World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greek workers insist "The economic crisis was not caused by us"

"பொருளாதார நெருக்கடி எங்களால் ஏற்படவில்லை" என்று கிரேக்கத் தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்

By our reporters
18 March 2010

Use this version to print | Send feedback

ஏதென்ஸில் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர் குழுவினர் நகரத்தில் செவ்வாயன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் தொழிலாளர்களுடன் பேசினர்.

த்திற்கு வெளியே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள், செவிலியர்கள் அணிவகுப்பை பார்ப்போம். மருத்துவ ஊழியர்களின் முக்கிய கோரிக்கை கூடுதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவேண்டும், பணியிடத்தில் பாதுகாப்பு, கூடுதலான பணி உரிமைகள் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை. ஏதென்ஸ் மருத்துவமனையில் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற மருத்துவமனைகளுக்கும் பரவியுள்ளது; இந்த வாரம் தேசிய அளவில் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் குழு உடல் ஊனமுற்ற தொழிலாளர்களிடமும் பேசியது; அவர்கள் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு வேலைகொடுக்கும் ஒரு அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைகள், பணி உரிமைகள், கூடுதலான சமூக உரிமைகள் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதிப்பு கூட்டிய வரி (VAT) அதிகப்படுத்தப்பட்ட அதே சமயத்தில் PASOK அரசாங்கம் சமீபத்தில் அதன் 4.8 பில்லியன் யூரோ சிக்கனப் பொதியையும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. தனியார் துறைக்கான கிரீஸ் தொழிலாளர்களுக்கான பொதுக் கூட்டமைப்பு (GSEE) மற்றும் பொதுத் துறைக்கான அரசு ஊழியர் கூட்டமைப்பு (ADEDY) ஆகிய இரண்டு பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் எந்த ஒழுங்கமைந்த தொழிற்சாலை ரீதியான நடவடிக்கையையும் இரகசிய வேலைகள் மூலம் தடுத்து விட்ட நிலைமைகளின் கீழ், இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Mariki
மாரிகி

ஒரு முன்னாள் பள்ளிச் செயலாளரும் செய்தியாளருமான மாரிகி, இப்பொழுது வேலையில் இல்லை; கணினித் திறன்களை பயின்று வருகிறார். கிரேக்கத்தில் ஊனமுற்ற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி WSWS இடம் இப்பெண்மணி கூறினார்.

"நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து பணம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பார்வை அற்றவர்கள் மற்றும் இன்னும் பிற உடல்குறை உடையவர்களுக்கு வேலை கோருகிறோம். கண்பார்வை அற்றவர்களுக்கு மருந்துகள், கல்வி வாய்ப்பு வசதிகளை நாங்கள் கோருகிறோம். அரசாங்கம் பணம் வைத்திருப்பவர்கள் குறித்து தான் அக்கறை கொண்டுள்ளதே தவிர நமது சமூகப் பிரச்சினைகளை பற்றிக் கவலைப்படவில்லை.

நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னவென்றால் எங்களிடம் பணமும் இல்லை, வேலையும் இல்லை. எங்களுக்கு சிறப்புத் தேவைகள் உண்டு, எனவே கிரேக்க அரசாங்கத்திற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

"அரசாங்கத்திடம் இருந்து எனக்கு சிறு தொகை தான், 550 யூரோக்கள்தான், கிடைக்கிறது; என்னுடைய பெற்றோர்களுடன் வசிப்பதால் நான் வாடகை கொடுக்கவில்லை. இதில் இருந்து எங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்; பல நேரம் கருவிகள் விலை உயர்ந்தவை. கண்பார்வை அற்றவர்களுக்கான கைத்தடி கூட 50 யூரோக்கள் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது.

"PASOK சிறப்புத் தேவைகள் இருக்கும் மக்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. மற்ற நாடுகளில் உடல் குறைபாடு உடையவர்களுக்கு கிரேக்கத்தைவிட அதிகமாக உதவி கிடைக்கிறது. கடந்த தேர்தலில் நான் வாக்களிக்கவில்லை, ஏனெனில் சமூகப் பிரச்சினைகள், சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் தீர்வுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல்வாதிகள் எங்களை பிரதிபலிக்கவில்லை. PASOK ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று பலர் தேர்தலின்போது நினைத்தனர்; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. PASOK செல்வந்தர்களைத்தான் பிரதிபலிக்கிறது."

Nick
நிக்

ஒரு பாடகரும், பகுதி நேர மாணவருமான நிக் போயிரோஸ் கூறினார்: "இந்த எதிர்ப்பு எங்களுடைய முக்கிய தேவை வேலை என்பதை அரசாங்கத்திற்கு கூறத்தான். மக்கள்மீது பெரும் தாக்குதலை அவர்கள் நடத்துகின்றனர். சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்பே அவர்கள் வங்கிகளுக்கு 28 பில்லியன் யூரோக்களை காப்பாற்றுவதற்கு கொடுத்தனர். வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

"கிரேக்கத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஐரோப்பிய, சர்வதேச பிரச்சினைகள் என்றுதான் நான் நினைக்கிறேன். தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதின் மூலம்தான் நாம் வெற்றி அடைய முடியும். நீண்ட காலத்திற்கு முன் ஒருவர் கூறியதைப் போல, உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்."

Dimitris
டிமிட்ரிஸ்

டிமிட்ரிஸ் லிசாரிஸ் கூறினார்: "நான் ஒரு மருத்துவமனையில் வேலை பார்க்கிறேன்; எனக்கு multiple sclerosis உண்டு. எங்களுக்கு கல்வி, வேலைத்துறைகளில் பிரச்சினைகள் இருக்கிறது; எங்கள் சிகிச்சை, மருந்துகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். எங்களது முக்கிய பிரச்சினை வேலையின்மை ஆகும். உடல் குறைபாடு உடையவர்கள் பல ஆண்டுகள்கூட வேலையின்றி இருக்க நேரிடும், அவர்கள் குடும்பம் அவர்களுக்காக செலவழிக்க வேண்டியதாக உள்ளது. அரசாங்கத்திடம் இருந்து மிகக் குறைவான உதவிதான் அவர்களுக்குக் கிடைக்கிறது. சிலருக்கு 200 யூரோக்கள்தான் கிடைக்கிறது. முன்பு இருந்த கரமனலிஸ் அரசாங்கம் போலத்தான் PASOK அரசாங்கமும் உள்ளது என்று நான் நினைக்கிறேன். வேலையின்மை, வறுமை, சிறப்புத் தேவை உடையவர்கள் மீதான விடயங்களில் இவர்களும் அதேபோன்ற திட்டத்தைத்தான் கொண்டுள்ளனர்

"நான் மாதம் தோறும் 350 யூரோக்கள் வாடகை கொடுக்கிறேன். எனக்கு வேலையின் மீதான மொத்த வருமானமே 900 யூரோக்கள்தான். புதிய விலைவாசி ஏற்றத்தால் எல்லாம் அதிக செலவைக் கொடுக்கின்றன; ஊதியங்கள் குறைந்துவிட்டன. மாதத்திற்கு 100 யூரோக்கள் மருந்திற்கு கொடுக்க வேண்டியுள்ளது; நான் பிழைப்பதற்கு தேவையான கருவிகளுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. சில சமயம் இது 150 யூரோக்கள் வரை ஆகிறது."

சுகாதார அமைச்சகத்தின்முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் WSWS வசாலிசுடன் பேசியது. அவர் ஏதென்ஸில் உள்ளஅஜியா சோபியா குழந்தைகள் மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார். அவர் கூறினார்: "இந்த ஆர்ப்பாட்டம் கிரேக்கம் முழுவதும் உள்ள நர்ஸுகளைப் பிரதிபலிக்கிறது. கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நர்ஸாகிய எங்களால் தோற்றுவிக்கப்படவில்லை. நெருக்கடி எங்களுடையது அல்ல, ஆனால் நர்ஸுகளின் உரிமையை உறுதியாகப் பாதிக்கிறது.

"நாங்கள் இன்னும் அதிக நர்ஸ்கள் தேவை என்று கோருகிறோம். நான் குழந்தைகள் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுகிறேன். ஒன்பது படுக்கைகளில் இருக்கும் குழந்தைகளை நாங்கள் இரு நர்ஸுகள்தான் கவனிக்க வேண்டியுள்ளது. சில நேரம் டாக்டர்களின் வேலையையும் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. இது கடினமான ஒன்றாகும், இப்பொழுது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு ஊதியங்கள் மிகக் குறைவு, நாங்கள் 1,200 யூரோக்கள்தான் பெறுகிறோம்.

"இங்கு சுகாதார அமைச்சகத்தில் ஒரு புதிய நிர்வாகத்தைக் கோருகிறோம்; அதையொட்டி எங்களுக்கு கூடுதல் ஊழியர்கள், நல்ல ஊதியம் கிடைக்கும். ஆபத்தான நிலைமைகளில் நாங்கள் பணிபுரிகிறோம். மக்கள் இறக்கின்றனர். ஒரு ஷிப்ட்டிற்கு இரு நர்ஸுகள் 50, 60 நோயாளிகளைக் கவனிக்க முடியாது.

"PASOK ஐ பொறுத்தவரை, அவர்கள் மற்ற அரசாங்கங்களை போல்தான் உள்ளனர், பணக்காரர்களைத்தான் பிரதிபலிக்கின்றனர்."

ஏதென்ஸில் பொது மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஒரு நேர்ஸ் கூறினார்: "அவர்கள் எங்கள் ஊதியத்தை குறைப்பதால், நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மருத்துவ மனைகளில் போதிய நர்ஸுகள் இல்லாததால் நாங்கள் அதிக நேரம் பணிபுரியும் கட்டாயம் உள்ளது. 16 மணி நேரம் என இரு ஷிப்டுக்கள் உழைக்க வேண்டியுள்ளது. சுகாதார முறையின் தரம் மிக மட்டமாக உள்ளது, ஏனெனில் போதிய ஊழியர்கள் இல்லை. வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையேனும் 16 மணி நேரம் உழைக்கிறோம். சனி, ஞாயிறுகளிலும் உழைக்கிறோம், கிறிஸ்துமஸ் நேரத்திலும் உழைக்கிறோம். எங்களுக்கு ஊதியம் மிகக் குறைவு; கூடுதல் நேரம் உழைத்தாலும், அதிகப் பணம் கிடையாது. தன் பட்ஜெட் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் எங்கள் பணத்தைக் குறைக்கிறது."

Vouloa
வெளலா (இடதுபுறம்)

ஏதென்ஸில் செவ்வாய் மாலை அணிவகுப்பில் WSWS வெளலா நிகா என்னும் வேலையில்லாத தொழிலாளர், இப்பொழுது பொருளாதார அமைச்சகத்தில் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பவரிடம் பேசியது. இப்பெண்மணி சக ஊழியர்களுடன் சேர்ந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்; அவர்களும் அமைச்சகம் செய்ய வேண்டிய ஊழியக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றனர்.

அவர் கூறினார்: "பொருளாதார அமைச்சகத்தில் சேர்வதற்கான தேர்வில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். ஆயினும் இப்பொழுது வேலை இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்; எனவே பிணைக் கைதிகள் போல் உள்ளோம். எங்கள் பிரச்சினை நாங்கள் வேறு எங்கும் வேலைக்கு போக முடியாது, ஏனெனில் "நீங்கள் ஓரிரு மாதங்களில் சென்றுவிடுவீர்கள்" என்று கூறி ஒருவரும் எங்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளுவதில்லை. ஏப்ரல் 2009ல் தேர்வு எழுதினோம், இப்பொழுது மார்ச் 2010 வந்துவிட்டது. நான் 2007 கோடையில் இருந்து இதற்காகப் படித்தேன். நாங்கள் பட்டப்படிப்பு தேர்ச்சியில் அடுத்த 2013 ல் இருந்து உயர்த்தப்படுவோம் என்று கூறப்பட்டோம். நாங்கள் மொத்தம் 877 பேர் இப்படி கிரேக்கம் முழுவதும் உள்ளோம், எனவே இது ஏதென்ஸில் மட்டும் இருக்கும் பிரச்சினை இல்லை.

"PASOK அரசாங்கம் மிகக் குறைந்த வருமானம் உடையவர்களிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறது. மாதம் 10,000 யூரோக்கள் சம்பாதிப்பவர்களிடம் இருந்து அது பெறுவதில்லை, 1,500 யூரோக்கள் பெறுபவர்களிடம் இருந்து பெறுகிறது. என் பெற்றோர்கள் பொதுத்துறையில் வேலைபார்த்தனர், இப்பொழுது ஓய்வு பெற்று விட்டனர், நான் அவர்களிடம் இருந்து பணம் பெறுகிறேன். எனக்கும் வேலையில்லை, என்னுடைய சகோதரிக்கும் வேலை இல்லை. நாங்கள் எப்படி உயிர்வாழ்வது? நான்கு ஆண்டுகளாக நான் வேலையில் இல்லை, ஓராண்டிற்குத்தான் வேலையின்மை நலன்கள் கிடைக்கும். எனவே என் பெற்றோரை நம்பி வாழ்கிறேன்.

"நாங்கள் செய்யக்கூடியது எதிர்ப்புத் தெரிவிப்பதுதான். இது ஒன்றுதான் எங்கள் ஆயுதம். உலகம் முழுவதும் அனைவரையும் பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளது என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன். அமெரிக்காவிலும் ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. அங்கும் அதிக வேலையின்மை உள்ளது. வங்கிகளும், செல்வந்தர்களும்தான் அனைத்தையும் செய்தது என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் செய்த தவறுகளுக்கு நாம்தான் விலை கொடுக்கிறோம்."