World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greek trade unions close ranks behind PASOK austerity measures

PASOK யின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கிரேக்க தொழிற்சங்கங்கள் பின்னே நிற்கின்றன

By Robert Stevens and Marcus Salzmann
17 March 2010

Use this version to print | Send feedback

கிரேக்க அரசாங்கம் தன் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்குகையில், இரு பெரிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களான GSEE எனப்படும் கிரேக்க தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு மற்றும் பொதுத்துறை கூட்டமைப்பு ADEDY ஆகியவை முறையாக வேலைகள், பணி நிலைமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றிற்கு எதிரான அரசாங்க தாக்குதல்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பை முறையாக அகற்றுகின்றன.

நேற்று பொதுத்துறை முழுவதும் தொழிலாளர்கள் தொழிற்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஒரு நாள் ஆகும். முதலில் ADEDY மார்ச் 16 அன்று 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது, பின்னர் மார்ச் 11 அன்று GSEE உடன் கூட்டாக 24 மணி நேர வேலைநிறுத்தத்தின் அடிப்படையில் அது கைவிடப்பட்டது. ஆனால் வெட்டுக்களுக்கு எதிரான ஒன்றுபட்ட கூட்டு வேலை நிறுத்தம் என்பதற்கு பதிலாக, மார்ச் 16 நடவடிக்கையை கைவிட்டது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்து நெறிப்படுத்துவதைத்தான் அடையாளம் காட்டியுள்ளது.

மார்ச் 5ம் தேதி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK சமூக ஜனநாயக அரசாங்கம் இன்னும் ஒரு பொதுத்துறை ஊதியக் குறைப்புக்கள் மற்றும் வரி அதிகரிப்புக்கள் என்று 4.8 பில்லியன் யூரோக்களுக்கு ($6.5 பில்லியனுக்கு) சிக்கன நடவடிக்கைகள் பொதியை இயற்றியது. இதில் மதிப்புக் கூட்டு வரி 2 சதவிகித அதிகம், பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவிகிதக் குறைப்பு, 13, 14வது மாத சிறப்பு ஊதியங்களில் 30 சதவிகிதக் குறைப்பு, எரிபொருள், சிகரெட் வகைகள், மதுபானத்தின் மீது அதிக வரி, மற்றும் அரசாங்க நிதியில் கொடுக்கப்படும் ஓய்வூதிய முடக்கம் 2010 வரை ஆகியவைகள் அடங்கும். அரசாங்கமானது தொடக்கத்தில் கொண்டுவந்த 11.2 பில்லியன் ($15.2 பில்லியன்) சிக்கனத்திட்டம் போதாது என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன.

இந்த வாரம், முதலாவது வெட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில், ADEDY மார்ச் 23 அன்று மாலை பெயரிடப்படாத "எதிர்ப்பு அணிவகுப்பிற்கு" அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளது. அதைத்தவிர வேறு எந்த தொழில்துறை நடவடிக்கைக்கும் தேதி குறிக்கவில்லை. ADEDY ன் பொதுச் செயலாளர் Ilias Iliopoulos திங்களன்று தொழிற்சங்கம் மாதக் கடைசியில்தான் ஒரு தேதி பற்றி முடிவு எடுக்கும் என்றும், "ஈஸ்டருக்கு முன்போ, பிறகோ நடவடிக்கை இருக்கலாம்" என்றும் கூறினார்.

திங்களன்று சிக்கன நடவடிக்கைளில் உள்ள சில கடுமையான தாக்குதல்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன. VAT வரியானது பல பொருட்கள் மீது உயர்த்தப்பட்டது. இந்த அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் 1.5 பில்லியன் யூரோக்கள் அல்லது கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதம் அதிகம் பெறும். இந்த நடவடிக்கை தொழிலாள வர்க்கத்தின் மீது, குறிப்பாக மிக வறிய தட்டுக்களுக்கு பேரழிவுப் பாதிப்பைக் கொடுக்கும். Hellenic Radio கொடுத்துள்ள ஒரு மதிப்பீட்டின்படி உணவுப் பொருட்கள் போன்றவற்றில் VAT அதிகரிப்பு இல்லங்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு 1,300 முதல் 1,500 யூரோக்கள் வரை செலவுகளை கூடுதலாக்கும்.

கூடுதலான VAT அதிகரிப்பு மார்ச் 15க்கு பின்னர் அனைத்து பொருட்களுக்கு கொடுக்கப்படும் பில்களுக்கு பொருந்தும். மார்ச் 14க்கு முன்பு வாங்கப்பட்ட பொருளாக, பழைய விகிதங்கள் நடைமுறையில் இருந்தாலும், பில்கள் 15க்கு பின்னர் வழங்கும்போது இவை நடைமுறைக்கு வந்துவிடும். உணவுப் பொருட்கள், உணவு விடுதிகள், கபேக்கள், எரிபொருட்கள், மருந்துகள், தங்குமிட ஓட்டல்கள் ஆகியவற்றின்மீது VAT வரி 9ல் இருந்து 10 சதவிகிதமாக உயரும். 19ல் இருந்து 21 வரை வரி உயர்வு என்பது துணி, காலணிகள், மொபைல் தொலைபேசிகள், நவீன அலங்காரப் பொருட்கள், மதுபானங்கள், சோப்புக் கட்டிகள், மின் சாதனங்கள், மின்னணுப் பொருட்கள், தளபாடப் பொருட்கள் ஆகியவற்றின்மீது இருக்கும்.

சாலைப் பயன்பாட்டு செலவும் திங்கள் முதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை வரிகள் இப்பொழுது 2 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கும். பெட்ரோல், சிகரெட்டுக்கள், மின்சாரம், ஆடம்பர பொருட்கள் ஆகியவற்றின் மீதும் வரிகள் அதிகரித்துள்ளன. இவை இன்னும் 1.1 பில்லியன் யூரோக்களை கொண்டுவரும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

ஏதென்ஸின் வணிகச் சபையும் நான்கு ஐரோப்பிய நாடுகளின் தொழிற்துறையும் நடத்திய மதிப்பீட்டின்படி, கிரேக்க நுகர்வோர்கள் ஏற்கனவே பற்பசை, குளிர்பானங்கள் மற்றும் வாசனை திரவியப் பொருட்களுக்கு 70 சதவிகிதம் அதிகம் கொடுப்பதாகக் கண்டறிந்துள்ளது. மாவு மற்றும் மாவுப் பொருட்கள் விலையும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

பெப்ருவரி 24 மற்றும் மார்ச் 11 தேதிகளில், தனியார்துறைக் கூட்டமைப்பு GSEE மற்றும் ADEDY இரண்டும், 5 மில்லியன் தொகுப்பு உடைய கிரேக்க தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானவர்களை பிரதிநிதித்துவம் செய்பவை, இவை இரண்டும் இரண்டு மணி நேர வேலைநிறுத்தங்களை நடத்தின. இவையும் கூட அரசாங்கத்திற்கு எதிராக பெருகும் சமூகக் கோபம் அரசியல் இயக்கமாக மாறிவிடாமல் தடுக்கும் நோக்கத்தை கொண்டவை ஆகும்.

பாப்பாண்ட்ரூவின் ஆட்சி நிதியச் சந்தைகளின் அழுத்தத்திற்கு "அடிபணிகிறது" என்று எப்பொழுதாவது ஜனரஞ்சக குறைகூறல் இருந்தாலும், தொழிற்சங்கங்கள் உண்மையில் செலவினக் குறைப்புக்களை செயல்படுத்த ஒரு வழிவகையைத்தான் கொடுத்துள்ளன.

இதையொட்டி தொழிலாளர்கள் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டு இந்த வாரம் தனித்தனியே குறைந்த வரையறை உடைய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை நடத்தக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். திங்களன்று மின்சாரத் தொழிலாளர்கள், அரசாங்க DEH குழுவில் வேலை பார்ப்பவர்கள் OAED எனப்படும் தொழிலாளர் தொகுப்பிற்கு வேலைதரும் நிலையத்தின் மத்திய அலுவலகங்களை ஆக்கிரமித்தனர். நேற்று தொடங்குவதாக இருந்த இரு நாள் வேலைநிறுத்தத்திற்கு முன்பே ஊழியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இவர்கள் GENOP சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள். அவர்கள் ஊதிய வெட்டுக்களுக்கும் DEH காப்பீட்டு நிதிக்கும், அரசாங்க உதவித்தொகை 10 சதவிகிதம் குறைக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். GENOP கொடுத்த தகவல்படி, ஏழு ஆலைகள் ஏதென்ஸ், மெகலோபொலிஸ் மற்றும் டொலிமைடா ஆகியவற்றில் தொழில்துறை நடவடிக்களால் பாதிக்கப்பட்டன.

ADEDY/GSEE ஆகியவற்றின் நடவடிக்கையை போலவே, GENO யும் மிகக் குறைந்த தன்மையில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து, இதன் பாதிப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டது. தொழிற்சங்க தலைவர் Nikos Photopoulos திங்களன்று, "சில பிரிவுகள் செயல்படாது, ஆனால் இந்தக் கட்டத்தில் ஒரு விளக்கு கூட எரியாமல் இருந்துவிடக்கூடாது என்பதை விரும்புகிறோம்." என்றார்.


மருத்துவர்களும் தாதிமார்களும் உள்துறை அமைச்சரகத்திற்கு வெளியே, புதிய வேலைகள், நல்ல பணி நிலைமைகள் மற்றும் ஊதியங்களைக் கோருகின்றனர்

நேற்று மருத்துவர்களும் தாதிமார்களும் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் ஏதென்ஸின் சுகாதார அமைச்சரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். மருத்துவ ஊழியர்களின் முக்கிய கோரிக்கை இன்னும் அதிக ஊழியர்களுக்கு வேலை, நல்ல வேலை உரிமைகள், ஊதிய உயர்வு ஆகியவை ஆகும். ஒரு ஏதென்ஸ் மருத்துவமனையில் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற மருத்துவமனைகளுக்கும் பரவியது நாடு தழுவிய நடவடிக்கை இந்தவாரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் குறைபாடுடைய 50 முதல் 80 வரை தொழிலாளர்கள் உடல் குறைபாடுள்ளவர்கள் நலன் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் கூடுதல் வேலை, வேலை உரிமைகள், மற்றும் இயலாதவர்களுக்கு அதிக சமூக நலன்கள் ஆகியவற்றைக் கோரினார்கள்.


ஏதென்ஸில் அரசாங்க அலுவலகம் முன்பு உடல் குறைபாடுள்ள தொழிலாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மற்றொரு வேறுபட்ட பிரச்சனைக்கு பெட்ரோல் நிலையத் தொழிலாளர்கள் வியாழனன்று வெளிநடப்பு செய்ய உள்ளனர்.

எதிர்ப்புக்கள் அதிகரித்து, சிக்கன நடவடிக்கைகளும் சுமத்தப்பட தொடங்கிவிட்ட நிலையில், GSEE ஆனது ஒரு தேசிய நுகர்வோர் எதிர்ப்பு பிரச்சாரத்தை, தொழில்துறை நடவடிக்கைக்கு மாறாக முன்வைத்துள்ளது. மார்ச் 12 அன்று GSEE ஒரு செய்தி ஊடகத்திற்கு கொடுத்த அறிவிப்பில் VAT அதிகரிப்புக்கள் நடைமுறைக்கு வரும் மார்ச் 15 "நுகர்வோர் தினம்" எனப்பட வேண்டும் என்று கூறியதுடன், "கிரேக்கப் பொருட்களை வாங்கவும்" என்ற பிரச்சாரத்தையும் தொடக்கியது.

இந்த அறிவிப்பு கூறியது: "ஒரு சரியான, முறையான விருப்பம் நுகர்வோர் பற்றிய முடிவுகளில் தேவை. இன்னும் பொதுவாக எங்கள் உண்மையான வலிமைகள், உண்மைத் தேவைகள் பற்றி நுகர்வோர் நடவடிக்கைக்கு தரங்கள் ஏற்கப்பட வேண்டும்."

GSEE ஆனது பணமற்ற தொழிலாளர்களிடம் மலிவான (இறக்குமதி செய்யப்படும்) பொருட்களை வாங்குதல், "கிரேக்கப் பொருளாதாரத்தை பாதுகாக்க" தேவையான நாட்டுப் பற்று இல்லை என்பதற்காக திமிருடன் கடிந்து கொண்டது. "இந்த அடிப்படையில் நம் முழுக் கவனத்துடன் குறைந்த தரமுடைய பொருட்களையும் பணிகளையும் வாங்குவது என்பது ஒருவழிப்பாதையை போல்தான்" என்று அது கூறியது.

ஒரு தேசியவாத, பாதுகாப்புவாத மூலோபாயமாக, "நம் நுகர்வு நேரடியாக தேசிய உற்பத்திக்கு ஆதரவு தரும் விதத்தில்" தேவை என்று அது அழைப்புவிடுத்துள்ளது.

இடைத்தொடர்புடைய உலகப் பொருளாதாரத்தில், இத்தகைய முன்னோக்கு எந்த ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் இது ஒரு ஆழமான பிற்போக்குத்தனமான விதிமுறையாக இருக்கிறது. ஒரு மிகச் சிறிய கிரேக்கப் பொருளாதாரத்தில், உற்பத்தித்துறை அதன் மூலப் பொருட்கள், இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கு இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையில் இத்தகைய முன்னோக்கு நகைப்பிற்கு இடமாகும்.

கிரேக்கத்தின் தொழிலாளர்களை அவர்களுடைய ஐரோப்பிய வர்க்க சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நிறுத்தும் விதத்தில், GSEE ஆனது உலக நிதி மூலதனத்தின் சார்பில் தாக்குதல்களை சுமத்தும் PASOK அரசாங்கம் பற்றி குறை ஏதும் கூறுவதில்லை.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை தகர்ப்பதில்தான் அக்கறை கொண்டுள்ளன என்பது பெருகியமுறையில் வெளிப்படை என்ற நிலையில், கிரேக்கத்தின் இரு போலி இடது கூட்டணிகளான SYRIZA (Coalition of the Radical Left), Antarsya (Anticapitalist Left Cooperation for the Overthrow) மற்றும் ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) ஆகியவை அவற்றிற்கு வக்காலத்து வாங்கியுள்ளன.

SYRIZA மற்றும் Antarsya இரண்டிலும் ஏராளமான "முதலாளித்துவ எதிர்ப்பு", சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழுக்கள் அடங்கியுள்ளன. ஆனால் "சோசலிஸ்ட்", ஏன் "புரட்சிகர" என்று கூறிக்கொண்டாலும் இவை PASOK அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்று கூறுவதில்லை. தொழிற்சங்கங்களிடமும் இதே நட்பு அணுகுமுறையைத்தான் கொண்டுள்ளன.

ஒரு சமீபத்திய அறிக்கையில் SYRIZA தொழில்துறை நடவடிக்கைக்கு அழைப்புவிடாதது பற்றிக் கூட குறைகூறவில்லை, மாறாக அது "இப்பொழுது போராட்டம் தொடங்கியுள்ளது. ADEDY ஒழுங்குபடுத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவைத் தொடர்ந்து கொடுப்போம்." SYRIZA விற்கு ஒரு தீவிர மாற்றீடு என்று கூறிக்கொள்ளும் Antarsya இதே போன்ற பொது மன்னிப்பைத்தான் தொழிற்சங்கங்களுக்கு கொடுத்து, இரு முந்தைய ஒருநாள் வேலைநிறுத்தங்களையும் பாராட்டியபின், இப்பொழுது "ஒரு 48 மணி நேர பொது வேலைநிறுத்தம்" ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.