சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China: Explosion at coal mine kills 48

சீனா: நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் 48 பேர் பலி

By Oliver Campbell
26 June 2010

Use this version to print | Send feedback

சீனாவின் ஹுனன் மாநிலத்தில் திங்களன்று ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு குறைந்தது 48 பேரைக் கொன்றதுடன், குறைந்தது 6 பேரைத் தீவிரக் காயத்திற்கும் உட்படுத்தியுள்ளது. இது பல சுரங்கச் சோக சம்பவங்களில் சமீபத்தியது ஆகும். சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வையே அச்சுறுத்தும் நிலைமைகளை இது அம்பலப்படுத்துகிறது.

இந்த வெடிப்பு வீடாங் மாவட்டத்தில், பிங்டிங்ஷான் நகரத்தில் உள்ள சட்டவிரோத, தனியார் ஒருவரின் உடைமையான ஜிங்டோங் 2ம் எண் சுரங்கத்தில் நடைபெற்றது. இந்த விபத்து சட்டவிரோதமாக வாங்கப்பட்ட வெடிமருந்துகள் சுரங்க நுழைவாயிலில் வைக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்தது எனத் தெரிகிறது. எவ்விதத்திலோ வெடிமருந்துகள் 76 சுரங்கத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, தற்செயலாக எரியூட்டப்பட்டன. தீக்காயங்கள் ஏற்பட்டதைத் தவிர, தொழிலாளர்கள் வெடிப்பினால் வெளிவந்த நச்சுப் புகைகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.

சுரங்க சொந்தக்காரர் லியு ஜியாங்குவோ கைது செய்யப்பட்டு சுரங்கத்தின் நிதியங்கள் முடக்கப்பட்டன. சீனாவின் மத்திய தொலைக்காட்சி கொடுத்த காட்சி, உறவினர்கள் எதிர்ப்புக்கள் எதையும் வெளிப்படுத்தாதவிதத்தில் துணை இராணுவப் பொலிஸார் சுரங்கத்தை மூடிவிட்டதைக் காட்டுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம்தான் பிங்டிங்ஷானில் ஒரு சுரங்க வெடிப்பு 76 பேரைக் கொன்றது. அப்பொழுது அதிகாரிகள் மக்கள் சீற்றத்தைத் தணிக்கும் வகையில், நகரத்தில் இருக்கும் 157 சுரங்கங்களின் பாதுகாப்பு பற்றி முக்கிய பரிசீலனைகள் நடக்கும் என்று அறிவித்தனர். திங்களன்று நிகழ்ந்துள்ள சோக சம்பவங்கள் பாதுகாப்புப் பிரச்சாரத்தின் ஏமாற்றுத் தன்மையை நிரூபிக்கின்றன. இதுவும் முன்னர் சீனா முழுவதும் நடந்த நிகழ்வுகளைப் போல் பொது உறவை ஏற்படுத்துவதற்காக கூறப்பட்டதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் கூற்றுப்படி சுரங்கத்தின் செயற்பாட்டு உரிமம் ஜூன் 6ம் தேதி முடிந்து, மாவட்ட அரசாங்கம் அடுத்த நாளே மின் வசதியையும் மூடிவிட்டது. அப்படி இருந்த போதிலும், சுரங்கம் தடையின்றி அதிகாரிகளுடைய கவனத்தின்பேரிலும், உடந்தையின் பேரிலும் செயல்பட்டுள்ளது. நுழைவாயிலைப் பாதுகாப்பாக மூடுவதற்குப் பதிலாள அது நகரக்கூடிய சிமென்ட் தளத்தால் மூடப்பட்டுவிட்டது.

அதிகாரிகள் உடந்தைத் தன்மை அப்பட்டமாக வந்துள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில், சட்டவிரோதமாக சுரங்கம் ஆன பின்னும், சுரங்கத்தில் 10 அரசாங்க மேற்பார்வையாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது தொடர்ந்தது.

உள்ளூர் அதிகாரிகள் மிக அதிகம் இதில் ஈடுபட்டுள்ளது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் விடையிறுப்பைத் தூண்டியுள்ளது. பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் வறிய கிராமப்புறத்தில் இருந்து குடியேறியவர்கள் என்பதால் சீனாவில் சுரங்க விபத்துக்கள் கொந்தளிப்பு பிரச்சினை ஆகும். தொடர்ச்சியான இறப்பு எண்ணிக்கை சுரங்கம் இன்னும் பிற தொழில்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் (CCP) நடைபெற்றுவரும் மிருகத்தன முதலாளித்துவச் சுரண்டலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உத்தியோகபூர்வ China Daily தகவலின்படி, பிங்டிங்ஷான் உள்ளூராட்சி நான்கு உள்ளூர் அதிகாரிகள் மீது பேரழிவிற்கு குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் உடனடியாகப் பதவியில் இருந்து CCP மற்றும் அரசாங்கத்தில் இருந்து திங்கள் பிற்பகல் நீக்கப்பட்டனர். இதில் மிக உயர் பதவியை வகித்தவர் மாவட்ட ஆட்சியின் தலைவரான யுன் ஜியான்ஜுன் ஆவார்.

இதைத்தவிர, ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபாவும் பகிரங்கமாக மீட்புப் பணியாளர்களை வெடிப்பை ஒட்டி உள்ளே அகப்பட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சியையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். உத்தியோகபூர்வ செய்தி ஊடகத் தகவல்களின்படி, மாநிலத்தின் நிலக்கரிச் சுரங்க பாதுகாப்பு நிர்வாகத்தின் தலைவரான ஜாவோ டீச்சுய் மற்றும் மாநில பணிப் பாதுகாப்புக் குழுவின் தலைவரான லுவோ லின்னும் பிங்டிங்ஷான் நகரத்திற்கு மீட்பு நடவடிக்களை கண்காணிக்க உடனடியாகப் பயணித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா, லுவா “அடிமட்டத்தில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதை விபத்து காட்டுகிறது. சில கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுரங்கச் சொந்தக்காரர்களுடன் நெருக்கமாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறியதாக தெரிவித்துள்ளது.

அவருடைய கருத்துக்களும் நான்கு பேர் பணி நீக்கமும் தனிப்பட்ட உள்ளூர் அதிகாரிகளை பலிகடாக்களாக்கி, கூடுதலான உற்பத்தி இலாபத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் அரசாங்கத்தின் அனைத்து மட்ட அமைப்புக்கள் பற்றி இன்னும் திறானாயும் விதத்தில் ஆய்வு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சி தான். இதேபோன்ற போலித்தனம் தான் ஒவ்வொரு பெரிய சுரங்கப் பேரழிவின் போது ஏற்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி, 2,631 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு சீனாவில் இறந்து விட்டனர். இது சராசரியாக நாள் ஒன்றிற்கு 6 இறப்புக்கள் என்று ஆகிறது. இந்த எண்ணிக்கை சச்சரவிற்கு உட்பட்டது. ஏனெனில் சுயாதீன தொழிலாளர் அமைப்புக்கள் பல விபத்துக்கள் மூடி மறைக்கப்படுவதாகக் கூறுகின்றன. இந்த ஆண்டு முதல் கால் பகுதியில் சுரங்க இறப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்தது, போன ஆண்டு இதே காலத்தில் இருந்த 509 உடன் இந்த ஆண்டின் 592 இறப்புக்கள் ஒப்பிடத்தக்கவை.

கடந்த மாதம் தொடர்ச்சியான பெரும் விபத்துக்கள் ஏற்பட்டன. மே 14ம் திகதி குந்ஜௌ மாநிலச் சுரங்கம் ஒன்றில் நடந்த விபத்து 20 தொழிலாளர்களுக்கும் மேலாகப் பலியானார்கள். இதைத் தொடர்ந்து மே18ம் திகதி ஷான்ஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பின் விளைவாக 10 தொழிலாளர்கள் இறந்தனர். மே 30 அன்று மத்திய சீனா சுரங்கம் ஒன்றில் நடைபெற்ற மற்றொரு விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

பெரும்பாலான இறப்புக்கள் சிறிய, பல நேரமும் சட்டவிரோத தனியார் சுரங்கங்களில் நடைபெற்றிருக்கையில், பெரிய தனியார் அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான சுரங்கங்களில் உள்ள தொழிலாளர்களும் இதே போன்ற ஆபத்தை எதிர்கொள்கின்றனர். ஜூன் 18ம் தேதி ஷாங்காயில் பட்டியலிடப்பட்டுள்ள Pingdingshqn Tianan Coan Mining Company என்று திங்களன்று விபத்து நடந்த அதே நகரத்தில் உள்ள அமைப்பின் அறிக்கை ஒன்று அதன் சுரங்கங்கள் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு ஐந்து தொழிலாளர்களை கொன்று 3 பேரைக் காணமற் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கிறது.

அதிகாரிகள் சுரங்கங்களில் உள்ள பாதுகாப்பு நிலைமைகளை முன்னேற்றுவிக்க விருப்பம் காட்டாதது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சீனப் பொருளாதாரம் எரிபொருளுக்கு முக்கிய ஆதாரமாக நிலக்கரியைக் கொண்டிருப்பதுடன் இது இணைந்துள்ளது. மற்றும் இத்துறையில் இலாபங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதுடனும் இணைந்துள்ளது. தேசியப் புள்ளிவிவர அலுவலகத்தின் தகவலின்படி, ஆண்டுக் கணக்கில் முதல் காலாண்டில் நிலக்கரி உற்பத்தி 28.1 சதவிகிதம் உயர்ந்து, மொத்த உற்பத்தி 751 டன்கள் என்று இருந்தது.

திங்கள் அன்று ஜிங்டாங் எண் 2 சுரங்கத்தில் நடைபெற்ற பேரழிவு பாதுகாப்பின் இழப்பில் அதிக உற்பத்திக்கான உந்துதலை விளக்குகிறது. அரசாங்கப் பணிப் பாதுகாப்புத் துறைக் கருத்துப்படி, இச்சுரங்கம் தொழில்நுட்ப உயர் நிலையைக் கொண்டு ஆண்டு உற்பத்தியை 60,000 டன்களில் இருந்து 90,000 டன்கள் என உயர்த்தும் விதத்தில் செயல்பட்டது. சில செய்தி ஊடகத் தகவல்களின்படி இதே போன்ற விபத்து இதே சுரங்கத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் அத்தகவல் பிங்டிங்ஷானின் துணை மேயர் லி ஜியான்வீயால் மறுக்கப்பட்டு விட்டது.

மார்ச் மாதம் ஷான்க்சியில் ஒரு பெரிய விபத்து, சுரங்கத்தில் வெள்ளம் புகுந்து 153 தொழிலாளர்களை பொறியில் அகப்பட்டதைப்போல் வைத்தபோது, அதிகாரிகள் மீண்டும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அதே நேரத்தில், ஜாவோ தீச்சுயி, மாநில சுரங்கப் பாதுகாப்பு நிர்வாகத்தின் தலைவர், சுரங்கப் பாதுகாப்பில் “அடிப்படை முன்னேற்றத்திற்கு” இன்னும் 10 ஆண்டுகளாவது பிடிக்கும் என்றார்.

வேறுவிதமாகக் கூறினால், சுரங்கப் பேரழிவுகளும், அவற்றை ஏற்படுத்தும் இழிவான பாதுகாப்பு நிலைமைகளும் இன்னும் பல காலம் தொடரும் என்றும் தொழிலாளர்கள் எளிதில் பணயம் வைக்கக் கூடிய பொருள் போல் தான் நடத்தப்படுவர் என்பதுதான் அதன் பொருள்.