World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Papandreou in Paris

Sarkozy echos Germany's hard line on Greek debt crisis

பாரிசில் பாப்பாண்ட்ரூ

கிரேக்க கடன் நெருக்கடி பற்றிய ஜேர்மனியின் கடின நிலைப்பாட்டை சார்க்கோசி எதிரொலிக்கிறார்

By Antoine Lerougetel
9 March 2010

Use this version to print | Send feedback

ஞாயிறன்று ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவை எலிசே அரண்மனையில் சந்தித்து, கிரேக்கம் அதன் கடன் நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தன சிக்கன நடவடிக்கை மூலம் சமாளிக்க வேண்டும் என்று ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் வலியுறுத்தியதை எதிரொலித்துப் பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கு பாப்பாண்ட்ரூவை சார்க்கோசி சந்தித்தார். இது அவர் மேர்க்கெலுடனான ஒரு மணி நேர தொலைபேசி தொடர்பிற்கு பின் நடந்தது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பெருகிய எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையிலுள்ள கிரேக்க அரசாங்கம், கடந்த வெள்ளியன்று அவருடைய அரசாங்கத்திற்கு ஆதரவை தேடுவதற்காக முக்கிய தலைநகரங்களுக்கு பயணிக்கும் அரசியல் பயணத்தின் ஒரு பாகமாக பாப்பாண்ட்ரூ பேர்லினில் மேர்க்கெலை சந்தித்தார். செவ்வாயன்று அவர் வாஷிங்டனில் ஜனாதிபதி ஒபாமாவை சந்திப்பார்.

மேர்க்கெல் காட்டிய வழியில் சார்க்கோசியும் கிரேக்கத்திற்கு நிதி உதவி எதுவும் அளிப்பதாகக் கூறவில்லை.

கடந்த வாரம் சமூக ஜனநாயக PASOK கட்சியின் தலைவரான பாப்பாண்ட்ரூ பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மற்றும் நலன்கள் குறைப்பு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு, நுகர்வோருக்கு புதிய வரிகள் என்று 4.8 பில்லியன் மதிப்பிடப்பட்டுள்ள சேமிப்புக்களுக்கு வகை செய்யும் நடவடிக்கைகளை அறிவித்தார். இதற்கு முன்பு அவர் அறிவித்ததில் இருந்ததை விட இத்தொகுப்பு இன்னும் கடுமையாக இருந்தது.

சர்வதேச வங்கிகள் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் அழுத்தத்தின்கீழ் பாப்பாண்ட்ரூ தற்பொழுது மொத்த உள்நாட்டுப் உற்பத்தியில் 12.3 சதவிகிதமாக இருக்கும் கிரேக்க வரவு-செலவுப் பற்றாக்குறையை இந்த ஆண்டு 4 சதவிகிதத்திற்குள் குறைந்துவிடுவதாக உறுதி கொண்டுள்ளார்.

சமூக ஜனநாயக அரசாங்கம் பெருகிய முறையில் மக்கள் கோபத்தையும் தொழிலாளர் வர்க்க எதிர்ப்பு அலையையும் எதிர்கொள்ளுகிறது. மார்ச் 11 மற்றும் மார்ச் 16 தேதிகளில் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களால் பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளன.

PASOK அரசாங்கத்திற்கு சிக்கனத் திட்டத்தின் கூறுபாடுகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அரசியல் ஆதரவைத் தொடர்ந்து கொடுப்பதற்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் விருப்பத்தை அடையாளம் காட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குப் பெரும் அழுத்தத்தை கீழிருந்து எதிர்கொண்டுள்ளனர். தொழிலாள வர்க்கம் ஆட்சியுடன் நேரடி மோதலில் ஈடுபடக்கூடிய கட்டத்திற்கு வராமல் தடுத்துவிடும் வகையிலும் அதன் கோபத்தை திசை திருப்பும் வகையிலும் பகுதி மற்றும் ஒரு நாள் நடவடிக்கைகளை அவை பயன்படுத்துகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதியான உறுப்பினர் நாடுகள் தங்கள் வரவு-செலவுப் பற்றாக்குறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்த 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக வைத்திருக்கக்கூடாது என்பதை செயல்படுத்த கிரேக்க அரசாங்கம் முயல்கிறது. ஓய்வூதிய வயதை இரு ஆண்டுகள் உயர்த்தி 63 என வைத்தல், பொதுத்துறையில் ஊதிய முடக்கம், மதிப்புக்கூட்டு வரி, எரிபொருள் வரி ஆகியவை அதிகரிக்கப்படல் மற்றும் அரசாங்கத்தில் பணிபுரியும் தனியார் ஒப்பந்தக்காரர்களை பெரிதும் பணிநீக்கம் செய்தல் ஆகியவை வெட்டுக்களில் உள்ளன.

பாபாண்ட்ரூவிற்கு அருகில் நின்றிருந்த சார்க்கோசி, "கிரேக்கம் தைரியமாகவும் உறுதியாகவும் செயல்படுகிறது, எனவே பிரான்சின் முழு ஆதரவை நம்பலாம்" என்று அறிவித்தார்.

பிரான்சின் தொழிற்சங்கங்களுடன் பிரெஞ்சு ஜனாதிபதி ஒத்துழைத்து இதே போன்ற சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துகிறார். ஐரோப்பிய ஆணையத்திற்கு 2010-2013 க்கான உறுதிப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் பெப்ருவரியில் கொடுத்துள்ளது. பிரெஞ்சு பொதுப் பற்றாக்குறை தற்போதைய 8.2 சதவிகிதத்தில் இருந்து 2013 க்குள் 3 சதவிகிதமாக குறையும் என்று எதிர்பார்க்கிறது. இதையொட்டி அரசாங்கச் செலவுகளில் 100 பில்லியன் யூரோக்கள் குறையும்.

வங்கியாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியதற்கு அதிகமாகவே தான் செயல்பட்டுள்ளதாக பாப்பாண்ட்ரூ சுட்டிக்காட்டினார். "சிறப்பு வல்லுனர்கள் ஆலோசனைக்கு அதிகமாகவே பரந்த முறையிலும், அதிகமாகவும் எங்கள் நாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்றார் அவர். இதன்பின் அவர் கிரேக்கம் அதன் கடன்களுக்காக கொடுக்கும் தண்டனை போன்ற 6.34 வட்டியைக் குறைக்க உதவிக்கு வலியுறுத்தினார் அதாவது ஜேர்மனி கொடுக்கும் வட்டியை போல் இது இரு மடங்கு அதிகம் ஆகும். "மற்றய யூரோப்பகுதி நாடுகளைப்போல் அதே விகிதத்தில் நாங்களும் கடன் வாங்க விரும்புகிறோம். அதே அளவு இல்லை என்றாலும் ஒப்புமையில் கிட்டத்தட்ட அப்படி இருக்க வேண்டும்."

தன்னுடைய சிக்கன நடவடிக்கையின் அடிப்படையில், கிரேக்கம் நிதியச் சந்தைகளில் 5 பில்லியன் யூரோக்கள் கடன் வாங்க முடிந்தது. ஆனால், "ஏதென்ஸ் கிட்டத்தட்ட இன்னும் 20 பில்லியன் யூரோக்களை மே மாதத்திற்குள் வாங்க வேண்டியுள்ளது, இருக்கும் நிலைமையை பார்க்கையில் அரசாங்கம் வாங்கிவிட முடியும் என்று எவரும் கூறிவிடமுடியாது" என்று வணிக நாளேடு Les Echos சுட்டிக் காட்டியுள்ளது.

பல கருத்துகூறுபவர்களும் கிரேக்கத் தொழிலாளர்கள் இன்னும் கூடுதலான தியாகங்களை செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

பிரான்சில் சமூக இடர்பாடுகளை குறைப்பதற்கு பிடிவாதமாக இருக்கும் சார்க்கோசி, பிரான்ஸும் ஜேர்மனியும் சேர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளும் ஒதுக்கு நிதியங்களும் (hedge) கிரேக்க அரசாங்கக் கடன்களுக்கு எதிராக மகத்தான ஊக அலையைக் கொள்ளுவதை எதிர்க்கும் என்றார். ஏனெனில் இவை யூரோ நாணயம் தப்பிப் பிழைப்பதையே அச்சுறுத்தும். கிரேக்கத்தின் வருங்காலம் மட்டும் ஆபத்திற்கு உட்பட்டிருக்கவில்லை, ஐரோப்பாவேதான் என்று அவர் அறிவித்தார். "யூரோ நம்முடைய நாணயம், அது நம் பொறுப்பு" என்றார் அவர்.

அமெரிக்க வங்கிகளுக்கு எதிரான விதத்தில் அவர் மேர்க்கெல் மற்றும் யூரோக்குழுவின் தலைவரான Jean-Clalude Juncker ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதாகவும், "நாம் மிகவும் உறுதியாகவும், தயாராகவும் உள்ளோம். கிரேக்கத்திற்கு எதிராக நடக்கும் ஊக வணிக நடவடிக்கைகளுக்கு நாம் போரிடாவிட்டால் பல நாடுகளுக்கு எதிராகவும் நடக்கக்கூடும். பொருளாதார நெருக்கடியுடன் நிதிய நெருக்கடியையும் நாம் சேர்க்கக்கூடாது. பின்னையதோ அட்லான்டிக்கின் மறுபுற நிதியத் தீவிரங்களால் தோற்றுவிக்கப்பட்டது" என்றார்.

அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட சர்வதேச நாணய நிதியம் (IMF) ஐரோப்பியக் கடன் நெருக்கடியில் தலையிடக்கூடாது என்று வலியுறுத்திக் கூறினார்: "யூரோப் பகுதிதான் தாக்குதலுக்கு உட்பட்ட அதன் உறுப்பு நாடுகளுக்கு உதவ வர வேண்டும்.....இது பிறரை எதிர்ப்பது என்ற பொருள் அல்ல... தர்க்கரீதியான, முறையான செயல்தான் இது."

ஜேர்மனிய நிதி மந்திரி வுல்ப்காங் ஷெளபில் கருத்துடன் தன்னைச் சேர்த்துக் கொண்டார். அவர் ஜேர்மனிய Weltam Sonntag இடம் யூரோப்பகுதி IMF போன்ற ஒரு அமைப்பை அதே போன்ற அதிகாரங்களுடன் தோற்றுவிப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்றார். அதனிடம் கடன் வாங்கும் நாடுகள் கடுமையான சிக்கன, தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று இரக்கமின்றி IMF கூறுவது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

கிரேக்கத்தின் கடன் நெருக்கடியைக் குறைக்க குறிப்பான நிதிய ஆதரவை மறுத்துவிட்ட மேர்க்கெலும் சார்க்கோசியும் அரசியல் ஆதரவைக் கொடுத்தள்ளனர் அதாவது கிரேக்க அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதற்கு ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு ஆதரவு இருக்கும் என்பதாகும்.

"கிரேக்கம் எங்கள் ஆதரவை நாடினால், நாங்கள் தயார்" என்றார் சார்க்கோசி. இத்தகைய உறுதிமொழிகள் கிரேக்க அரசாங்கத்தின் நிதிய நடவடிக்கைகள் சிறப்பாக நியமிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்களின் நெருக்கமான மேற்பார்வையில் உள்ளன என்ற பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது காலனித்துவ நாடுகள் மீது இருந்த கண்காணிப்பாளர்களை போல் செயல்படுகிறது. உறுப்பு நாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர யூரோ பகுதியில் நிரந்தர "கூட்டாட்சி" அமைப்பு தோற்றுவிக்க வேண்டும் என்ற அழைப்புக்களுடன் இந்த நடவடிக்கைகள் இணைந்து இருக்கின்றன. அத்தகைய அமைப்புக்கள் யூரோப்பகுதியில் பெரிய பொருளாதாரங்களான ஜேர்மனி மற்றும் பிரான்சினால் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும்.

IMF தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கானை முக்கிய உறுப்பினராக கொண்ட பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சிந்தனைக்குழு Terra Nova வின் வலைத் தளத்தில் வந்துள்ள கட்டுரை ஒன்று கிரேக்க சிக்கனத் திட்டம் பற்றி, "இந்த அவசர நடவடிக்கைகள் இன்னும் போதாதவை" என்று கூறுகிறது. "இன்னும் நிலைத்திருக்கக்கூடிய பொது கணக்குகளுக்கு இன்றியமையாத அடிப்படைச் சீர்திருத்தங்கள் தேவை" என்றும் ஐரோப்பிய ஒன்றியம் "ஐரோப்பிய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொருளாதார அரசாங்கத்தை நிறுவ வேண்டும்" என்றும் கூறியுள்ளது.

1957ல் இருந்து 1974 வரை கிரேக்கம் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. கிரேக்க, ஐரோப்பிய முதலாளித்துவம் PASOK தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகள் SYRIZA கூட்டில் இருப்பவற்றின் உதவியை பெற்றும் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அடக்குமுறை ஆட்சி தேவைப்படும் என்று உணரக்கூடும்.

இது ஒரு ஆபத்து நிறைந்த மூலோபாயம் ஆகும். பிரெஞ்சு செய்தி ஊடகமும் சில அரசாங்க மந்திரிகளும் கிரேக்க அரசாங்கத்திற்கு பிணை கொடுக்க மேர்க்கெல் உறுதியாக மறுத்தது பற்றி கவலை கொண்டுள்ளனர். ஏனெனில் கிரேக்க எழுச்சி பிரான்சிற்கும் அதற்கு அப்பாலும் பரவக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

மார்ச் 5ம் தேதி பழமைவாத நாளேடு Les Echos, "பிரெஞ்சு நிதி மந்திரி Christine Lagarde எப்படியும் ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு இன்னும் "வெளிப்படையான உதவி" அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்" என்று எழுதியுள்ளது. பிரான்சிலும் கிரேக்கத்திற்கு இணையான சிக்கன நடவடிக்கை "உடனடியாக ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டக்காரர்களை பாரிஸ் தெருக்களுக்கு கொண்டுவரும்.... அங்கேலா மேர்க்கெல் இனி "முடியாது" என்று சொல்லக் கூடாது, கிரேக்கத்தில் "முடியும்" என்று கூறக் கற்றுக் கொள்ள வேண்டும்." என்று அதன் தலையங்கம் கூறியுள்ளது.

வணிக நாளேடான La Tribune அதன் மார்ச் 4 தலையங்கத்தில், சிக்கன நடவடிக்கைகள் பற்றி ஒப்புதல் கொடுத்தாலும், "இப்பொழுது, பிரெஞ்சு மட்டத்தில் இதன் பொருள் என்ன என்று கற்பனை செய்து பார்ப்போம்....அந்த தீய கனவை உடனே விரட்டியடிக்கத்தான் நாம் முயல்வோம்." என்று எழுதியுள்ளது.

மார்ச் 5 தலையங்கத்தில் Liberation உம் இதேபோல் "மக்களுடைய வெறுப்புணர்வு" பற்றி எச்சரித்தது.

சார்க்கோசியும் மேர்க்கெலும் அத்தகைய அக்கறைகள் இருந்தாலும், தாங்கள் தங்கள் உறுதிப்படிதான் நடக்க இருப்பதாக உறுதிகொண்டுள்ளனர்