சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After the General Election: Where is Britain going?

பொதுத் தேர்தலுக்குப் பின்னர்: பிரிட்டன் எங்கே செல்கிறது?

Socialist Equality Party (Britain)
6 May 2010

Use this version to print | Send feedback

தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சோசலிசச் சமத்துவக் கட்சி இன்றைய பிரிட்டிஷ் பொதுத் தேர்தலை ஒரு அரசியல் மோசடி என்று விளக்கிக் காட்டியிருந்தது.

"அடுத்த அரசாங்கத்தின் அமைப்பு முறை எப்படி இருந்தாலும் அதன் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. சர்வதேச நிதிய நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தை பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்கச் செய்ய வேண்டும் என்று விழைகின்றன; இந்நெருக்கடியோ தொழிலாளர்களால் ஏற்பட்டது அல்ல." என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்திருந்தது.

கிரேக்கத்தில் சுமத்தப்பட்டுள்ள மிருகத்தனமான கடும் சிக்கன நடவடிக்கைகள் பிரிட்டனிலும் ஐரோப்பா முழுவதிலும் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு ஒரு முன்கூட்டிய அடையாளம் ஆகும். இது தொழிற் கட்சியுடன் ஒரு அரசியல் உடைவு தேவை என்பதை தொழிலாள வர்க்கத்தின் முன் வைத்துள்ளது. அக்கட்சியோ "பழைமைவாதிகளிடம் இருந்து சிறிதும் மாறுபட்டிராத பெருவணிக வலதுசாரிக் கட்சியாகும்" என்று அது வலியுறுத்தியது.

இந்த முன்கணிப்பு கடந்த நான்கு வாரங்களில் அதிகமாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொழிற் கட்சி பற்றிய எங்கள் தீர்ப்பு மில்லியன் கணக்கான தொழிலாளர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவர்கள் சரியான முறையில் டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரௌனின் தொழிற் கட்சியை வெறுக்கின்றனர். இதுதான் அது 13 ஆண்டுகள் பதவியில் இருந்ததற்கு கொடுக்கப்படும் பரிசாகும். இக்காலத்தில் தொழிற் கட்சி வரலாற்றிலேயே மிக அதிகமான அளவிற்கு செல்வத்தை தொழிலாளர்களிடம் இருந்து செல்வந்தர்களுக்கு மாற்றியதற்கு தலைமை தாங்கியது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான ஆக்கிரமிப்புப் போர்களில் பங்கு பெற்றது மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்னும் பெயரில் ஜனநாயக உரிமைகளைக் கடுமையாகக் குறைத்தது.

தொழிலாளர்களிடையே இயல்பாக உள்ள பழைமைவாத அரசாங்கம் என்ன செய்யுமோ என்பது பற்றிய விரோதப் போக்கு மற்றும் அச்சத்தின் காரணமாக தொழிற் கட்சிக்கு என்ன ஆதரவுத் தளம் இருந்தாலும், அதன் கொள்கைகள் மற்றும் அரசியல் வரலாற்றுப் போக்குகளுக்கான ஆதரவல்ல. தொழிற் கட்சிதான் டோரிக்கள் ஒருவேளை மீண்டும் பதவிக்கு வரக்கூடும் என்பதற்கு நேரடிப் பொறுப்பு கொண்டுள்ளதுடன் தாராளவாத ஜனநாயகவாதிகளின் ஆதரவிற்கும் ஒரு காரணமாக உள்ளது.

குறிப்பாக 1 டிரில்லியன் பவுண்டுகள் வங்கிகள் மற்றும் கொழுத்த பணக்காரர்கள் பிணை எடுப்பிற்கு கொடுக்கப்பட்ட பின்னர், பைனான்சியல் டைம்ஸ் நடத்திய கருத்துக்- கணிப்பு ஒன்று "சம உரிமைகள் மற்றும் நேர்மை இருக்கும் கட்சியாக தொழிற் கட்சி இப்பொழுது காணப்படுவதில்லை" என்று கண்டறிந்துள்ளது.

இதே போல் குறிப்பிடத் தக்கது உயர்ந்துவரும் சமூக சமத்துவமின்மையும் பதிலளித்தவர்களின் மிகவும் முக்கிய கவலையாக இருந்தது. வினா கேட்கப்பட்டவர்கள் பத்து பேரில் எட்டு பேர் "செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துக் கொண்டு வருகிறது" என்பதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்; அதே நேரத்தில் நான்கில் மூவர் "அடுத்த அரசாங்கம் இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்."

இந்த ஆய்வுகள் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு பரந்த இடதுசாரி உணர்வின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. ஆனால் இதற்கு உத்தியோகபூர்வ அரசியலில் எந்த வெளிப்பாடும் இல்லை.

"உறுதி", "மாற்றம்" அல்லது "நியாயமானது" என்ற தகவல் அறிவிப்புக்களுக்குப் பின் மூன்று கட்சிகளும் தொழிலாளர்கள், இளைஞர்கள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகளில் மௌனம் காக்கின்றன. தொழிற் கட்சியின் பதவிக்காலம் முழுவதும் தொடரப்பட்டிருந்த இராணுவவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு தொடர்வதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இவை அனைத்துமே ஊழியங்கள், ஊதியங்கள் மற்றும் பொதுச் செலவுகள் குறைப்புக்களைச் செய்ய விரும்புகின்றன என்பதுடன் அவை 1930 களின் பெருமந்தநிலைக்கு பின்னர் காணாத அளவிற்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவேதான் உலக மந்த நிலை அல்லது அவர்கள் விரும்பும் குறைப்புக்கள் பற்றிய குறிப்புக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கிட்டத்தட்ட உத்தியோகபூர்வ விவாதங்களில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டிருந்தன. இதனால் ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் இத்தகைய வெளிப்படை பொய்கள் மற்றும் தவறான தகவல்கள் அடிப்படையில் அமைக்கப்படும் எந்த அரசாங்கமும் பெருவணிகம் மற்றும் வங்கிகளின் ஆணைகளைச் சுமத்துவதற்கு மக்களிடம் இருந்து அதிகாரத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளன.

இத்தகைய ஆபத்துக்கள் பற்றிய கருத்துக்களை எழுப்புவதில் அதிகமாக வலியுறுத்துபவற்றுள் பைனான்சியல் டைம்ஸும் உள்ளது. தன்னுடைய ஏப்ரல் 30 தலையங்கத்தில் அது எந்தக் கட்சியும் அதன் நிதியத் திட்டங்களை விளக்கவில்லை என்றும் இதற்குக் காரணம் விவரங்கள் மிகவும் "அதிர்ச்சியைத் தருவதாக இருக்கும்" என்றும் விளக்கியுள்ளது. ஆனால், "எந்தக் கட்சி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது பொதுத்துறை ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் ஊதியத்தைக் குறைக்கும், நலன்களைக் குறைக்கும், ஓய்வூதியங்களைக் குறைக்கும், பணிகளை அகற்றும்" என்று கூறியுள்ளது.

வாக்காளர்கள் "தங்கள் வாழ்விலேயே பெரும் அதிரச்சியை எதிர்கொள்ள இருக்கின்றனர் என்ற உண்மையை அறியும்போது பெரும் சீற்றத்துடன் விடையிறுப்பர். மேலும் அவர்களுடைய கோபம் வங்கியாளர்கள் அல்லது அதிகாரத்துவத்தினர்மீது செலுத்தப்பட மாட்டாது. அது பொது மக்களிடம் இருந்து தங்கள் திட்டங்களை மறைக்கும் அரசியல்வாதிகள் மீது இலக்கு கொண்டிருக்கும்" என்று அது எச்சரித்துள்ளது.

தாராளவாத ஜனநாயகவாதிகள் அரசாங்கத்தில் ஒருவேளை பங்கு பெறக்கூடும் என்பது பற்றிய செய்தி ஊடகத்தின் குவிப்பு முற்றிலும் நெறியற்றது என்று கருதப்படுவதை நெறியாக்கும் நோக்கத்தைக் கொண்டது. கன்சர்வேடிவ்களுடன் இணைந்து உழைப்பதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவது பற்றிய உடன்பாடு ஒன்றும் முன்னிபந்தனை அல்ல என்று அறிவித்த தாராளவாத ஜனநாயகவாதிககளின் தலைவர் நிக் கிளெக், டோரித் தலைவர் டேவிட் காமிரோனுக்கு தனியே செல்வது "ஆழ்ந்த அரசியல் சமூக அழுத்தங்களுக்கு ஒரு செயல்முறை ஆகும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

உண்மையில், தாராளவாத ஜனநாயகவாதிகள் அத்தகைய மறைப்பு கொடுப்பதற்கு அசாதரணமான முறையில் வலுவற்று உள்ளனர். செய்தி ஊடகத்தால் எவருக்கும் பெரும்பான்மை இல்லை எனினும் அவர்கள் தொங்கு பாராளுமன்றத்தில் தடுப்புச் செல்வாக்கு இருப்பதாக உயர்த்தப்பட்டுள்ளனர்; ஏனெனில் உண்மையில் அவர்கள் பொதுச் செலவுகளைக் குறைக்கும் தேவையுடன் முழு உடன்பாடு கொண்டுள்ளனர். அவர்கள் பழைமைவாதிகள் அல்லது தொழிற் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டாலும், தாராளவாத ஜனநாயக வாதிகளை கிளெக் எந்தக் கூட்டணிக்கும் தயார் செய்யும் விதத்தில் "மிருகத்தனமான குறைப்புக்களை" செயல்படுத்த தன் உறுதியைக் கொடுத்துள்ளார்.

இப்பொழுது தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் நிலைமை பற்றி அடிப்படையான முடிவுரைகள் எடுக்கப்பட வேண்டும். தேர்தல்களுக்கு பின்னர் வெளிப்படும் எந்தக் கட்சிகளின் கூட்டும் ஒரு வலதுசாரி தனிக்குழு போல்தான், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொருளாதார, சமூகப்போரை நடத்த முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட அமைப்பாக செயல்படும்.

இது உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் விளைவாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புத்தன்மை மறு எழுச்சி கொண்ட ஒரு முனையைத்தான் பிரதிபலிக்கிறது. இதன் எதிரிடை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சமூக மற்றும் அரசியல் இயக்க வடிவத்தை முதலாளித்துவம் மற்றும் அதன் கட்சிகள் சிக்கனம், இராணுவ வாதம் மற்றும் போருக்காகக் கொண்டிருக்கும் உந்துதலுக்கு எதிர்ப்பாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிய ஊகவணிகர்களின் ஆணையை ஒட்டி PASOK அரசாங்கம் சுமத்தும் வெட்டுக்களுக்கு எதிராக கிரேக்க தொழிலாள வர்க்கம் கொண்டுள்ள பெருகிய எதிர்ப்பு ஐரோப்பா முழுவதும் இதே போன்ற போக்குகள் வருவதற்கு ஒரு முன்னோடி நிகழ்வு ஆகும்.

தங்கள் பழைய கட்சிகள், தொழிற்சங்கங்கள் முட்டுச் சந்திற்கு வந்துவிட்ட நிலைமைகளில் தொழிலாளர்களின் இந்த இயக்கம் வெளிப்பட்டுள்ளது. பல தசாப்தங்கள் ஒரு காலத்தில் உத்தியோகபூர்வ தொழிலாளர்களின் இயக்கமாக இருந்த இயக்கத்தின் நீடித்த இழிசரிவு மற்றும், இழிந்த தன்மையின் முழுத் தன்மையைக் காட்டுவதுடன் அவை எவ்வாறு நிதியத் தன்னலக்குழுவின் அப்பட்டமான கருவிகளாக மாறிவிட்டன என்பவற்றின் முழுப் பரப்பையும் நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இப்பொழுது தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக பங்காற்றும் ஒரு பிரிவாக அரசியல் வாழ்வில் மீண்டும் வெளிப்படுவதற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பணி புதிய அமைப்புக்களைக் கட்டமைப்பது ஆகும்; அவற்றின் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு மறு தாக்குதலை நடத்துவது ஆகும்—எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புதிய சோசலிச சர்வதேசிய அமைப்பை நிறுவுவது ஆகும். அக் கட்சிதான் சோசலிச சமத்துவக் கட்சியாகும். பொதுத் தேர்தல்களினல் நம் பிரச்சாரம் அத்தகைய மாற்றத்திற்கு அஸ்திவாரங்களை அமைப்பது பற்றிய இயக்கத்தைக் கொண்டுள்ளது.; அதுதான் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு ஒரு அரசியல் தன்மையில் முழு உணர்வைக் கொண்டிருக்கும். எங்கள் விஞ்ஞாபனத்துடன் உடன்படும், நம் பிரச்சாரத்தை கவனித்து வரும் அனைத்துத் தொழிலாளர்கள், இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேரமுடிவெடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.