World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Citizens Inquiry into the Dexter Avenue Fire holds first hearing

டெக்ஸ்டர் அவென்யூ தீவிபத்து பற்றிய குடிமக்கள் விசாரணை முதல் நாள்

By a WSWS reporting team
22 March 2010

Use this version to print | Send feedback

சனிக்கிழமை அன்று டெட்ரோயிட்டில் வேன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டெக்ஸ்டர் அவென்யூ தீவிபத்து பற்றிய மக்கள் விசாரணையின் முதல் நாள் நிகழ்வாக விசாரணை ஆணையர்கள் குடியிருப்பாளர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரிடம் இருந்து டெட்ரோயிட்டில் சேவைநிறுவனங்கள் மூடப்படுதல், வீடுகள் எரிதல், எரிசக்தி பெருநிறுவனமான DTEயின் நடைமுறைகள், அரசியல் செல்வாக்கு இன்னும் நகரத்தின் பரந்த சமூக நெருக்கடி பற்றி சாட்சியங்களைக் கேட்டனர்.


விசாரணைக் குழு தலைவர் லோரன்ஸ் போர்ட்டர் ஆரம்ப அறிக்கையை அளிக்கிறார்

பெருநிறுவன நலன்களின் ஆதிக்கத்திற்குட்டபட்ட அரசியல் நடைமுறை ஒன்றின் மேற்பார்வைக்குட்பட்டிருக்கும் டெட்ரோயிட்டின் தீயகனவு போன்ற நிலைமைகளை சாட்சியங்கள் வெளிப்படுத்தின. இங்கு வசிக்கும் மக்கள் பலரும் தவறான, ஒருதலைப்பட்ச DTE கொள்கைகளைப் பற்றிக் கூறினர். சேவைப்பயன்பாடு மூடல்களின் விளைவாக காயமுற்ற, கொல்லப்பட்ட உறவினர்கள் பற்றி பலர் பேசினர். வல்லுனர்களும், ஆய்வாளர்களும் உதவி தேவைப்படுவோருக்கு உதவி கிடைக்காதது பற்றியும், மிச்சிகன் அரசியலில் DTE செலுத்தும் செல்வாக்கு பற்றியும், DTE மற்றும் அதன் முதலீட்டாளர்களின் இலாபங்கள் மற்றும் நகரத்தின் சமூக நெருக்கடியின் ஆரம்பங்கள் பற்றி விரிவாகக் கூறினர்.

விசாரணைத் தலைவர் லோரன்ஸ் போர்ட்டர் விசாரணைக்குழு சாட்சியங்களை தொகுத்து அடுத்த மாதம் தன்னுடைய தீர்ப்புக்கள் கொண்ட அறிக்கையை வெளியிடும் என்றும் அது சேவைமூடல்களை எதிர்த்து போராட்டத்தை விரிவுபடுத்த பயன்படும் என்றார். DTE மற்றும் அதன் அரசியல் தொடர்புகள் பற்றி ஆழமான விசாரணையை செய்து, மார்ச் 2 வீட்டுத்தீயில் இறந்து போன, செய்தி ஊடகத்தாலும் அதிகாரிகளாலும் துன்புறுத்தலுக்கு உட்பட்டுள்ள, மூன்று குழந்தைகளின் தாயார் சில்வியா யங்கிற்கு ஆதரவு தரும் என்றும் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினரும், முன்னாள் கிறைஸ்லர் தொழிலாளியுமான போர்ட்டர் விசாரணையின் அடுத்த கட்டப்பணி சேவைகள் ஒரு அடிப்படை உரிமைகள் என்றவகையில் அவற்றை பெறுதலுக்கான பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றார்.

விசாரணை சமீபத்திய வீடுகள் தீவிபத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மெளனம் கடைப்பிடக்கப்பட்ட பின்னர் அவர் தொடக்கினார்: "டெட்ரோயிட் தீயணைப்பு துறைத் தகவல்படி 2009ல் டெட்ரோயிட்டில் வீடுகள் தீவிபத்தில் 44 பேர் இறந்துள்ளனர். ஏற்கனவே 2010ல் குறைந்தது 16 பேர் நகரத்தில் தீவிபத்தில் இறந்துள்ளனர். இதில் 11 பேர் எவ்வித வசதிகளும் இல்லாத வீடுகளில் நடெபெற்றது" என்று அவர் குறிப்பிட்டார்.

நான்கு மணி நேர விசாரணைக் கூட்டத்தில் 75 மெட்ரோ டெட்ரோயிட் வாசிகள், மாணவர்கள், சேவைமூடல்கள் பற்றிய வல்லுனர்கள், டெட்ரோயிட்டின் சமூக நெருக்கடி வல்லுனர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் போர்ட்டருடன் நீண்டகால சோசலிச சமத்துவக் கட்சித் தலைவர் ஹெலன் ஹெல்யார்ட், ஒரு டெட்ரோயிட் பள்ளி ஆசிரியை ஹென்ரியாட்டா, உலக சோசலிச வலைத்தள நிருபர் ஜெரோம் வைட், நகரபணியாளரும் 2009 டெட்ரோயின் மேயர் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் D'Artagnan Collier ஆகியோர் இருந்தனர்.

டெக்ஸ்டர் அவென்யூவில் ஜனவரி 5ம் தேதி நடந்த இத்தீவிபத்தில், இரு உடல் ஊனமான சகோதரர்கள் 62 வயதான மார்வின் ஆலென், 61 வயதான டைரோன் ஆலென் மற்றும் 58 வயதான லின் க்ரீன் ஆகியோர் இறந்ததை விசாரிக்கும் விதத்தில் இது உள்ளது. இவர்கள் ஜூலை 2008ல் இருந்து எவ்வித வசதிகளும் இல்லாமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து மார்ச் 2ம் தேதி பங்கோர் தெருவில் ஒரு வீட்டில் தீ விபத்து நிகழ்ந்தது. அதில் ராவியோன் யங், பன்டாசியா யங், செலேனா யங் என்று 5, 4, 3 வயதுக் குழந்தைகள் DTE மின்சாரம், எரிவாயு ஆகியவற்றை வீட்டிற்கு நிறுத்தியபின் இறந்து போயினர். மாநில அதிகாரிகள் இக்குழந்தைகளின் தாயான சில்வியா யங்கிற்கு எதிராக இலக்கு கொண்டு சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். நான்கு எஞ்சிய குழந்தைகள் அவர் பொறுப்பில் இருந்த அகற்றப்பட வேண்டும் என்று முயல்கின்றனர் DTE, நகர, மாநில அதிகாரிகளின் பொறுப்பை மறைப்பதற்காக சில்வியா யங்கின்மீது தாக்குதல் நடக்கிறது என்று போர்ட்டர் விளக்கினார்.

"இவை தனிப்பட்ட சோகங்கள்மட்டும் அல்ல. இந்த நிலைமை டெட்ரோயிட்டில் நூறாயிரக்கணக்கான மக்களை எதிர்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். சேவைகள் நிறுத்தப்படல் ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் குடும்பங்கள் தேவையை ஒட்டி பாதுகாப்பற்ற முறையில் வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தங்கள் வீடுகளுக்கு பெற முயல்கின்றனர் என்று அவர் விசாரணையில் கூறினார். 2009ல் 221,000 தென்கிழக்கு மிச்சிகன் குடும்பங்களுக்கு DTE சேவையை நிறுத்திவிட்டது.

போர்ட்டரின் ஆரம்ப கருத்துக்களை தொடர்ந்து, பல அறிக்கைகள் வல்லுனர்கள், ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்டன. பின் டெட்ரோயிட் மக்களிடம் இருந்து சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் சமீபத்திய தீவிபத்துக்களில் இறந்த, காயமுற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களும் இருந்தனர். இவர்கள் DTE ன் கொள்கைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அல்லது டெட்ரோயிட் தொழிலாள வர்க்கத்தினர் வறுமையின் மற்ற கூறுபாடுகளுக்கும் சேவைகள் மூடல்களுக்கும் எதிராக நடக்கும் போராட்டங்களில் தொடர்பு உடையவர்கள் ஆவர்.

விவாதம் தீவிரமாக, பரந்த தன்மையைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேச ஆர்வம் கொண்டிருந்து, DTE கொள்கைகள், நகர, மாநில அதிகாரிகள் பற்றி விசாரணைக் குழுவினர், வல்லுனர்களிடம் பல வினாக்களை எழுப்பினர்.

டெக்ஸ்டர் அவென்யூ தீயில் இறந்து போன மார்வின் சீனியருடைய மகன் மார்வின் ஆலென் ஜூனியர் கூட்டத்தில் பேசினார். தீவிபத்திற்கு முன் மறைந்த லின் க்ரீர் DTE க்கு 150 டாலர்கள் கொடுக்க முன்வந்து சேவையை மீண்டும் துவக்க முயற்சித்தார். இது இன்னும் அதிக "தடைகளைத்தான்" விளைவித்தது என்றார் ஆலென். உண்மையில் DTE எரிவாயுக் குழாயில் இருந்து வீட்டிற்கு தொடர்பு கொள்ளும் குழாய்க்கான இணைப்பை அந்நிறுவனம் தோண்டி எடுத்திருந்தது.

தன்னுடைய தந்தையும், சிறிய தந்தையும் உடல் இயலாதோருக்கான சமூகப் பாதுகாப்பு நிதிப்பணத்தில் வாழ்ந்துவந்தனர். இது DTE எரிவாயு, மின்சாரத்திற்கு கோரும் கட்டணத்தை கொடுக்கப் போதாது என்று ஆலென் கூறினார். "மக்களைப் பற்றி DTE கவலைப்படுவதில்லை. அது இலாபத்தைத்தான் காண விரும்புகிறது. அதுதான் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது."

சில்வியா யங்கின் நெருக்கமான தோழியான பிரின்ஸஸ் ஹனிகட்டும் விசாரணையில் பேசினார். ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான ஹனிகட் DTE அவருக்கு எரிவாயு அல்லது மின்சாரம் ஏதேனும் ஒன்றிற்கு பணத்தை கட்டுமாறு கூறியதாகத் தெரிவித்தார். தான் மின்சாரத்தை விரும்பியதாகவும் அதையொட்டி ஐந்து மாதங்களாக எரிவாயு இல்லாமல் இருப்பதாகவும் கூறினார்.

சில்வியா யங் விவகாரம் பற்றிக் குறிப்பிடுகையில் ஹனிகட் விளக்கினார்: "மின்சாரம், எரிவாயு ஆகியவை வீட்டுச் சொந்தக்காரர் பெயரில் இருந்தன...அவர் குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ளுவார்; ஒரு நல்ல தாயார் ஆவார்."

WSWS க்காக சேவைகள் மூடல்களைப் பற்றி ஆய்வு செய்த ஆண்ட்ரேயா பீட்டர்ஸும், டொம் எலேயும் விசாரணைக் குழுவிடம் அறிக்கைகளை கொடுத்தனர்.

சேவைகள் மூடல் மற்றும் வீட்டுத் தீவிபத்துக்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை பீட்டர்ஸ் முன்வைத்தார். DTE, மாநில, உள்ளூர் அதிகாரிகள் கூற்றுக்களை மறுத்தார். அவர்கள் அப்பகுதி வாழ்மக்கள் முறையான ஒப்புதலில்லாத மின்விசை, எரிவாயுக் குழாய்களை தங்கள் குடும்பங்களை கடுமையான குளிர்காலத்தில் காப்பாற்ற பயன்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். "வீடுகள் தீவிபத்துக்கள் பற்றி ஆபத்தே இச்சேவைகள் வழங்கப்படாததால்தான்" என்று அவர் கூறினார்.

சேவை மூடல்களால் பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகளும் செய்தி ஊடகத்தினரும் "எரிசக்தி திருடர்கள்" என்று முத்திரையிடும் முயற்சிகளை பீட்டர் கண்டித்தார். இருக்கும் திட்டங்களின் செயலற்ற தன்மையை ஆவணப்படுத்தினார். இவைதான் தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் மூடப்படாமல் இருக்க வீட்டுக்காரர்கள் தவிர்க்க வேண்டியது எனக் கூறப்படுபவை.

இதன்பின், DTE கொள்கைகளுக்கு மாநில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதை கோடிட்டுக் காட்டினார். DTE க்கும் மிச்சிகன் அரசியல் நடைமுறைக்கும், குறிப்பாக ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உள்ள அரசியல் தொடர்புகளை பற்றியும் ஆவணப்படுத்தினார். டெட்ரோயின் மேயர் டேவிட் பிங் DTE யின் இயக்குனர் குழுவில் 20 ஆண்டுகள் இருந்தவர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மிச்சிகன், டெட்ரோயிட்டில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருந்தும், DTE, இதன் கட்டுப்பாட்டு அதிகாரம் Michigan Public Servies Commission (MPSC), ஜனநாயகக்கட்சி ஆளுனர் ஜெனிபர் கிரான்ஹோம் மற்றும் மாநிலச் சட்டமன்றம் ஆகியவற்றின் சாதக நடவடிக்கைகளால் பெரும் இலாபத்தை தொடர்ந்து ஈட்டுகிறது என்று எலே சுட்டிக் காட்டினார். DTE நிர்வாகிகளின் சொந்தச் சொத்துக் குவிப்புகளையும் அவர் கோடிட்டுக் காட்டி, நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் பற்றியும் கூறினார்--இவை முக்கிய தனியார் முதலீட்டுநிதிய, நிதிய நிறுவனங்கள் ஆகும்.

DTEயின் தலைமை நிர்வாகி ஆன்டனி எர்லே வீட்டிற்கு 2008ல் $4.7 மில்லியன் எடுத்துச் சென்றார், இந்த ஆண்டிற்குத்தான் கடைசியாக புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன, அவருடைய நிகர சொத்து $23 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று எலே கூறினார்.

குறைவூதிய இல்லங்களுக்கு சட்ட உதவி கொடுக்கும் மிச்சிகன் சட்டப்பணிகளின் மர்லின் முலேன் உம் உரையாற்றினார். டெட்ரோயிட்டில் வரி கட்டாததற்காக வீடு ஏலத்தை எதிர்கொள்ளுவோரின் எண்ணிக்கை ஓராண்டில் 1,700ல் இருந்து 8,420 என அதிகரித்துவிட்டது என்றார்.

ஒரு சேவைக்கட்டணத்தை கட்டினால் குடும்பங்களுக்கு அவை கிடைக்கும். ஆனால் "மிகச் சில குடும்பங்களால்தான் கட்டணங்களை கட்ட முடிகின்றன. மூன்று சேவைகளுமான எரிவாயு, நீர், மின்சாரம் இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் காண்கிறோம்" என்றார் அவர். $15,000 பாக்கி செலுத்த வேண்டிய நிலைமையும் சாதாரணமாக காணலாம் என்றார்.

வரி கொடுக்காததற்காக ஏலத்தில் விற்கப்பட்டதற்கு காரணம் கடந்த ஆண்டு ஏற்கபட்ட நகரசபையின் கொள்கை ஆகும். அதன்படி கொடுக்கப்படாத நீர்க் கட்டணங்கள் வீட்டுச் சொந்தக்காரர்கள் செலுத்த வேண்டிய வரியுடன் சேர்க்கப்படுகின்றன. இதையொட்டி வீட்டுச் சொந்தக்காரர்கள் அவர்கள் வீடுகளில் இருந்து நீர்க் கட்டணம் செலுத்தப்படாததற்காக வெளியே அனுப்பப்படலாம் என்று முல்லேன் விளக்கினார். மேலும் நகரவை நிறுவியுள்ள நீர் கட்டண உதவித் திட்டம் அடிப்படையில் பயனற்றது, இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள $5 மில்லியன் பெரும்பாலான பகுதி மறைந்துவிட்டது என்றார். மற்ற சேவைக்கட்டணங்களுக்கான உதவிகளுடன் ஒப்பிடும்போது, "இதில் கிட்டத்தட்ட ஏதும் இல்லை" என்று அவர் கூறினார்.

MPCC, DTE எதைக் கேட்டாலும் ஒப்புக் கொள்கிறது என்றார் முல்லனே. "ஜனநாயக, குடியரசு என்று எந்தக் கட்சி ஆளுனர் இருந்தாலும், பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை." என்றார் அவர். மருத்துவ நிலைமையை ஒட்டி 21 நாட்கள் மூடல் தாமதிக்கப்பட வேண்டும் என்ற சட்ட வலியுறுத்தல்கூட வாடிக்கையாக DTE ஆல் புறக்கணிக்கப்படுகின்றன.

தீயணைப்பு படையினரான Maurice Funchess ஒரு உருக்கமான அறிக்கையைக் கொடுத்தார்: "பல வீடுகளிலும் சட்டவிரோத எரிவாயுத் தொடர்பு இருப்பதை நான் பார்த்துள்ளேன். பல குழந்தைகளும் இதனால் கொல்லப்படுகின்றனர், தீக்காயம் பெறுகின்றன; வீடுகளில் இருப்பவை இழக்கப்படுகின்றன.... எப்படித் தப்பிப்பிழைக்கலாம் என்றுதான் குடும்பங்கள் வழிகாண முற்படுகின்றன. இவற்றைப் பார்க்கும்போது இதயத்தில் பெரும் வலி உள்ளது."

விசாரணைக் குழுவின் D'Artagnan Collier, Jerome White ஆகியோரின் கேள்விகளுக்கு பதில் கூறுகையில், Funchess சமீப ஆண்டுகளில் நகரசபை மிக அதிமாக தீயணைக்கும் திறனைக் குறைத்துவிட்டது என்றார். "15 ஆண்டுகள் முன்பு நான் வேலையில் சேர்ந்தபோது, 1,500 தீயணைக்கும் வீரர்கள் இருந்தனர். இப்பொழுது 800 பேர்தான் உள்ளனர், பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன."

கடந்த சில ஆண்டுகளில் பல தீயணைப்பு வீரர்கள் பணியின்போது உயிரிழந்உள்ளனர். "நான்கு பேர் செய்த வேலையை இப்பொழுது ஒரு தீயணைப்பு வீரர் செய்கிறார். மூடல் அறிவிப்பு ஒரு உயிரின் பெறுமதிக்கு சமமா? நான் அப்படி நினைக்கவில்லை."

உள்ளூர் வக்கீல்களுக்காக வீடுகள் தீவிபத்தை விசாரிக்கும் ஜோர்ஜ் ஸ்டீவர்ட் SOSAD (Save our Sons and Daughters) எனப்படும் எங்கள் மகன்களையும் மகள்களையும் காப்பாற்றுங்கள் என்னும் அமைப்பின் செயலராவார்; தீவிபத்துக்களில் பெரும்பாலானவை தான் விசாரித்தவரை சேவைமூடல்களால் ஏற்பட்டவை. "சேவை மூடலுக்குப் பின் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் சூடேற்றிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். "ஜப்பானில் அவற்றை விற்பது சட்டவிரோதம் ஆகும்." என்றார் அவர்.

DTE கொள்கையால் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் மனித விளைவுகளைப் பற்றி ஸ்டீவர்ட் கூறினார். டெட்ரோயிட்டில் அவருடைய குடும்பத்தினர் இருப்பதாகவும், அவர்கள் மூடப்படல் தொடர்புடைய வீடுகள் தீவிபத்துக்களில் கார்பன் மோனாக்சைட் (CO2) நச்சினால் பெரிதும் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டுள்ளனர் என்றார். "1984ல் ஒரு குழந்தையின் இறுதிச் சடங்கிற்கு நான் சென்றேன்; இப்பொழுது 2010; இன்னமும் அதைத்தான் செய்தி கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு எத்தனை குழந்தைகள் தீவிபத்தில் இறந்துள்ளன?'

"எரிசக்தி திருட்டு" என்பதைப் பொறுத்தவரையில், மக்களிடம் உள்ள தேர்வு " சட்டபூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ தப்பிப்பிழை அல்லது இறந்துபோ. என்ன வேண்டுமானாலும் செய், இல்லாவிடில் குளிரில் உறைந்து போ." என்பதே உள்ளதாக ஸ்டீவர்ட் குறிப்பிட்டார்..

பல தொழிலாளர்களும் அப்பகுதிவாழ் மக்களும் வினாக்களை எழுப்பினர். பலர் DTE யின் ஒருதலைப்பட்ச கொள்கையான சேவைகளை நிறுத்துவது அல்லது வீடுகளுக்கு தொடர்பே கொடுக்காமல் இருப்பது பற்றி எடுத்துக் கூறினர். இந்தக் குடும்பங்கள் எந்த தவறையும் செய்யாமல் வசதிகள் ஏதும் இல்லாமல் வாழும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

இரு இளம் பையன்களின் தாயாரான பெய்த் தனிப்பட்டதகவல் திருட்டினால் (identity theft), தான் மின்சாரம் இல்லாமல் வாழும் கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினார். அவருடைய தனிப்பட்ட தகவலை எவரோ பயன்படுத்துகின்றனர். அதில் DTE வாடிக்கையாளர் என்று யாரோ கையெழுத்திட்டதால், DTE இவர் கட்டணம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது என்றார்.

"என்னுடைய இரு பையன்களும வீட்டுப்பாடத்தை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செய்ய வேண்டியுள்ளது. வெப்பமும், வெளிச்சமும் இல்லாமல் வாழ்வதால் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒன்றும் நிறத்துடன் தொடர்புடையது அல்ல. இது மனித உரிமையாகும்."

இதே போன்ற அனுபவத்தை ஷரடோன் மர்ட்டின் கூறினார். "என்னுடைய பெயரில் யாரோ பதிந்து வைத்திருப்பதால் நான் மின்சாரமும், எரிவாயுவையும் பெறமுடியவில்லை. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. இவ்விதமாக ஆறு மாதங்களாக வாழ்கிறேன்."

Vernice Bailey மற்றும் அவருடைய குழந்தைகள் ஐந்து மாதகாலமாக வெப்பம், மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர். ஏனெனில் அவர்கள் குடிவந்துள்ள வீட்டில் கட்டணப்பாக்கி உள்ளது. சேவைகள் தேவை என்றால், DTE வீட்டில் இருக்கும் அனைவருடைய பிறந்த நாள் சான்றுகள், பெய்லியின் இறந்துவிட்ட உறவினரின் மரண சான்றிதழ் மற்றும் பத்திரம் ஆகிவற்றைக் கேட்கிறது. இவற்றைக் கொடுத்தபின் DTE இன்னும் மின்சார, எரிவாயுத் தொடர்பைக் கொடுக்கவில்லை.

இன்னும் பல வினாக்கள், கூட்டத்தில் இருந்து கருத்துக்கள் ஆகியவற்றிற்குப் பின்னர், விசாரணை ஆணையாளர் ஜெரோம் வைட் நகரத்தின் வரலாற்றுத்தன்மை வாய்ந்த எழுச்சி, வீழ்ச்சி பின்னணியின் டெட்ரோயிட்டின் சமூக நெருக்கடியை உள்ளடக்கி அறிக்கை ஒன்றை கொடுத்தார். ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் (UAW) இன்னும் பல தொழிற்சங்கங்கள் "தொழிலாள வர்க்கத்தின் மீது பல தசாப்தங்களாக நடத்தப்படும் தாக்குதல்" மீதான எதிர்ப்பை ஒடுக்குவதில் கொண்டுள்ள பங்கைப் பற்றி அவர் குவிப்புக் காட்டினார். இத்தாக்குதல் இப்பொழுது நகரத்தின் பரந்த பிரிவுகளில் சேவைகள் மூடப்படும் என்ற கொள்கையை ஏற்படுத்தியுள்ளது. இது DTE க்கு நலன் தரும், ஏனெனில் இலாபம் இல்லாத இடத்திற்கு அது சேவைகளை வழங்க வேண்டியதில்லை என்று அவர் எச்சரித்தார்.

ஒருகாலத்தில் அமெரிக்காவிலேயே தொழிலாளர்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை கொண்டிருந்த பெருமை டெட்ரோயிட்டிற்கு இருந்தது என்று வைட் குறிப்பிட்டார். 1930 களில் இருந்து 1960கள் வரை கார்த் தொழிலாளர்களும் மற்ற தொழிலாள வர்க்கப் பிரிவினரும் செய்த மகத்தான சமூகப் போராட்டங்களை தளமாகக் கொண்டிருந்தது என்று அவர் விளக்கினார்.

இதனால் ஆளும் வர்க்கத்தின் எதிர்தாக்குதல் நடத்துவதற்கு இலக்காக இந்நகரம் கொள்ளப்பட்டுள்ளது. UAW ஒன்றொன்பின் ஒன்றாக ஆலைகள் மூடப்பட ஒப்பந்தம் செய்து கொண்டது, அதன் முக்கிய செயலர்கள் தொழிலின் பெருநிறுவன அமைப்பிற்குள் இணைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் நீண்டகால மேயராக இருக்கும் கோல்மான் யங் போன்ற கறுப்பின அரசியல்வாதிகளை நகரத்தில் அதிகாரத்தில் உயர்த்தும் கொள்கையான அடையாள அரசியல் (Identity politics) வளர்க்கப்பட்டு கறுப்புத் தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக்கி, தொழிலாள வர்க்கம் பிளவிற்கும் உட்படுத்தப்படுகிறது. இதன் இறுதி வெளிப்பாட்டை இந்த வழிவகை பாரக் ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் கண்டுள்ளது. அவரோ வேலைகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் தொலைவிளவு தரும் தாக்குதல்களை நடத்துகிறார்.

சேவைகள் அடிப்படை உரிமைகள் என ஆக்கப்படுவதற்கு சோசலிசம் தேவை என்று வைட் கூறியபோது பெரும் கரவொலிகள் எழுந்தன. கூட்டத்திற்கு வந்தவர்கள் அவர் கோல்மான் யங், பிங், ஒபாமா பற்றி கருத்துக்கள் கூறியபோதும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் ஜோ கிஷோர் கூட்ட முடிவில் பேசினார். சோசலிச சமத்துவக் கட்சி ஏன் விசாரணயை தொடங்கியது என்ற காரணங்களை ஆராய்ந்தார். இந்த விசாரணை மகத்தான சமூக நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது, இதில் சேவைகள் மூடல்கள் அடங்கியுள்ளது என்றார்; இது "மனித உரிமைகளின் பேரழிவு" என்றார்.

மில்லியன் கணக்கான மக்களுக்கு பேரழிவு தரும் ஒரு கொள்கையில் இருந்து நேரடியாக நலன்களைப் பெறுபவர்களையும் விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. "DTE வெப்பம், மின்சாரம் கொடுக்கும் வணிகத்தில் இருப்பதாகக் கூறுவது தவறான கருத்தாகும். அது இலாபம் சம்பாதிக்கும் வணிகத்தில் உள்ளது" என்றார் அவர்.

DTE க்கும் அரசியல் நடைமுறைக்கும் இடைய உள்ள ஏராளமான உறவுகளை கிஷோர் சுட்டிக்காட்டினார். நிறுவனத்தின் கொள்கைகளை மாற்றும் எவ்விதமான முயற்சியும் பிரச்சினையைக் கொண்டுவரும், "ஏனெனில் நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளும் DTE ஐக் கட்டுப்படுத்தும் அதே நலன்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர்."

DTE நிர்வாக இயக்குனர்கள் குழுவில் 20 ஆண்டுகள் பிங் இருந்தார் என்பதைக் கூறிய அவர் "அரசாங்கத்தை பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது மட்டும் அல்ல, பெருநிறுவனங்கள்தான் அரசாங்கம்" என்றார். இந்தக் கட்டத்தில் பெரும் கரவொலி குறுக்கிட்டது.

இந்த நிலைமைக்கு எதிராகப் போரிட தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த அமைப்புக்களும் சொந்த அரசியல் திட்டமும் தேவை என்றார் கிஷோர். இப்போராட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த விசாரணை. தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்துவதையும் அதன் சுயாதீன ஒழுங்கமைப்பிற்கு ஊக்கம் கொடும் நோக்கத்தை இது கொண்டது என்றார்.

சேவை நிறுவனங்களும் அனைத்து பெரு நிறுவனங்களும் ஜனநாயக முறைப்படி இயங்க வேண்டும், தனியார் இலாப நோக்கத்திற்கு என்று இல்லாமல் சமூக நலன்களுக்காக என்ற மத்திய கோரிக்கையை கொண்ட ஒரு புதிய முன்னோக்கு தேவை என்று அவர் தொடர்ந்து கூறினார். மின்சாரம், வெப்பம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் மக்களின் ஒரு சிறிய அடுக்கின் நலன்களுக்கு இனியும் தாழ்த்தப்படக்கூடாது என்று அவர் கூறினார்.

"இதன் பொருள் சோசலிசத்திற்கான போராட்டம்" என்று கிஷோர் முடித்து, வந்திருந்தவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் ஏப்ரல் 17-18ல் மிச்சிகன் ஆன் ஆர்பரில் நடக்க இருக்கும் சமூக நெருக்கடி போர் பற்றிய அவசர மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார் (மாநாட்டைப் பற்றிய தகவலுக்கும், பதிவு செய்யவும் இங்கு அழுத்தவும்.) விசாரணைக்குழுத் தலைவர் போர்ட்டர் கூட்டத்தை ஒத்தி வைத்து இன்னும் அதிக சான்றுகள் நான்கு மணி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றார். விசாரணை அதன் அறிக்கையை வெளியிடுமுன் இன்னும் ஆதாரங்களைத் திரட்டும் என்று அவர் கூறினார்.

(சமீபத்திய டெட்ரோயிட் வீடுகள் தீவிபத்துக்கள், குடிமக்கள் விசாரணைக்குழுவின் பணி ஆகியவை பற்றிய கட்டுரைகள் அறிக்கைகள், ஒளிப்பதிவு தகவல்கள் socialequality.com/dexterinquiry. முலம் அறியப்படலாம்.)