World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Brown defends Iraq war at Chilcot Inquiry

பிரிட்டன்: சில்கோட் விசாரணையில் ஈராக்கிய போரை முழுமையாக ஆதரித்து பிரெளன் சாட்சியம்

By Robert Stevens
8 March 2010

Use this version to print | Send feedback

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் வெள்ளியன்று ஈராக் போர் பற்றிய சில்கோட் விசாரணைக்குழு முன் தோன்றி, ஒரு மாதம் முன்பு முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர் செய்ததைப் போலவே ஈராக் தலைமையிலான அமெரிக்க போருக்கு முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

படையெடுப்பில் இருந்து "படிப்பினைகளை கற்றுக் கொள்ள" என்ற குறைந்த வரம்பிற்கு உட்பட்ட விதத்தில் கடந்த ஜூன் மாதம் ஈராக் பற்றிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது--இன்னும் குறிப்பாக ஒரு "விரைவான" எளிதான போர் என்ற முதல் திட்டங்கள் ஏன் வெறுக்கத்தக்க முறையில் தோல்வியுற்றன என்பதை அறிவதற்கு. பிரமாணத்தின் கீழ் சாட்சிகள் பதில் அளிக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டதுடன் நீதிமன்ற முறையைப் போல் எவரும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவும் இல்லை.

ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதைவிட, விசாரணைக்குழு உறுப்பினர்கள் தலைவர் சேர் ஜோன் சில்கோட் மற்றும் சேர் லோரன்ஸ் ப்ரீட்மன், சேர் மார்ட்டின் கில்பெர்ட், சேர் ரோட்ரிக் லின் மற்றும் சீமாட்டி உஷா பிரஷார் ஆகியோர் பிரெளனினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எவருக்கும் சட்டப் பயிற்சியோ, அனுபவமோ கிடையாது. சட்ட ஆலோசனைக்குட்பட்டும் அவர்கள் விசாரணையை நடத்தவில்லை. குழு உறுப்பினர்களில் ஒருவரான வரலாற்றாளர் கில்பெர்ட் 2004-ல் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்திருந்து, இந்தப் பேரின் சிற்பிகளான பிளேயரையும் அப்பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இருவரையும் பெரிதும் பாராட்டியிருந்தார்.

ஆரம்பத்தில் பிரெளன், விசாரணை பொதுமக்கள் கலந்துகொள்ளமால் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆனால் பொதுமக்கள் கூச்சலும் செய்தி ஊடகத்தில் பரபரப்பும் இக்கருத்தை மாற்றின. ஆனால் சில சாட்சியங்கள் இப்பொழுதும் இரகசியமாகத்தான் உள்ளன.

படையெடுப்பின்போது பிளேயர் அரசாங்கத்தில் சான்ஸ்லர் என்ற பதவியில் இருந்ததற்காக பிரெளன் சாட்சியம் கூற அழைக்கப்பட்டிருந்தார். போரைப் பற்றி அவர் தனிப்பட்ட தயக்கங்களை கொண்டிருந்தார் என்று செய்தி ஊடகம் நீண்ட காலமாகக் கூறிவந்தது. இவர் சாட்சியம் கொடுப்பதற்கு முன்பு செய்தி ஊடகக் கருத்தில் எந்த அளவிற்கு ஆளும் வட்டாரங்களில் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பேரழிவு என்று பெருகிய முறையில் கருதப்படும் போரில் இருந்தும், பிளேயரிடம் இருந்தும் பிரெளன் விலகி இருக்க முற்படுவார் என்பதைப் பற்றிய ஒன்றுகுவிப்பை காட்டியிருந்தது.

செய்தி ஊடகத்தின் பெரும் பகுதிகள் மூத்த முன்னாள் இராணுவ நபர்கள், சான்ஸ்லர் பிரெளன் தேவையான நிதியை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களை நடத்த ஒதுக்கவில்லை என்ற கூற்றுக்கள் பற்றி கவனம் செலுத்தி இருந்தன. ஆனால் இக்கூற்றுக்கள் பெரும்பாலும் பிரெளனை போர்க்களத்தில் உள்ள "நம் துருப்புகளை காட்டிக் கொடுத்தவர்" என்று காட்டும் விதத்தில் சித்தரிக்கப்பட்ட வடிவமைப்பை பழமைவாத கட்சி கொண்டிருந்தன. பிரெளன் சாட்சியம் கொடுத்த அன்று 1997-ல் இருந்து 2001 வரை இராணுவத்தின் தலைவராக இருந்த தளபதி குதெரி பிரபு Daily Telegraph இடம் கூறினார். இராணுவம் கேட்ட விதத்தில் அதற்கு முழுமையாகப் பணம் கொடுக்காதவிதம் ...சந்தேகத்திற்கு இடமின்றி துருப்புகளின் உயிரிழப்பிற்கு வகை செய்தது. ஏன் பாதுகாப்பு பற்றி அவர் பரிவு இன்றியும் பிற துறைகள் பற்றிப் பெரிதும் பரிவையும் காட்டினார் என்று அவர் கேட்கப்பட வேண்டும்."

தன்னுடைய சாட்சியத்தில் பிரெளன் கூடுதலாகவே முயற்சி எடுத்து தான் போருக்கு முற்றிலும் ஆதரவாக இல்லை என்ற கருத்தை உதறும் வகையில் பேசினார். ஈராக் மீதான படையெடுப்பு "சரியான காரணங்களுக்காக எடுக்கப்பட்ட சரியான முடிவு" என்றார் அவர். மேலும் முன்னைய பிரதம மந்திரியை அவர் பாராட்டி போருக்கு முன் வரை அவரின் பங்கைப் பற்றி "அக்காலக்கட்டத்தில் திரு பிளேயர் செய்தவை அனைத்தையும், அவர் சரியாகவே செய்தார்." என்று கூறினார்.

பாசாங்குத்தனத்தை அப்பட்டமாகக் காட்டும் வகையில் பிரெளன் ஈராக்கை சர்வதேச சட்டத்தை "தொடர்ச்சியாக மீறும் நாடு" என்று கண்டித்தார். படையெடுப்பை தொடங்கிய நேரத்தில் முன்னாள் ஈராக்கிய தலைவர் சதாம் ஹுசனை "சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும்" என்று வலியுறுத்துவது இயலாமற் போய்விட்டது என்றார். அந்த நேரத்தில் ஈராக் "ஒரு ஆக்கிரமிப்பு நாடு, சர்வதேச சமூகத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுக்கும் நாடு" என்று அவர் விவரித்தார்.

நவம்பர் 2002, பாதுகாப்பு சபை தீர்மானம் 1441 ஐ குறிப்பிட்ட அவர் ஈராக் வைத்திருந்ததாக கூறப்பட்ட "பேரழிவு ஆயுதங்கள்" பற்றிய "தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.", ஆனால் "அவ்வாறு நடைபெறவில்லை" என்றார். மற்றொரு சந்தர்ப்பத்தில் பிரெளன் ஈராக்கிய தலைவர் சதாம் ஹுசைன் "அவருடைய ஆயுதங்களை களைவது ஒருபுறம் இருக்க அதைப் பற்றிக்கூட" 1441 தீர்மானத்திற்கு பின்னரும் தெரிவிக்கவில்லை என்றார்.

இக்கூற்றுக்கள் அனைத்துமே உண்மையை தலைகீழாக கூறுதல் ஆகும். "ஆக்கிரமிப்பு நாடு" என்ற சொற்றொடர் ஈராக்கை பற்றி விளக்காமல் அமெரிக்கா மேலும் அதை ஆதரித்த இங்கிலாந்து ஆகியவற்றிற்குத்தான் பொருந்தும்.

மார்ச் 2003-ஐ ஒட்டி ஈராக் ஒரு பாதுகாப்பற்ற, வறிய நாடாக, பல ஆண்டுகள் பொருளாதார தடைகளால் அழிவிற்கு உட்பட்ட நிலையில் இருந்தது. ஈராக்கில் ஒன்றும் "பேரழிவு ஆயுதங்கள்" இல்லை, சர்வதேச சட்டம் மற்றும் பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் பல மில்லியன் மக்களின் எதிர்ப்பை முற்றிலும் மீறிய அமெரிக்க தலைமையிலான ஒரு ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பொய்கள் ஆகும். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஈராக்கிய மக்களும், கிட்டத்ட்ட 4,600 அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சிப்பாய்களும் இதன் விளைவாகக் கொல்லப்பட்டனர்.

முன்னைய தொழிற்கட்சி அரசாங்க மந்திரிகள் சில்கோட் விசாரணையில் சாட்சியம் அளித்ததை போலவே, பிரெளனும் "ராஐதந்திர முறைத் தீர்வை" தளமாகக் கொண்ட சமாதான முறைத் தீர்வை அடையவும் போரைத் தவிர்க்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிதும் முயன்றது என்ற தோற்றத்தை அளித்தார். "கடைசி நிமிஷம் வரை, கடைசி வாரம் வரை, எங்களில் பலரும் ராஐதந்திர வழிவகை வெற்றி அடையும் என்றுதான் நம்பியிருந்தாம்" என்றார் அவர்.

இத்தகைய கூற்றுக்கள் போரின் சட்ட நெறிக்கு அவர் கொடுத்த விடையிறுப்புக்கள் மூலம் குறைமதிப்பிற்கு உட்பட்டன. அப்பொழுது தலைமை அரசாங்க வக்கீலாக இருந்த கோல்ட்ஸ்மித் பிரபு அவரிடம் போர் சட்டபூர்வமென வலியுறுத்திய ஆலோசனையைக் கூறினார் என்றார். முன்னதாக தலைமை வக்கீல் போரின் சட்டத்தன்மையை வினாவிற்கு உட்படுத்திய ஆவணத்தை அவர் பார்த்திருந்தால், அப்படியும் போரை ஆதரித்திருப்பாரா என்று வினவப்பட்டதற்கு பிரெளன் ஆம் என்று கூறினார்.

சட்டவிரோதமாக இருக்கும் என்று தெரிந்திருந்தாலும் அதைத் தான் ஆதரித்திருப்பேன் என்று உறுதியாகக் கூறிய விதத்தில் பிரெளன் ஈராக் போருக்கு முன்பு இருந்த தயாரிப்புக்களில் அருகே வெறுமே நின்றிருக்காமல் பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கம் இந்தக் கொடிய போர்க் குற்றத்தை தயாரித்ததிலும் தூண்டிவிட்டதிலும் கூட்டுப் பொறுப்பை அமெரிக்காவுடன் கொண்டுள்ளது என்பதை பிரெளன் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இதற்கு கூடுதலான உறுதிப்படுத்தலானது பிரெளன் சாட்சியம் அளித்ததற்கு மூன்று நாட்களுக்கு முன்பு Independent-TM வந்த தகவலில் இருந்தது. 2000-ம் ஆண்டில் "ஈராக்: வருங்கால மூலோபாயம்" என்ற தலைப்பில் வெளியுறவு அலுவலகம் தயாரித்திருந்த இரகசிய ஆவணத்தை பற்றிக் கருத்துக் கூறுகையில், Independnet கூறியது: "ஈராக் படையெடுப்பு இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே அரசாங்கத்திற்குள் விவாதிக்கப்பட்டது--வெளியுறவு அலுவலக உயர் அதிகாரிகள் படையெடுப்பு சட்டவிரோதமாக இருக்கும், "கணிசமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தும், ஈராக்கை சிதைக்கவும் கூடும்" என்று எச்சரித்திருந்தனர். இந்த ஆவணம் அப்பொழுது மத்திய கிழக்கு கொள்கைக்கு வெளியுறவு அலுவலகத்தில் தலைவராக இருந்த சேர் வில்லியம் பாடேயின் உத்தரவில் தயாரிக்கப்பட்டது.

"ஆட்சி மாற்றத்தால்" ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி எச்சரிக்கும் விதத்தில், "அத்தகைய கொள்கை பயனுடைய சர்வதேச ஆதரவைப் பெறாது. வெளிப்படையான முயற்சி வெற்றி பெறுவதற்கு மகத்தான இராணுவ முயற்சி வேண்டும். அதில் தரை மூலம் படையெடுப்பும் இருக்க வேண்டும். இதில் கணிசமான உயிரிழப்புக்கள் இருக்கும், கடைசி நேரத்தில் எதிர்ப்பு, மீறல் என்ற சதாமின் நடவடிக்கைகளும் இருக்கலாம்." என்று அது கூறியது.

அத்தகைய நடவடிக்கையின் சட்டபூர்வத் தன்மை பற்றி கூறிய ஆவணம், "அதுவும் சட்டவிரோதம்தான். ஆனால் மறுபுறத்தில் இரகசிய நடடிக்கைகள் வெற்றிபெறாமல் போய் ஈராக்கை துண்டாடும் ஆபத்தைக் கொண்டுள்ளது. அது அப்பகுதியில் நம்முடைய பரந்த நலன்களுக்கு முற்றிலும் எதிரானது." என்று தெரிவிக்கிறது.

ஒரு திருத்தப்பட்ட வடிவத்தில் இந்த அறிக்கையை Independent வெளியுறவு அமைச்சரகத்தில் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் முதலில் கேட்கப்பட்டது மறுக்கப்பட்டதற்குப் பின்னர் பெற்றது. "வெளியுறவு அலுவலகம் இறுதியில் திருத்தப்பட்ட வடிவத்தை வெளியிட ஒப்புக் கொண்டது--அமெரிக்கா இன்னும் பல நாடுகளின் கருத்துக்கள் இதில் இருட்டடிக்கப்பட்டன. The Independent ஆரம்பத்தில் ஒரு உட்பரிசீலனையை கோரியிருந்தது." இருட்டடிக்கப்பட்ட பிரிவுகள் ஒன்றில் "ஆட்சி அகற்றப்படல்" பற்றிய பத்தியின் ஒரு கணிசமான பகுதி இருந்தது."

இன்னும் முக்கியமாக இந்த ஆவணம் சில்கோட் விசாரணை பார்க்கும் வாய்ப்பு இருந்தும், பகிரங்கப்படுத்த மறுத்துவிட்டிருந்தது. விசாரணை முறைகளின்படி பிரெளன் அரசாங்கம் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. எந்த ஆவணமும் வெளியிடப்படுவது பற்றிய இறுதி முடிவு கபினெட் செயலர் மற்றும் ஆட்சித்துறைத் தலைமைச் செயலர் சேர் கஸ் ஓ'டோனலிடம்தான் இருந்தது. அவர் பிரெளனிடம் கொண்டிருந்த நெருக்கமான உறவு 2002-ல் இருந்து உள்ளது. அப்பொழுது அவர் நிதி அமைச்சரகத்தில் நிரந்தர செயலாளராக அப்பொழுது இருந்த சான்சலரான பிரெளனுடன் ஒன்றாக வேலை பார்த்திருந்தார்.

செய்தி ஊடகம் உடன்பாடாக ஈராக் போரை "ஒரு நியாயமான போர்" என்று தொழிற்கட்சி அரசாங்கத்தின் அறிக்கை வெளியிட்டமையானது பிரெளனின் சாட்சியமளிப்பை விட எந்த விதமான தடயமும் அங்கே இருக்கவில்லை. Independent ஆனால் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஆவணத்தைப் பற்றி வேறு எந்த பத்திரிகைகளும் செய்தி கொடுக்காததோடு, தேவையான ஆய்வாக அதை குறிப்பிடாமலும் விட்டுவிட்டன.

மாறாக, செய்தி ஊடகம் பெரிதும் பிரெளனை அவர் சாட்சியத்திற்குப் பாராட்டின. கூறப்பட்ட குறைகள் இவருடைய ஒரு சட்டவிரோத, குற்றம் சார்ந்த போருக்கு அவருடைய அரசியல் ஆதரவிற்கு என்ற வகையில் இல்லாமல் இராணுவப் படைக்கு போதிய நிதி கொடுக்காததற்கு பொறுப்பு என்ற விதத்தில் இருந்தது. 2003 வரை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த அட்மிரல் போய்ஸ் பிரபுவின் கருத்துக்களை The Times சுட்டிக்காட்டியுள்ளது. டைம்ஸிடம் போய்ஸ் பாதுகாப்புப் பிரிவிடம் "போதிய நிதி வசதி இல்லை" என்று கூறியிருந்தார். "பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு அது கேட்டதெல்லாம் கொடுக்கப்பட்டது என்பது நடக்கவில்லை."

Guardian தன்னுடைய தலையங்கத்தில் "அவர் இராணுவத்திற்கு ஆதரவு கொடுத்த சான்சலராக இருந்தார் என்னும் இவருடைய கூற்றுக்கு இவர் கொடுத்த நிதியாலோ, இராணுவத்தின் அனுபவத்தாலோ என்ற சான்றுகள் இல்லை" என்று கூறியுள்ளது.