World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The conviction of ex-Nazi Boere and Washington's war crimes

முன்னாள் நாஜி போயருக்குத் தண்டனையும் வாஷிங்டனின் போர்க்குற்றங்களும்

Bill Van Auken
26 March 2010

Use this version to print | Send feedback

மார்ச் 23ம் திகதி ஒரு ஜேர்மனிய நீதிமன்றம் முன்னாள் நாஜி கொலைப்படை உறுப்பினர் ஹென்ரிச் போயருக்கு 65 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய போர்க்குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அளித்தது.

88 வயதான போயர் 1944ம் ஆண்டு நாஜி ஆக்கிரமிப்பு எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுத்தவர்கள் என சந்தேகத்திற்கு உட்பட்ட மூன்று டச்சுக் குடிமக்களை இரக்கமின்றிக் கொலைசெய்த குற்றச்சாட்டிற்கு உட்பட்டிருந்தார். "Germanic SS of the Netherlands" என்று அறியப்பட்டிருந்து இவருடைய பிரிவு ஒரு அடக்குமுறை நடவடிக்கையின் பகுதியாகக் கொலைகளைச் செய்திருந்தது.

போர் முடிந்த பின் நெதர்லாந்தில் இருந்து தப்பி வந்த போயர் ஜேர்மனியில் பகிரங்கமாக வாழ்ந்து கொண்டிருந்தார். 1949ல் அவர் இல்லாதபோதும் ஒரு டச்சு நீதிமன்றம் விசாரணை நடத்தி அவருக்கு ஆயுள்தண்டனை கொடுத்தது. பின்னர் இது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டபோதிலும், ஜேர்மனிய அரசாங்கம் அவரை அங்கு திருப்பி அனுப்ப மறுத்தது. 1980 களின் ஆரம்பத்தில் நாஜிப் போர்க் குற்றங்களை விசாரித்த ஒரு ஜேர்மனிய ஆணைக்குழு அவருடைய வழக்கை "போர் நடவடிக்கைகளில் ஏற்கத்தக்கவை", ஜேர்மனிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்கு விடையிறுப்பு மற்றும் சர்வதேச சட்டத்தில் நியாயப்படுத்தப்படக் கூடியது என்று கூறி தள்ளுபடி செய்தது.

இந்த நிலைப்பாட்டைத்தான் போயரே கொண்டிருந்தார், கொலைகள் செய்ததை அவர் மறுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. நூரன்பேர்க் பாதுகாப்பு என்று அழைக்கப்பட்ட முறையை அவர் மேற்கொண்டார்: அதாவது மேலிடத்து உத்தரவு பின்பற்றப்பட்டது. 2007ல் ஜேர்மனிய இதழ் Der Speigel இடம் அவர் கூறினார். "அவர்கள் எங்களிடம் தாங்கள் எதிர்த்தரப்பினர், பயங்கரவாதிகள் என்றனர். நாங்கள் சரியான செயலைத்தான் செய்தோம் என்று நினைத்தோம்."

போயர் குற்றவழக்கு, தண்டனை பற்றி செய்தி ஊடகம் கொடுத்த தகவல்கள் பல, ஹிட்லரின் மூன்றாம் குடியரசில் கொடுமைகளைச் செய்தவர்களில் தப்பிப் பிழைத்தவர்கள் விரைவில் மடிந்து கொண்டிருப்பதால் இது ஜேர்மனியின் போர்க்குற்ற விசாரணைகளில் இறுதியான சிலவற்றில் ஒன்றாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளன.

நியூயோர்க் டெய்லி நியூஸ் இதைப்பற்றி தலையங்கம் எழுதியது: "இத்தகைய நீதியை எதிர்கொள்ள தாமதத்திற்குட்பட்ட நாஜிகள் பலர் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் விரைவில் நீதியை எதிர்கொண்டே தீர வேண்டும். "கொடூரமான குற்றங்கள் இழைத்ததற்கு பொறுப்பு அழிவதில்லை. நீதியை நம்புவர்களின் பணி தீயவை புரிந்தவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வைப்பதுதான்."

போயருக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை போயருக்கு உகந்தது என்றாலும், ஆண்டுகள் கடந்ததோ, அவருடைய முதிர்ந்த வயதுக்கு கருணை காட்ட வேண்டியதில்லை என்றாலும், 80 வயதானவர்களை நீதியின் முன்நிறுத்துவதை முக்கியப்படுத்தி காட்டுவதற்கு, அத்தகைய குற்றங்களை கண்டுபிடிக்க, ஒருவரும் கிட்டத்தட்ட 7 தசாப்தங்கள் பின் செல்ல வேண்டிய தேவையில்லை.

இதே செய்தித்தாள் கடந்த மாதம் "நல்ல சிப்பாய்களுக்கு ஒரு பாராட்டு: பாக்கிஸ்தான் தலிபான் தலைவரை குறிபார்க்கும் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் தப்பாமல் கொல்கின்றன" என்று ஒரு தலையங்கம் எழுதியது.

தொலைக் கட்டுப்பாட்டின் மூலம் ஜனவரி 14 அன்று பாக்கிஸ்தானில் உள்ள தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெசுத் படுகொலை பற்றி கருத்துத் தெரிவித்த தலையங்கம், மெசுத் "கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட இலக்கு, ஏனெனில் ஆப்கானிஸ்தானத்தில் டிசம்பர் மாதம் CIA தளத்தை ஊடுருவிய தற்கொலை குண்டு ஒன்றை அனுப்பியதற்கு பொறுப்பை ஏற்றிருந்தார்; அதில் CIAயின் ஐந்து அதிகாரிகளும் இரண்டு சாதாரண ஒப்பந்தக்காரர்களும் கொல்லப்பட்டனர்" என்று எழுதியது. வாசகர்கள் "ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளியிருந்து, இத்தகைய ட்ரோன்களை இயக்கும் திறமை வாய்ந்த அமெரிக்க படையினருக்கு பாராட்டு தெரிவிக்குமாறும்" என்றும் வலியுறுத்தியது.

இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி ஆக்கிரமிப்பை ஜேர்மனிய அதிகாரிகளையும் அவர்களுடன் ஒத்துழைப்பவர்களையும் (நெதர்லாந்து, மற்ற நாடுகளில் இருந்தது போல்) கொலைசெய்தவர்களை எதிர்ப்போராளிகள் (Partisans) என்று அழைக்கப்பட்டனர். அவர்களுடைய தீரச்செயல்கள் செய்தி ஊடகத்திலும் பல திரைப்படங்களிலும் பெரிதும் போற்றப்பட்டன.

ஜேர்மனிய ஆக்கிரமிப்பாளர்கள் வாடிக்கையாக இதே எதிர்ப்புப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று விவரித்து, நீதிக்குப்புறம்பாக அவர்களைக் கொன்றதை நியாயப்படுத்தினர்.

இதே வழிவகையைத்தான் வாஷிங்டன் தன்னுடைய போர்களிலும் ஆக்கிரமிப்புக்களிலும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் பயன்படுத்தியுள்ளது. தங்கள் நாட்டை அமெரிக்கர் ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் எந்த ஆப்கான் அல்லது ஈராக்கியரும் "பயங்கரவாதி" என்று முத்திரையிடப்பட்டு அவர் கொலை செய்யப்படுவது நியாயப்படுத்தப்படும்.

65 ஆண்டுகளுக்கு முன் நெதர்லாந்தில் நடத்திய எத்தகைய குற்றங்களுக்காக ஹென்ரிச் போயர் தண்டனைக்கு உட்பட்டாரோ, அதே வகை குற்றங்களைத்தான் அமெரிக்க இராணுவம் மற்றும் CIA அன்றாட நடவடிக்கையாக செய்கின்றன. அதிக ஆயுதங்கள் கொண்ட சிறப்புப் படையினர் ஆப்கானிய எதிர்ப்பில் தொடர்படையவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை படுகொலை செய்யும் செயலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஈராக்கிலும் இதே போன்ற கொலைகார செயல்களைத்தான் அவர்கள் செய்தனர். பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுதமற்ற ஆடவர், பெண்கள், குழந்தைகள் ஆகும்.

டிசம்பர் 27 அன்று நடந்த அத்தகைய நிகழ்வு ஒன்றில், அமெரிக்க சிறப்புப் படையினர் குனார் மாநிலத்தில், 11ல் இருந்து 17 வயதான எட்டு ஆப்கானிய மாணவர்களை அவர்கள் படுக்கையில் இருந்து எழுப்பி, கைவிலங்கு இட்டு, தலையில் சுட்டுக் கொன்றனர். அத்தாக்குதலில் ஒரு விவசாயி மற்றும் இளம் விவசாயச் சிறுவனும் கொல்லப்பட்டனர். இக்கொலைகளை சாலையோர குண்டுகளை தயாரிக்க அந்த வீடு பயன்படுத்தப்பட்டது என்ற சந்தேகத்தில் இராணுவ அதிகாரிகள் இக்கொலைகளை நியாயப்படுத்தினர்.

இதே போன்ற ஒரு தாக்குதல் கஜனி மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்றபோது, ஒரு 61வயது கடைக்காரர், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்பட்டனர். முந்தைய இரவு அவர்கள் தலிபான் போராளிகளுக்கு உறைவிடம் கொடுத்தது காரணம் என்று அமெரிக்கத் துருப்புக்கள் கூறின. போயரும் SS ல் இருந்த அவருடைய கூட்டாளிகளும் இத்தகைய நடவடிக்கைகளை நன்கு அறிந்திருப்பர்.

இதைத்தவிர, எல்லைக்கு மறுபுறம் பாக்கிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் மீது ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

"2009ல் இருந்து 666 பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், குறைந்தது 20 வயதானவர்கள் பாக்கிஸ்தான் மீது ஆளில்லாமல் பறக்கும் விமானங்கள் செலுத்தும் ஏவுகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர்" என்று வாஷிங்டன் போஸ்ட் மார்ச் 21ம் திகதி எழுதியது. இங்கு "பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்திற்கு உரியவர்கள்" என்பது ஆப்கானிய வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போராளிகளை குறிக்க பயன்படுத்தப்பட்டது; இது நாஜிக்கள் கையாண்ட முறையில் இருந்து வேறுபட்டது அல்ல.

New America Foundation எனப்படும் ஒரு பெருநிறுவன ஆதரவிற்குட்பட்ட சிந்தனைக்குழு தொகுத்த புள்ளிவிவரங்களைத்தான் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது. அது டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 32 சதவிகிதத்தினர், மூன்றில் ஒருவர், நிராயுதபாணிகளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று முடிவு செய்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண குடிமக்கள் என்று பாக்கிஸ்தானிய அரசாங்க அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.

ஜேர்மனியில் தண்டனை அளிக்கும்போது நீதிபதி ஹென்ரிக் போயர் நாஜி ஆக்கிரமிப்பை எதிர்க்கும் டச்சுக்காரர்களுக்கு ஆதரவாளர்கள் என்று சந்தேகப்படுபவர்களை சுட்டுக் கொன்றது பற்றி, "உவமை இல்லாத பெரும் தீமை, கோழைத்தனம்--எந்த படையினரதும் கெளரவத்திற்கும் பொருந்ததாது" என்றார்.

பாதுகாப்பற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை 7,000 மைல்களுக்கு அப்பால் ஒரு ஒளிப்பட திரைக்கு முன்னால் உட்கார்ந்து அழுத்தி ஒன்றை அமுக்கிக் கொலை செய்பவர்களை என்ன என்று கூறுவது? இத்தகைய தொழில்நுட்பம் இருந்திருந்தால் அடொல்ப் ஹிட்லர் என்ன செய்திருப்பார் என்பதை கற்பனைதான் செய்து பார்க்க முடியும்.

வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த கட்டுரையின் முக்கிய கருத்து CIA இயக்குனர் லியோன் பனேட்டா, இப்படுகொலைகள், ஏராளமான மக்கள் கொலைகளை இயக்கப்பட்டதில் கொண்ட பங்கு பற்றியது ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் தலைவர் பைதுல்லா மெசுத்தை கொன்ற டிரோன் தாக்குல் ஒன்று பற்றி இது குவிப்புக் காட்டுகிறது. ஒரு டிரோன் காமரா மூலம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டிருந்த மெசுத் தனியாக இல்லை, அவருடைய மனைவியுடன் இருக்கிறார் என்று CIA அதிகாரிகள் பனேட்டாவிடம் கூறினர். "சுடு" என்று அவர் அவர்களுக்கு உத்தரவிட்டதை அடுத்து இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

இரக்கமற்ற கொலைக் கொள்கை என்பது இப்பொழுது "போரில் இணைச் சேதம்" என்று கூறப்படுகிறது. நிரபராதியான குடிமக்களை கொலை செய்யவது தற்செயல் நிகழ்வு அல்ல, வேண்டுமென்றே, திட்டமிடப்பட்டு நடத்தப்படும் செயல் ஆகும்.

ஒரு முந்தைய காலக் கட்டத்தில் CIA "கொலைகார நிறுவனம்" என்ற அடைமொழியைப் பெற்றது. அத்தகைய குருதிவெறிச் செயல்களை இரகசியமாக வைக்க வாஷிங்டன் முயன்றது. ஆனால் இப்பொழுது ஒபாமா உட்பட அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாக தங்கள் விரோதிகளை "தீர்த்துக் கட்டுவது" பற்ற பெருமை பேசுகின்றனர், அரசியல் நடைமுறையிலோ, செய்தி ஊடகத்திலோ இது பற்றி எதிர்க்கருத்துக்கள் எழுவதில்லை.

இத்தகைய இழிந்த அரசியல் மற்றும் அறநெறிச் சூழல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் உள்ள ஆழ்ந்த நெருக்கடியின் தவிரக்கமுடியாத வெளிப்பாடு ஆகும். நெருக்கடியை அமெரிக்க ஆளும் உயரடுக்கு வெளிநாட்டில் போர், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது முழுத்தாக்குதல் என்ற விதத்தில் தீர்க்க முற்படுகிறது.

ஒபாமா, பனேட்டா, கேட்ஸ் ஆகியோர் புஷ், சென்னி, ரம்ஸ்பீல்ட் கூட்டம் முன்பு இருந்ததைப் போலவே போர்குற்றங்கள் செய்தவர்கள் ஆவர். தனிப்பட்ட கொடுமைகள், படுகொலைகள், சித்திரவதைச் செயல்ககள் மற்றும் கூட்டு தண்டனையளித்தல் ஆகியவை ஆக்கிரமிப்புப் போர்களின் தவிர்க்க முடியாத துணை விளவுகள் ஆகும். இந்த முக்கிய குற்றங்களுக்குத்தான் தப்பிப்பிழைத்த நாஜித் தலைவர்கள் நூரன்பேர்க்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.