World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British Airways strike: What happened to the pledges of international solidarity?

பிரிட்டிஷ் ஏயர்வேஸ் வேலைநிறுத்தம்: சர்வதேச ஐக்கியம் பற்றிய உறுதிமொழிகள் என்னவாயின?

By Julie Hyland
24 March 2010

Use this version to print | Send feedback

மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும் வணிகங்களும் அரசாங்கங்களும் எப்படி வேலைகள், ஊதியக் குறைப்புக்கள், பிற சிக்கன நடவடிக்கைகளை சுமத்த முடிகிறது என்பதை அறிய வேண்டுமானால், பிரிட்டிஷ் ஏயர்வேஸில் நடந்த மோதல் அதற்கு விடை கொடுக்கிறது.

பிரிட்ஷ் ஏயர்வேஸின் விமானக் குழு இருக்கும் பணி நிலைமைகளை விமான நிறுவனம் தகர்க்கும் பல முயற்சிகளுக்கு எதிராக பல தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளது. ஸ்பெயினின் Iberia விமான சேவையுடன் தங்கள் சந்தைப் பங்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ஏயர்வேஸ் இப்பொழுது 80 மில்லியன் பவுண்டுகள் செலவுகளைக் குறைத்து, ஆயிரக்கணக்கான வேலைகளை அகற்றுவதில் ஈடுபட்டுள்ளது. இத்தாக்குதலை விமான நிறுவனம் ஒருதலைப்பட்சமாக அது விமானக் குழுவின் நீண்ட தூரப் பயணத்தில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளது என்று நவம்பரில் அறிவித்தபோது தொடங்கியது. இதைத்தவிர பிரிட்டிஷ் ஏயர்வேஸ் இரு ஆண்டுகளுக்கு ஊதியத் தேக்கத்தை திட்டமிட்டுள்ளது, புதிதாக நியமனம் செய்பவர்களுக்கு குறைந்த தரத்தில் ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்துகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் உள்ள விமானக் குழு உறுப்பினர் ஒருவருடன் நடத்தப்பட்ட BBC பேட்டி ஒன்றில் அந்த உறுப்பினர் கூறினார்: "இருக்கும் ஊழியர்கள் பதவி உயர்வு கோரினால், அவர்கள் புதிய விமானிகள் குழுவில்தான் சேரவேண்டும். அதில் பறக்கும் ஒரு மணி நேரத்திற்கு 2.60 பவுண்டுகள்தான் கொடுக்கப்படும், உணவிற்கு, மேலதிக வேலை நேரத்திற்கு, தூரப்பறப்பதற்கான தனிப் பணம் கிடையாது."

நிர்வாகத்தின் தாக்குதலுக்கு தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது. பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் வேலைநிறுத்தத்தை "நியாயப்படுத்த முடியாதது" என்று கண்டனம் செய்தார். வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் இந்த நடவடிக்கை அரசாங்கம் "கண்டிக்கிறது" என்றார். தாராளவாதிகளும், கன்சர்வேடிவ்களும் கூட வேலைநிறுத்தத்தை எதிர்க்கின்றன. டோரித் தலைவர் டேவிட் காமிரோன் வேலைநிறுத்தத்தை முறிப்பவர்களுக்கு அரசியல் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

செய்தி ஊடகமும் மிகப் பெரிய அளவில் விரோதப் போக்கை காட்டியுள்ளது. இரு தனி வாக்கெடுப்புக்களில் அதிக பெரும்பான்மையினர் வேலைநிறுத்த ஆதரவைக் காட்டினாலும், விமானக் குழுதான் வாடிக்கையாக நிறுவனத்தை பிணைக்கு உட்படுத்துவதற்காக கண்டிக்கப்படுகிறது. ஒரு பத்திரிகையாளர் வேலைநிறுத்தத்தை பயங்கரவாதத்திற்கு ஒப்பிட்டு எழுதினார்.

நடைமுறைக் கண்ணோட்டத்தில் முக்கியமானது பிரிட்டிஷ் ஏயர்வேஸ் அதன் வணிகப் பங்காளிகளிடம் இருந்து முக்கிய ஆதரவைப் பெற முடிந்துள்ளது என்பதாகும். வார இறுதியில் நடந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்தின்போது, விமான நிறுவனம் வேலைநிறுத்தத்தை முறிக்கும் நடவடக்கைகளில் மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலவழித்தது. மற்ற விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், சிறப்பு விமான வாடகை நிறுவனங்களில் இருந்து பிரிட்டிஷ் ஏயர்வேஸ் 25 விமானங்களை விமான ஓட்டிகள், பிற பணியாளர்களுடன் வாடகைக்கு எடுத்தது. இதையொட்டி அதன் சில குறுகிய தூரப் பயணங்களை ஹீத்ரோ விமானநிலையத்தில் இருந்து செயல்படுத்தியது.

மலிவான Ryanair போக்குவரத்து நிறுவனம் அத்தகைய "முழு வாடகை உதவியளித்தவற்றுள் ஒன்றாகும். அதில் விமானம், குழு, பராமரிப்பு, காப்பீடு என்று அனைத்தும் உள்ளடங்கும். இதே போன்ற செயற்பாடுகள் மற்ற குறை செலவுடைய விமானப் போக்குவரத்து நிறுவனங்களான Jet2, Astraeus, Titan, Euro Atlantic, Transavia, Viking, Arkefly போன்றவற்றுடனும் செய்யப்பட்டுள்ளது. ஹீத்ரோவிற்கும் மாட்ரிட்டிற்கும் இடையே விமானங்களை அனுப்புவதற்கு Iberia உதவும்.

உலக விமானப் போக்குவரத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் கொடுக்கும் விடையிறுப்புடன் இது ஒப்பிடத்தக்கது ஆகும்.

ஏட்டளவிலேனும் Unite தொழிற்சங்கம் பிரிட்டிஷ் ஏயர்வேஸை விட பரந்த சர்வதேச தொடர்புகளைக் கொண்டுள்ளது. இத்தொடர்புகள் பிரிட்டிஷ் ஏயர்வேஸின் தலைமை நிர்வாக அதிகாரி வில்லி வால்ஷ் கனவிலும் கருத முடியாத தொடர்புத்திறனைக் கொண்டவை. அன்றாடம் திறமையுடனும் பாதுகாப்புடனும் பல விமானப் போக்குவரத்து நிலையங்களை இயக்கும் அதே மக்களை பிரதிபலிக்கும் இந்த தொழிற்சங்கங்கள் முழு தொழிலையும் ஸ்தம்பிக்கச் செய்து, பிரிட்டிஷ் ஏயர்வேஸ் அல்லது வேறு எந்த போக்குவரத்து நிறுவனத்தின் சிறந்த திட்டங்களையும் தகர்க்க முடியும்.

விமானப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் தங்கள் பணிகள், பணிநிலைமைகள் பற்றி ஒருங்கிணைந்த தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இது மிகவும் முக்கியமாகும். பிரெஞ்சு, ஜேர்மனிய, இத்தாலிய விமானப் போக்குவரத்து ஊழியர்கள் பிரிட்டிஷ் ஏயர்லைன்ஸ் கட்டாயப்படுத்தும் அதே போன்ற தாக்குதல்களுக்கு எதிராக தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அயர்லாந்தில் Aer Lingus நூற்றுக்கணக்கான விமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

தன்னுடைய வெளிநாட்டு சகபிரிவுகளுக்கு பிரிட்டிஷ் ஏயர்வேஸ் பிரச்சனை பற்றி நவம்பர் மாதமே Unite தொழிற்சங்கம் கூறியிருந்தது. அது விமானக் குழு உறுப்பினர்கள் பெரிய பெரும்பான்மையில் தொழில்துறை நடவடிக்கை வேண்டும் என்று வாக்களித்ததற்கு நான்கு நாட்கள் முன்பே நடந்தது. 154 நாடுகளில் இருக்கும் 751 தொழிற்சங்கங்களை இணைத்த மற்றும் மொத்தத்தில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ITF எனப்படும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு, அதன் கூட்டத்தை கடந்த மாதம் நடத்தியது. ETF எனப்படும் ஐரோப்பிய போக்குவரத்து தொழிலாளர்கள் மாநாடு டிசம்பர் மாதம் நடைபெற்றபோதும், ETF ன் விமானப் பணியாளர் குழு பெல்ஜியத்தில் பெப்ருவரியில் மாநாடு நடத்தியபோதும் கூடுதலான விவாதங்கள் நடைபெற்றன.

பிரிட்டிஷ் ஏயர்வேஸ் ஊழியர்களுடன் "ஒற்றுமை நடவடிக்கை", அவர்களுடைய நோக்கங்களுக்கு "பரிவுணர்வு" போன்ற பல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. ITF, ETF தவிர, ஆஸ்திரேலிய போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கம், ஜேர்மனியின் Ver.Di, மற்றும் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவில் அதே போன்ற அமைப்புக்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன.

முதல் பிரிட்டிஷ் ஏயர்வேஸ் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு, Unite ன் விமானப் பிரிவு தேசிய அதிகாரி Steve Turner அமெரிக்காவிற்கு பறந்து சென்று Teamster தொழிற்சங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். Teamsters வெளியிட்ட அறிக்கை "Uniteஇல் உள்ள நம் சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையுடன் உள்ளோம், அவர்கள் பிரிட்டிஷ் ஏயர்வேஸுடன் நியாயமான உடன்பாட்டிற்கு போராடுகின்றனர்... ITF இணை அமைப்புக்கள் உலகெங்கிலும் பிரிட்டிஷ் ஏயர்வேஸ் தொழிலாளர்களுக்கு பயணிகள் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு மதிப்பு ஆகியவற்றிற்கு போராடி வருகின்றனர்.." என்று உறுதியளித்தது.

தங்கள் பிரிட்டிஷ் சக ஊழியர்களுக்காக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து ஊழியர்களுக்கு இடையே பரந்த பரிவுணர்வும் ஆதரவும் உள்ளன. இது பல தொழிற்சங்கங்கள் கொடுத்த உறுதி மொழிகளில் முக்கியமான காரணி ஆகும். ஆனால் Unite மற்றும் Teamsters அல்லது பிற தொழிற்சங்கங்களுக்கு இடையே என்ன விவாதம் நடந்தாலும், ஒற்றுமை நடவடிக்கை என்பது செயல்பட்டியலில் இல்லை. பிரிட்டிஷ் ஏயர்வேஸ் நிர்வாகம் ஐரோப்பிய, உலகளாவிய வேலைநிறுத்த உடைப்பு முயற்சியில் ஈடுபட்டது, தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்கள் சர்வதேசரீதியாக ஒருங்கிணைந்த வகையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு ஒத்துழைக்க உதவின.

வாடிக்கையான வெற்றுச் சொற்றொடர்களை பயன்படுத்திய ITF விமானப் போக்கு வரத்து செயலாளர் Gabriel Mocho அங்கத்துவ தொழிற்சங்கங்கள் பிரிட்டிஷ் ஏயர்வேஸில் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு "ஆதரவு திரட்டும்" என்று உறுதியளித்தார்.

"இதில் ஒற்றுமை என்பதற்கு என்ன பொருள் கொண்டாலும், தாங்கள் இருக்கும் நாடுகளின் சட்டங்கள், அவற்றின் அதிகாரத்திற்கு உட்பட்டவிதத்தில் என்ன செய்யமுடியுமோ, அவைதான் என்பதாகும். விமான பணியாளர் குழு இதில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் இருந்து தரையில் இருக்கும் எரிபொருள் நிரப்புவர்கள், பயண ஊழியர்கள் வரை பிரிட்டிஷ் ஏயர்வேஸில் உள்ள சக ஊழியர்களுக்கு ஆதரவு கொடுக்க இயன்றதை செய்வார்கள் என்பதாகும்."

"நாட்டின் சட்ட திட்டங்கள்" என்பது ஒரு திசைதிருப்பும் முயற்சி பற்றிய குறிப்பு ஆகும். இதன் பொருள் பிரிட்டிஷ் ஏயர்வேஸ் நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடக்கும் வேலைநிறுத்தத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் முறிக்க முயலும்போது, தொழிற்சங்கங்கள் அதைச் செய்யுமாறு அனுமதித்தல் என்ற பொருள் ஆகும்.

வார இறுதியில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பிரிட்டிஷ் ஏயர்வேஸ் வேலைநிறுத்த முறிப்பு நடவடிக்கைகள் "உலகம் முழுவதும் சிறப்பாக தொடர்கின்றன. பிரிட்டிஷ் ஏயர்வேஸ் பயணங்களை எதிர்த்து எந்த வெளிநாட்டு விமான நிலையத்திலும் தொழில்துறை நடவடிக்கைக்கான சான்று இல்லை" என்று பெருமை அடித்துக் கொண்டது.

இந்த வாரம் முன்னதாக, பிரிட்டிஷ் செய்தி ஊடகம் ஏயர் பிரான்ஸில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் இந்த வாரம் பின்பகுதியில் பிரிட்டிஷ் ஏயர்வேஸ் தொழிலாளர்களுடன் ஒற்றுமைக்காக வேலைநிறுத்தம் செய்வர் என்று அறிவித்தது. உண்மையில் ஸ்ராலினிச தலைமையிலான CGT உட்பட தொடர்புடைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் எந்த வெளிநடப்பும் பிரிட்டிஷ் நடவடிக்கையுடன் தொடர்பில்லாமல் நடத்த முயல்கிறது, அதுவும் "பிரெஞ்சு" நலன்களுக்கு மட்டும்தான் என்றும் நடந்து கொள்கிறது. பிரிட்டிஷ் ஏயர்வேஸ் பிரச்னையில் விளையும் போட்டி நலனை பயன்படுத்தி தொழிற்சங்க அதிகாரத்துவம் தமது நிறுவனத்துடன் உடன்பாடு காண விரும்புகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சர்வதேச அளவில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கொள்கையுடன் இது இயைந்துள்ளது. அது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்கி, அழிக்க முயல்கிறது. உலக முதலாளித்துவத்திற்கு எதிராக புறநிலைத்தேவையான, முக்கியமான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசத்தாக்குதல் என்பது தொழிற்சங்கங்களுக்கு எதிராக அரசியல், அமைப்புரீதியான கிளர்ச்சி மூலம்தான் நடைபெறும்.