World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Lehman bankruptcy report exposes Wall Street criminality

வோல் ஸ்ட்ரீட்டின் குற்றத் தன்மையை லெஹ்மன் திவால் அறிக்கை அம்பலப்படுத்துகிறது

Barry Grey
15 March 2010

Use this version to print | Send feedback

திவால் நீதிமன்ற ஆய்வாளர் மார்ச் 11 அன்று வெளியிட்ட அறிக்கை செப்டம்பர் 2008 சரிவிற்கு முந்தைய மாதங்களில் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் "முற்றிலும் தவறான" நிதிய அறிக்கைகளை வெளியிட்டது என்றும், அதன் நிர்வாகிகள் "நடவடிக்கை எடுக்க வேண்டிய தன்மையுடைய இருப்புநிலைக் குறிப்பு திரித்தல்களை செய்தனர்" என்றும் முடிவிற்கு வந்துள்ளது.

இந்த 2,200-பக்க அறிக்கை மகத்தான அளவில் கணக்குகள் மோசடி செய்யப்பட்ட விவரங்களை தெரிவிக்கிறது. வங்கி தன்னுடைய கடன் தரத்தை தவறாகக் கூறவும் மதிப்பற்ற சொத்துக்கள் தொடர்புடைய இழப்புக்களின் அளவை மறைக்கும் வகையில் செய்யப்பட்ட இரகசிய நடவடிக்கைகளும் இதில் இருந்தன.

செப்டம்பர் 15, 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிந்தது உலகளவில் கடன் சந்தைகள் சரிவை ஏற்படுத்தியது. இது அமெரிக்க அரசாங்கம் மற்ற உலகில் உள்ள அரசாங்கங்களும் வங்கி முறையை பிணை எடுக்க டிரில்லியன் கணக்கான பொது நிதியை வழங்குவதை நியாயப்படுத்த உதவியது. 1930களுக்கு பின்னர் ஆழ்ந்த மந்த நிலையை இந்த நிதிய நெருக்கடி கொண்டுவந்து, மில்லியன் கணக்கான வேலைகளை அழித்தது. இப்பொழுது அரசாங்கங்கள் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வங்கியாளர்கள், ஊக வணிகர்களின் நலன்களுக்காக அரசாங்க கருவூலங்களை திவால் செய்ததை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துகின்றன.

தொழிலாளர்களின் வேலைகள், வீடுகள், ஊதியங்கள், வாழ்நாள் சேமிப்புக்கள் மற்றும் சுகாதாரப்பாதுகாப்பு, கல்வி இன்னும் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், வெப்பம் ஆகியவை நிதிய உயரடுக்கின் குற்றத்திற்கு விலைகொடுக்க தியாகம் செய்ய வேண்டியுள்ளது என்பதை லெஹ்மன் அறிக்கை நிரூபிக்கிறது. நிதிய உயரடுக்கோ தான் செய்த பேரழிவின் விளைவில் இருந்து இன்னும் அதிகமாக செல்வக்கொழிப்பைப் பெற்றுள்ளது.

அறிக்கை வெளிவந்த பின்னர், Goldman Sachs, JP Morgan Chase போன்ற முக்கிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் லெஹ்மன் வெளிப்பாடுகள் பற்றி அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன. தங்கள் முன்னாள் போட்டி நிறுவனம் பயன்படுத்திய கணக்கு ஏமாற்றுக்களை தாங்கள் ஒருபோதும் பயன்படுத்தியதிதல்லை என்று கூறியுள்ளன. ரிக் காசினோவில் சூதாட்டம் நடப்பது பற்றி கண்டுபிடித்தது தனக்கு "அதிர்ச்சியை" தருகிறது என்று காசாபிளாங்கா திரைப்படத்தில் காப்டன் ரேனால்ட் அறிவிப்பதுதான் நினைவிற்கு வருகிறது.

எல்லா முக்கிய வங்கிகளும் நுட்பமான திட்டங்களை பயன்படுத்தியுள்ளன. தங்கள் இருப்பு நிலைக் குறிப்புக்களில் இருந்து இழப்புக்களை அகற்றுவதற்கு "முதலீட்டு கருவிகள் அமைப்பை" (structured investment vehicles) கொண்டவை. சந்தேகத்திற்கு உரிய துணை முக்கிய கடன்கள் என்று தாங்கள் அறிந்ததை மாற்றி "கடன் தொகைகளுக்கு உத்தரவாத நிதி" என்று பெயர் கொடுத்து அவற்றை விற்றுள்ளன. பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களில் வலுவற்ற வங்கியாக இருந்ததால் லெஹ்மனின் பழக்கங்கள் அம்பலப்பட்டு விட்டன. இதற்குக் காரணம் அதன் பெரிய போட்டியாளர்கள், பிரச்சனையை அறிந்துகொண்டு ஆக்கிரோஷ நடவடிக்கைகள் எடுத்து போராடிக்கொண்டிருக்கும் தமது போட்டி நிறுவனத்தை உடைவின் விளிம்பில் கொண்டுசென்று நிறுத்தின.

ஆய்வாளரின் அறிக்கைப்படி, லெஹ்மன் அதன் அடைமான ஆதரவுடைய பத்திரங்களை கூடுதலாக மதிப்பிட்டு தன்னுடைய கணக்குப் புத்தங்களில் காலாண்டு இறுதி நிதிய அறிக்கைகளை அதன் உண்மையான கடன்தன்மையை மறைத்தவிதத்தில் திரித்துத் தயாரித்தது. அறிக்கையின் ஆசிரியர், Jenner & Block நிறுவனத்தின் ஆன்டன் ஆர். வலுகாஸ் குறிப்பிட்டுள்ளபடி, "முதலீடு செய்யும் பொதுமக்கள், தரம் கொடுக்கும் நிறுவனங்கள், அரசாங்கக் கட்டுப்பாட்டாளர்கள், லெஹ்மனின் நிர்வாக இயக்குனர்கள் ஆகியோருக்குத் தெரியாமல், நிதியத்தின் நிகர நெம்புகோல் விகிதத்தை பொதுமக்கள் ஏற்கும் விதத்தில் லெஹ்மன் மாற்றியது."

வங்கியின் முக்கிய கணக்கு ஏமாற்றுவித்தை ஆரம்பத்தில் "Repo 105" என்று நிறுவனத்துள் அறியப்பட்டிருந்தது. இது மீள்வாங்கும் உடன்பாடு (repurchasing agreements) என்பதின் சுருக்க வடிவம் ஆகும். வோல் ஸ்ட்ரீட்டில் இது வாடிக்கையான பழக்கம் ஆகும். குறுகிய கால ரொக்கத் தேவைச் செயற்பாடுகளுக்கு நிதியத்தை பெறுவதற்கு ஒரு வங்கி மற்றொரு வங்கியிடம் இருந்து கடன் வாங்கும்; அந்த வங்கிக்கு தன் சொத்துக்களில் சிலவற்றை குறிப்பிட்ட தினங்களுக்குள் திரும்ப வாங்கிவிடும் என்று கூறிப் பணம் பெறும்.

கணக்கிற்காக, இத்தகைய நடவடிக்கைகள் விற்பனை என்று இல்லாமல் நிதி அளித்தல் என்று பதிவு செய்யப்படும். இப்படி மாற்றப்படும் சொத்துக்கள் லெஹ்மன் கடன் வாங்கும் வங்கியின் வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் ஒரு இரவுக்கு இருக்கும். ஆனால் லெஹ்மன் தன் repro சொத்துக்களை அது பெற்ற ரொக்கத்தைக்காட்டிலும் 105 அல்லது அதற்கு கூடுதலான மதிப்பைக் காட்டி அதன் அடிப்படையில் அதன் "repo 105'களை" விற்பனை என்று பதிவு செய்யும். மோசமான கடன்களை அதன் இருப்பு நிலைக்குறிப்பில் இருந்து அகற்றி அதன் காலாண்டு நிதிய அறிக்கை வருவதற்குள் சரி செய்யும் விதத்தில் காட்டும்.

ஆய்வாளர் கருத்துப்படி இத்தகைய வழிவகை மூலம் லெஹ்மன் தன்னுடைய இருப்புநிலைக் குறிப்பில் இருந்த 2007ல் நான்காம் காலாண்டில் $39 பில்லியன்களை அகற்றியது, 2008 முதல் காலாண்டில் $49 பில்லியனை அகற்றியது மற்றும் 2008 இரண்டாம் காலாண்டில் $50 பில்லியனை அகற்றியது.

இந்த கணக்கு மோசடி கொடுத்த மோசமான நிலையால் லெஹ்மனுக்கு இதன் சட்டபூர்வ தன்மைக்கு கையெழுத்திட அமெரிக்க சட்ட நிறுவனம் ஏதும் முன்வரவில்லை. இறுதியில் இது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் மூலம் பிரிட்டிஷ் சட்டத்தின்படி இந்த தந்திரோபாயம் சட்டபூர்வம் என்று கூறும் விதத்தில் செயல்பட்டது. தன்னுடைய Repo 105 செயல்களை லண்டனைத் தளமாகக் கொண்ட கிளை மூலம் லெஹ்மன் நடத்த வேண்டியதாயிற்று. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு நிதியத்தை அனுப்பி இந்த உடன்பாடுகளைச் செய்தது.

தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் எஸ் புல்ட் ஜூனியர் மற்றும் மூன்று தலைமை நிதிய அதிகாரிகள் இந்த கறைபடிந்த நடவடிக்கைகளை அறித்து ஒப்புதல் கொடுத்தனர் என்றும் வங்கியின் தணிக்கையாளர், கணக்கு நிறுவனம் Ernst & Young நிர்வாகிகளை மூடி மறைத்தது என்ற முடிவிற்கு ஆய்வாளர் வந்துள்ளார். நான்கு அதிகாரிகள் தாங்கள் லெஹ்மனுடைய பங்குதாரர்களுக்கும் நிர்வாக இயக்குனர்களுக்கும் கொண்டுள்ள "நிதிக் கடமையை" கைவிட்டனர் என்றும் புல்ட் "குறைந்தபட்சம் பெரும் பொறுப்பற்றவர்" என்னும் சட்டபூர்வக் கருத்திற்கு ஆதரவு உண்டு என்றும் ஆய்வாளர் முடிவிற்கு வந்துள்ளார்.

ஆய்வாளரின் அறிக்கை நியூயோர்க் மத்திய வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் மதிப்பற்ற பத்திரங்களை பொது நிதிக்கு 2008 மார்ச்சில் இருந்து மாற்றுவதை அனுமதித்த பங்கைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. அப்பொழுது Bear Stearns சரிவுற்று JP Morgan Chase ஆல் மத்திய அரசு உதவி நிதி கொடுக்கும் உடன்பாட்டை ஒட்டி எடுத்துக் கொள்ளப்பட்டது. இது செப்டம்பர் வரை தொடர்ந்தது. அப்பொழுது லெஹ்மன் திவாலிலிருந்து பாதுகாப்பிற்கு பதிவு செய்தது. நியூயோர்க் மத்திய வங்கியின் தலைவர் அப்பொழுது டிமோதி கீத்னர் ஆவார். வோல் ஸ்ட்ரீட்டிற்கு முக்கிய உதவி அளித்தவர் என்பதற்காக ஒபாமா கீத்னருக்கு நிதி மந்திரி பதவியைக் கொடுத்தார்.

2007ல் மொத்தம் $22 மில்லியன் ஊதியம் பெற்ற புல்ட், லெஹ்மன் நிர்வாகிகளில் மற்றவர்களோ குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அதே போல் வோல் ஸ்ட்ரீட்டின் வேறு எந்த நிர்வாகி மீதும் வழக்கு தொடரப்படவில்லை.

பெரு மந்த நிலைக்குப் பின்னர் மிகக் பெரியசமூகப் பேரழிவை எதிர்கொண்ட விதத்தில் ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகத் தலைமையில் இருந்த காங்கிரஸும் நிதிய முறையில் தீவிர சீர்திருத்தம் எதுவும் தேவையில்லை என்று மறுத்துவிட்டனர். அமெரிக்கா, மற்றும் உலகத்தை ஒரு பொருளாதாரப் பேரழிவில் தள்ளியதற்கு எவரையும் பொறுப்பாக ஆக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் முயற்சியை தன்னலக் நிதியக்குழுக்களின் மோசமான கடன்களை மூடி மறைக்க முற்பட்டனர். இதனால் அக்குழுவினர் சுருட்டுவதையும் தங்கள் செல்வத்தைப் பெருக்குவதையும் அதிகப்படுத்திக் கொள்ள முடிந்தது.

லெஹ்மன் விவகாரம் ஒரு விதிவிலக்கு அல்ல. ஊழல், மோசடி, குற்றத்தன்மை ஆகியவை ஒரு "சில மோசமான நபர்களின்" முடிவு அல்ல, அதேபோல் சில நிர்வாகிகளின் உறுதியான இழிந்த அகநிலைத் தன்மையின் வெளிப்பாடும் அல்ல. உத்தியோகபூர்வ நிறுவனங்கள் அனைத்தும் --வெள்ளைமாளிகை, காங்கிரஸ், கட்டுப்பாட்டு அமைப்புக்கள், செய்தி ஊடகம்--நிதிய கொள்ளை முறையின் தன்மைக்கு சாட்சியம் கொடுக்கின்றன.

வோல் ஸ்ட்ரீட்டின் குற்றம் சார்ந்த தன்மை முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி, முரண்பாடுகளில் வேர்களைக் கொண்டுள்ளது. முன்னோடியில்லாத அளவிற்கு நிதிய ஒட்டுண்ணித்தனம், அதன் அனைத்து நச்சு இணைப் பிரிவுகளுடன் இருந்து பெருகிய சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய போர் அரசியல் விளைவு என இலாபமுறையின் நாற்றம் பிடித்த தன்மையின் வெளிப்பாடு ஆகும்; எல்லாவற்றிற்கும் மேலாக அதன் மையமான அமெரிக்கா பற்றி.

தொழிலாள வர்க்கம் இதில் இருந்து தக்க முடிவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மோசடித்தன வழக்கங்கள் மூலம் பொருளாதாரப் பேரழிவைக் கொண்டு வந்த நிதிய நிர்வாகிகளின் மீது குற்றவழக்குகள் வேண்டும். அவர்கள் அநியாயமாகச் சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வேலையற்றோருக்கு உதவ பயன்படுத்தப்படவும், அடிப்படை சமூகத் தேவைகளுக்கு உதவவும் வேண்டும். வங்கிமுறை தேசியமயமாக்கப்பட வேண்டும், பொது நிறுவனங்களாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க வேண்டும்.

இது அமைப்புமுறையை சீர்திருத்தும் விஷயம் அல்ல. மாறாக அதை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தள்ளுவதற்குத் தேவையான ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதுதான் முக்கியம் ஆகும்.