World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French regional elections: second round confirms rejection of ruling party

பிரெஞ்சு பிராந்தியத் தேர்தல்கள்: ஆளும் கட்சியை நிராகரிப்பதை இரண்டாம் சுற்று உறுதிப்படுத்துகிறது

By Antoine Lerougetel and Alex Lantier
23 March 2010

Use this version to print | Send feedback

மார்ச் 21 அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று பிராந்தியத் தேர்தல்களானது, ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் தொடர்புடைய சிக்கன கொள்கைகளை ஒரு வாரம் முன்பும் முதல் சுற்றில் மிகப் பெரியளவில் நிராகரித்ததை இது உறுதிப்படுத்தியுள்ளது.

சோசலிஸ்ட் கட்சி (PS) தலைமையிலான "இடது ஒன்றிய" கூட்டணியானது பிரான்சிலுள்ள 22 பிராந்திய தலைநகரங்களில் 21 பகுதிகளில் வெற்றி பெற்றது. சார்க்கோசியின் UMP (Union for a Popular Movement) அல்ஸாசை மட்டும் கைப்பற்றிக் கொண்டது. முன்பு இதை நிர்வகித்த கோர்சிகாவில் இருந்து அகற்றப்பட்டது.

சோசலிஸ்ட் கட்சியானது சுற்றுச் சூழலியளாளர்களின் ஐரோப்பிய-சுற்றுச் சூழல் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. பிந்தையது வழக்கத்திற்கு மாறான முறையில் முதல் சுற்றில் 12 சதவிகித வாக்குகளை மொத்தமாகப் பெற்றது. அதைத்தவிர சோசலிஸ்ட் கட்சியானது ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் சோசலிஸ்ட் கட்சி மந்திரி Jean-Luc Melenchon உடைய இடது கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்தும் போட்டியிட்டிருந்தது. முதல் சுற்றில் இந்த "இடது கட்சிகள்" சோசலிஸ்ட் கட்சியிடம் இருந்து தனியே போட்டியிட்டாலும், இரண்டாவது சுற்றில் இணைந்து கொள்ளுவதாக முன்னரே ஒப்புக் கொண்டிருந்தன. 2012 ஜனாதிபதித் தேர்தலில் இக்கூட்டணி பரந்த அளவில் சோசலிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான திறனைக் கொண்டுள்ள வாகனமாகக் காணப்படுகிறது.

நாடெங்கிலும் பதிவான வாக்குகளில் இக்கூட்டணி 54 சதவிகிதத்தைப் பெற்றது. சார்க்கோசியின் UMP 27 சதவிகிதத்தைத்தான் பெற்றது. சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய மற்றய பட்டியல்களில் அதாவது "இடது ஒன்றியத்திற்கு" வெளியே இது போட்டியிட்ட இடங்களில் இன்னும் ஒரு 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது. நவ பாசிச தேசிய முன்னணி (FN) 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

Jean-Marie Le Pen உடைய FN (National Front) இரண்டாவது சுற்றில் நிற்பதற்குத் தேவையான 10 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த 12 பிராந்தியங்களில் அது தன்னுடைய பங்கை, மொத்தத்தில் பிரான்ஸ் முழுவதும் 11.4 சதவிகிதம் என்பதில் இருந்து 17 என்று உயர்த்திக் கொண்டது. Jean-Marie Le Pen, PACA (Provence-Alpes-Cote d'Azur) பகுதியில் பெற்ற வாக்குகள் 22.5 ல் இருந்து 24.9 சதவிகிதமாக உயர்ந்தது. அவருடைய மகள் Marine தொழில்துறைகள் அகற்றப்பட்டுள்ள தொழிலாள வர்க்கப் பகுதியான Nord-Pas-de-Calais ல் 18 இலிருந்து 22 சதவிகிதத்திற்கு உயர்ந்தது.

கடல் கடந்த பிரான்ஸ் பிரதேசங்களில் ஒரு சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி 75 சவிகித வாக்குகளை Guadeloupe ல் பெற்றது. Parti Populiste Martiniquais ஆனது Martinique இல் 63 சதவிகித வாக்குகளைப் பெற்றது. UMP உடன் தொடர்புடைய கட்சிகள் Guyana மற்றும் Reunion ஆகியவற்றில் வெற்றி பெற்றன.

முதல் சுற்றில் இருந்ததைப் போல், மிக அதிக வாக்காளர்கள் வாக்குப்பதிவிற்கு வரவில்லை. பிரான்சின் பதிவு செய்யப்பட்ட 44 மில்லியன் வாக்காளர்களில் 49 சதவிகிதத்தினர் வாக்குச் சாவடிகளுக்கு வரவில்லை. இது முதல் சுற்றில் இருந்த 53 சதவிகிதம் என்பதானது 1958 ஆண்டு ஐந்தாம் குடியரசு நிறுவப்பட்டதற்கு பின்னர் மிக அதிக வாக்குப் பதிவின்மை என்பதிலிருந்து சற்றுக் குறைந்தது ஆகும்.

UMP க்கு எதிரான பெரும் வெற்றியை செய்தி ஊடகமானது சார்க்கோசிக்கு தனிப்பட்ட கடுமையான பின்னடைவு என்று காட்டியுள்ளது. "நேற்று இரவில் இருந்து நம்முடைய மிக உயர் ஜனாதிபதி மிக உயர் இழப்பாளராகிவிட்டார்" என்று Le Progres de Lyon எழுதியது. வணிக நாளேடு Les Echos "இதுவரை திமிர்த்தனத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கும் சுய திருப்தியில் இருந்து நிக்கோலா சார்க்கோசி மீள்வாரா?" என்ற வினாவை எழுப்பியது.

UMP க்குள் மிக அதிகம் தென்படும் சார்க்கோசியின் போட்டியாளர் முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனின் நண்பர்கள் மார்ச் 25 அன்று வில்ப்பன் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று கூறினார்கள். வில்ப்பன் சார்பு உடைய UMP பிரதிநிதி Francois Goulard வில்ப்பன் "பிரான்சிற்கு பணி புரிய ஒரு இயக்கத்தை" நிறுவுவார் என்று அறிவித்தார். அது இந்த ஜூன் மாதம் ஒரு அரசியல் கட்சியாக நிறுவப்படும்.

நேற்று ஒரு அமைச்சரவை மாற்றத்தை சார்க்கோசி அறிவித்தார். இதன்படி தொழிலாளர் துறை மந்திரியான Xavier Darcos, Aquitaine பிராந்தியத்தின் UMP பட்டியல் தலைவர் என்ற முறையில் 28 சதவிகித வாக்குளை மட்டுமே பெற்றவரான அவர் அகற்றப்பட்டுள்ளார். தொழிலாளர் துறை மந்திரி என்னும் முறையில் அவர் திட்டமிடப்பட்டுள்ள ஓய்வூதிய வெட்டுக்களை செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்திருப்பார். இவருக்குப் பதிலாக வரவு-செலவுத் திட்ட மந்திரி Eric Woerth நியமிக்கப்பட்டுள்ளார். UMP இன் பாராளுமன்ற உறுப்பினர் François Baroin, முன்னாள் பழமைவாத ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு நெருக்கமானவர் எனக் கருதப்படுபவர் Woerth இன் பதவிக்கு வருவார்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் முடிவுகளானது, சமூக மாற்றங்களை கோரும் வாக்காளர்களுக்கும்- மக்களுக்கு எதிராக சமூக தாக்குதல் அழுத்தங்களை கொடுக்க உறுதியாக இருக்கும் கடுமையான அரசியல் ஸ்தாபனத்திற்கும் இடையேயுள்ள சமூகப் பிளவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கிரேக்கத்தின் மீது நிதியச் சந்தைகளும் சமூக ஜனநாயகப் பிரதம மந்திரி ஜோர்ஜியாஸ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கமும் தொழிலாளர்கள் மீது சுமத்தும் கடும் சிக்கனத் தொகுப்புக்கள் பற்றி தொழிலாள வர்க்கம் கொண்டிருக்கும் பெருகிய கவலைக்கு இடையேயும் இது வந்துள்ளது.

முழு அரசியல் ஸ்தாபனமும் சமூக வெட்டுக்கள் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையை ஒட்டி அரசாங்கத்தின் திடமான திட்டம் அரசாங்கச் செலவுகளை 2013 க்கு 100 பில்லியன் யூரோக்கள் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் என்று உள்ளது. தேசியக் கடன் இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவிகிதமாக உள்ளது.

UMP ஐப் பொறுத்தவரையில், முக்கிய முன்னுரிமை தொழிற்சங்கங்களுடன் ஜூலையில் திட்டமிட்டுள்ள பேச்சுவார்த்தைகளை தொடர்தல் என்று உள்ளது. பிரதம மந்திரி François Fillon ஞாயிறன்று, "மக்கள் கூறுவது சரியே, நம் வாழ்வு முறை அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. ஆனால் இது சீர்திருத்தங்களால் அல்ல. சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால் நாங்கள் இனி மேல் நிதியளிக்க இயலாது என்ற நிலையால் அச்சுறுத்தப்படுவோம்" என்றார்.

தேசிய சட்டமன்றத்தில் UMP குழுவின் தலைவரான Jean-François Copé ஓய்வூதியம், வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்கள் போன்ற "முக்கிய சீர்திருத்தங்களை" தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். "குடியரசின் மதிப்புக்களுக்கு திரும்புக" என்ற ஜனநாயக விரோத அழைப்பையும் சேர்த்துக் கொண்டார். பிரான்சில் பர்க்கா மீது தடை என்பதும் இதில் அடங்கியுள்ளது.

தொழிற்சங்கங்களும் முன்னாள் இடதுகளும் வலதுசாரி சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவைத் திரட்டுவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. முன்னாள் இடதான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) தேசிய தேர்தல்கள் அறிவிப்பானது, "வலதின் தோல்வி, கடந்த மூன்று ஆண்டுகளாக சார்க்கோசி செயல்படுத்தும் சமூகத் தகர்ப்பு முயற்சியில் இடர்படுபவர்களுக்கு நல்ல செய்தி" என்று உறுதிபடக் கூறியது".

அரசாங்கத்திற்கு ஓய்வூதிய குறைப்புக்கள் பற்றி பரிந்துரைகளைத் தயாரிக்கும் அதே வேளையில், வரம்பில்லாத பாசாங்குத்தனத்துடன் CGT தொழிற்சங்கமானது "பொருளாதார, சமூக பிரச்சினைகளில் பிற சார்புகள் வேண்டும்" என்று அறிக்கை ஒன்றில் அழைப்பு விடுத்துள்ளது.

உண்மையில், சோசலிஸ்ட் கட்சி அரசியல்வாதிகள் தங்கள் திட்டத்தில் கொடுத்துள்ள சில வெளிப்படையான கருத்துக்கள் சோசலிஸ்ட் கட்சியானது வங்கிப் பிணை எடுப்புக்கள், சமூக நலச் செலவின வெட்டுக்கள் ஆகியவற்றை உறுதியாக வலியுறுத்துகின்றன. ஜனவரி மாதம் சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலர் Martine Aubry அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரவு-செலவுப் பற்றாக்குறையை குறைக்க ஓய்வூதிய வயதை 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

ஜனாதிபதி François Mitterand (PS) க்கு முக்கிய ஆலோசகராக இருந்த Jacques Attali மார்ச் 20 அன்று மைய-இடது நாளேடு Le Monde க்குக் கொடுத்த பேட்டியில் சார்க்கோசி உறுதியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். "அவர் தன் சீர்திருத்தங்களை தொடர வேண்டும்...அதைச் செய்ய அவர் தற்காலிகமாக புகழை இழக்க நேரிடும். நீண்ட கால சீர்திருத்தத் தேவைகள் பற்றி விளக்க வேண்டும். ஓய்வூதியங்கள், தங்கியிருத்தல், இன்னும் பல பிரச்சினைகள் பற்றி."

Le Monde இன் பொருளாதார வர்ணனையாளர் Antoie Delhommais முக்கிய அரசியல்வாதிகள் கண்ணோட்டம் பற்றி குறிப்பிடத்தக்க கருத்தைக் கொடுத்துள்ளார். "அவர்களுக்கு இன்று பொய்கூறும் விருப்புரிமைதான் உள்ளது, தாங்கள் தப்பிப் பிழைத்தல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்கு இதுதான் வழி."

Delhommais இலாபமுறைக் கொள்கையை, நிதிய பிரபுத்துவத்தின் ஆணைகளை செயல்படுத்துவது ஆகியவற்றால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ள அரசியல் வர்க்கத்தின் கருத்துக்கள் பற்றி உண்மையான சித்திரத்தை வரைந்துள்ளார். அவர்கள் உண்மையைக் கூறவேண்டும் என்றால், "மிகக் கடினமான செயல் செயல்படுவது. முதலில் வேலையின்மை சரியப்போவது இல்லை....பிரான்ஸ் தன் போட்டித்தன்மையை அதிகரிக்க, போட்டியில் நிலைக்க செய்யும் ஒரே வாய்ப்பு வயிற்றை இன்னும் இறுக்கக் கட்டிக் கொண்டு, ஊதியங்களை குறைப்பதும்தான், ஜேர்மனியர்கள் பல ஆண்டுகளாகச் செய்துவருவது போல். உங்களுக்கு குறைவான ஊதியம் இருக்கும், அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும், நீண்ட ஆண்டுகளும்கூட, அப்பொழுதுதான் ஓரளவு கெளரவ ஓய்வூதியத்தை எதிர்பார்க்க முடியும். குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்புத்தான் இருக்கும், ஏனெனில் இருக்கும் மொத்தக் கடனில் நலன்புரி அரசு முடிந்துவிட்டது. முடிந்து விட்டது. நம் பற்றாக்குறையைக் குறைக்க, நம் கடன்களை அடைக்க, நாம் அதிக வரிகள் கொடுக்க வேண்டும். நாம் மட்டும் இல்லை, நம் குழந்தைகள், அவர்கள் குழந்தைகளும். அது ஒன்றுதான் கிரேக்க விதி போன்றதில் இருந்து தப்ப உதவும், அதுவும் உறுதியல்ல." என்று தொடர்ந்தார்.

இவ்வளவு நேர்மையுடன் அவர்கள் பேசினால், தொழிற்சங்கங்களும் முன்னாள் இடதும், "நாங்கள் உடன்படுகிறோம், எங்கள் வெற்று சொற்றொடர்கள் மற்றும் எப்பொழுதாவது நடைபெறும் ஒரு நாள் ஆர்ப்பாட்டங்களும் உங்கள் சீற்றத்தை வெளியிடத்தான் என்பதை உங்களுக்கு கூறுவதற்கு. அதே நேரத்தில் உங்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட இருக்கும் சமூகநலக் குறைப்புக்களுக்கும் நாங்கள் ஏற்பாடு செய்வோம்."