World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: ISSE addresses rally in support of six suspended Sussex University students

பிரிட்டன்: தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள ஆறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ISSE உரையாற்றுகிறது

By Paul Mitcell
15 March 2010

Use this version to print | Send feedback

Protest
சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்கள்

500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மார்ச் 11ம் தேதி சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். கல்வித்துறையில் வெட்டுகளுக்கு எதிராக ஒரு வாரமாக நடக்கும் எதிர்ப்புக்களுக்கு ஆதரவாக முற்றுகை மறியலில் பங்குபற்றியதற்காக கலகப் பிரிவு பொலிஸ் தாக்கிய 6 மாணவர்கள் நீக்கப்பட்டமையை எதிர்த்து இது நடந்தது. மாணவர் செய்தி ஏடான Badger கருத்துப்படி, "இது ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் பற்றி முற்றிலும் பெரிதுபடுத்தப்பட்ட, ஆக்கிரோஷமான விடையிறுப்பு ஆகும்." இதில் மாணவர்கள் "கைது செய்யப்பட்டனர், பலர் விலங்கிடப்பட்டனர், எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டன, பலர் தாக்கப்பட்டனர், திட்டப்பட்டனர், மிரட்டப்பட்டனர்" என்று அதில் உள்ளது.

அணிவகுப்பில் பேசிய சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் உறுப்பினர் ஜோஷ் வாரன் பல்கலைக்கழக அதிகாரத்துவத்தின் முன்னறிவிப்பற்ற, ஜனநாயக விரோதமான செயலைக் கண்டித்தார். இத்தகைய முன்னோடியில்லாத நடவடிக்கையை மாணவர்கள் எடுத்தது உலக அரசியலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த மாற்றத்தின் விளைவு என்றும் முதலாளித்துவ முறையின் ஆழ்ந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கினார்.

Josh
ISSE உறுப்பினர் ஜோஷ் வாரன் அணிவகுப்பில் உரையாற்றுகிறார்

வங்கிகளுக்கு பிணை கொடுக்க அளிக்கப்பட்ட டிரில்லியன்களை தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடம் இருந்து மீட்க அனைத்து அரசாங்கங்களும் முயல்கின்றன என்ற வாரன், தொடர்ந்து, "சசக்ஸ் நிர்வாகமும் இதைத் தெளிவாக்கியுள்ளது. எந்த எதிர்ப்பு வந்தாலும் அது மிருகத்தனமான வலிமை, மிரட்டல் ஆகியவற்றால் எதிர்கொள்ளப்படும், இதில் தவறு செய்யக் கூடாது. கடந்த வாரம் நடந்தது இன்னும் பரந்த வட்டாரங்களால் கவனமாக பரிசீலிக்கப்படுகிறது." என்று கூறினார்.

"இத்தகைய தாக்குதலுக்கு எதிராக நாம் எப்படிப் போராட வேண்டும்?" என்ற வினாவை வாரன் எழுப்பினார். தொழிற்கட்சி ஆட்சிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. மார்ச் 18 அன்று விடுக்கப்பட்டுள்ள ஒரு நாள் வேலைநிறுத்தம் முற்றிலும் நிலைமையின் தீவிரத்தைப் புறக்கணிக்கிறது."

அயர்லாந்திலும் கிரேக்கத்திலும் பெரும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக்களும் உள்ளன, ஆனால் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை பாதுகாத்து அது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த உதவுகின்றன என்பதை அவர் விளக்கினார். குட்டி முதலாளித்துவக் கட்சிகளையும் அவர் விமர்சித்தார்: அவற்றின் முன்னோக்கு அதிகாரத்துவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதில்தான் உள்ளது. இந்த தந்திரோபாயம் பல முறையும் முட்டுச் சந்தில்தான் நிறுத்தியுள்ளது என்றார்.

"இப்பொழுது தேவையானது ஒரு அரசியல் போராட்டம். கல்வியை பாதுகாப்பதற்காக அதிகாரத்துவம், தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் பொலிஸுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம். பெரும்பாலான மக்கள் நலனுக்கு ஏற்ப சமூக சீரமைப்பிற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இது நடத்தப்பட முடியும்" என்று வாரன் கூறினார்.

ISSE மூலம் சசக்ஸ் மாணவர்கள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் இங்கிலாந்து மற்றும் சர்வதேச மாணவர்களுடன் தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

வாரனுடைய உரைக்கு மாணவர்களிடையே பெரும் உற்சாக வரவேற்பு இருந்தது. ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகள், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி போன்ற குட்டி முதலாளித்துவக் குழுவினர் எதிர்ப்புக் குரல்கள் கொடுத்தனர். அவற்றின் பேச்சாளர்கள் UCU எனப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிச் சங்கம் மற்றும் அதன் மார்ச் 18 ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கும் ஆதரவு கொடுத்தனர். இது UCU உடைய சசக்ஸ் வரவு-செலவுத் திட்ட நெருக்கடிக்கான "பிரத்தியேக தீர்வை" விவாதிக்க பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுக்கும்.

UCU தீர்வு ஒன்றும் பிரத்தியேகமானது அல்ல. ஐரோப்பா முழுவதும் தொழிற்சங்கங்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன--இதையொட்டி உலக நிதிய நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்கும். "பல்கலைக்கழகத்தின் பொது வரவு-செலவுத் திட்டத்தை மதிப்பதாக" UCA கூறியுள்ளது, அது "சேமிப்புக்களை கொடுத்து அதே நேரத்தில் விருப்பத்தின் மூலம்தான் ஊழியர்களை சாதகமாகச் செயல்படுத்த வைக்கும்" திட்டத்தை கொண்டுள்ளது என்று கூறுகிறது.

தானே உவந்து வேலையில் இருந்து நீங்கிக் கொள்வதை UCU ஏற்கிறது, இதையொட்டி "விரும்பி விலகுவோர்க்கான திட்டத்தை" முன்வைக்கிறது: அதாவது இதில் ஊழியர்கள் தங்கள் மணித்தியாலங்கள் (மற்றும் ஊதிய) வெட்டுக்களை கேட்கலாம். செய்யும் பணிக்குத் தன் திட்டம், "தொழிற்சங்கங்களை வருங்கால நிதியம் பெறுவதில் மையமாக இருக்கும்" என்றும், அதன் "புதிய தொழில்துறை நிலைப்பாடு மற்ற வளாகங்களுக்கும் மாற்றப்படும்" என்றும் கூறியுள்ளது.

அணிவகுப்பிற்குப்பின், கிட்டத்தட்ட 300 மாணவர்களும் ஊழியர்களும் கலைத்துறையில் ஒரு உரை அரங்கை முற்றுகையிட்டனர். பல்கலைக்கழகம் உள்ளிருப்பு எதிர்ப்புக்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற தடையை கொண்டுவந்தும் இது தொடர்கிறது. நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆறு மாணவர்களும் நிபந்தனையற்று மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று முற்றுகையாளர்களால் கோரப்பட்டது, முற்றுகையாளர்கள் மீது எந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையும் கூடாது, வன்முறையற்ற எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை ஆகிவை எதுவும் குற்றமாக்கப்படக்கூடாது, தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது" என்றும் கோரியது.

ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து வந்த அறிக்கையில் கூறப்பட்டது: "வெட்டுக்களை நிறுத்தும் பிரச்சாரத்தின் மாணவர்களாகிய நாங்கள் Arts 2 ல் கூடியுள்ளோம். நிர்வாகத்தின் செயல்களை எதிர்கொள்ளும் விதத்தில், குறிப்பாக ஒருதலைப்பட்சமாக 6 மாணவர்கள் துணைத் தலைவரால் கடந்த வாரம் நீக்கம் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டதற்கு எதிராக. இந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு வளாகத்தில் கலகப்பிரிவுப் பொலிஸும் தேவையில்லை. இந்த நடவடிக்கை அளவிற்கு அதிகமானது என்றுதான் பல்கலைகழகத்திற்க்கு உள்ளேயும் வெளியேயும் பரந்த கண்டனம் வெளிப்பட்டுள்ளது. சசக்ஸில் கட்டாயப் பணிநீக்கத்திற்கு எதிராகவும், பொது பணிகள் தேசிய அளவில் பாதுகாப்பதற்கு நடத்தப்படும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஈடுபட்டுள்ள பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் நாங்கள்."

கடந்த வாரம் பல்கலைக்கழகமானது நீக்கப்பட்ட மாணவர்கள் ஆறு பேருக்கும் கல்வியைத் தொடர்வதற்கு வளாகத்தில் அனுமதிக்கப்படுவர் என்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முடிவடையும் வரை படிப்புடன் தொடர்பில்லாத எந்த நடவடிக்கைகளிலும் பங்கு பெறக்கூடாது என்றும் எழுதியுள்ளது.