World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Union wracked by divisions over Greek crisis

கிரேக்க நெருக்கடி பற்றிய பிளவுகளால் ஐரோப்பிய ஒன்றியம் அழிக்கப்படுகிறது

By Stefan Steinberg
23 March 2010

Use this version to print | Send feedback

எல்லாவற்றிற்கும் மேலாக யூரோ பகுதியிலுள்ள 16 முக்கிய நாடுகளுக்கிடையே கிரேக்கக் கடன் நெருக்கடி பற்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயான ஆழமான தவறான நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்கங்களின் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் ஓர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள். கிரேக்க வரவு-செலவுத் திட்ட நெருக்கடி பற்றி இக்கூட்டம் குவிப்புக் காட்டும் என்று பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜோஸே மானுவல் பரோசோ ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த வாரம் கிரேக்க நெருக்கடி பற்றித் தெளிவான உடன்பாடு ஒன்றைக் காண வேண்டும், தெளிவற்ற தன்மை நிதியச் சந்தைகளின் உறுதியைக் குலைக்கிறது என்று எச்சரித்து அறிக்கை விடுத்தார்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஜேர்மனிய வானொலிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கிரேக்கமானது நிதி ஏதும் கேட்கவில்லை என்று அறிவித்தார். வரவிருக்கும் மாதங்களில் அதன் கடன்களை தீர்க்க பல பில்லியன் டொலர்களை PASOK அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க, பிணை எடுக்க, உடன்பாடு கொள்வதற்கு குறிப்பிட்ட அவசரம் ஏதும் இல்லை என்று மேர்க்கெல் உட்குறிப்பாகத் தெரிவித்தார்.

தன்னைப் பொறுத்தவரையில் கிரேக்க நெருக்கடி இந்த வார ஐரோப்பிய உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் கூட இல்லை என்று கருதுவதாக மேர்க்கெல் கூறினார்.

ஜேர்மனிய அதிபரின் அறிக்கைகள் இன்னும் ஆத்திரமூட்டும் தன்மை பெற்றவை. ஏனெனில் கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு நிதிய மீட்புத் திட்டத்திற்கு உடன்படவில்லை என்றால், அவருடைய அரசாங்கம் கடன்களை சமாளிக்க முடியாது, அத்தகைய உடன்பாடு இல்லாதது கிரேக்க அரசாங்க பத்திரங்களுக்கு (bonds) எதிராக சர்வதேச ஊக வணிகத்தை எரியூட்டி, கிரேக்கத்தின் கடன் வாங்கும் செலவுகளை அதிகரித்து அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் சேமிப்புக்களையும் எதிர்மறையாக்குகிறது.

ஜேர்மனியின் அழுத்தத்தினால் ஐரோப்பிய ஒன்றியமானது சமூக ஜனநாயக அரசாங்கம் தன் சிக்கன நடவடிக்கைகள் மூலம் கடுமையான தாக்குதல்களை வேலைகள், ஓய்வூதியங்கள், ஊதியங்கள், வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின் மீது நடத்தி தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பை தூண்டிவிட்டதோடு, இப்பொழுது பதிலுக்கு அவசர நிதியுதவி கூடக் கொடுக்கவில்லை என்று கிரேக்க அதிகாரிகள் குறைகூறியுள்ளனர்.

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) ஐரோப்பிய ஒன்றியம் செயல்படாவிட்டால் நாடப்போவதாக பாப்பாண்ட்ரூ அச்சுறுத்தியுள்ளார். இதற்கு விடையிறுக்கும் வகையில் ஜேர்மனிய அதிகாரிகள் கிரேக்கம் துல்லியமாக அதைச் செய்யட்டும் என்று கூறியுள்ளனர். இது IMF தலையீட்டை எதிர்க்கும் பிரான்ஸ், பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் உறவை இன்னும் மோசமாக்கியுள்ளது.

பிரெஞ்சு நிதி மந்திரி கிறிஸ்டின் லகார்ட் சமீபத்தில் ஜேர்மனிக்கு ஐரோப்பிய நாடுகள் முகங்கொள்ளும் நெருக்கடிக்கு பொறுப்பு உண்டு என்று தெரிவித்ததுடன் பேர்லின் உள்நாட்டு தேவையை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதையொட்டி ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளின் நலிந்த ஏற்றுமதி தொழில்கள் உதவிபெறும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். லகார்ட்டின் கவலைகள் ஜேர்மனிய அதிபரால் சில நாட்களுக்குப் பின்னர் உதறித்தள்ளப்பட்டன.

போட்டி நிலைமைகள் உயர்ந்துள்ளன. பைனான்ஸியல் டைம்ஸில் ஒரு கட்டுரையில் Wolfgang Münchau, பிரஸ்ஸல்ஸில் கூடவிருக்கும் ஐரோப்பிய உச்சிமாநாட்டில் இரு விளைவுகள் வரக்கூடும் என்கிறார். கூடும் தலைவர்கள் ஒருமித்த உணர்விற்கு வரமாட்டார்கள், அல்லது "ஜேர்மனியின் கடின செயற்பட்டியலான இன்னும் கடுமையான விதிகள், வெளியேற நேரிடும் என்ற அச்சுறுத்தும் விதி ஆகியவை யூரோப் பகுதியை விட்டு ஒரு நாடு விருப்பத்திற்கு எதிராக விலகக்கூடிய கட்டாயத்தை ஏற்படுத்த" ஒப்புக் கொள்ளக்கூடும் வகையில் உடன்பாடு காண்பார்கள்.

Münchau முடிவுரையாகக் கூறுவது: "ஆனால் இரண்டில் எதுவுமே ஐரோப்பிய பொருளாதார, நாணய ஒன்றியம் என நாம் அறிந்ததற்கு முடிவின் தொடக்கத்தைக் குறிக்கும். இதுதான் மேர்க்கெல் முடிவின் உண்மையான வரலாற்று முக்கியத்துவம் ஆகும்."

ஜேர்மனிய பொருளாதாரக் கொள்கையின் உட்குறிப்புக்கள் அதன் ஐரோப்பிய அண்டை நாடுகளை பொறுத்தவரை, "யூரோப்பகுதி நெருக்கடி: உங்களையும், அண்டை நாட்டவரையும் பிச்சைக்காரராக ஆக்கிவிடுக" என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இது RMF எனப்படும் நாணய, நிதிய ஆய்வுக் குழுவால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

முன்னுரையில் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள் அறிவிக்கின்றனர்: "ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளால் வழிநடத்தப்பட்ட, யூரோப்பகுதி நாடுகள் 'பந்தயத்தின் இறுதியில்' நுழைந்துள்ளனர், இதில் வளைந்து கொடுக்கும் தன்மை, ஊதியத் தேக்கம், பகுதி நேர வேலை ஆகியவற்றிற்கு ஊக்கம் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர் பிரிவு யூரோப்பகுதியில் மூலதனத்திடம் தோற்றுவிட்டது.

"இப்பந்தயத்தை ஜேர்மனி வென்றுவிட்டது. தன்னுடைய தொழிலாளர்களை கடுமையாக மறு இணைப்பிற்கு பின்னர் பிழிந்துவிட்ட நிலையில், யூரோப்பகுதி ஜேர்மனியின் நடப்புக் கணக்கிற்கு உபரி காட்டும் நிரந்தரப் பகுதியாகிவிட்டது. சுற்றியுள்ள நாடுகளின் நடப்புக் கணக்குகளின் பற்றாக்குறைக்கு நிதி கொடுக்கிறது. நாணய ஒன்றியம் ஜேர்மனியை பொறுத்தவரை "உங்கள் அண்டை நாட்டாரை பிச்சைக்காரராக ஆக்குக" என்பதாகும், ஆனல் நிபந்தனையோ தன் தொழிலாளர்களையே முதலில் பிச்சைக்காரர்களாக ஆக்குவது ஆகும்."

பெரும் ஏற்றம் கொண்ட அதன் ஏற்றுமதி தொழிலின் அடிப்படையில்--ஜேர்மனியின் ஏற்றுமதிகளில் மூன்றில் இரு பங்கு மற்றய யூரோ வலயப்பகுதி நாடுகளுக்கும், 75 சதவிகிதம் ஐரோப்பாவிற்கும் செல்லுகிறது. இதையொட்டி ஜேர்மனி பெரிய நடப்புக் கணக்கு உபரிகளைக் கொண்டுள்ளது. இந்த உபரிகள் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஜேர்மனியின் பொருட்களை இறக்குமதி செய்யும் ஜேர்மனியின் யூரோ வலயப்பகுதி பங்காளி நாடுகளுக்கு வங்கிக் கடன்கள் கொடுக்கவும் பயன்படுகிறது.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன் இன்னும் பல முக்கிய ஐரோப்பிய நாடுகளில் இருந்து மூலதன வரவு ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளின் சொத்துக்கள் குமிழியையும் நுகர்வோர் ஏற்றத்தையும் கொடுத்து, அவற்றை ஒட்டி கிரேக்கம் மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளில் தனிக்கடன் பெருக்கத்தையும் தோற்றுவித்துள்ளது.

இந்த முழு வழிவகையும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்ற அமைப்புக்கள் ஏற்ற நிதியக் கொள்கைகளினால் உந்துதல் பெற்று முன்னேறியது. RMF அறிக்கை யூரோப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் வெறும் தொழில்நுட்பச் செயலை மட்டும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. "மாறாக, அவை ஆழமான சமூக, அரசியல் உட்குறிப்புக்களை கொண்டுள்ளன. நிதிய மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் பணவீக்கத்தை குறைத்து, தாராளமயமாக்குதலை பெருக்கி நெருக்கடி நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளையும் கொடுத்துள்ளன.... யூரோப்பகுதியை சுற்றியுள்ள நாடுகளின் இழப்பில் ஜேர்மனி ஆதிக்கம் செய்ய, வசதி செய்தது என்பதும் முக்கியமானதாகும்."

மற்றய நாடுகள் பெரும் கடன்கள் வாங்க ஊக்கம் கொடுத்த, அவற்றின் கடன்நிலையை பெருக்கி ஜேர்மனிய பொருட்களை வாங்குவதை அதிகரித்தபின், ஜேர்மனிய அரசாங்கமும் வங்கிகளும் இப்பொழுது கிரேக்க பொருளாதாரத்திற்கு உதவ முன்வர பிடிவாதமாக மறுக்கின்றன. அந்நாடு திவால்தன்மையில் இருந்து மீளும் நடவடிக்கைகளையும் திறமையாக தடுக்கின்றன. ஒரு சோவினிச பிரச்சாரத்தில் முக்கிய ஜேர்மனிய அரசியல்வாதிகளும் செய்தி ஊடகப் பிரிவினரும் கிரேக்கத் தொழிலாளர்கள்தான் நெருக்கடிக்குக் காரணம் எனக்கூறி, கிரேக்க அரசாங்கம் கடும் சிக்கன நடவடிக்கைகளை அதிகரித்து கிரேக்கத்தின் தொழிலாளர் தொகுப்பு நெருக்கடிக்கு விலைகொடுக்க செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

திவாலாகி, அபராதம் கட்டி அதன் விளைவாக யூரோப்பகுதியில் இருந்து துரத்தப்படு! இதுதான் பேர்லின் கிரேக்க அரசாங்கத்திற்குக் கொடுக்கும் தகவல் ஆகும்.

ஜேர்மனிய அரசாங்கத்தின் சோவினிச கொள்கைக்கு எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவு உள்ளது. தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதற்கு மிகத் திறைமையான நடவடிக்கைகள் மற்றும் ஜேர்மனியில் பெரும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தால் (1999-2005) இல் தொழிற்சங்கங்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் வளர்த்து அறிமுகப்படுத்தப்பட்டன.

பெருவணிக மற்றும் வங்கிகள் நிலைப்பாட்டில் இருந்து, இக்காலப் பகுதியின் வெற்றிதான் (1999-2005) அவைகள் ஏன் இப்பொழுது கவனமாக பார்த்துக் கொண்டிருப்பதற்கான ஒரு காரணம் ஆகும். அதாவது பிளவுற்றிருந்த கூட்டணியான தடையற்ற சந்தை சுதந்திர ஜனநாயகக் கட்சியும் பழமைவாத கட்சிகளுக்கு பதிலாக மீண்டும் சமூக ஜனநாயகவாதிகளும் தொழிற்சங்கமும் இணைந்த ஒரு நிர்வாகத்திற்காக.

ஜேர்மனியின் சோவினிச வெடிப்புக்கள் அதன் ஐரோப்பிய அண்டை நாடுகளில் அதேபோன்ற தேசியவாத விடையிறுப்புக்களை தோற்றுவித்துள்ளன. ஆனால் முக்கிய ஐரோப்பிய நாடுகளிடையே ஆழ்ந்த பிளவுகள் இருந்தாலும், ஒரு மையக் கருத்தில் அவை ஒற்றுமையாக உள்ளன--அதாவது நெருக்கடியின் முழு விலையையும் ஐரோப்பிய தொழிலாளர்கள் கொடுக்க வேண்டும் என்பதே அது.

சமீபத்தில் வெடித்துள்ள தேசிய தன்முனைப்புக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை அச்சுறுத்துவதோடு பெருகிய முறையில் ஐரோப்பாவை கண்டத்தின் அட்லான்டிக் கடந்த முக்கிய போட்டி நாடான அமெரிக்காவுடன் மோதலுக்கு உட்படுத்துகின்றன.

அட்லான்டிக் கடந்த போருக்குப் பிந்தைய உடன்பாடானது, மேற்கு உலகின் ஒப்புமையில் சமநிலை மற்றும் வளம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்படத் தொடங்கியது. ஒருகாலத்தில் மாபெரும் சக்தியாக இருந்த அமெரிக்கா இப்பொழுது விரைவான பொருளாதாரச் சரிவில் உள்ளது. அட்லான்டிக் கடந்த அரசியல் மற்றும் இராணுவக் கூட்டின் அச்சாணியானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு பொதுப் பனிப்போர் என்பதானது ஸ்ராலினிச அரசுகளுடன் மறைந்துவிட்டது. பல தசாப்தங்கள் பிளவிற்குப் பின்னர் ஜேர்மனி மீண்டும் ஒன்றுபடுத்தப்பட்டு, ஐரோப்பாவின் செயற்பட்டியலை செதுக்க முயல்கிறது.

இரு தசாப்தங்களுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தினதும் அதன் சார்பு நாடுகளின் சரிவிற்குப் பின்னர், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு நாட்டுத் தலைவர்கள் மறு இணைப்புக் கொண்ட ஜேர்மனி என்ன செய்யுமோ என்ற பீதியை வெளியிட்டனர். அப்பொழுது அதிபராக இருந்த ஹெல்மூட் கோல் தன்னுடைய நினைவுக் குறிப்புக்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் உத்தியோகபூர்வ விருந்தில் கூடியிருந்த அரசாங்கத் தலைவர்களிடம், "நாம் இரு முறை ஜேர்மனியை தோற்கடித்தோம், இப்பொழுது அவர்கள் மீண்டும் வந்துவிட்டனர்" என்று கசப்புடன் குறைகூறினார் என்று எழுதியுள்ளார்.

தாட்சரின் அச்சங்கள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஜனவரி 1990ல் எலிசே மாளிகை விருந்தில், மித்திரோன் மறு இணைப்பு ஜேர்மனி இன்னும் அதிக ஐரோப்பிய செல்வாக்கை, ஹிட்லர் கொண்டதைவிட, பெறும் என்று தாட்சரை எச்சரித்தார்.

ஒரு மறு இணைப்புக் கொண்ட ஜேர்மனி ஐரோப்பிய அண்டை நாடுகளின் அச்சங்களை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய சலுகையை கொடுத்துள்ளது. தன்னுடைய சுயாதீன நாணயமான Deutsch mark ஐ தான் கைவிடத்தயார் என்று அறிவித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தில் தீவிரமாக இணையும் வகையில் ஒரு கூட்டு ஐரோப்பிய நாணயத்தை ஏற்றது.

ஜனவரி 1, 1999ல் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது, இப்பொழுது அது 16 ஐரோப்பிய நாடுகளில் உத்தியோகபூர்வ நாணயம் ஆகும். 2001 ஆரம்பத்தில் கிரேக்கம் யூரோப்பகுதியில் சேர்ந்தது. அதன் நாணயத்தை கைவிட்டுவிடுவதற்கு நிபந்தனையாக ஜேர்மனி கடுமையான வரவு-செலவுத் திட்ட தரங்களை யூரோப்பகுதியில் கோரியது. எந்த உறுப்பு நாடும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆண்டு பற்றாக்குறையை கொள்ளக்கூடாது.

இப்பொழுது, 2008-2009 நிதிய நெருக்கடியை தொடர்ந்து, ஐரோப்பா முழுவதும் ஜேர்மனிய செல்வாக்கை கட்டுப்படுத்த யூரோவின் செல்வாக்கை ஏற்றல் என்பது தீவிரமாக தவறிவிட்டது என்று குறைகூறல்கள் வந்துள்ளன. ஜேர்மனி பரந்த முறையில் கண்டத்தின் மிகப் பெரிய தன்னுடைய பொருளாதாரம் என்ற வலுவைப் பயன்படுத்தி பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை அடையப் பார்க்கிறது.