சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

G20 summit: Leaders try to paper over differences

G20 உச்சிமாநாடு: தலைவர்கள் வேறுபாடுகளைப் பூசி மெழுகுகின்றனர்

By Nick Beams
28 June 2010

Use this version to print | Send feedback

டோரோன்டோவில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற G20 குழுவின் உச்சிமாநாட்டில் உலகின் முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்கள் தொடர்ச்சியான பல முக்கிய பிரச்சினைகளில் தங்கள் கருத்து வேறுபாடுகளை பூசி மெழுக முற்பட்டனர்.

உச்சிமாநாட்டிற்கு முன்பு ஜேர்மனியையும் மற்ற ஐரோப்பிய சக்திகளையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்திருந்த, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நிதிய ஊக்கப் பொதி என்ற முக்கியமான பிரச்சினையில் G20 அறிக்கையானது பற்றாக்குறை, கடன் குறைப்புக் கொள்கையில் ஒரு மாற்றத்திற்கு அழைப்பு விடுத்ததுள்ளபோதும், இச்செயற்பட்டியல் “தேசிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளப்படலாம்” என்று சேர்த்துக் கொண்டது.

மே மாதம் யூரோப் பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து, ஜேர்மன் அரசாங்கம் நிதியக் கொந்தளிப்பின் விளைவாக அரசாங்கங்கள் பற்றாக்குறைகளையும் கடனையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மறுபுறத்தில் அமெரிக்காவோ சிக்கன நடவடிக்கைகள் குறைந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும், ஏன் ஐரோப்பாவில் மந்தநிலை கூட ஏற்படலாம், அதையொட்டி அமெரிக்க ஏற்றுமதிச் சந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில், அரசாங்கச் செலவுகள் விரைவில் குறைக்கப்படுவது பூகோள “மீட்பிற்கு” அச்சுறுத்தலைக் கொடுக்கலாம் என்று எச்சரித்தது.

அறிக்கையானது அரசாங்கங்கள் தங்கள் வரவு-செலவு திட்டப் பற்றாக்குறைகளை 2013க்குள் பாதியாகக் குறைத்துவிட வேண்டும் என்றும், தேசியக் கடனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனான விகிதம் 2016க்குள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. இது வரவு-செலவு திட்டப் பற்றாக்குறைக்கு ஆதரவு கொடுக்கும் ஜேர்மனி, பிற நாடுகளுக்கு ஒரு வெற்றி என்று காணப்படுகிறது. ஆனால் இந்த இலக்குகள் கட்டுப்படுத்தும் தன்மை அற்றவை என்பதை ஆவணம் தெளிவாக்கியுதுடன் அமெரிக்காவிற்கு சலுகை கொடுக்கும் விதத்தில் அரசாங்கங்கள் “வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிதிய ஒருங்கிணைப்புத் திட்டத்தை” பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.

தெருவின் இரு புறத்திலுள்ளவர்கள் நடக்கும் விதத்தில், அறிக்கை அறிவித்தது; “ஒரே நேரத்தில் பல முக்கிய பொருளாதாரங்களிலும் ஏற்படும் நிதிய சரிபார்த்தல் மீட்பை பாதகமாக்கக்கூடும். மேலும் எங்கு தேவையோ அங்கு ஒருங்கிணைப்பை செயல்படுத்துவது தோல்வியுறுவது நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வளர்ச்சியை தடைக்குட்படுத்தக்கூடும்”.

மற்ற தீவிர கருத்து வேறுபாடுகளும் களையாமல் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டன. வங்கிகள் தங்கள் மூலதன இருப்புக்களை வருங்கால நிதியக் கொந்தளிப்பை எதிர்கொள்ள அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்ட விதிகள் அறிமுகமும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பூசல்கள் இருப்பதால் ஒத்தி வைக்கப்பட்டது.

தன் பெரிய வங்கிகளை தொடர்ச்சியான இணைப்புக்கள், அரசாங்க நிதி மூலம் பிணை எடுப்புக்கள் கொடுத்து வலுப்படுத்தி, ஒருங்கிணைத்த விதத்தில், அமெரிக்கா புதிய விதிகளை 2012 ஐ ஒட்டி செயல்படுத்தப்படலாம் என்று கூறுகிறது. ஆனால் வங்கிகள் நிதிய நெருக்கடியினாலும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய பயனற்ற சொத்துக்களாலும் பெரும் நலிவுற்று இருக்கையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்த வழிவகை மெதுவாகச் செயல்படுத்தப்படலாம் என்று விரும்புகின்றன. புதிய விதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டால், வலுவான அமெரிக்க வங்கிகளானது ஐரோப்பிய சந்தைகளில் இன்னும் அதிகமாக ஊடுருவும் என்று அவை கவலைப்படுகின்றன. இதன் விளைவாக ஐரோப்பிய அரசாங்கங்கள் தாமதப்படுத்துவதற்காக எந்தச் சொத்துக்கள் வங்கிகளின் மூலதனத்தை நிர்ணயிப்பதில் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி கருத்து வேறுபாடுகளை எழுப்பியுள்ளன.

G20 அறிக்கையானது இப்பூசலைத் தீர்க்காமல் கடக்கும் விதத்தில் 2012க்குள் புதிய விதிகள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முந்தைய இலக்கு ஒரு “நோக்கம் தான்” என்று அறிவித்தது. “அனைத்து உறுப்பினர்களும் புதிய தரங்களை ஏற்க வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடுதான், ஆனால் இவை தொடர்ந்த மீட்பு மற்றும் குறைந்த சந்தைத் தடை இவற்றுடன் இயைந்த ஒரு கால அட்டவணைப்படி படிப்படியாக கொண்டுவரப்பட வேண்டும்” என்று அறிக்கை கூறியுள்ளது.

ஜேர்மனியும் மற்ற ஐரோப்பிய சக்திகளும் பிணை எடுப்புச் செலவுகளுக்காக ஒரு வங்கி வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டம் தகர்க்கப்பட்டு விட்டது. நிதியத் துறை “நியாயமான, கணிசமான” அளிப்புக்களை அரசாங்கத் தலையீடுகளுக்கு கொடுப்பதற்கு ஆதரவை அறிவிப்பு தெரிவித்தது என்றாலும், “சில நாடுகள் ஒரு நிதிய விதிப்பை தொடர்கின்றன. மற்ற நாடுகள் மாற்று அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன” என்று கூறியது. வரித்திட்டத்தை பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு அதிகாரி கிளி ஒன்றும் தூங்கிக் கொண்டிருக்கவில்லை, அது உண்மையாகவே இறந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, G8 தலைவர்கள் கூட்டம் ஒன்றும் குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதாரப் பிரச்சினையில் பெரும் சக்திகள் உடன்பாடு காண முடியாத தன்மையைத்தான் உயர்த்திக் காட்டியது. டோஹா வணிகப் பேச்சுக்கள் சுற்று முடிக்கப்பட வேண்டும் என்ற குறிப்புக்கள் அனைத்தும் வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் நடைபெற்ற G8 கூட்ட அறிக்கையில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. 2001ல் தொடங்கிய வணிகச் சுற்று இரு ஆண்டுகளாக நின்றுவிட்டன, முன்னேற்றத்திற்கான அடையாளமும் தெரியவில்லை.

டோஹா பேச்சுக்கள் பற்றிய உடன்பாட்டிற்கு அடையாளம் இல்லாத நிலையில், G8 அறிக்கையானது முதல் தடவையாக இரு நாடுகள் ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசியது: “பாதுகாப்பு வரி அழுத்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எதிர்ப்போம், உலக வர்த்தக அமைப்பு (WTO) இன் கீழ் வணிகம், முதலீடு ஆகியவை தாராளமயமாக்கப்படுதல், தேசியத் தடைகள் குறைப்பு மூலமும் இருதரப்பு, பிராந்தியப் பேச்சுவார்த்தைகள் மூலமும் செழிக்கத் தொடர்ந்து பாடுபடுவோம்.”

இவ்விதத்தில் இருதரப்பு, பிராந்திய ஒப்பந்தங்கள் பற்றிய குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் சர்வதேச வணிக வல்லுனர்கள் பொதுவாக அத்தகைய உடன்பாடுகள் வணிக முகாம்கள் அமைக்கப்படும் ஆபத்தைக் கொண்டுள்ளன, அது உலகச் சந்தைக்கு சிதைவு ஏற்படுத்தும் என்று கருதுகின்றனர்.

G20 நிதிய ஒருங்கிணைப்புப் பற்றிய தீர்மானம் வேறுபாடுகள் அதிகமாகியுள்ள நிலையிலும், அனைத்துத் தரப்பினரும் வெற்றி என்று கூறிக்கொள்ள அனுமதித்தது. ஜேர்மனிய சான்ஸ்லரான அங்கேலா மேர்க்கெல் “நான் எதிர்பார்த்ததைவிட” விளைவு அதிகமாக உள்ளது என்றார். ஐரோப்பிய கண்டத்தின் கருத்து வெற்றி பெற்றது என்று அவர் கூறினார். ஜேர்மனிய அதிகாரிகள் பிறர் நிலைப்பாடுகளை மாற்றுவது பற்றி அமெரிக்கா பகிரங்கக் கடிதங்கள் எழுதுவது பற்றிய படிப்பினையை அறிந்து கொண்டுவிட்டது என்று குறிப்பிட்டனர். G20 ல் பங்கு பெறுபவர்களுக்கு ஒபாமா ஒரு கடிதம் எழுதி விரைவான நிதியக் கட்டுப்பாடு உலகப் பொருளாதார மீட்பை அது தடைக்கு உட்படுத்தக்கூடும் என்று எச்சரித்திருந்தார். முந்தைய G20 உடன்பாடுகள் ஏற்றுமதி உபரி இருக்கும் நாடுகள்-ஜேர்மனிக்கும் சீனாவிற்கும் ஒரு குறிப்பு-உள்நாட்டுத் தேவையை அதிகரிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் அட்லான்டிக் கடந்த சொற் போர்களைத் தூண்டியது. பொது நபர்கள், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற போல் க்ரூக்மன் போன்றோர் விவாதத்தில் ஈடுபட்டு ஜேர்மனிய கொள்கைகள் கூடுதலான வேலையின்மைக்கு வகை செய்யக்கூடும் என்று எச்சரித்தனர். ஜேர்மனிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் பற்றாக்குறைக் குறைப்புத்தான் யூரோப்பகுதி நிதிய நெருக்கடியை ஒட்டி முக்கிய தேவை என்று வலியுறுத்தினார்.

ஜூன் 23 அன்று பைனான்சியல் டைம்ஸில் வெளிவந்த கட்டுரை ஒன்றில், ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிள மேர்க்கேல் அரசாங்கத்தின் பற்றாக்குறைக் குறைப்புத் திட்டத்தைப் பாதுகாத்தார்-இதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளில் 80 பில்லியன் யூரோ குறைப்புக்கள் ஏற்படும். இது நம் மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நம் அரசாங்கம் தற்போதைய நிலையைச் சமாளிக்க நம்பிக்கைக்கு ஊக்கம் கொடுப்பதற்கு தேவை” என்றார்.

சிக்கன நடவடிக்கைகளானது வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளின் ஆணைகளுக்கு நேரடி விடையிறுப்பு என்பதைத் தெளிவுபடுத்திய அவர் முடிவுரையாகக் கூறினார்: “இந்த நம்பிக்கை இல்லாவிட்டால், நீடித்த வளர்ச்சி இருக்க முடியாது. சமீபத்திய நெருக்கடியின் படிப்பினை இது. இதில் தான் நிதியச் சந்தைகைகள் மிக அதிக வரவு-செலவு திட்டப் பற்றாக்குறைகளுக்கு குழப்பமற்று விடையிறுப்பாகக் காட்டி, நமக்கும் நம்முடைய ஐரோப்பிய பங்காளிகள் இன்னும் பிறருக்கும் கூறுகின்றனர்.”

இதற்கு மறுநாள் பைனான்சியல் டைம்ஸ் பில்லியனர் நிதியாளரான ஜோர்ஜ் சோரஸ் சிக்கன நடவடிக்கைகள் மூலம் வரக்கூடிய விளைவுகள் பற்றி எச்சரித்தார். “யூரோப் பகுதி மீது சுமத்தப்படும் இக்கொள்கைகள் நேரடியாக 1930 களின் மந்த நிலையில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பனைகளை முரண்படுத்துகின்றன. மேலும் ஐரோப்பாவை ஒரு நீடித்த தேக்கம் அதையும் விட மோசமான நிலைக்குத் தள்ளும் ஆபத்தையும் கொண்டுள்ளது. அதையொட்டி மேலும் அதிருப்தியும் சமூக அமைதியின்மையும் ஏற்படும். ஒரு மோசமான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கம் அடையலாம் அல்லது இனவெறி, அதி தீவிர தேசியவாதம் என்பதால் அழிக்கப்பட்டுவிடலாம்.”

ஜூன் 25 அன்று வெளியிட்ட பூசலைப் பற்றிய தலையங்கத்தில் பைனான்சியன் டைம்ஸ், முடிவுரையாகக் கூறியது: “இன்னும் கூடுதலான G20 ஒற்றுமை இல்லாவிடின், உலக அரசியல் விரைவில் பகைமை உணர்வு என்பதற்குப் பதிலாக சிறிய விடயங்களுக்கு சண்டைகளில் இறங்கிவிடும்.”

ஆனால் கூடுதலான ஒற்றுமைத் தன்மைக்குப் பதிலாக, டோரோன்டோ உச்சிமாநாடு, அறிக்கை எழுதியவர்களின் சிறந்த முயற்சி இருந்தபோதிலும், முக்கிய முதலாளித்துவ சக்திகளிடையே உள்ள பெருகிய வேறுபாடுகளைத்தான் உயர்த்திக் காட்டியது.