World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The liberals' lament: What's wrong with Obama?

தாராளவாதிகளின் புலம்பல்: ஒபாமாவிற்கு என்ன நேர்ந்துவிட்டது?

Patrick Martin
9 March 2010

Use this version to print | Send feedback

மார்ச் முதல் வாரத்தில் அமெரிக்க செய்தி ஊடகத்தில் பல விமர்சனங்கள், முக்கியமாக தாராளவாத பண்டிதர்கள் ஜனாதிபதி ஒபாமாவின் பொது மக்கள் பற்றிய நிலையில் சரிதலும் ஜனநாயகக் கட்சியில் சிதைவுத்தன்மை அடையாளங்களின் வளர்ச்சி பற்றியும் கவலை தெரிவித்து வந்துள்ளன.

ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸில் பிராங்க் ரிச் எழுதிய கட்டுரை இந்த வகையின் பிரதிபலிப்பு என்று கூறலாம். அவர் ஒபாமா எதிர்கொள்ளும் பிரச்சினை "உறுதித் தன்மை இல்லை, அவர் செய்ய முயலும் அனைத்தையும் ஒன்றுபடுத்தி தெளிவாகக் கூறும் தகவல் இல்லை" என்று கூறுகிறார்.

"அவருடைய அடித்தள நம்பிக்கைகளில் இருந்து கட்டமைத்துள்ள உறுதியான நம்பிக்கை முறையை ஒபாமா தெளிவாகக் கூறவேண்டும். அவர் இவ்வாறு இதுவரை செய்யவில்லை ஆனால் ஒரு கட்சிப் பற்றுள்ளவர் என்ற தோற்றத்திற்கு அவநம்பிக்கையையும் அல்லது நடுங்கும் 'தாராளவாதி' என்ற தோற்றத்தையும் ஆழமாக கற்பித்து விடமுடியும்" என ரிச் ஆலோசனை கூறியுள்ளார்.

இதே போன்ற புலம்பல்கள் டைம்ஸின் பொருளாதாரக் கட்டுரையாளர் போல் க்ருக்மன், வாஷிங்டன் போஸ்ட்டின் இ.ஜே.டியோனி மற்றும் மற்றய விமர்சகர்களும், நிர்வாகம் பரந்த மக்கள் ஆதரவை திரட்டுவதில் அடைந்துள்ள தோல்வியை தாக்கிய புலம்பல்களை தெரிவித்ததுள்ளன. ஒபாமாவும் ஜனநாயகவாதிகளும் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், நவம்பர் காங்கிரஸ் தேர்தல்களில் "ஒரு பெரும் அலையில் அடித்துச் செல்லப்படுவர்" என்றும் டியோனி எச்சரித்தார்.

இப்படி கருத்தைக் கொடுப்பதில் அடித்தளத்தில் இருப்பது, ஒபாமா ஒரு முன்னேற்றகர நிர்வாகத்திற்குத்தான் தலைமை வகிக்கிறார், ஆனால் 'தொடர்பாடல் பிரச்சினையினால்' அவதியுறுகிறார், அமெரிக்க மக்களுக்கு தன் கொள்கைகளின் நலன்களை விளக்க முடியாமல் தவிக்கிறார் என்ற கருத்து ஆகும்.

ஆனால் ஒபாமா ஒன்றும் தொடர்பாடல் செய்வதில் தோல்வியைக் காணவில்லை. ஒரு வலதுசாரி, பெருவணிக நிர்வாகத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார். அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் 16 மாதங்களுக்கு முன்புதான் அவர் பெரும் வெற்றியை தொடர்ந்து வந்திருந்த வெகுஜன போலிக் கருத்துக்களை விரைவில் அகற்றிக் கொண்டிருக்கின்றன.

வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பை கண்ட தொழிலாளர்கள், வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்களில் தொடர்ந்து சரிவையும் கண்டுள்ளனர். நிர்வாகமானது சுகாதார பாதுகாப்புச் செலவுகளை குறைப்பது பற்றி பேசுகையில், இது வயது போனவர்கள் மற்றும் குறைவூதிய ஊதியம் பெறும் மக்கள் விலைகொடுக்க வேண்டும் என்று அவர்கள் அறிவார்கள். ரோட் தீவில் பொதுப்பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கத்தை ஒபாமா பாராட்டியதை அவர்கள் கேட்டனர். ஆனால் பெருமந்த நிலைக்குப் பின் எழுந்த மிக மோசமான நெருக்கடிக்கு எந்த வங்கியாளருமோ ஊக வணிகருமோ பொறுப்பு ஆக்கப்படவில்லை.

இராணுவ நீதிமன்றங்களானது விசாரணையின்றி காலவரையறையற்ற காவல், கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் உட்பட புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலை ஒபாமா தொடர்வதை அவர்கள் கண்டுள்ளனர்--இவை "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்னும் புஷ் கொள்கையின் முழுப் பரப்பு ஆகும். ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸ் அமெரிக்க குடியுரிமைகள் சங்கம் கொடுத்த முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டது. அது ஒபாமா, புஷ்ஷின் முகத்தை மாற்றி எடுத்துக் கொள்வதை உரிய வகையில் காட்டியது.

வெளியுறவுக் கொள்கையில் பொதுமக்கள் வேட்பாளராக இருந்த போது தன்னை போருக்கு எதிரியாக காட்டிக் கொண்ட ஒபாமா ஒரு வெறியுடன் தலைமைத் தளபதி என்னும் பதவியை எடுத்துக் கொள்ளுவதையும் ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்க கூடுதலான 30,000 துருப்புக்களை அனுப்புவதையும், பாக்கிஸ்தானில் ஏவுகணைகள் தாக்குதலை இருமடங்காக ஆக்கியதையும், அந்நாட்டில் இன்னும் கிட்டத்தட்ட 90,000 துருப்புக்களை நிலைநிறுத்திய விதத்தில் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை தொடர்வதையும்தான் 14 மாதங்கள் அவர் பதவி ஏற்றபின் இன்னும் காண்கின்றனர்.

இத்தகைய வரலாறு "முன்னேற்றமானது" என்று உயர் மத்தியதர வகுப்பு தாராளவாதிகளின் அக மகிழும் முன்னோக்கின் அடிப்படையில்தான் பாதுகாக்கப்பட முடியும். இவர்கள் பொருளாதார நெருக்கடியின் பெரும் பாதிப்பு தொழிலாள வர்க்கத்தின் மீது இருப்பதையும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் குருதி கொட்டும் பேரழிவு பற்றியும் பொருட்படுத்துவதில்லை.

தங்கள் பங்குச் சந்தை முதலீடுகள் ஏற்றம் என்னும் ரோசா நறுமண முப்பட்டைக் கண்ணாடி மூலம் ஒபாமாவை காண்கின்றனர். பங்குச் சந்தைச் சரிவின் மிகக் குறைந்த நிலையின் ஆண்டு நிறைவை இவ்வாரம் குறிக்கிறது. அதே நேரத்தில் Dos Jones Industrial Average அதற்குப் பின் 4,000 புள்ளிகள் உயர்ந்ததையும் குறிக்கிறது. அது இந்த சலுகை பெற்ற அடுக்கிற்கு ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் "செயலாற்றி விட்டன" என்று கூறுவதற்கு போதுமான நிரூபணம் ஆகும்.

இப்படி உண்மை தலைகீழாக்கப்பட்டுள்ளதானது குறிப்பிடத்தக்க வகையில் சுகாதாரப் பாதுகாப்பு பிரச்சினையில் வெளிப்படையாக உள்ளது. ஒபாமா நிர்வாகம் ஒரு பெரும் சமூக முன்னேற்றத்தின் விளிம்பில் இருக்கிறது அதாவது 1930-களின் சமூகப் பாதுகாப்பு, 1960-களின் மருத்துவப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி ஆகியவை போல் உள்ளது என்று தாராளவாத பண்டிதர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் செனட் மற்றும் கீழ்மன்றம் இயற்றும் சட்டங்கள் பெரும் எதிர்ப்பைக் கொண்டுள்ளன, ஜனநாயகவாதிகள் நவம்பர் காங்கிரஸ் தேர்தலில் இதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர்.

தாராளவாதிகள் வெளிப்படையான வினாவை கேட்கவில்லை: அதாவது சுகாதார பாதுகாப்புச் சீர்திருத்தம் அமெரிக்க மக்களுக்கு நலன் தரும் என்றால், செனட் சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மக்கோனல் போன்ற வலதுசாரி எதிர்ப்பாளர்கள் ஏன் ஞாயிறன்று இந்த ஆண்டு ஒவ்வொரு மன்ற, செனட் பிரச்சாரத்தையும் ஒபாமா நலப்பாதுகாப்பு பற்றிய வாக்கெடுப்பாக மாற்றுவதாக உறுதி கொண்டுள்ளனர்?

சமூகப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு தேர்தல்களில் ரூஸ்வெல்ட் விலை கொடுக்க நேர்ந்ததில்லை. மாறாக அச்சட்டம் மகத்தான செல்வாக்கை கொண்டது, அது நிறுவிய திட்டம் மில்லியன் கணக்கான வயது போனவர்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிசமான முன்னேற்றத்தை கொடுத்தது. மருத்துவப் பாதுகாப்பும் மருத்து உதவியும் இதே போல் மக்கள் ஆதரவைப் பெற்றன. 1960-களில் கொண்டுவரப்பட்ட ஒரே நீடித்திருக்கும் சமூக சீர்திருத்தங்களாக உள்ளன, ஒரு தலைமுறைக்கும் மேலாக கெளரவமான மருத்துவப் பாதுகாப்பை வயதானவர்கள் பெறுவதற்கு உறுதியளித்துள்ளன.

ஒபாமாவின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் செல்வாக்கற்று உள்ளது என்றால் அதற்குக் காரணம் வெள்ளை மாளிகையானது "மரணப் பட்டியல்", "சமூகமயப்படுத்தப்பட்ட மருந்துகள்" என்று வலதுசாரி குடியரசுக்காரர்களிடமிருந்து வரும் பிதற்றல்களை எதிர்கொள்ளும் முயற்சியில் தோல்வி அடைந்ததுதான். அமெரிக்க மக்கள் அப்பட்டமாக "சீர்திருத்தம்" என்பதின் வனப்புரை அத்தி இலை மறைப்பைக் கண்டுவிட்டு, சரியான முறையில் சட்டத்தின் அடிப்படை நோக்கமானது செலவுகளைக் குறைப்பதும், தொழிலாள வர்க்கமும் வயதானவர்களும் விலை கொடுக்க வேண்டும் என்பதை அடையாளம் கண்டுவிட்டதுதான்.

அமெரிக்க இரு கட்சி முறை என்னும் இரும்பு ஆடைக்கவசத்திற்கும் வலதுசாரிகளுக்கும், தொழிலாள வர்க்க எதிர்ப்பு நிறைந்த ஜனநாயகக் கட்சியின் கொள்கையாக ஒரு மாற்றீடாக இருப்பது இன்னும் வலதுசாரித்தன குடியரசுக் கட்சியின் கொள்கைகள்தான். எனவேதான் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், இரு பெருவணிகக் கட்சிகளும் வாதிடும் சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் போரை எதிர்ப்பவர்களின் மையப்பணி கீழிருந்து சுயாதீனமான வெகுஜன அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதாக இருக்கிறது.

இந்த அரசியல் இயக்கம் ஒரு சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்திய பூகோள ஆதிக்கத்தையும், முதலாளித்துவ அமெரிக்க ஆதிக்கத்தையும் இது நிராகரிக்கிறது. இந்தச் சுயாதீன அரசியல் போராட்டத்தை மேற்கொள்ள விரும்பும் அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் மிச்சிகன் அன் ஆர்பரில் ஏப்ரல் 17-18ல் நடக்க இருக்கும் சமூக நெருக்கடி மற்றும் போர் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் கலந்து கொள்ளத் திட்டமிட வேண்டும் என்று அழைப்பு விடுகின்றது.