World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India and Pakistan talk, but "composite dialogue" not resumed

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் "பல் அம்ச பேச்சுவார்த்தையை" மீண்டும் தொடங்கவில்லை

By Shree Haran
3 March 2010

Use this version to print | Send feedback

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த வியாழக் கிழமை நடந்த வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, இந்த போட்டி தெற்காசிய நாடுகள் இரண்டும் "தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக" கொடுத்த வாக்குறுதிக்கும் மேலாக எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இந்த இரு நாடுகளும், 2001-2002ல் பத்து மாதங்களாக நீண்ட யுத்த நெருக்கடியின் பின்னர் அவர்கள் ஆரம்பித்த "பல் அம்ச பேச்சுவார்த்தையை" மீண்டும் தொடங்குவதில் தோல்விகண்டதோடு எதிர்கால கூட்டத்தைப் பற்றிய திட்டத்தைக் கூட அறிவிக்கவில்லை.

இந்தியா, 2008 நவம்பரில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே பொறுப்பு என வகைப்படுத்தி, அதை கண்டனம் செய்வதற்காக "பல் அம்ச பேச்சுவார்த்தையை" இந்திய அரசாங்கம் இடை நிறுத்தி 14 மாதங்களின் பின்னரே, பெப்பிரவரி 25 அன்று புது டில்லியில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுக்கும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் சல்மன் பஷிருக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, இரு நாடுகளும் தங்களுக்கென்று வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை தீவிரமாக வகுத்துக்கொண்டன. பேச்சுவார்த்தையில் "பயங்கரவாத" பிரச்சினையை குவிமையப்படுத்தப் போவதாக இந்தியா தெரிவித்தது --சர்ச்சைக்குரிய, இந்தியக் கட்டுப்பாட்டிலான ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நடப்பவை உட்பட இந்திய விரோத கிளர்ச்சிகளுக்கு பல வழிகளிலும் ஆதரவு வழங்குவதை இஸ்லாமாபாத் நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையையே "பயங்கரவாதம்" என்பதில் அது அர்த்தப்படுத்தியது. அதே சமயம், பாகிஸ்தான், 1960 இந்துநதிப் பள்ளத்தாக்கு உடன்படிக்கையை இந்தியா மீறியதாகக் கூறப்படுவதையும், காஷ்மீரில் இந்திய மனித உரிமை மீறல்களையும், உயர்ந்த மட்டத்திலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முழு முஸ்லிம்-பெரும்பான்மை காஷ்மீர் என்ற பாகிஸ்தானின் உரிமை கோரல் உட்பட பலவித பிராந்திய சர்ச்சைகளையும் கலந்துரையாட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தது.

கடந்த வார பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, லண்டனில் மூலோபாய கல்விக்கான சர்வதேச நிறுவனத்தில் ஒரு மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் நிருபமா ராவ், "எமது எல்லை நெடுகிலும் உள்ள பாதுகாப்பு அரண்களில் இருந்து இந்திய-விரோத பயங்கரவாத குழுக்கள்.... தொடர்ந்தும் ஆள் சேர்ப்பு, பயிற்சி மற்றும் தாக்குதல்களை திட்டமிடும்" நிலைமைக்கு முடிவுகட்ட புது டில்லி தீர்மானித்துள்ளது, எனத் தெரிவித்தார்.

கடந்த வார முற்பகுதியில் சீனாவுக்கு சென்றிருந்த போது, ராவோவின் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹ்மட் கியூரேஷி பதிலளித்தார். அவர், "மும்பை தாக்குதல்களின் தயாரிப்பாளர்களை நீதிக்கு முன் கொண்டுவர" பாகிஸ்தான் போதுமானதை செய்யவில்லை என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்ததோடு இந்தியா தனது உடனடித் தேவைகளுக்கு பயன்படும் வகையில் பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரலை சுருக்குவதற்கு முயற்சிக்கின்றது எனவும் குற்றஞ்சாட்டினார்.

துணைக் கண்டம் 1947ல் இனவாத முறையில் பிரிக்கப்பட்டதில் வேரூண்றியுள்ள இந்தியா பாகிஸ்தான் முரண்பாடுகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க பாகிஸ்தான் சீனாவை வரவேற்கும் என, சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தில் பேசிய கியூரேஷி தெரிவித்தார். "அதை இந்தியர்களே தீர்மானிக்க வேண்டும். இடைவெளியை இணைப்பதற்கு மூன்றம் தரப்பாக பேச்சுவார்த்தையில் சீனாவை வைத்துக்கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்குமா என்பது பற்றி. அவர்களிடம் (சீனாவிடம்) ஒரு வெற்று காசோலை இருப்பதாகவே பாகிஸ்தான் கருதுகிறது," என கியூரேஷி தெரிவித்தார்.

கியூரேஷியின் பிரேரணை ஒரு அக்கறையான பிரேரணையை அர்த்தப்படுத்தவில்லை. 1962ல் சீனாவுடன் எல்லையில் மோதிக்கொண்ட இந்தியா, தனது வடக்கு அயலவரை ஒரு பிரதான மூலோபாய எதிரியாகவும் மற்றும் அச்சுறுத்தலாகவும் நோக்குகிறது. கடந்த ஆண்டு, பெய்ஜிங்கிற்கான ஒபாமாவின் விஜயத்தின் முடிவில், தெற்காசியாவில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவுவதற்கு அமெரிக்காவுடன் சீனா செயற்படுவதாக குறிப்பிட்ட, அமெரிக்க-சீன உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கண்டனம் செய்தது.

கியூரேஷி தெரிவித்த "யோசனையின்" குறிக்கோள், சீனாவுடனான பாகிஸ்தானின் உறவின் ஆழத்தையும் பலத்தையும் புது டில்லிக்கும் மற்றும் வாஷிங்டனுக்கும் சமிக்ஞை செய்வதாகும்.

கடந்த வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், ராவோ தனது பாகிஸ்தான் சமதரப்புக்கு மூன்று ஆவணங்களை கையளித்தார். அவற்றில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என இந்தியா கூறும், மற்றும் தண்டனை வழங்குவதற்காக இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரும் 33 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பாகிஸ்தானுக்கு நிச்சயமாக கோபமூட்டியிருக்கக் கூடியது எதுவெனில், அந்த 33 பெயர்கள் அடங்கிய ஆவணத்தில், ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அதிகாரி மேஜர் சமிர் அலி, மற்றும் இன்னமும் சேவையில் இருக்கும் அதிகாரி மேஜர் இக்பால் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இராஜதந்திர சந்திப்புக்களை பத்திரிகையாளர் மாநாடொன்றை கூட்டாக நடத்தியதன் பின்னர் முடிவுக்குக் கொண்டுவருவது வழமையாகும். ஆனால் அவர்களது சந்திப்பு முடிந்த பின்னர், இரு வெளியுறவுச் செயலாளர்களும் நிருபர்களை தனித் தனியாக சந்தித்தனர். இந்தியா கொடுத்த ஆவணங்களின் செல்லுபடித் தன்மை பற்றி வாதங்களை முன்வைத்ததோடு அவர்களது சந்திப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் பற்றி கூட உடன்பாடின்மையை அவர்கள் வெளிப்படுத்திக்கொண்டனர்.

தனது நிருபர்கள் மாநாட்டில் உரையாற்றிய ராவ், நாம் "திறந்த மனதுடன்..." இரு அரசுகளுக்கும் இடையிலான "பிரமாண்டமான நம்பிக்கை குறைவினால் திணிக்கப்பட்ட வரையறைகள் பற்றிய முழு நனவுடனும்" பேச்சுவார்த்தைக்குச் சென்றோம், என்றார். "இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் திட்டமிடப்படும் பயங்கரவாதம் சம்பந்தமாக எமது அக்கறையை முன்னதாகவே நான் தெளிவாக தெரிவித்து விட்டேன்," என ராவ் கூறினார். இடை நிறுத்தப்பட்ட "பல் அம்ச பேச்சுவார்த்தையை" மீண்டும் தொடங்குவதற்கு காலம் கனியாவிட்டாலும், "நாம் இந்த தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவோம்" -வெளியுறவுச் செயலாளர்களுக்கு இடையிலான எதிர்கால பேரம்பேசலுக்கு அதுவே சாத்தியம்- என ராவ் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், இந்திய ஆவணங்கள் மீது சிறிதளவே நம்பகத்தன்மையை காட்டிய பஷீர், ஜமாட்-உட்-டாவா அமைப்பின் தலைவரும் மற்றும் லக்ஷ்கர்-ஈ-தய்பாவின் ஸ்தாபகருமான ஹவிஸ் மொஹ்மட் சயீத் மீதான இந்தியாவின் ஆதாரங்கள் "வெறும் இலக்கியம்" என கூறினார். "இந்தியா எங்களுக்கு விரிவுரையாற்ற வேண்டும் மற்றும் பாகிஸ்தான் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என கோரவேண்டும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை" என பஷீர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீது இந்தியா அடிக்கடி கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலளித்த பஷீர், "பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் தோற்றுவாய் அல்ல, மாறாக அதனால் பாதிப்புக்குள்ளானது... இந்தியாவில் ஒரு 26/11 (மும்பை தாக்குதல்) தான் நடந்தது. எங்களுக்கு ஆயிரக்கணக்கான மும்பை சம்பவங்கள் நடந்துள்ளன," என பிரகடனம் செய்தார். பாகிஸ்தான் "பயங்கரவாதிகளுக்கு" எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றது மற்றும் "இந்த விடயத்தில் அதன் முயற்சிகளை சர்வதேச சமூகம் பாராட்டியுமுள்ளது," -வடமேற்கு பாகிஸ்தானில் தலிபான்களுக்கும் தலிபான் சார்பு போராளிகளுக்கும் எதிரான அதன் கிளர்ச்சி நசுக்கும் நடவடிக்கையே இங்கு குறிப்பிடப்படுகின்றது- என பஷீர் வலியுறுத்தினார்.

வெளியுறவு செயலாளர்களின் சந்திப்பின் போது, காஷ்மீர் விடயம் சுருக்கமாக மட்டுமே கலந்துரையாடப்பட்டது மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றி குறிப்பிடப்படவேயில்லை என்ற ராவின் கூற்றை பஷீர் மறுத்தார். "காஷ்மீர் விடயம் சுருக்கமாக அன்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது... ஒருவரால் உண்மையில் காஷ்மீர் பிரச்சினையை ஒதுக்கி வைக்க முடியாது, அத்தகைய எந்தவொரு முயற்சியும் பயன்தராது," என பாகிஸ்தான் இராஜதந்திரி தெரிவித்தார்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் ஒரு தாராளவாத பத்திரிகையான இந்து பத்திரிகையில், "மிகச் சிறிய அடிவைப்பு" என்ற தலைப்பில் வெளியான ஆசிரியர் தலையங்கம், "பயற்சியற்ற கண்ணுக்கு" இந்தப் பேச்சுவார்த்தைகள் "உணர்ந்தறியக்கூடிய நகர்வுகள் எதையும் எட்டவில்லை" என்றே தெரியும், "நுணுக்குக் காட்டியின் கீழ் வைத்தால் சிறிய முன்நோக்கிய அடியெடுப்புக்கான ஆதாரங்கள்" அதில் உள்ளன. "இஸ்லாமாபாத் மற்றும் புது டில்லியால் உத்தியோகபூர்வ மற்றும் பின்னணி அறிக்கைகள் குறிப்பாக ஊக்குவிப்புத் தருபவையாக" இல்லாவிட்டாலும், "ராவ் தனது சமதரப்பினரான சல்மன் பஷீருடனனான இன்னுமொரு கூட்டத்துக்காக இந்த மாத கடைப் பகுதியில் பாகி்ஸ்தானுக்கு பயணமாகவுள்ளதாகத் தெரிவதோடு, "பஷீர் தொங்கியுள்ள பேச்சுவார்த்தையில் 'அமைப்பு' பற்றாக்குறை பற்றி புலம்பினாலும், அது இந்த முன்னெடுப்புக்கு தடங்கலாக இருக்காது," என வாதிட்டுள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் குழம்பிப்போயுள்ள மற்றும் இந்தியாவின் வளர்ச்சி கண்டுவரும் பூகோள அரசியல் பலத்தையிட்டு பீதிகண்டுள்ள இஸ்லாமாபாத், இடை நிறுத்தப்பட்ட பல் அம்ச பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. எவ்வாறெனினும், முதலில் பாகிஸ்தானின் பக்கம் இருந்து கனிசமான சலுகைகளை கறந்துகொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் எந்தவொரு அரசியல் தீர்வு காண்பதில் இருந்து இந்தியாவை அப்புறப்படுத்திவிட மற்றும்/அல்லது காஷ்மீர் மீதான தனது எதிரிகளின் உரிமை கோரல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா விட்டுக்கொடுப்புகளை வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க வாஷிங்டனை குத்திவிடுவதற்கு, ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானின் ஆதரவில் அமெரிக்கா தங்கியிருப்பதை பயன்படுத்திக்கொள்வதில் இஸ்லாமாபாத் வெற்றிகொள்ளக் கூடாது என்பதையிட்டு இந்தியா விசேட அக்கறை காட்டுகிறது.

கடந்த வியாழக் கிழமை நடந்த சந்திப்பின் பின்னர் இந்திய பாராளுமன்றத்தில் பேசிய, இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்னா, "மும்பை பயங்கரவாத தாக்குதலில் இருந்து, பயங்கரவாதம் தொடர்பான எமது மைய குறிக்கோள் தொடர்பான பாகிஸ்தானின் பதிலிறுப்பை, பாகிஸ்தானுடனான சந்திப்பில் இந்தியா வலியுற்றுத்தும் விடயமாக இருக்கும்" என உறுதிப்படுத்தினார்.

கடந்த வார கூட்டத்துக்கு உடன்பட்டமைக்காகக் கூட இந்தியாவின் ஆளும் தட்டின் கனிசமான பகுதியினர் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தை விமர்சித்தனர்.

உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியான, இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி, பேச்சுவார்த்தை பற்றி முதலில் அறிவிக்கப்பட்ட போதே அதை கண்டனம் செய்ததோடு தனது கண்டனத்தை நியாயப்படுத்த பூனேயில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பற்றிக்கொண்டது. (பார்க்க: Amid preparations for India-Pakistan talks, deadly bomb blast in west India)

பாகிஸ்தானுடன் ஐ.மு.மு. உறவாடுவதாகவும் மற்றும் இஸ்லாமாபாத்துடனான அதன் கொடுக்கல் வாங்கலில் அளவுக்கு மீறி வாஷிங்டனில் தங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டுவதில் இராணுவ-பூகோள-அரசியல் ஸ்தாபனத்துடனும் மற்றும் கூட்டுத்தாபன தட்டினருடனும் பா.ஜ.க. இணைந்துகொண்டது.

பெயர் குறிப்பிடப்படாத "ஒரு ஊடகக் குழுவின் தலைவரால்" எழுதப்பட்டு மார்ச் 2 அன்று டைம்ஸ் ஒப் இந்தியாவில் வெளியான ஒரு கருத்துக் கட்டுரை, ஒரு எடுத்துக் காட்டாகும். புது டில்லி, பாகிஸ்தானுடனான அதன் செயற்பாடுகளில் துணிவற்றும் தோல்வி மனப்பான்மையுடன் இருந்ததாக அந்த கருத்துரை முறைப்பாடு செய்ததோடு, செப்டெம்பர் 11ம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் ஜோர்ஜ் டிபிள்யூ புஷ் செய்தது போன்று, தனது நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கமும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என வாதிடுகிறது. இது இஸ்லாமாபாத்தை பணியச் செய்வதற்காக, "கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம், பொருளாதார கட்டுப்பாடுகள் மற்றும் மறைமுக நடவடிக்கைகளையும்" பயன்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது.

"தேநீர் மற்றும் சினேகித யுகம் முடிவடைந்துவிட்டது என வாஷிங்டனுக்கு உறுதியாக அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் சுய நலனுக்கு பொருத்தமான விதத்தில் எமது பாகிஸ்தான் கொள்கையை இனுமேலும் திருத்தி எழுதமாட்டோம். சீனாவின் பலத்தை எதிர்க்கும் அமெரிக்காவின் நீண்டகால பூகோள அரசியல் மூலோபாயத்துக்கு இந்தியா இன்றியமையாத்தாகும். அது நாம் நினைப்பதை விட வாஷிங்டன் மீது நெம்புகோலை பயன்படுத்த எமக்கு வாய்ப்பளிக்கின்றது. வாடகைக்குப் பெறும் துப்பாக்கியைப் போல் பாகிஸ்தானிடம் குறுகிய கால வாய்ப்புகள் இருக்கமுடியும். ஆனால், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து மொத்த தேசிய உற்பத்தியில் 4.9 ரில்லியனுடன் (சக்தியை கொள்வனவு செய்வதில் சமநிலையில் இருக்கும்) உலகின் மூன்றாவது பிரமாண்டமான பொருளாதாரமாக ஏற்கனவே உருவெடுத்துள்ள இந்தியா, உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியில் பாகிஸ்தானிடம் பத்தில் ஒரு பகுதியே உண்டு," என அந்த கட்டுரையின் ஆசிரியர் பிரகடனம் செய்கின்றார்.

கடந்த வார பேச்சுவார்த்தைக்கு நெருக்குவதில் வாஷிங்டன் பிரதான வகிபாகம் வகித்திருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் பதட்டங்கள், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் யுத்தத்தை முன்னெடுப்பதற்கும் மற்றும் எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆசியாவில் அமெரிக்கா கைப்பற்றிய பகுதிகளை தக்கவைத்துக்கொள்வதற்கும் தடையாக இருப்பதாக வாஷிங்டன் கருதுகிறது. இந்தியாவுடனான பாகிஸ்தானின் கிழக்கு எல்லையில் உள்ள துருப்புக்களை, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை பலப்படுத்தக் கூடியவாறு, ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிக்கு இடம்மாற்ற இஸ்லாமாபாத்தை வற்புறுத்துவது அமெரிக்காவின் ஒரு பிரதான குறிக்கோளாகும்.

கடந்த வார பேச்சுக்கள் தீர்மானங்களை எட்டாவிட்டாலும், அதை ஒரு "உட்சாகமூட்டும் அடியெடுப்பாக" ஒபாமா நிர்வாகம் புகழ்கின்றது. இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே. க்ரொவ்லி, "இரு நாடுகளதும் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என்பதே மிகவும் உட்சாகமூட்டுவதாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களை சுட்டிக்காட்டி க்ரொவ்லி மேலும் கூறியதாவது: "இந்தியாவும் பாகிஸ்தானும் ஒத்துழைக்கக் கூடிய அளவுக்கு, அவர்களால் சமாதானமான பேச்சுவார்த்தையை நடத்த முடியும்... தெற்காசியாவில் பாதுகாப்பு தொடர்பான எமது கூட்டு முயற்சி உட்பட, பரந்த பிராந்திய சூழ்நிலைக்கு அது மட்டுமே உதவும்."

எவ்வாறெனினும், அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்குள் மனிதர்களையும் பொருட்களையும் கொட்டுகின்ற நிலைமையின் கீழ், அமெரிக்க உயர் தட்டுக்களில் சிலர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டத்தை குறைக்க வழிசெய்வதற்காக ஒபாமா நிர்வாகம் மேலும் செய்யவேண்டும் என நம்புகின்றன. பெப்பிரவரி 26 வெளியான நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு பிரகடனம் செய்ததாவது: "அது [தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக அளித்த வாக்குறுதி] மட்டும் போதாது. தலிபான்கள் மற்றும் ஏனைய தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் மேலும் குவிமையப்படுத்தக்கூடிய வகையில் பதட்ட நிலைமைகள் குறைக்கப்பட வேண்டியிருப்பதை விரும்பும் அமெரிக்காவுக்கு அது போதுமானதல்ல. மற்றும் குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமே அது போதாது."

"இந்த [ஒபாமா] நிர்வாகம், பதட்டங்களை குறைக்க பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை அறியும். என டைம்ஸ் தொடர்ந்தும் கூறுகிறது. இந்தியாவின் வலியுறுத்தலில், அது குறைந்தளவில் தலையீடு செய்ய முடிவெடுத்ததுடன், இரு தரப்பும் மீண்டும் விவேகத்துடன் மேசைக்குச் செல்லத் தள்ளியது. அது மேலும் பலமாக தள்ளவேண்டும்," என டைம்ஸ் தொடர்ந்தும் கூறுகிறது.

யதார்த்தம் எதுவெனில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மற்றும் பூகோள அரசியல் தாக்குதல் நடவடிக்கைகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டத்தை பெருமளவில் மோசமாக்கியுள்ளது. வளர்ச்சி கண்டு வரும் "பூகோள" இந்து-அமெரிக்க "மூலோபாய இணைப்பு" முறையை இட்டு இஸ்லாமாபாத் பீதிகண்டுள்ளது. இந்த மூலோபாய இணைப்பு, இந்தியாவின் அணுவாயுத திட்டத்துக்கு பெரும் ஊக்கத்தையும் மேம்படுத்தப்பட்ட அமெரிக்காவின் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு வசதியையும் இந்தியாவுக்கு வழங்கிய சிவிலியன் அணு ஒப்பந்தத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. அதே சமயம், ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்கா இஸ்லாமாபாத்தில் தங்கியிருப்பதையிட்டு புது டில்லியும் கோபமும் பீதியையும் கொண்டுள்ளது.

ஈரானை கொடுமைப்படுத்தி பலவீனமடையச் செய்யும் அமெரிக்காவின் பிரச்சாரத்தின் பாகமாக, ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா இயற்கைவாயு குழாய் வழி திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என அமெரிக்கா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அழுத்தம் கொடுத்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதி புது டில்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அடிப்படைக் காரணத்தைக் கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தானின் காபுலில் இரு தங்குமிடங்கள் மீது வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலின் பின்னர், இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான கொடூரமான பகைமை மீண்டும் ஒப்புவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில்10 இந்தியர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் உடனடியாக பொறுப்புக் கோரினர். ஆயினும், பாகிஸ்தானின் புலனாய்வுத் துறையான ஐ.எஸ்.ஐ. நோக்கி உடனடியாக விரல் நீட்டிய இந்திய ஊடகங்கள், இந்தியர்கள் இலக்கு வைக்கப்பட்டதானது ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் இருப்பையும் செல்வாக்கையும் மட்டுப்படுத்தும் இஸ்லாமாபாத்தின் முயற்சிகளுக்கு சேவை செய்துள்ளது என சுட்டிக் காட்டின. இந்திய ஊடகத்தின் சில பகுதிகள், இன்னும் முன்னே சென்று, "காபுல் தாக்குதல்" பிரதமர் மன்மோகன் சிங்கின் "பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை தடம்புறளச் செய்யலாம்" என்று கூட குறிப்பிட்டன.