World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greece: Fake left lines up behind trade union sabotage of anti-austerity struggle

கிரேக்கம்: போலி இடதுகள் சிக்கன எதிர்ப்பு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் நாசப்படுத்துவதற்கு துணை நிற்கின்றன

By Robert Stevens and Marcus Salzmann
18 March 2010

Use this version to print | Send feedback

அரசாங்கத்தின் மூலம் சுமத்திய 16 பில்லியன் சிக்கனப் பொதியை எதிர்த்து கிரேக்க தொழிலாளர்கள் நடத்திய வெகுஜனப் போராட்டம் தொழிற்சங்கங்களால் சிதறடிக்கப்படுகின்றன. இரண்டு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள், GSEE எனப்படும் கிரேக்க பொதுத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, பொதுத்துறைக் கூட்டமைப்பான ADEDY ஆகியவைகள் சமூக ஜனநாயக PASOK அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை நெரிக்கின்றன. இவை "நியாயமான முறையில்" செயல்படுத்தப்பட்டால் ஆதரவுகளானது வெட்டுக்களுக்கு உண்டு என்ற தவிர்க்க முடியாத இவற்றின் அறிக்கைக்கு வழி வகுக்கும் வகையில் இது வழிகோலுகிறது.

செவ்வாயன்று அனைத்து பொதுத்துறைத் தொழிலாளர்களுக்கும் தொழில்துறை நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டிய தினம், பல தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தினம் என்று ஆயிற்று. ADEDY மார்ச் 23 மாலை எதற்கு என்று குறிப்பிடாத "எதிர்ப்பு ஆர்ப்பாட்ட தினம்" என்று அழைப்பு விடுத்து "ஈஸ்டருக்கு முன்பு அல்லது பின்னர்" தொழில்துறை நடவடிக்கை இருக்கும் என்றும் அதற்கான தேதி இம்மாதக் கடைசியில்தான் முடிவாகும் என்றும் கூறியுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெருகியுள்ள நிலையிலும், சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் GSEE ஒரு தேசியவாத நுகர்வோர் எதிர்ப்பு இயக்கத்தை தொழில்துறை நடவடிக்கைக்கு பதிலாக முன்வைத்துள்ளது. தற்பொழுது அதன் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கும் GSEE ஒரு "கிரேக்கப் பொருளை வாங்கவும்" பிரச்சாரத்தில் தனது கவனத்தைக் காட்டுகிறது.

அரசாங்க நிறுவனமான DEH தொழிலாளர்கள் செவ்வாயும் புதனும் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் GENOP தொழிற்சங்கம் இதை சில பிரிவுகள் குறுகிய காலத்திற்கு ஏழு ஆலைகளில் செயல்படாது என்ற வரம்போடு நிறுத்திக் கொண்டது. தொழிற்சங்கத் தலைவர் Nikos Photopoulos "ஒரு பல்பு கூட எரியாமல் போகக்கூடாது" என நாங்கள் விரும்புகிறோம் என்றார். உலக சோசலிச வலைத் தள நிருபரிடம் பேசிய GENOP அதிகாரி ஒருவர் எரிசக்தி மந்திரியுடன் பேசிய பின்னர் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்வதா, முடிப்பதா என முடிவெடுப்பர் என்று கூறினார்.

கிரேக்கத் தொழிலாளர்களை ஒரு தவறான மெத்தன உணர்விற்குத் தள்ளும் முயற்சிதான் நடைபெறுகிறது. திங்களன்று கடன் தர நிர்ணய நிறுவனம் Standard& Poor (S&P) கிரேக்கத்தின் தரத்தை சற்றே உயர்த்தி BBB+ என்று வைத்தது. செவ்வாயன்று ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் PASOK அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து, கிரேக்கம் நிதிய உதவியை நாடுமானால் ஒரு அவசரக்கால உதவிப் பொதியை தயார் செய்யும் என்ற அறிக்கையை வெளியிட்டனர்.

உண்மையில் இந்த அறிவிப்பு எதிலும் ஆறுதலளிக்கும் அல்லது சாதகமான நிலைக்கோ இடம் இல்லை. முதலில் இரண்டுமே பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ வேலைகள், ஊதியங்கள், சமூகநலப் பணிகள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு ஒப்புதல் என்று ஆகும். மேலும் இவை இரண்டுமே சில நிபந்தனைகளைக் கொண்டவை. S&P ஆனது கிரேக்கப் பொருளாதாரம் "உத்தியோகபூர்வ கணிப்புக்களைவிட குறைந்த வலிமை உடைய இடைக்கால வளர்ச்சியைத்தான்" எதிர்கொள்ளும் என்று எச்சரித்துள்ளது. இது நிதிய சக்திகள் தொழிலாள வர்க்கத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலின் தன்மையில் திருப்தி அடையவில்லை என்பதின் அடையாளம் ஆகும்.

S&P தீர்ப்பை பற்றிக் கருத்துக் கூறிய Evolution Securities உடைய கடன் பகுப்பாய்வாளர் Gary Jenkins, Guardian இடம், "நான் படித்ததிலேயே மிக எதிர்மறையான நேரிய கருத்து இதுதான்" என்றார். அவர் மேலும் கூறியது: "S&P ஆனது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் திறன் உடையவற்றில் பங்கு பெற விரும்பவில்லை போலும், ஆனால் போதிய எதிர்மறைக் கருத்துக்களை கூற விரும்புகின்றனர். ஏனெனில் பின்னர் நிகழ்வுகள் பெரும் தவறாகப் போனால், அவர்கள் கருத்தை சுட்டிக்காட்டி, 'ஏற்கனவே நாங்கள் எச்சரித்தோம்' என்று கூறமுடியும்."

ஐரோப்பிய நிதி மந்திரிகள் உண்மையில் கிரேக்கத்திற்கு உதவ எந்த உருப்படியான நடவடிக்கை பற்றியும் முடிவெடுப்பதில் தோற்றுள்ளனர். ஆனால் அரசாங்கம் பணம் எதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். ஸ்பெயினின் பொருளாதார மந்திரி Elen Salgado செய்தி ஊடகத்திடம் கூறினார்: "தற்பொழுது கிரேக்கத்திற்கு உதவி தேவையில்லை. எந்த நிதி உதவியையும் அவர்கள் நாடவில்லை, எனவே நாங்கள் நேற்று தொழில்நுட்ப பிரச்சினைகளைப் பற்றித்தான் விவாதித்தோம், தேவைப்பட்டால் சில கருவியை தயாராக வைத்திருப்பதற்கு."

தன்னுடய அறிக்கையை "கிரேக்கத்திற்கு அதன் ஆணிப்படுக்கைக்கு மாற்றாக பிரஸ்ஸல்ஸ் முள்கம்பிகளை அளிக்கிறது" என்று தலைப்பு கொடுத்து Irish Times வெளியிட்டது.

இந்தச் சூழ்நிலையில் பாப்பாண்ட்ரூ செயல்படுத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகளால் வரும் வெட்டுக்களானது திட்டத்தில் முதல் அலையாகததான் இருக்க முடியும். இந்த ஆண்டு அவர் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதத்தில் இருந்து 8.7 சதவிகிதம் எனக் குறைக்க விரும்புகிறார். அடுத்த இரு ஆண்டுகளில் பற்றாக்குறையை 3 சதவிகிதம் என்று 2012க்குள் கொண்டுவரவேண்டும் என்றால் அரசாங்கம் இன்னும் வெட்டுக்களை பல பில்லியன்களுக்கு செயல்படுத்த வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் மீது இப்பொழுது கொடுக்கப்பட்டு வரும் வேதனைகள் குறையாது. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசரியர் Martin Feldstein, அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரேகனுக்கு முன்னாள் ஆலோசகராக இருந்தவர், சனிக்கிழமை அன்று நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கிரேக்கம் தோல்வி அடைந்தால் அது யூரோப் பகுதியில் இருந்து கிரேக்கம் வெளியேற வழிவகுக்கக்கூடும் என்றார். "கிரேக்கம் இப்பொழுதுள்ள 12 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகித பற்றாக்குறைக்கு 2 ஆண்டுகளில் செல்ல முடியும் என்பது கற்பனைதான். மாற்றீடுகளோ ஏதேனும் தாமதித்தல் அல்லது இதைவிட்டு விலகுதல் அல்லது இரண்டுமே நடைபெறுதல் என்பதுதான்" என்றும் அவர் கூறினார்.

கிரேக்கப் பொருளாதாரத்தின் ஆபத்தான நிலைபற்றி Financial Times இடம் கருத்துத் தெரிவித்த Standard Life Investments ன் மூலோபாய முதலீட்டு இயக்குனர் ரிச்சர்ட் பாட்டி, "தேவையான நிதிய சமன்பாடுகளை சாதிக்க கிரேக்கர்களால் முடியுமா? அது இன்னும் தெளிவாக இல்லை, குறிப்பாக பொருளாதாரம் கணித்துள்ளதைவிட அதிக சுருக்கத்தை காணக்கூடும் என்ற நிலையில், அப்பொழுது சந்தையில் உயர்ந்த வட்டி விகிதத்தை நாடு கொடுக்கக்கூடும்." என்றார்.

PASOK இன் தாக்குதல்களுக்கு உறுதியான அரசியல் ஆதரவுப் பங்கை போலி இடது குழுக்கள் கொடுக்கின்றன--SYRIZA (Coalition of the Radical Left), Antarsya (Anticapitalist Left Cooperation for the Overthrow), KKE எனப்படும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள். இவைகள் எப்பொழுதுமே தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஆதரவு கொடுக்கும் அமைப்புக்களாக செயல்படுபவை. தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க தொழிற்சங்கங்களின் ஒரு நாள் வேலைநிறுத்தங்களை ஆர்வத்துடன் வரவேற்கின்றன.

SYRIZA வின் தலைவர் Anexis Tsipras, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இம்மாதம் முன்னதாகப் பேசுகையில், "கடைசி இரு கிரேக்க அரசாங்கங்களின் புதிய தாராளவாதக் கொள்கைகள்...எங்களை சமூக பேரழிவிற்கு இட்டுச் சென்றுவிடும்" என்று எச்சரித்தார்.

இன்னும் நீண்டகால மாதிரி ஒன்று வெட்டுக்களை சுமத்தத் தேவை என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். "இவ்வளவு குறுகிய காலத்தில் பற்றாக்குறையை குறைப்பது என்பது அபத்தமாகும். நாம் இடது மாற்றீடு ஒன்றைக் கொடுக்க வேண்டும், அதில் இடைக்கால மாற்றங்கள் இருக்க வேண்டும். அவை ஊதியங்களை 20 சதவிகிதம் குறைப்பது, மறைமுக வரிகளை அதிகரிப்பது, சமூக நலன்களை குறைப்பது என்று கிரேக்கத்தின் சமூக அமைதியை அழிக்காத வகையில் அதன் தளத்தைக் கொண்டிருக்க வேண்டும்."

திங்களன்று SYRIZA "அனைத்து இடது, முற்போக்கு, சுற்றுச்சூழல்வாதம் மற்றும் PASOK ஆதரவாளர்கள், கட்சியினது அரசாங்கத்தினதும் கொள்கைகளுடன் உடன்பாடு காணாதவர்கள்" ஒன்றுபட வேண்டும் என்று முறையிட்டது. அதாவது இந்த நடவடிக்கை "இடதில் ஐக்கியம்" என்று கூறப்படுவதின் பெயரில் PASOK க்கு எதிராக எந்தவிதப் போராட்டத்தையும் முன்னேற்ற அதனுடைய மறுப்பை சரியானதென ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டது.

Antarsya வில் இணைந்துள்ள பல முன்னாள் இடது குழுக்களும் அராசங்கத்திற்கு இரண்டாவது வரிசை பாதுகாப்பு போல் செயல்படுகின்றன. SYRIZA விற்கு இடது மாற்றீடு போல் காட்டிக் கொள்ளுகின்றன. அதே நேரத்தில் மிக முக்கியமான பணி "இடது" கூட்டுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இது அவற்றை PASOK உடன் நேரடிப் பாதையில் நிற்க வைக்கின்றது.

இதே அடிப்படையில்தான் இரு குழுக்களும் தொழிற்சங்க கருவிகளுடன் உறுதியாகப் பிணைந்துள்ளன. அதையொட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை தவிர்ப்பதற்கான முயற்சிகளுக்கு காரணம் கொடுப்பதில் முனைந்துள்ளன.

செவ்வாய் இரவன்று ஏதென்ஸில் நடந்த அணிவகுப்பு ஆர்ப்பாட்டமானது ADEDY ன் அன்றைய முக்கிய நடவடிக்கை என்று கருதப்பட்டது. ஆனால் இக்கூட்டத்திற்கு கிட்டத்தட்ட SYRIZA, Antarsya, KKE யின் இளைஞர் பிரிவுகள் ஆகியவற்றினுடைய உறுப்பினர்கள்தான் பிரத்தியேகமாக வந்திருந்தனர்.

Antarsya உடன் இணைந்துள்ள கிரேக்கத்தின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SEK) உறுப்பினர் ஒருவர், WSWS நிருபரிடம் தொழிற்சங்கங்கள் இன்னும் கூடுதலான வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிட வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார். ஆனால் ஏன் இன்னும் அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டதற்கு அவர் ADEDY இந்தவாரம் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் போனவாரம்தான் அது நடத்தியது என்றார். GSEE ஐப் பொறுத்தவரை, மார்ச் 11ல் இருந்து அது நடவடிக்கை எடுக்கவில்லை, "ஏனெனில் இந்த வாரம் அவர்கள் மாநாடு கூட்டுகின்றனர்" என்றார்.

பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கட்சியின் நாளேடான Socialist Worker க்கு அதன் கிரேக்க செய்தித்தாள் Workers Solidarity ன் ஆசிரியர் Panos Garganas கிரேக்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு "அடுத்த வாரம் அதன் மாநாடு உள்ளது, எனவே அதுவரை எந்த நடவடிக்கையும் இராது" என்று வெற்றுத்தனமாகத் தெரிவித்தார்.

நடப்பது "ஒரு பொறுத்திருந்து பார்க்கும் விளையாட்டு ஆகும்" என்று அவர் கூறினார். அரசாங்கமானது "ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு பணம் கொடுக்கப்போகிறதா என்று காத்திருக்கிறது", தொழிலாளர்கள் "தொழிற்சங்கத் தலைவர்கள் முடிவெடுப்பதற்கு காத்திருக்கின்றனர்" என்றார் அவர்.

தொழிற்சங்க தலைவர்கள் நீண்ட காலம் முன்பே முடிவெடுத்துவிட்டனர். அவர்கள் தலைமை தாங்குவதை இத்தகைய செயலற்ற தன்மையினால் ஊக்கம் கொடுத்த விதத்தில், அனைத்துப் போலி இடதுகளும் தொழிலாள வர்க்கத்தை ஆயுதம் களைய வைத்து, அதன் தோல்விக்கு வழி வகுக்கின்றன.