சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Further evidence of criminal negligence by BP and US government in Gulf disaster

பேரழிவில் பிரிட்டிஷ் பெற்றோலியத்தினதும் அமெரிக்க அரசாங்கத்தினதும் குற்றம் சார்ந்த புறக்கணிப்பு பற்றிக் கூடுதலான சான்றுகள்

By Hiram Lee
22 June 2010

Use this version to print | Send feedback

பிரிட்டிஷ் பெற்றோலியம் மற்றும் அமெரிக்க அரசாங்கம் ஏப்ரல் 20 ம் திகதி நடந்த Deepwater Horizon எண்ணெய் கிணறு வெடிப்பிற்கு முன் காட்டிய குற்றம் சார்ந்த புறக்கணிப்பு பற்றிய சான்றுகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. இலாபம் அடைவதற்காக முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கைகளை புறக்கணித்த பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் முடிவும் பல முறை கட்டுப்பாட்டு பச்சை விளக்குகள் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தால் காட்டப்பட்டதும் தற்பொழுது மெக்சிகோ வளைகுடாவை ஆதிக்கம் செலுத்தும் பேரழிவைத் தவிர்க்க முடியாததாகச் செய்துவிட்டன.

புதிய தகவல்களின் மையத்தில் இருப்பது, பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் வெடிப்புத் தடுப்பு முறையில் (BOP) இருந்த குறைபாடுகள் ஆகும். வெடிப்புத் தடுப்பு முறை என்பது கட்டுப்பாடற்ற எண்ணெய் வெளியீட்டை தடுப்பதற்குக் கடைசியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக செயல்படுத்தப்படும் முறையாகும். Deepwater Horizonஇல் இருந்த BOP ஐந்து அடுக்குகள் உயரமாக இருந்து, ஒரு நெருக்கடிக் காலத்தில் கடல்மட்டத்தில் இருந்த எண்ணெய் கிணற்றுடன் இணைக்கப்பட்டுள்ள குழாயை தடுக்கக் கூடிய வெட்டுத் தடுப்பைக் கொண்டிருந்ததுடன், குழாயை மூடிவிடக்கூடிய திறனையும் கொண்டிருந்த கருவியையும் அடக்கியிருந்தது. BOP இல் இரு கட்டுப்பாட்டுப் பாதுகாப்பு அறைகள் மின்னியல் மற்றும் நீரழுத்த தடுப்புபாதுகாப்புக் கருவியும் சாதனத்தை இயக்கும் சக்தியைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.

Deepwater Horizon இன் தோண்டுதல் பணியில் ஈடுபட்டிருந்த பொறியியல் வல்லுனர்கள் BOP முறையில் இயக்கம் தோற்றுவிட்டது என்று ஏப்ரல் 20 வெடிப்பின்போது கூறியிருந்தனர். அழுத்த அளவைகள் நீரியல் பாதுகாப்புத் திரவம் BOP க்குள் செல்லவில்லை என்றும் அதையொட்டி வெடிப்புத்தடுப்பில் சக்தி இல்லாமற் போய்விட்டது என்றும் வெளிப்படுத்தின.

பிரிட்டிஷ் பெற்றோலியம், ஒபாமா நிர்வாகம் இரண்டுமே வெடிப்பை தடுக்கும் முறை ஒரு எதிர்பார்க்க முடியாத நிகழ்வு என்று கூறுகின்றன. கடலோரப் பாதுகாப்புத் தளபதி தாட் ஆலென், “முன்னோடியில்லாத பேரழிவு நிகழ்வு பற்றி ஒரு திட்டம் இயற்றுவது கடினம், இது அத்தன்மையானது.” என்றார்.

இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும். சுதந்திரமான நிறுவனங்கள், அமெரிக்க அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் பெற்றோலியம், டிரான்ஸ் ஓஷன் ஆகியவை நடத்திய ஆய்வுகள் திங்களன்று, நியூயோர்க் டைம்ஸ் கொடுத்துள்ள தகவல்படி, பொதுவாக வெடிப்புத் தடுப்புக் கருவிகளில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை பற்றியும், குறிப்பாக Deepwater Horizonனின் தோண்டுதல் முறைக் கருவியில் இருந்த பிரச்சினைகள் பற்றியும் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன. (“Regulators failed to address risks in oil rig fail-safe device” June 20)

ஒரு நோர்வே நாட்டு நிறுவனமான Det Norske Veritas, வட அமெரிக்க கடலோரத்திற்கு புறத்தேயும் வடகடலிலும் 1980ல் இருந்து 2006 வரை தோண்டப்பட்ட 15,000 கிணறுகளை ஆராய்ந்து வெளியிட்ட ஆய்வை டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. “அது 11 நிகழ்வுகளில் ஆழ்கடல் தோண்டும் குழுக்கள் தங்கள் குழாய்த் திட்டத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து பின்னர் கசிவைத் தடுக்க வெடிப்புத் தடுப்புக்களை செயல்படுத்தின” என்று டைம்ஸ் கூறியுள்ளது. “இவற்றுள் 6 நிகழ்வுகளில்தான் கிணறுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன; இதையொட்டி நடைமுறையில் வெடிப்புத் தடுப்புக்கள், ஆழ்கடல் தோண்டுதலில் பயன்படத்தப்படுபவை தோற்கும் விகிதம் 55 சதவிகிதம் என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.”

BOP தோல்விகளை சூழ்ந்துள்ள பிரச்சினைகள் “தோண்டும் தொழிலில் நன்கு அறியப்பட்டதுதான்” என்று டைம்ஸ் கருத்துக் கூறியுள்ளது.

BOPயின் நம்பகத் தன்மையை அதிகரிக்கக் கூடிய நடவடிக்கைகள் பெருநிறுவனங்களாலும் அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்பட்டு விட்டன. மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத் துறையினால் (MMS) கேட்டுக் கொள்ளப்பட்ட 83 கிணறுகள் பற்றிய 2001 ஆய்வு ஒன்று, BOP தோல்விகள் 117 தடவைகள் ஏற்பட்டன என்று கூறியுள்ளது. “கடலுக்கடியில் உள்ள BOP அமைப்புக்கள், ஆழ் கடல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படுபவை இரு தடுப்பு வெட்டுப் பொறிகளைக் (blind-sheasr rams) கொண்டிருக்க வேண்டும், ஒன்று செயல்படவில்லை என்றாலும் மற்றது செயல்படும்” என்ற முடிவை அது கூறியுள்ளது.

மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத் துறை இத்தகவலுக்கு இயைந்து செயல்பட மறுத்துவிட்டது. புதிய தரங்களோ, கட்டுப்பாடுகளோ வழக்கத்தில் கொண்டுவரப்படவில்லை. Deepwater Horizon வெடிப்புத் தடுப்பில் ஒரு தடுப்பு வெட்டுப் பொறிதான் இருந்தது.

பொதுவாக BOP பிழை நிறைந்தவை என்று கருதப்படுகின்றன; ஆனால் Deepwater Horizon தோண்டுதலில் பயன்படுத்தப்பட்ட BOP பற்றி குறிப்பான கவலைகள் பலமுறையும் எழுப்பப்பட்டிருந்தன.

Deepwater Horizon செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கொண்டிருந்த 2001 டிரான்ஸ் ஓஷன் நிறுவனத்தின் உள் ஆவணம் ஒன்று, மே மாதம் மன்ற விசை மற்றும் வணிகக் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டது. இது Deepwater Horizon வெடிப்புத் தடுப்புக் கருவி 160 “செயலிழக்கும் தன்மைகளை” ஆபத்தான முறையில் கொண்டிருந்தது, அதற்குப் பதிலாக வேறு ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியது.

2005ம் ஆண்டு வெஸ்ட் எஞ்சினீயரிங் பணிகள் நிறுவனம் டிரான்ஸ் ஓஷனுக்காக Deepwater Horizon கிணற்றுக்கட்டுப்பாடு பற்றிய மதிப்பீடு ஒன்றை நடத்தியது; இதில் ஆய்விற்கு 250 க்கும் மேலான பாகங்கள் பட்டியலிடப்பட்டன. பட்டியலில் 72 பாகங்கள் ஆராயப்படாமலேயே போயின. அவற்றுள் வெடிப்புத் தடுப்பு பற்றிய முக்கிய சோதனைகளும் அடங்கியிருந்தன. ஏற்கனவே 2001ல் தவறு என்று கருதப்பட்ட நிலையில், BOP இப்பொழுது நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

மேலும் 2005லேயே, ஒரு டிரான்ஸ் ஓஷன் கட்டுரை, Deepwater Horizon தோண்டுதல் பிரச்சினைகள் பற்றிய மதிப்பிட்ட ஆவணம், BOP யின் ஒரு குழாய், நீரழுத்த திரவத்தை எடுத்துச் செல்லுவது, ‘BOP தொகுப்பை ஓட்டவும் நிறுத்தவும் முக்கியமானது’ என்று விவரிக்கப்படுவது, அடிக்கடி சேதங்கள் அடைவதால் இந்த “அவசரப் பிரிவு” (hotline) மாற்றப்பட வேண்டும் என்றும் “தோண்டுதல் நடவடிக்கையின் போது குழாய் பெரிதும் கசிந்து காணப்படுகிறது” என்றும் கூறியது. இக்கசிவு அடையப்பட முடியாததால் விசாரணையின்போது பழுது திருத்தப்படவில்லை என்றும் அறிக்கை கூறியுள்ளது.

Deepwater Horizon தொழிலாளி Tyrone Benton, BBC யுடன் பேசியதாக திங்களன்று வந்த கட்டுரை ஒன்று கூறுகிறது. அதில் அவர் தானும் தோண்டுதலின் வெடிப்புத் தடுப்பில் ஏப்ரல் 20 வெடிப்பிற்கு சில வாரங்கள் முன்பு கசிவைக் கண்டதாகக் கூறியுள்ளார். Benton இப்பொழுது பிரிட்டிஷ் பெற்றோலியம், டிரான்ஸ் ஓஷன் இரண்டின் மீதும் புறக்கணிப்பிற்காக வழக்குத் தொடுத்துள்ளார்.

“கொள்கலனில் ஒரு கசிவை நாங்கள் கண்டோம், கசிவைப் பார்த்தவுடன் நிறுவன நபர்களுக்கு அது பற்றிக்கூறினோம்” என்று பிபிசியிடம் Benton கூறினார். “அவர்கள் ஒரு கட்டுப்பாட்டு அறை வைத்துள்ளனர்; அங்கு அவர்கள் இக்கலனை மூடிவிட்டு வேறு ஒன்றைத் திறக்க முடியும். எனவே அதையொட்டி அவர்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டியதில்லை.” நீரழுத்தத் திரவம் கருவியில் இருந்து கசிந்தது என்றால், வெட்டுப் பொறியின் சக்தி பயனற்றுப் போகும், அல்லது கருவி முழுமையாகச் செயல்படாது.

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பெட்ரோலிய வல்லுனராக உள்ள Tax Patzek ஐ பிபிசி மேற்கோளிட்டுள்ளது: கசிவை அடைக்க வேண்டாம் என்று எடுத்த முடிவு “ஏற்கத்தக்கது அல்ல. வெடிப்புத் தடுப்பு முறை சரியாக செயல்படவில்லை என்பதற்கு ஏதேனும் சான்று வந்தால், உடனே எப்படியும் அதைச் சரி செய்ய வேண்டும்.” என்றார் அவர். பல அறிக்கைகள் Deepwater Horizon BOP முறையில் தீவிர பிரச்சினைகள் உள்ளன என்று கூறியிருக்கையில், பிரிட்டிஷ் பெற்றோலியம், டிரான்ஸ் ஓஷன் இரண்டும் அரசாங்கக் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் இருந்து எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளாத நிலையில் எண்ணெய் எடுப்பதையும் உற்பத்தியையும் இன்றியமையாத பழுது பார்த்து வேறு கருவிகளை வைக்கும் வரை நிறுத்தவில்லை. அவ்வாறு அவர்கள் செய்திருந்தால் மில்லியன் கணக்கில் இலாபம் குறைந்திருக்கும். மாறாக நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, கடல் தளத்தில் இருந்து இயற்கை எரிவாயு சீற்றத்துடனும் உயர் அழுத்தத்துடனும் மேலெழுந்து வருவதைக் கட்டுப்படுத்த திறனற்ற தரம்குறைந்த தோண்டும் வடிவமைப்பைப் பயன்படுத்தின. சிமென்ட் மூடல்களின் நேர்த்தி பற்றி ஒரு இறுதிச் சோதனை தேவை என்று கூறிய ஹாலிபர்ட்டனின் ஆலோசனையும் புறக்கணிக்கப்பட்டது.

பேரழிவிற்கும் முன் பொருட்படுத்தாத் தன்மை பற்றி டைம்ஸ் நிறைய ஆவணங்களிட்டும், ஒபாமா நிர்வாகத்தின் பங்கை அது பூசி மெழுகத்தான் முற்பட்டுள்ளது; புதிய அரசாங்கம் “நன்கு அறியப்பட்ட வெடித்தல் தடுப்புக்களின் வலுவற்ற தன்மை அல்லது நாட்டின் தோண்டும் கட்டுப்பாடுகள் போதுமானவையா என்ற பிரச்சினைகளை சமாளிக்க இயலவில்லை. அதே நேரத்தில் கடல் பகுதியில் தோண்டுதலுக்கான திட்டங்களை இந்த வசந்த காலத்தில் செய்தது.”

இது “சமாளிக்கத் தவறியது” அல்ல, அல்லது டைம்ஸ் பின்னர் கூறியது போல் “தவறான பாதுகாப்பு உணர்வும்” அல்ல. உண்மையில் நிர்வாகம் வேண்டுமென்றே கடல்பகுதி எண்ணெய் எடுத்தலை நிறுத்த முற்பட்ட அல்லது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் முயற்சிகளை இதற்கு முன்னால் புஷ் நிர்வாகம் செய்தது போலவே குறைமதிப்பிற்கு உட்படுத்தவே செய்தது.

இதில் 2009ம் ஆண்டு இடைக்கால நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் புஷ்ஷின் 2007-2012 வளைகுடா எண்ணெய் தோண்டுதல் திட்டம் போதுமான சுற்றுச் சூழல் ஆய்வுகளையும் பாதுகாப்பையும் கொண்டிருக்கவில்லை என்ற தீர்ப்பும் அடங்கியுள்ளது. பிரிட்டிஷ் பெற்றோலியம் Deepwater Horizon திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய ஒன்று என்று குறிப்பாக நிர்வாகம் மேற்கோளிட்டிருந்தது. அதையொட்டி நீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்றது. (பார்க்க, “Obama administration helped BP quash environmental challenges to Gulf drilling”).

பின்பு வெடிப்பிற்கு முந்தைய வாரங்களில் பிரச்சினைகள் பெருகிய நிலையில், ஒபாமாவின் கீழ் இருந்த மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத் துறை பலமுறை விலக்குகள் அறிந்து, சில சமயங்களில் விண்ணப்பங்கள் வந்த சில நிமிடங்களுக்குள்ளேயே பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் முடிவுகளுக்கு ஒப்புதலையும் கொடுத்தது.

எண்ணெய் நிறுவனங்களின் தவறுகளை உறுதியாகக் கண்டிபிடிப்பதாக ஒபாமா பகிரங்கமாக அறிவித்து இத்தகைய மற்றொரு பேரழிவு வராமல் தடுப்பதற்குத் தேவையானவற்றை செய்வதாகக் கூறியிருந்தாலும், அவருடைய நிர்வாகம் மெக்சிகோ வளைகுடாவில் அத்தகைய திட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப்பற்றி போதுமான முறையில் ஆராயாமல் கடல்தள தோண்டுதல்களுக்கு புதிய குத்தகைகளுக்காக இசைவு கொடுத்துள்ளது.

McClatchy செய்தித்தாட்கள் நடத்திய ஒரு ஆய்வின்படி ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத் துறை ஐந்து ஆழ்கடல் தோண்டுதல் திட்டங்களுக்கு மெக்சிகோ வளைகுடாவில் ஒப்புதல் கொடுத்துள்ளது. இவற்றுள் மூன்றில் மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத் துறை சில விலக்குகளுக்கு இசைவு கொடுத்துள்ளது, அதாவது “உறுதியான விலக்குகள்”; இவற்றின்படி வளைகுடாவில் தோண்டும் எண்ணெய் நிறுவனங்கள் விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வுகளுக்கு உட்படத் தேவையில்லை. மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத்துறை இவ்வித விதிவிலக்கைத்தான் எண்ணெய் கசிவிற்கு முன் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் Deepwater Horizon திட்டத்திற்கும் கொடுத்திருந்தது.

மொத்தத்தில் 198 குத்தகைகள் மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத் துறையால் ஏப்ரல் 20ல் இருந்த மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பத்து பிரிட்டிஷ் பெற்றோலியத்தி்ற்கு விற்கப்பட்டன. எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் இந்த வெகுமதி, அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான சுற்றுச் சூழல் பேரழிவிற்குக் காரணமான அதே நிறுவனம் உட்படக் கொடுக்கப்பட்டிருப்பது, நிர்வாகத்திற்கும் எண்ணெய் பெருநிறுவனங்களுக்கும் இடையே உள்ள உண்மையான உறவை அம்பலப்படுத்துகிறது.