World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greece: Millions join general strike against government austerity package

கிரேக்கம்: அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் மில்லியன் கணக்கானவர்கள் இணைகின்றனர்

By Robert Stevens
12 March 2010

Use this version to print | Send feedback

பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK சமூக ஜனநாய அரசாங்கம் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து நேற்று ஒரு மாதத்திற்குள் இரண்டாவது ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை கிரேக்கம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நடத்தினார்கள்.

சமீபத்திய சிக்கன நடவடிக்கை பொதியை, வரிவிதிப்பு அதிகரிப்புக்கள், செலவினக் குறைப்புக்களை 4.8 பில்லியன் யூரோக்களுக்கு ($6.5 பில்லியன்) கிரேக்க பாராளுமன்றம் சுமத்தியுள்ள சில நாட்களில் இந்த வேலைநிறுத்தம் வந்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை ஊழியர்கள் உடனடியாக 7 சதவிகித ஊதியக் குறைப்புக்களின் பாதிப்பிற்கு உட்படுவார்கள். இதில் பொதுவாக உரிமையுள்ள ஊதியமாக கொடுக்கப்படும் ஈஸ்டர், கோடை மற்றும் கிறிஸ்துமஸ் கால கொடுப்பனவில் 30 சதவிகிதக் குறைப்பும் அடங்கும்.

இந்தக் குறைப்புக்கள் அரசாங்கத்தின் ஆரம்ப சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை தொடர்கின்றன. அதில் கிரேக்கத்தின் வரவு-செலவு பற்றாக்குறை இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் குறைக்கப்பட இருப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதில் ஓய்வூதியம் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு 63 வயது என இருக்கும் என்றும், பொதுத்துறை ஊதிய முடக்கம் மற்றும் அரசாங்கத்தில் வேலை பார்க்கும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் ஏராளமானவர்கள் நிறுத்தப்பட்டதும் அடங்கும்.

இந்த வேலைநிறுத்தத்தில் 3 மில்லியன் என மதிப்பிடப்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். பெரும்பாலானவர்கள் இரு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதாவது தனியார்துறை கிரேக்க பொதுத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (GSEE) மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு (ADEDY) ஆகியவற்றில் உள்ளவர்கள். GSEE யில் கிட்டத்தட்ட 2 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர், ADEDY ல் 800,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவை இரண்டிலும் கிரேக்க மொத்த சனத்தொகையில் 5 மில்லியன் தொழிலாளர்களில் பாதியைக் கொண்டவையாகும்.

இந்த வேலைநிறுத்தம் உறுதியான ஆதரவைப் பெற்று கிட்டத்தட்ட அனைத்துப் பொதுப்பணிகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் நாடு முழுவதும் மூடப்பட்டன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கையால், கிரேக்கத்தில் இருந்து புறப்படும், வரும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இரயில்கள் இரத்து செய்யப்பட்டன, பஸ்களும், சுரங்க இரயில்களும் இரத்து செய்யப்பட்டன.

பல பள்ளிகளும் மருத்துவமனைகளும் மூடப்பட்டன. மருத்துவ ஊழியர்கள் அவசர சிகிச்சையை மட்டும் அளித்தனர். படகுத்துறைத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்து கொண்டனர், படகுகள் துறையிலேயே இருந்தன. வரிவிதிப்பு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பிற முனிசிபல் கட்டிடங்களும் மூடப்பட்டன. ஏதென்ஸிலும் நாடு முழுவதும் அனைத்து அஞ்சல் நிலையங்களும், வங்கிகளும் மூடப்பட்டன. தேசிய மின்சக்தி, தேசிய நீர்த்துறை மற்றும் தேசிய தொலைபேசி ஊழியர்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.

ஏதென்ஸில் கழிவுப்பொருளகற்றும் தொழிலாளர்கள் ஆறாவது நாளாக வேலைநிறுத்தத்தில் இருக்கின்றனர். பொது வேலைநிறுத்தத்துடன் தங்கள் வேலைநிறுத்தமும் இணையும் வகையில் இது நடந்தது. தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்புக்கள், செய்தித்தாள் தயாரிப்பு ஆகியவையும் ANA அரசாங்க ஒளிபரப்பு நிலையம் உட்பட செய்தி ஊடகத் தொழிலாளர்கள் செய்தியாளர்களுடன் வேலைநிறுத்தம் செய்ததால் நின்று போயின.

ஏதென்ஸில் செயல்பட்ட ஒரே பொதுப் போக்குவரத்து ISAP டிராம் சேவை ஆகும். இது பல மணி நேரம் எதிர்ப்பாளர்கள் முக்கிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செயல்பட்டது. சட்டபூர்வமாக வேலைநிறுத்தத்தில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், போலீஸ், தீயணைப்பு மற்றும் சுங்கத் துறைகளில் இருந்து 200 அதிகாரிகள் கொண்ட குழு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது.

30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். GSEE/ADEDY எதிர்ப்பு அணிவகுப்பு Pedio tou Areos ல் துவங்கி சின்டக்மா சதுக்கத்தில் இருக்கும் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகே முடிந்தது. "பணப் பிரபுத்துவத்திற்காக தியாகம் இல்லை", "உண்மையான வேலைகள், அதிக ஊதியம்", போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். கட்டிடங்களில் இருந்து தொங்கவிடப்பட்ட பதாகைகள் "தியாகங்கள் போதும், போருக்கு எதிராகப் போரிடுவோம்" என்று கூறின.

60 வயதான சுகாதாரத்துறை ஊழியர் Odysseas Pangopoulos ஐ ரொய்ட்டர் பேட்டி கண்டது. அவர் கூறினார்: "நடவடிக்கைகள் நியாயமற்றவை...எங்களுக்கு குழந்தைகள், குடும்பங்கள் உள்ளன, காப்பாற்றுவது கடினம். அவர்களைக்காப்பாற்ற பணம் தேவை. வங்கிகளும் செல்வந்தர்களும்தான் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும்."

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர், "கிரேக்கம் சரிந்தால் எனக்குக் கவலை இல்லை, ஏற்கனவே தனிப்பட்ட முறையில் நான் சரிந்துவிட்டேன். இனி கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை."

சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான கிரேக்கர்கள் PASOK அரசாங்கத்தின் திட்டமான வேலைகளைக் குறைத்தல், தொழிலாளர்கள் உரிமையைத் தாக்குதல், வாழ்க்கைத் தரங்களை குறைத்தல் ஆகியவற்றை எதிர்ப்பதாகக் காட்டியுள்ளன.

All-Workers Militant Front (PAME) என்ற கிரேக்க ஸ்ரானிலிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த அமைப்பு தனி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான வடக்கே இருக்கும் தெசலோனிகியில் 14,000 பேர் நகர மையத்தின் ஊடாக குறைப்புக்களை எதிர்த்து அணிவகுத்தனர். மற்றய நகரங்களிலும் சிறு நகரங்களிலும், Ioannina, Sitia, Naxos, Veroia இன்னும் தெற்கின் பெரிய நகரமான பட்ராஸ் உட்பட பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கிரேட் Heracleion ல் வந்த ஒரு அறிக்கையின்படி, "வேலைநிறுத்தத்தில் தங்கள் ஊழியர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற கடைகள் முற்றுகையிடப்பட்டன, பல வங்கிகளும் எதிர்ப்பாளர்களின் தாக்குதலுக்கு உட்பட்டன."

அதிக ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான கலகப் பிரிவு பொலிஸார் மத்திய ஏதென்ஸ் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் சில பிரிவுகளை விருப்பப்படி தாக்கினர், பொறுப்பற்ற முறையில் கண்ணீர்ப்புகை குண்டுகளை கூட்டத்தை கலைக்க பயன்படுத்தினர். ஏதென்ஸில் 16 பேரை பொலிஸார் கைது செய்தனர். மிருகத்தனமான தாக்குதல்களில் பலர் காயமுற்றனர் பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் மற்றய நகரங்களிலும் சிற்றூர்களிலும் நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏதென்ஸின் அரசாங்க வக்கீல் இதற்கு முந்தைய தினம் பதவி நீக்கப்பட்ட 150 ஒலிம்பிக் ஏயர்வேஸ் தொழிலாளர்களை கைது செய்து கட்டாயமாக அகற்றப்பட்ட உத்தரவைக் கொடுத்து அடக்குமுறை தொடர்ந்தது. வேலையிழந்த தொழிலாளர்கள் பொதுக் கணக்கு அலுவலகத்தின் முன்பு முந்தைய வாரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பொதுவேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்ததில், GSSE, ADEDY இரண்டும் தொழிலாள வர்க்கத்தின் சீற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக கிரேக்க அரசாங்கத்திற்கும் ஆளும் உயரடுக்கிற்கும் ஆபத்து இல்லாமல் கோபத்தை திசை திருப்ப முயல்கின்றன. வெகுஜன எதிர்ப்பைச் சிதைக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தங்களை நடத்துகின்றன. அதையொட்டி சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுகின்றன. இந்த இலக்கை ஒட்டி தொழிற்சங்கங்கள் மற்றும் ஒரு ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு மார்ச் 16 அன்று நடைபெற அழைப்பு விடுத்துள்ளன.

தொழிற்சங்கங்கள் ஆர்வத்துடன் PASOK தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு கொடுத்தன. அதுவோ கிரேக்கப் பெருநிறுவனம் மற்றும் சர்வதேச நிதிய மூலதனம் சமூகநலச் செலவுகளில் வெட்டுக்களை செயல்படுத்தும் வகையில்தான் செயல்படுகிறது.

இந்த வாரம் பாப்பாண்ட்ரூ ஒரு நான்கு நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்தார். இது அமெரிக்காவிற்கு வாஷிங்டனில் ஜனாதிபதி பாரக் ஒபாமாவை சந்திக்கும் விதத்தில் ஒரு மூன்று நாள் பயணத்தின் இறுதி கட்டத்தை அடைந்தது. ஒரு தனிப் பேச்சில்--முன்னதாக ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் நடந்தது போல்--பாப்பாண்ட்ரூ தன்னுடைய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒபாமாவின் ஆதரவைத் திரட்டினார். இவருடைய பயணம் கிரேக்க, சர்வதேச செய்தி ஊடகத்தினால் ஒரு வெற்றி என்று புகழப்பட்டது.

ஆனால் இந்தப் புகழுடன் அடக்கமான எச்சரிக்கைகளும் வந்தன. அவை சிக்கன நடவடிக்கைகள் இன்னும் சுமத்தப்பட வேண்டும் என்று கூறின. புதனன்று Financial Times "சர்வதேச அரங்கில் வெற்றிகரமாக செயல்பட்டது--அவருடைய ஆறு நாள் பயணத்தில் நான்கு தலைநகரங்களும் அடங்கியிருந்தன--உள்நாட்டில் திரு பாப்பாண்ட்ரூ ஆழ்ந்த தொந்தரவுகளை எதிர்பார்க்கிறார் என்பதை மறைக்க முடியாது." என எழுதியது.

வர்க்க-ஒத்துழைப்புக் கொடுக்கும் தொழிற்சங்கங்களின் PASOK க்கு கொடுக்கும் ஆதரவு நிலைப்பாடு வரிவசூல் செய்பவர்களின் சங்கத்தின் தலைவரான Yannis Grivas கொடுத்த கருத்துக்களில் சுருக்கமாக அடங்கியுள்ளது: "இது ஒரு அடையாள எதிர்ப்பு. சிக்கன நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் அறிவோம்" என்றார் அவர்.

தொழிற்சங்கத் தலைமையின் கோழைத்தனம் மற்றும் போலித்தனத்திற்கு முற்றிலும் எதிரிடையாக கிரேக்க முதலாளிகள் சங்கத்தின் Dimitris Daskalopoulos வியாழனன்று PASOK அரசாங்கத்திற்கு உறுதியான ஆதரவைக் கொடுத்து சிக்கன நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பைக் கண்டித்தார். "திவாலுக்கும் மந்தநிலைக்கும் இடையே, பிசாசிற்கும் பெருங்கடலுக்கும் நடுவே, பெரும் பள்ளத்தில் விழுவதைத் தவிர வேறு மாற்றீடு இல்லை. மீண்டும் நாட்டைச் சீர்திருத்தத் தொடங்குவது மிகவும் முக்கியமாகும்" என்று அவர் எச்சரித்தார்.

ஆனால் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த "சீர்திருத்தத்தின்" பொருள் என்ன என்பது செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளால் கூறப்பட்டது. Libcom வலைத் தளம் நேற்று பழமைவாத Kathimerini அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களை "சில எதிர்ப்பாளர்கள் இறந்தாலும்" தோற்கடிக்க வேண்டும் எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளது. ஆளும் உயரடுக்கு தன் செல்வத்தை பாதுகாக்க மிக இரக்கமற்ற அடக்குமுறையை தொழிலாள வர்க்கத்தின் மீது ஏவத் தயாராக உள்ளது. இதுவரை பார்த்த பொலிஸ் வன்முறை ஒரு மாதிரிதான்.

இந்த நெருக்கடிக்கு ஒரு தேசியத் தீர்வு இல்லை. PASOK யின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கிரேக்கத்தின் அரசாங்கக் கருவிகள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவை உள்ளன. ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள தொழிலாளர்களும் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பொதுப்பணமாக டிரில்லியன் கணக்கான டொலர்களை தொழிலாள வர்க்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர். கிரேக்கத்தில் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் ஐரோப்பா முழுவதும் வளர்ந்துவரும் போராட்டத்தின் ஒரு முன்னணி என்று எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இது ஒரு முழு நனவுடன் கூடிய, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, திட்டத்திலான வடிவமைப்பை ஐரோப்பிய மற்றும் சர்வதேச சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டம் என்பதாக கருதிக்கொள்ள வேண்டும்.