சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington “discovers” Afghanistan’s mineral wealth

வாஷிங்டன் ஆப்கானிஸ்தானின் தாதுப்பொருள் வளங்களை “கண்டுபிடிக்கிறது”

By Alex Lantier
15 June 2010

Use this version to print | Send feedback

இதுவரை இன்னும் முடிவெடுக்காதவர்களுக்கு நியூ யோர்க் டைம்ஸ் உத்தியோகபூர்வமாக ஆப்கானிஸ்தான் போர் ஒரு கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய போர் என்பதை அறிவித்துள்ளது. இந்த தப்பிக்கவியலாத முடிவைத்தான், நேற்றைய முக்கிய கட்டுரையான “வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் தாதுப்பொருள் வளங்களை “கண்டுபிடிக்கிறது” என்னும் தலையங்க கட்டுரையானது பென்டகன் ஆப்கானிய தாதுப்பொருள் ஆதாரங்களை முக்கிய சுரங்க பெருநிறுவனங்களுக்கும், நிதிய நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கவிருக்கும் திட்டம் பற்றி தெரிவிக்கிறது.

நியூ யோர்க் டைம்ஸ், “மூத்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகள்” அமெரிக்க மதிப்பீட்டு குழுக்கள் “கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் பெறுமதியான எடுக்கப்படாத தாதுச் சேமிப்புக்களை ஆப்கானிஸ்தானில்” கண்டுபிடித்துள்ளதாக கூறியதை மேற்கோளிட்டுள்ளது. தற்போதைய சந்தை விலைகளில் இது 421 பில்லியன் டாலர் இரும்புத் தாது, 274 பில்லியன் டாலர் பித்தளையில், 81 பில்லியன் டாலர் நியோபியத்தில் (மிகவிரைவான கடத்துதிறன் கொண்ட எஃகு தயாரிக்க பயனபடுத்தும் உலோகம்), 51 பில்லியன் டாலர் கோபால்ட், 25 பில்லியன் டாலர் தங்கம், 24 பில்லியன் டாலர் மொலிபெட்னம் மற்றும் 7.4 பில்லியன் டாலர் “அரிதான நில கனிமப்” பொருட்கள் ஆகும். டைம்ஸ் ஆப்கானிஸ்தானின் மிக மதிப்புடைய இரத்தினக்கற்கள் மற்றும் எரிவாயுவைக் கணக்கில் கொள்ளவில்லை.

ஆயினும்கூட, ஆப்கானிஸ்தான் “உலகின் மிக முக்கிய சுரங்க மையங்களில் ஒன்றாக மாற்றப்படக் கூடும்” என்ற முடிவிற்கு அது வந்துள்ளது.

இப்பெரும் பொக்கிஷம் அமெரிக்க இராணுவம் மற்றும் முக்கிய சர்வதேச நிறுவனங்களின் கரங்களில் உள்ளது என்று டைம்ஸ் விளக்கியுள்ளது ஆப்கானிய அரசாங்க சுரங்கத் துறையுடன் “சர்வதேச கணக்கீட்டு நிறுவனங்கள் ஆராய்ந்து தொழில்நுட்பத் தகவலை தயாரித்து, சர்வதேச நிதிய நிறுவனங்கள் மற்றும் பிற வெளிநாட்டு முதலீட்டுத் திறன் உடையவற்றையும் தொடர்பு கொள்ள முயல்கின்றன. ஆப்கானிய அதிகாரிகள் அடுத்த இலையுதிர்காலத்திற்குள் சுரங்க உரிமைகள் பற்றிய ஏலத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு பென்டகன் உதவி வருகிறது.”

துணைப் பாதுகாப்பு மந்திரி போல் பிரிங்க்லி டைம்ஸிடம் கூறினார்: “சுரங்க அமைச்சரகம் நடவடிக்கைக்கு இன்னும் தயாராக இல்லை. நாங்கள் அது தயார் நிலைக்கு வர உதவுகிறோம்.”

பென்டகன் சுரங்க அமைச்சரகத்திற்கு “உதவுகிறது” என்னும் கூற்று ஒரு பொய் ஆகும். உண்மையில், சுரங்க அமைச்சரகத்திற்கு மதிப்பீட்டின் உள்ளடக்கத்தை பற்றி ஒன்றும் தெரியாமல்தான் வைக்கப்பட்டிருக்கும். நேற்று புளூம்பேர்க் நியூஸ் டைம்ஸின் அறிக்கை பற்றி ஒரு விளக்கம் கேட்க முற்படுகையில் சுரங்கத் துணை மந்திரி அப்துல் குடுஸ் ஹமிதி “மதிப்பீட்டின் ஒரு பிரதி கிடைக்கும் வரை சுரங்க அமைச்சரகம் கருத்து ஏதும் கூறுவதற்கு இல்லை” என்று கூறினார்.

இன்னும் பரந்த அளவில், பென்டகன் முக்கியமாக சுரங்க அமைச்சரகம் ஆப்கானிஸ்தானத்தின் வளங்களை எவர் அடைவர் என்பதை முடிவெடுக்க “உதவும்”. அமெரிக்க அதிகாரிகளும் டைம்ஸும் சீன சுரங்க நிறுவனங்கள் ஏற்கத்தக்க ஏலதாரர்கள் அல்லர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

டைம்ஸ் எழுதியது: “கடந்த ஆண்டைப் போலவே, ஆப்கானிஸ்தானின் சுரங்க மந்திரி முகம்மத் இப்ரஹிம் அடெல்] அமெரிக்க அதிகாரிகளால் சீனாவிற்கு அதன் [அய்னாக்] பித்தளைச் சுரங்கத்தை அபிவிருத்திசெய்யும் உரிமைகளை கொடுப்பதற்கு 30 பில்லியன் டாலர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டினர். அந்த மந்திரி பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்…. அமெரிக்க அதிகாரிகள் இருப்புக்களை பெரிதும் நாடும் சீனா ஆப்கானிஸ்தானின் சுரங்கச் சொந்துக்கள் அபிவிருத்தியை ஆதிக்கத்திற்கு உட்படுத்த விரும்பும் என்றும் இது அமெரிக்காவிற்கு தொல்லை ஏற்படுத்தக்கூடும் என்றும் அஞ்சுகின்றனர்.” இத்தகைய அறிக்கைகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான உந்துதலின் பரந்த பூகோள-அரசியல் நலன்கள் சிலவற்றை தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் மூலப் பொருட்கள் மற்றும் குறைவூதியத் தொகுப்பை பெற்று அவற்றை போட்டியாளர்களுக்கு மறுக்கும் போராட்டத்தில் வாஷிங்டன் தனது முக்கியமான முன்னுரிமையை பயன்படுத்தவிரும்புகிறது: அதாவது களத்தில் அதன் போட்டியாளர்களைவிட இது அதிக துருப்புக்களைக் கொண்டுள்ளது.

இந்த பெப்ருவரி மாதம் இப்ரஹிம் அடெல் அய்னக் உரிமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபின், காபூல் மிகப் பெரிய ஹாஜிகாக் இரும்புச் சுரங்கத்திற்கான ஏலத்தை இரத்து செய்தது. “உலகின் இரு மிக அதிகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களின் இந்திய, சீன நிறுவனங்கள் இந்த ஹாஜிகாக் தாதுப்பொருட்களை தம்முடன் இணைத்திக்கொள்ள விரும்பின…. உலகின் முக்கிய இரும்புத் தாது அளிப்பவர்களான பிரேசிலின் ValeSA, லண்டனை தளமாக கொண்ட Rio Tinto Plc, ஆஸ்திரேலியாவின் BHP Billiton ஆகியவற்றுடன் உயரும் உலக விலைகளைக் கடக்கும் முயற்சியில் போராடியது” என்று Business Week விளக்கமளித்தது.

BHP Billiton, Rio Tinto, Vale ஆகியவை சமீப ஆண்டுகளில் ஏல விலையை உயர்த்துவதில் வெற்றி அடைந்ததால் இரும்புத் தாதுப் பொருட்களின் விலைகள் பெரிதும் உயர்ந்துவிட்டன. இரும்புத் தாதுப் பொருளின் முக்கிய இறக்குமதி நாடான சீனா முற்றிலும் இவை கொடுப்பதைத்தான் நம்பியுள்ளது. அவை ஒப்புமையில் ஏற்கத்தக்க விலை ஏற்றங்கள் பல ஆண்டுகள் இருந்தபின், இந்த வசந்த காலத்தில் இரும்புத் தாதுப் பொருட்களுக்கு 90-100 சதவிகித உயர்வைக் கோரின. ஜின்ஹுவா சீன எஃகு நிறுவனங்கள் கடந்த ஆண்டில் இருந்த, தொன் ஒன்றிற்கு 62 டாலர் என்பதுடன் ஒப்பிடும்போது 110 முதல் 120 டாலர் வரை இறக்குமதி செய்யப்படும் தொன் இரும்புக்கு கொடுப்பதாகத் தெரிவித்தது.

இரும்பு தாதுத் பொருள் சந்தை ஒன்றில்தான் ஆப்கானிய சுரங்கங்களின் கட்டுப்பாடு உறுதியாக இருக்கும் என்பதில்லை. டைம்ஸில் நேற்று வந்த கட்டுரை ஒன்று லாப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் (laptop, smartphone) மின்கலங்களுக்கு முக்கியமாக தேவைப்படும் லித்திய தாதுப் பொருட்களின் இருப்பு ஆப்கானிஸ்தானின் கஜனி மாநிலத்தில் மட்டும் பொலிவியாவுடன் போட்டிபோடக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. தற்பொழுது பொலிவியாதான் உலகிலேயே மிக அதிக லித்திய தாதுப் பொருட்களைக் கொண்டுள்ளது. ஒரு பென்டகன் உட்குறிப்பு ஆப்கானிஸ்தான் “லித்தியத்தின் சவுதி அரேபியா” என்று விளக்கியதை டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. அதாவது எண்ணெயை பொறுத்தவரை சவுதி இருப்பது போல், இந்நாடு உலகச் சந்தைகளின் விலையை நிர்ணயிக்கும் என்ற பொருளில்.

அமெரிக்கப் போர்கள் எப்படி ஒட்டுண்ணித்தன பெருநிறுவன, நிதிய நலன்களுக்கு இலாபங்களை கொடுக்கின்றன என்பது பற்றிய வெளிப்படையான விளக்கம் அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் மக்கள் சீற்றத்தை தூண்டிவிடும். இதன் விளைவாக டைம்ஸ் வாஷிங்டனுடைய ஆப்கானிய தாதுப்பொருள் செல்வத்தின்பால் உள்ள அக்கறையை, ஆப்கானிஸ்தானில் 2004ல் வந்திறங்கிய ஒரு சில தனிப்பட்ட அமெரிக்க புவியியல் வல்லுனர்கள் பணியின் விளைவு என்று முன்வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நூலகங்களில் “தற்செயலாக பல தொடர்ந்த ஆர்வத்திற்குரிய பழைய அட்டவணைகளைக் கண்டதில் இவர்கள் ஒரு “பழைய நேவி ஓரியன் P-3 விமானத்தை” -ஒருவேளை மறதியின் விளைவோ?- ஏற்பாடு செய்து, அதில் “நவீன ஈர்ப்பு, காந்த சக்தி உடைய அளக்கும் கருவிகளைப் பொருத்தினர்.” நாட்டின் 70 சதவிகிதப் பகுதி மீது பறந்தபின், அவர்கள் தாங்கள் “வியத்தகு முறையில்” தாதுப்பொருள் செல்வத்தைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டு, பின்னர் இன்னும் நவீனமான பிரிட்டிஷ் விமானத்தில் 2007ல் கூடுதல் ஆய்விற்காகத் திரும்பினர். அமெரிக்க அலுவலகங்களில் இரு ஆண்டுகளாக அவர்களுடைய பணியின் முடிவு “தூசி படிந்து இருந்தது.” என்று டைம்ஸ் கூறுகிறது.

உண்மையில் ஆப்கானிஸ்தானின் மீது படையெடுக்கும்போதே அமெரிக்க அரசாங்கம் பரந்த தாதுப்பொருட்கள் செழிப்பைக் கொண்ட ஒரு நாட்டின்மீது படையெடுக்கிறோம் என்பதை அது உணர்ந்திருந்தது. இவ்விஷயம் பற்றி டைம்ஸின் ஏமாற்றுத்தன விளக்கம் ஒருபுறம் இருந்தாலும், அது பற்றிய குறிப்புகள் புறநிலையாக அமெரிக்க, நேட்டோ அதிகாரிகள் போர் நீடித்துச் செல்லும்போதே, கவனமாக இந்த ஆய்வுகளை படித்து இந்த இருப்புக்களைப் பற்றி பல ஆண்டுகள் ஆவணமிட்டுள்ளனர் என்பதை காணலாம். டைம்ஸின் அபத்தமான விளக்கத்தை பொறுத்தவரை, அமெரிக்க ஆவணங்கள் வாஷிங்டன் நீண்ட காலமாகவே ஆப்கானிஸ்தானின் செழுமையை நன்கு அறிந்திருந்தது என்பதைக் காட்டுகின்றன.

1986ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் நாடுகள் பற்றிய அறிக்கையின் ''இயற்கை வளங்கள்'' என்ற முதல் அத்தியாயத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: இயற்கை எரிவாயு, நிலக்கரி, செப்பு, இரும்பு, குரோமைட், பேரைட்டுகள், நீலக்கல் படிமங்கள் போன்ற பரந்த இயற்கை வளங்கள் உள்ளன. பெற்றோலிய மற்றும் யூரேனிய வயல்கள் பற்றிய கண்டுபிடிப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WSWS ஆல் மேற்கோளிடப்பட்ட ஒரு 2002ம் ஆண்டு வெளிவிவகாரத்துறை அறிக்கை குறிப்பிடுவதாவது: “ஆப்கானிஸ்தான் இயற்கை செல்வக் கொழிப்பு நிறைந்தது. பரந்த இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், நிலக்கரி, பித்தணை, க்ரோமைட், டாக், பேரைட்டுக்கள், ஈயம், துத்தநாகம், இரும்புத் தாதுப்பொருள், உப்பு மற்றும் விலை உயர்ந்த, அதிக மதிப்புள்ள கற்கள் ஆகிவை அடங்கும்.” (பார்க்கவும்: “Oil and ‘conspiracy theories’: a reply to a liberal apologist for the US war in Afghanistan

அமெரிக்க அரசாங்கமும் டைம்ஸும் இதுவரை இந்த அறிவிப்பை வெளியிட அவகாசம் எடுத்துக்கொண்டது ஏன் என்ற வினாவை எழுப்புகிறது. இந்த திடீர் அறிவிப்பிற்கான காரணங்கள் என்ன?

டைம்ஸ் எழுதுகிறது: “அமெரிக்க, ஆபிரிக்க அதிகாரிகள் தாதுப்பொருட்கள் கண்டுபிடிப்பை ஆப்கானியப் போரின் ஒரு கடினமாக கணத்தில் விவாதிக்க ஒப்புக் கொண்டனர். ஆப்கானிய நகரமான மார்ஜாவில் எதிர்ப்பை அடக்குவதில் நேட்டோ இராணுவ நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததைக் குறிப்பிட்டு, அது, “ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து சில சாதகமான செய்திகளுக்கு ஏங்குகிறது” என்று சேர்த்துக் கொள்கிறது. வேறுவிதமாகக் கூறினால், நேட்டோ அரசாங்கங்கள் ஒரு செல்வாக்கற்ற போருக்கு தங்கள் மக்களை சமரசப்படுத்திக் கொள்ளுவதற்கு இதைப்பயன்படுத்தலாம் என்பதே “நல்ல செய்தியாகும்.”

அதே நேரத்தில் டைம்ஸ் இந்த அறிவிப்பு ஆக்கிரமிப்பு எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக கூடுதலான வன்முறைக்கு ஊக்கம் கொடுக்கும் என்று தான் நம்புவதையும் தெளிவுபடுத்துகிறது.

இக்கொள்கையை அதன் முக்கிய தலையங்கத்தில் நேற்று வெளியிட்டு, ஆப்கானிஸ்தானில் இன்னும் ஆக்கிரோஷமான கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் தலிபானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவது பற்றி வெறுப்படைந்தும், மற்றும் காந்தகார் நகரத்தின் மீதான தாக்குதலை இலையுதிர்காலம் வரை ஒத்திப்போடுவது என்னும் அமெரிக்கத் தளபதி ஸ்ரான்லி மக்கிறிஸ்டல் முடிவுடனும் திகைப்படைந்த விதத்தில் அது எழுதியது: “தலிபான் தலைவர்கள் எப்பொழுதேனும் சமரசத்திற்கு ஒப்புக்கொள்வார்களா என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் அதைப் பரிசீலிப்பர் என்பது நமக்கு உறுதியாகத் தெரிகிறது. ஜெனரல் மக்கிறிஸ்டல் காந்தகாரில் சிறப்பான பணி ஒன்றைச் செய்தாக வேண்டும். திரு.கர்சாய் தன்னுடைய போலித் தோற்றங்களை கைவிட்டு, போரிடுவதற்கு உறுதி கொள்ள வேண்டும்.”

கர்சாயியின் துருப்புக்களுக்கும் தலிபானுக்கும் இடையே தீவிரப் போர் என்ற நிலைப்பாட்டில் தாதுப்பொருள் பற்றிய அறிவிப்பு உதவும். டைம்ஸ் குறிப்பிடுவது போல், “புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தாதுப்பொருள் செல்வம் தலிபானை நாட்டின்மீது கட்டுப்பாட்டை மீட்பதற்கு இன்னும் கடுமையாக போரிட வழிவகை செய்யும்.” சுருங்கக் கூறின், இச்செய்தி இன்னும் கூடுதலாகக் குருதியைக் கொட்ட வைக்கும். இதைத்தான் டைம்ஸ் விரும்புகிறது. அது கர்சாயியை அமெரிக்க கோரிக்கைகளுக்கு இணங்க வைக்கும், உட்குறிப்பாக அவர் வெற்றி பெற்றால், சுரங்கப் பணத்தில் ஒரு பகுதி அவருக்குக் கொடுக்கப்படும் என்ற விதத்தில்.

இந்நிகழ்வுகள் அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதை தொடக்கிய செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்னரே உலக சோசலிச வலைத் தளத்தால் அமெரிக்க இராணுவத்தின் சமூகத் தன்மை பற்றிய திறனாய்வினை உறுதிபடுத்தப்பட்டிருந்தன.

1999 சேர்பியாவிற்கு எதிரான அமெரிக்க போருக்குப் பின், “After the Slaughter; Political Lessons of the Balkan war” என்னும் அறிக்கை இக்காலத்திய எழுச்சி பெறும் ஏகாதிபத்தியங்களின் மோதல்களை குறிப்பிடுகிறது. “பல ஏகாதிபத்திய நாடுகள் சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் தொடர்புடைய மூலோபாய நலன்களுக்கான போராட்டத்தை” முதல், இரண்டாம் உலகப் போர்களின் தொடக்கங்களை குறிப்பிட்டு, அது கூறியது:

“1980களின் இராரணுவ மோதல்கள் அதிகரித்துவருவது சர்வதேச கொந்தளிப்பு வருவதின் புறநிலை அடையாளம் ஆகும். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முன்பு தொடர்ச்சியான உள்ளூர் அல்லது பிராந்திய மோதல்கள் நிகழ்ந்தன. முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் செல்வாக்கை சோவியத் ஒன்றிய சரிவை ஒட்டி முதலாளித்துவ நுழைதலுக்கு பகுதிகளைத் திறக்க முற்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கு இடையே மோதல்கள் வருவதும் அதிகரிக்கும். பெரிய மோதல்கள் தவிர்க்க முடியாமல் காஸ்பியன், கவ்காசியப்பகுதிகளில் இருந்து கொள்ளை அடிக்கப்படும் எண்ணெய் பகிர்ந்து கொள்ளப்படுவது பற்றி வருவது உலக சக்தி, நிலைப்பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே வாழ்வா, சாவா பிரச்சினைகளாக இருக்கும். ஆனால் அவற்றின் தன்மையில் அத்தகைய பிரச்சினைகள் சமாதான முறையில் தீர்க்கப்பட முடியாதவை. ஏகாதிபத்தியத்தின் அடிப்படைப் போக்கு தவிர்க்க முடியாமல் ஒரு புதிய உலகப் போர்த் திசையின் பக்கம் இருக்கும்.”

சமீபத்திய டைம்ஸ் கட்டுரையில் இதே முரண்பாடுகள் இன்று பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளன. WSWS அறிக்கை முன்கூட்டிக் கணித்தது போல், உலகம் இப்பொழுது பெரும் சக்திகளுக்கு இடையே நேரடி மோதலுக்கு வெகுஅருகில் உள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளமை, முழு மத்தியகிழக்கு பகுதியும் மிகவும் எச்சரிக்கை மிக்க அபாயத்தில் உள்ளமை, அமெரிக்கா, இன்னும் பிற நாடுகளும், ஆசியாவில் எழுச்சி பெறும் சக்திகளும் மூலப் பொருட்கள், தொழிலாளர் தொகுப்பு மற்றும் சந்தைகளுக்காக உலகெங்கிலும் அடைவதற்கு போட்டியிடுவது சர்வதேச உறவுகளை ஸ்திரமற்றதாக்கியுள்ளன.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்

After the slaughter: political lessons of the Balkan War

Why is NATO at war with Yugoslavia? World power, oil and gold