவம் இதுகாறும் இல்லாத அளவிற்கு சிவிலிய இறப்புக்களை தவிர்க்கும் விதத்தில் மிகக் கடுமையான இயக்கு நெறிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்” என்று ஹாஸ்டிங்கஸ் எழுதியுள்ளார். “ஆனால் ஒரு மூலோபாயமாக அது இருந்தாலும், மக்கிறிஸ்டலின் புதிய அணிவகுப்பு உத்தரவுகள் அவருடைய படைகளுக்குக்குள்ளேயே ஆழ்ந்த பதிலடியைத் தோற்றுவித்துள்ளன. தங்கள் சுடும் திறனை நிறுத்தச் சொல்லுகையில், தாங்கள் பெரும் ஆபத்திற்கு உட்படக்கூடும் என்று படையினர் புகார் கூறுகின்றனர். ‘இதன் முக்கியத்துவம்?” என்று பல ஆண்டுகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செலவிட்டுள்ள ஒரு முன்னாள் சிறப்புப் படை செயலர் கேட்கிறார்: “நான் மக்கிறிஸ்டலை எங்கு உதைக்க வேண்டுமோ அங்கு உதைப்பேன். போர் முறை பற்றிய அவருடைய விதிமுறைகள் படையினர்களுடைய உயிர்களைப் பெரும் ஆபத்திற்கு உட்படுத்துகின்றன. ஒவ்வொரு வீரரும் இதைத்தான் சொல்லுவார்.”

காந்தகாரில் மக்கிறிஸ்டலும் அதிருப்திடைந்துள்ள படையினர்களுக்கும் இடையே நடந்த ஒரு கூட்டத்தை விவரிக்கையில் ஹாஸ்டிங்க்ஸ் எழுதுகிறார்: “கடுமையான ஆற்றலைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாதது பற்றி படையினர்கள் புகார் கூறுகின்றனர். அதேபோல் தாங்கள் கைப்பற்றிய எழுச்சியாளர்கள் போதுமான சான்றுகள் இல்லாவிடில் விடுவிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் புகார் உள்ளது. அவர்கள் போரிட விரும்புகின்றனர்—ஈராக்கில் செய்தது போல், மக்கிறிஸ்டல் வருவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் செய்தது போல்.”

இந்தக் கண்ணோட்டம் படையினர்களிடையே உண்மையிலேயே பரந்து உள்ளதா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த வாதம் வாஷிங்டனின் கொள்கை இயற்றும் உயரடுக்கு மற்றும் செய்தி ஊடகத்தினரிடையே ஆதரவைக் கொண்டுள்ளது. தன்னுடைய நிலைப்பாடு—இன்னும் பரந்த அளவில் மக்கிறிஸ்டல் ஸ்தாபனத்தின் பல திறனாய்வாளர்களின் நிலைப்பாடு—என்ன என்பதை, “ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, வரலாறு மக்கிறிஸ்டல் பக்கம் இல்லை. இங்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்த ஒரே வெளிநாட்டுப்படையெடுப்பாளர் செங்கிஸ்கான் ஒருவர்தான்—அவர் ஒன்றும் மனித உரிமைகள், பொருளாதார வளர்ச்சி, செய்தி ஊடகக் கண்காணிப்பு போன்றவற்றால் தடைக்கு உட்படவில்லை” என்று ஹாஸ்டிங்க்ஸ் அறிவிக்கிறார்.

புதன்கிழமையன்று, வெள்ளை மாளிகையில் ஒபாமாவிற்கும் மக்கிறிஸ்டலுக்கும் இடையே நடந்த பேச்சுக்களுக்கு முன்பு –அதில்தான் தளபதி தன் இராஜிநாமாவைக் கொடுத்தார்—நியூ யோர்க் டைம்ஸ் அதன் ஆப்கானியப் போர் நிருபர் C.J.Chivers, எழுதிய “போர்வீரர்கள் போர் விதிகளினால் உளைச்சல் பெற்றுள்ளனர்” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டது.

இக்கட்டுரை அமெரிக்கா அதன் “கையுறைகளை அகற்றிவிட்டு” ஆப்கானிய மக்கள் மீது அதன் தாக்குதலை மிக அதிக அளவு நடத்த வேண்டும் என்பதற்கு வாதிட்டுள்ளது. வான்தாக்குதல், பீரங்கிப் பயன்பாட்டை வரம்பிற்கு உட்படுத்தியதற்கு கிறிஸ்டலைக் குறைகூறிய பெயரிடப்படாத படையினர்களை மேற்கோளிட்டு Chivers அறிவிக்கிறார்: “ஆப்கானிஸ்தானில் வன்முறை அளவு உயர்கையில், துருப்புக்கள் இடையே காணக்கூடிய, வளரும் அமைதியற்ற உணர்வு உள்ளது. இது எப்படிப் போரை நடத்துவது என்ற மிக குழப்பம் தரும் வினாக்களை சூழ்ந்துள்ளது: எப்படி, எப்பொழுது ஆபத்து நிறைந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?’

அவர் தொடர்கிறார்: “ஆப்கானியக் குடிமக்களிடம் இருந்து ஆபத்து மேலைப் போர்வீரர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது… இளம் அதிகாரிகளும், படையில் சேர்ந்துள்ள வீரர்களும் மரைன்களும்…. “கைகளில் விலங்கு பூட்டப்பட்டுள்து போல் இருப்பது பற்றி” பேசுகின்றனர்…”

“இன்னும் அதிக வீரர்கள் கொலைக்குட்படுவதை காணக்கூடிய விதிகள் தளர்த்தப்பட வேண்டும் என்று எவரும் வாதிட விரும்பவில்லை” என அவர் எழுதுகிறார். ஆனால் இதைத்தான் துல்லியமாக நியூ யோர்க் டைம்ஸ் கோரியுள்ளது.

வியாழனன்று “மக்கிறிஸ்டலுக்குப் பின் ஆப்கானிஸ்தான்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் டைம்ஸ், “இராணுவ, சிவிலிய மூலோபாயங்கள் பற்றிய தீவிர மதிப்பீடு ஒன்று இப்பொழுது தேவை” என்று கோருகிறது. அதன் பின் உறைய வைக்கும் சொல்லாட்சியில் அது எழுதுவதாவது: “எழுச்சியாளர்கள் உண்மையில் நாசத்திற்கு உட்படுத்தப்படும் வரை, அவர்கள் தங்கள் அடக்கும் சக்திமீட்கப்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்துவர். சில வெளிவிவகாரத் துறை அதிகாரிகளும் தாலிபானுடன் விரைவான உடன்பாடு தேவை என்று கூறியிருப்பதாக வந்துள்ள தகவல்களும் கவலை அளிக்கின்றன.” (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

தாராளவாத ஜனநாயகக் கட்சியின் கொள்கை இயற்றும் நடைமுறையில் உறுதியான குரலான இந்த அறிக்கை, மக்கிறிஸ்டல் பணிநீக்கத்தில் உள்ள ஆழ்ந்த பிரச்சினைகளைப் பற்றிய உட்பார்வையை கொடுக்கிறது. அமெரிக்கா வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எழுச்சியாளர்களை “தீவிரமாக நாசப்படுத்தும்” பணியில் போதுமான உத்வேகத்தை தொடரவில்லை, எட்டு ஆண்டுகள் போர்க்காலத்தில், என்பது டைம்ஸ் கொண்டுள்ள நிலைப்பாடு என்பது வெளிப்படை.

பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஏற்கனவே அமெரிக்க, நேட்டோ துருப்புக்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்—வாஷிங்டன் தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி கணக்கு எடுப்பதில்லை என்பதால் படுகொலையின் முழுப் பரப்பு பற்றியும் எவரும் அறிய முடியாது. இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர், சிறைப்பட்டுள்ளனர் அல்லது அமெரிக்கச் சிறைகளில் சித்திரவதைக்கு உட்படுகின்றனர்.

இவ்விதத்தில் கொலைசெய்தல், அச்சுறுத்துதல் என்பது ஒரு காலனித்துவ ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக தேசிய விடுதலை இயக்கத்தை நடத்தும் முற்றிலும் முறையான ஆப்கானிய மக்கள் போராட்டத்தை குருதியில் மூழ்கடிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அமெரிக்கா இன்று முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினை, எட்டு ஆண்டுகள் நடத்தி வரும் போருக்குப் பின்பும், மூன்று தசாப்தங்களாக நடக்கும் அமெரிக்க நாசவேலை, தூண்டிவிடுதல் ஆகியவற்றிற்குப் பின்னரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆப்கானிய மக்களின் வெகுஜன எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்பதுதான். இதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு இன்னும் அதிக ஆப்கானியர்களை கொலை செய்தல் என்பதுதான்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர், மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம் ஆகும்; இதை நீடிக்கச் செய்பவர்கள் போர்க்குற்றவாளிகள் ஆவர்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை போராட்டத்திற்கு திரட்டும் செயல் கண்டிப்பாகப் புதுப்பிக்கப்பட வேண்டும்.