சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Two million protest in France against government austerity policies

பிரான்சில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு எதிராக இரண்டு மில்லியன் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்

By Antoine Lerougetel
26 June 2010

Use this version to print | Send feedback

banner
வோர்த், சார்க்கோசி, இன்னும் சற்று கடினமாக முயற்சியுங்கள், பிரான்ஸ் ஊழலில் உலகச் சாம்பியானகிவிடும்

தொழிற்சங்கங்களின் மதிப்பீடுகளின்படி கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள், பிரான்சின் ஓய்வூதிங்களை பாதுகாக்கும் நடவடிக்கைத் தினமான வியாழனன்று 200 நகரங்களிலும், சிறு நகரங்களிலும் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். இந்த எண்ணிக்கை மே 27ல் திரண்டிருந்த 1 மில்லியனை விட கணிசமாக அதிகம் ஆகும். பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் அரசாங்கங்கள் வங்கிகள் ஆணைக்கு ஏற்ப சுமத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகும் மக்கள் எதிர்ப்பை இது பிரதிபலிக்கிறது.

ஆனால், தொழிற்சங்கங்களால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ள இந்த எதிர்ப்புக்கள் மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்தி சிதைக்கும் வடிவமைப்பைத்தான் கொண்டுள்ளன. இதில் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ இடது சோசலிஸ்ட் கட்சி (PS), கம்யூனிஸ்ட் கட்சி (PCF), Jean-Luc Melenchon உடைய இடது கட்சி (PG) மற்றும் ஒலிவியே பெசன்ஸநோவின் முன்னாள் தீவிர புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவற்றினால் ஆதரிக்கப்படுகின்றன.

Retiree
60 வயதில் உண்மையான ஓய்வூதியம் இயலும்— இலாபங்கள் மீது

பிரான்சின் வரவு-செலவு திட்டப் பற்றாக்குறையான மொத்த தேசிய உற்பத்தியில் 8 சதவிகிதம் என்பதை 2013க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு குறைத்தல் என்னும் ஐரோப்பிய ஆணயத்தின் தேவைக்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இந்த ஓய்வூதியக் குறைப்புக்கள். அதில் 100 பில்லியன் யூரோ வெட்டுக்கள் ஏற்படும். சார்க்கோசி ஓய்வூதிய வயதை 60ல் இருந்து 63க்கு உயர்த்தும் நோக்கத்தை கொண்டுள்ளார்.

ஆனால் எதிர்ப்புத் தினத்தன்று Le Monde ஆனது சோசலிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் Diier Migaud, கணக்குகள் நீதிமன்றத்தில் தலைவராகவும் நிதியக் கண்காணிப்பாளராக இருப்பவருடன் ஒரு பேட்டியை வெளியிட்டது. அவர் அந்த அமைப்பின் அறிக்கையை நாட்டின் நிதியை பற்றிக் கொடுத்தார். அது 100 பில்லியன் யூரோக்கள் போதாது என்று வலியுறுத்துகிறது. PS ன் தேசிய செயலாக்கப் பிரிவின் உறுப்பினராக உள்ள Migaud நிதி மற்றும் நிதிய கொள்கைகளுக்கு கட்சியின் முதன்மைச் செயலரான Martine Aubrey க்கு ஒரு ஆலோசகராக உள்ளார்.

 

Banner
சொற்களில் விளையாட்டு: “நாங்கள் மோசமாக ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டோம்/நடத்தப்பட்டு விட்டோம்.”

அவர் வலியுறுத்தியது: “அனைத்து அளவு கோல்களிலும் செயல்படுவது, வயது, வேலையில் உள்ள ஆண்டுகள், ஓய்வூதியங்களின் தரம், பங்ளிப்புக்களின் செலவு, நிதியத்தின் தளம் போன்றவை…. ஆனால் ஓய்வூதியங்கள் ஒன்று மட்டும் பிரச்சினை அல்ல. நாம் உலகளவில் சமூக நலச் செலவுகள் பற்றியும் பரிசீலிக்க வேண்டும்.”

இதில் IMF இன் தலைமை இயக்குனர் மற்றும் PS ன் முக்கிய நபரான Dominique Strauss-Kahn உடன் Migaud முற்றிலும் உடன்பாட்டைக் கொண்டுள்ளார். Strauss-Kahn 2012 ஜனாதிபதித் தேர்தலில் PS வேட்பாளர் தகுதிக்கு முன்னணியில் இருப்பவர். அவர்தான், மற்றவற்றுடன் கிரேக்க சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதில் முக்கிய கருவியாக இருந்தார். அது ஊதியங்களையும், ஓய்வூதியங்களையும் கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துவிட்டது.

Greek
கிரேக்க மாணவர்கள் போராட்டக்குழு — நெருக்கடிக்கு உயர் செல்வத்தட்டினர் விலை கொடுக்க வேண்டும்.

ஜனவரி மாதம் அரசாங்கத்துடன் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் பொதுக்கடன்களை சிக்கன நடவடிக்கை திட்டங்கள், மற்றும் ஓய்வூதிய வயதை 2 இருந்து 3 ஆண்டுகள் உயர்த்துவதின் மூலம் குறைப்பதற்கு ஒத்துழைப்பதாக சோசலிஸ்ட் கட்சி மார்டின் ஒப்ரியின் மூலம் உறுதிமொழி கொடுக்கப்பட்ட போதிலும், இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டால் அச்சட்டத்தை அகற்றவதாக உறுதியளித்துள்ளது. அத்தகைய உறுதிமொழியின் மோசடித்தன்மை கிரேக்கப் பிணை எடுப்பிற்கு 110 பில்லியன் யூரோ கொடுத்த வாக்களிப்பில் கட்சி பங்கு பெற்றதின் மூலம் நிரூபிக்கப்பட்டது. அந்த கடுமையான சிக்கன நடவடிக்கைகள் PASOK யின் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

பிரெஞ்சு நடவடிக்கை நாள் அமைப்பாளர்களின் நோக்கம் எழுச்சி பெறும் மக்கள் அதிருப்தியை சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற கால அட்டவணைக்கு ஏற்ப கொண்டு வருதலும் ஆகும். இது தொழிலாள வர்க்கமானது தொழிற்சங்கங்கள் மற்றும் மரபார்ந்த இடதுகளிடம் நம்பிக்கையை இழந்து அவற்றின் ஆதிக்கத்தை முறித்து பொது வேலைநிறுத்தம் பற்றிப் பரிசீலிக்கும் நேரத்தில் வருகிறது. இக்கொள்கையை அமைப்பாளர்கள் 2012ல் ஒரு “இடது” அரசாங்கமானது வங்கிகள் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தயாரிப்பதற்காக இயக்கப்படுகிறது.

La vie
வாழ்க்கை 60 வயதில் ஆரம்பிக்கிறது — உலகெங்கிலும் உள்ள ஓய்வூதியம் பெறுவோரே, ஒன்றுபடுங்கள்

நடவடிக்கை நாளன்று பங்கு பெறுவதற்காக NPA ஜூன் 24 அன்று அதன் வலைத் தளத்தில் வெளியிட்ட அழைப்பு இந்த முன்னோக்கிற்கு முழு ஆதரவைக் கொடுத்து, அத்தகைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தான் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது—தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுடன் “ஒரு பொது வேலைநிறுத்தத்தை கட்டமைக்கவும்”, “செப்டம்பர் 7 அன்று தொடங்க இருக்கும் பாராளுமன்ற விவாதத்திற்கு தயாராக இருக்கும் விதத்தில் ஒரு பொது அணிதிரட்டல் சூழலை தக்க வைத்து, விரிவாக்கவும்” இது விரும்புகிறது.

வியாழனன்று பாரிசில் கிட்டத்தட்ட 130,000 பேர் (பொலிஸ் மதிப்பீட்டின் படி 43,000) ஆர்ப்பாட்டம் செய்தனர். அதே நேரத்தில் Bordeaux ல் பங்கு பெற்றவர்கள் பற்றிய மதிப்பீடு 25,000 முதல் 80,000 வரை என்று உள்ளது. Marseille ல் 16,000 த்தில் இருந்து 130,000 வரை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மே 27ல் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் எண்ணிக்கை உயர்ந்தது.

வேலை நிறுத்தங்களில் பங்கு பெற்றோர் விகிதமும் மே 27 ஐ விடக் கணிசமாக உயர்ந்தது. மரபார்ந்த வகையில் கன்சர்வேடிவாக இருக்கும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசப் பணியாளர்கள் 19.35 சதவிகிதம் (மே 27, 11.6 சதவிகிதத்தில் இருந்து உயர்வு) என்றும், உள்ளூராட்சி ஊழியர்கள் 15.9 சதவிகிதம் என்றும் (7.5 சதவிகிதத்தில் இருந்து உயர்வு), மருத்துவமனைகளில் 12.5 சதவிகிதம் (8.3 சதவிகிதத்தில் இருந்து உயர்வு), கல்வித்துறையில் இருந்து 18 சதவிகிதம் (12—16 சதவிகிதத்தில் இருந்து உயர்வு) என்று கூறின. இது கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் கூடுதலான ஓய்வூதிய அளிப்புக்கள், குறைக்கப்படும் ஓய்வூதியங்கள், கூடுதலான பணிக்காலம், 2013 வரை ஊதிய முடக்கம் மற்றும் ஆண்டு ஒன்றிற்கு 32,000 வேலைகள் இழப்பு ஆகியவற்றிற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர் என்பதைக் காட்டுகிறது.

 

Nice
நீஸ் ஆர்ப்பாட்டத்தில் இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பதாகை

அரச இரயில்வே நிறுவனமான SNCF நடவடிக்கை தினத்தில் கிட்டத்தட்ட அதன் 40 சதவிகித ஊழியர்கள் பங்க பெற்றதாக அறிவித்தது. சுவிஸ் தேசிய இரயில் நிறுவனமான SBB கிட்டத்தட்ட 60 சதவிகித இரயில்கள், பிரான்ஸுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையே ஓடுபவை, வேலைநிறுத்தத்தை ஒட்டி இரத்து செய்யப்பட்டுவிட்டன என்று கூறியது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய வேலைநிறுத்தத்தினால் பாரிசின் முக்கிய சர்வதேச விமான நிலையமான Charles de Gaulle இலும் அதன் மற்ற முக்கிய விமான நிலையமான Orly யிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 வரை 15 சதவிகித பயணங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டன.

அஞ்சல்துறை, எரிவாயு மற்றும் மின்சக்தி அளிக்கும் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சில மருத்துமனைகள், எரிசக்தி தொழிலாளர்களும், தனியார் நிறுவனங்கள் ஊழியர்களும், ஏயர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனம் உட்பட, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எரிசக்தித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தது நண்பகலில் 7,000 மெகாவாட் மின்விசை உற்பத்தியைக் குறைத்தது. அரச மின்சார நிறுவனமான EDF அதன் தொழிலாளர்கள் தொகுப்பில் 16 சதவிகிதத்தினர் நடவடிக்கையில் பங்கு பெற்றதாகக் கூறியுள்ளது.

செய்தித் தாட்கள் தயாரிப்பும் அச்சு தொழிலாளர்கள் நடவடிக்கையை ஆதரித்த அளவில் நின்று போயிற்று. இதன் விளைவாக Le Monde, Liberation இன்னும் பிற நாளேடுகள் பாதிப்பிற்கு உள்ளாயின. ஊழியர்கள் அரசிற்கு சொந்தமான France Inter, France Info வானொலி நிலையங்களிலும் வேலைநிறுத்தம் செய்தனர்.

CGT (பிரான்ஸின் மிகப் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு) ன் பொதுச் செயலாளர் பேர்னாட் திபோ, அணிதிரள்வின் வெற்றி “ஓய்வூதியச் சீர்திருத்தம் கொண்டுவரும் தற்போதைய சட்டம் ஜூன் 13 அன்று மந்திரிசபைக்கு சமர்ப்பிக்கக் கூடாது என்ற பொருளைத் தரும்” என்றார். ஒரு CGT அறிக்கை “தொழிற்சங்கங்களுடன் உண்மையான பேச்சுவார்த்தை வட்டம் திறக்கப்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளது.

தொழிற் துறை மந்திரி எரிக் வோர்த் செய்தியாளரிடம் கூறினார்: “இது ஒரு வலுவான அணிதிரள்வு…. ஆனால் ஓய்வூதிய முறையைக் காப்பாற்றும், குறிப்பாக சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் உறுதியை எவ்விதத்திலும் மாற்றப்போவதில்லை.”

உலக சோசலிச வலைத் தளத்தின் குழுக்கள் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை பற்றிய தகவல்களை சேகரித்த்தோடு, “சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கு“ என்னும் உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கையையும் வழங்கினர்.

workers
சில்வி, கிறிஸ்டெல், மாரியோ மற்றும் அகிம்

பாரிஸ் ஆர்ப்பாட்டங்கள் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயற்படும் CFDT, கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயற்படும் CGT தொழிற்சங்கங்களின் பதாகைகள், கொடிகள் ஆகியவற்றால் பெரிதும் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. பங்கு பெற்றவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதினராக இருந்தனர். மற்ற நகரங்களில் இருந்து வந்த தகவல்கள் போலவே, இப்படி தனித்தனியே நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்கங்களால் இயக்கப்படுபவை, தங்களை சிக்கன நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் என்று நம்பிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காண்பது கடினம் என்று ஆயிற்று. இடது கட்சிகளில் இருந்து அதிகமானவர்கள் தென்படவில்லை. தன்னுடைய வலைத் தளத்தில் எப்பொழுதாவது NPA குறிப்புக்கள் இருந்தும், கட்சி துண்டுப்பிரசுரம் எதையும் வெளியிடவில்லை, பதாகைகள் அல்லது கோஷ அட்டைகளை வேலைநிறுத்த அழைப்பிற்குத் தயாரிக்கவும் இல்லை.

வரி அலுவலகத்தில் ஒரு பொதுத் துறை ஊழியராக இருக்கும் John Recayte கூறினார்: “இடது மோசமாக ஒழுங்குபடுத்தியுள்ளது, PS, PCF இரண்டும் பெரும் இடர்களில் உள்ளன.” “புரட்சிகர திட்டம் பேர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நம்பகத்தன்மையை அதிகம் இழந்துவிட்டது” என்றும் சேர்த்துக் கொண்டார்.

58 வயதான Mme. Offredo Marypol, கற்கும் இடர்கள் உள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் என்ற அரசாங்க பட்டம் இருந்தும், மூன்று ஆண்டுகளாக வேலையின்றி உள்ளார். “எனக்கு மூன்று தடங்கல்கள் உள்ளன, ஒன்று வயதாகிவிட்டது, இரண்டு நான் அதிக ஊதியம் வாங்கியவள். மிக அதிக அனுபவம் உண்டு. “மூத்தோர் ஒப்பந்தம்” என்று முதலாளிகளை அரசாங்கம் வயதான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் சட்டம் நடைமுறையில் பயனற்றது என்றார். “முதலாளி ஒரு மூத்தவரை வேலைக்கு வைப்பதற்குப் பதிலாக அபராதம் கட்ட விரும்புகின்றனர்.” என்றார். ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் வந்தபின் தான் இன்னும் நான்கு ஆண்டுகள் ஓய்வூதியம் பெறக் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

லியோனல், ஒரு பாரிஸ் உயர்நிலைப்பள்ளியின் பிரெஞ்சு மொழி கற்பிக்கிறார். “செப்டம்பர் விடுமுறை நாட்களுக்கு பின்னர் நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவேன்.” என்றார் அவர். “நான் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு உடன்படுகிறேன். இது பொது வேலைநிறுத்தம் வரும் வரை தொடரும் என்று நம்புகிறேன்.” என்றார்.

71 வயதான போல், மக்களைத் திவால்படுத்தும் கொள்கைகளை எதிர்க்கிறார். “நமக்கு உறுதியாக ஒரு சர்வதேசக் கட்சி தேவை. அது தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும். மூலதனம் சர்வதேச அளவில் செயல்படுகிறது, தொழிற்சங்கங்கள் ஒரு தேசிய அளவில்தான் விடையிறுப்பைக் கொடுக்கின்றன. இது வேலை செய்யாது.”

பிரான்சின் தெற்குப் பகுதியான நீஸில் கிட்டத்தட்ட 10,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளில் இருந்து பிரதிநிதிக் குழுக்கள் கலந்து கொண்டன. இச்சக்திகள் அக்கறையுள்ள அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எதையும் வழங்கவில்லை. சார்க்கோசியை தாக்கிய விதத்தில் புள்ளிவிவரங்களை மட்டும் தான் பிரசுரங்களில் கொடுத்துள்ளன. ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகள், சர்வதேச நிலைமை பற்றி ஏதும் விளக்கவில்லை.

உலக சோசலிச வலைத் தளத்திடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்க்கோசியிடம் தாங்கள் சீற்றம் கொண்டுள்ளதாகவும், ஒரு ஐரோப்பிய அளவு வேலைநிறுத்தத்திற்கும் மற்ற நாடுகளின் தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட ஆதரவைத் தெரிவித்தனர். ஆனால் இதை எப்படிச் செய்வது என்பது பற்றி அறிந்திருக்கவில்லை என்றனர். சோசலிஸ்ட் கட்சி அல்லது தொழிற்சங்கங்களில் எவரும் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. அவர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விரும்பியதுடன் தங்கள் குழந்தைகளின் வருங்காலம் பற்றியும் கவலையைத் தெரிவித்தனர்.

மத்திய பிரான்ஸில் உள்ள Tours ல் ஆர்ப்பாட்டக்காரர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தங்கள் ஆர்ப்பாட்டம் பெரியது என்றாலும், தொழிற்சங்கங்களிடம் கொள்கை ஏதும் இல்லை என்றனர். அணிவகுப்பின் முடிவில் கூட்டம் ஏதும் இல்லை என்று ஏமாற்றம் அடைந்த அவர்கள், எந்த முன்னோக்கும் இல்லாமல் மக்கள் கலைந்து போயினர் என்று உணர்ந்தனர். ஒரு பெண்மணி கூறினார்: “தொழிற்சங்கங்களிடம் விடை இல்லை. நான் கடுமையாக உள்ளேன். இது எதையும் சாதிக்கவில்லை. இந்த நடவடிக்கைகள் நாட்கள் வெறும் எதிர்ப்புத்தான், வேறு ஒன்றும் இல்லை.”

அமியன்னில் கிட்டத்தட்ட 6,000 பேர் கலந்து கொண்டனர். ஒரு CGT ஊழியராக இருக்கும் ஹக்கிம் மற்றும் CROUS துறையில் இருந்து மாணவர்கள் சமூகத் தேவையைக் கவனிக்கும் பொதுத் துறை ஊழியர்களான Sylvie, Chrustelle மற்றும் Mario ஆகியோர் எப்பொழுதும் நெருக்கடிகளுக்கு தொழிலாளர்கள் தான் விலை கொடுக்கின்றனர் என்றனர். Sylvie, Chrustellre என்னும் இரு சிற்றுண்டிச் சாலைத் தொழிலாளர்கள் அவர்களுடைய பணி நிலைமைகள் வேதனையளிக்கும் எலும்புத் தசை சீர்கேட்டை கொடுக்கின்றன என்று புகார் கூறினர்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் Jean-Claude Trichet பொருளாதார அரசியல் நிலைமை 1939 அல்லது 1914க்காட்டிலும் மோசமாக உள்ளது என்று கூறிய அறிக்கைக்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஹக்கிம் தொழிலாள வர்க்கத்திற்கு தொழிற்சங்கங்களோ அல்லது தெருக்களில் இருந்து வரும் அழுத்தமோ தீர்வைக் கொடுக்குமா என்பது பற்றி சந்தேகப்பட்டார்.

ஒரு கேளிக்கைத் துறையில் தொழிலாளராக இருக்கும் Delphine, “நாம் கடந்து கொண்டிருக்கும் காலம் மிகவும் வன்முறையானது” என்றார்.

சமீபத்தில் Frabce Inter ல் உள்ள இரு அரசியல் கேலி எழுத்தாளர்கள் பதவி நீக்கத்தை சார்க்கோசி நியமித்த முதலாளியின் மூலம் பெற்றதைக் குறிப்பிட்டு, அவர், “அவர்கள் நாங்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். அரசாங்கம் அனைத்துத் திறனாயும் குரல்களையும் நசுக்க விரும்புகிறது. இதற்கு எதிராகப் போரிடக்கூடிய சக்திகளை நாம் கட்டமைக்க வேண்டும்” என்றார்.

Patrick and son
மாக்சிம், மற்றும் பாட்ரிக்

ஒரு Lycée தொழில்துறை பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் பாட்ரிக்கும், உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டில் பயிலும் அவருடைய மகன் மாக்சிமும் ஓய்வூதியங்கள் 62 வயதிற்குப்பின் எனத் தள்ளப்படவதை எதிர்த்தனர். “பொதுவாகவே, வேலை வெட்டுக்கள், பெரிய வகுப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் என்று அனைத்தையும் பற்றி வெறுப்புற்றுள்ளேன்—அவர்கள் படுமுட்டாள்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த நிலைமை தற்போதைய நடவடிக்கைகளாலும் அமைப்புக்களாலும் மாற்றப்பட முடியாது. ஒருவேளை ஒரு புரட்சியினால் அல்ல, ஆனால் இதைவிடக் கடுமையானதால்தான் முடியும்.”

“அனைத்துப் பொது நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடுதான்—அது ஒன்றுதான் ஒரே தீர்வு. ஆனால் அதற்கு நேர்மையானவர்கள் வேண்டும். இப்பொழுதுள்ள நிலையில் உலகம் நீடிக்க அனுமதிக்கப்படக்கூடாது.”

Maxime “இத்தகைய உலகத்தில் வாழ்வது மிகக் கடினம்” என்று தெரிவித்தார்.