சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Science, religion and society: Richard Dawkins’s The God Delusion

விஞ்ஞானம், மதம் மற்றும் சமூகம்: ரிச்சார்ட் டௌகின்சின் The God's Delusion

By Joe Kay
15 March 2007

Use this version to print | Send feedback

புத்தகம் - The God's Delusion, எழுதியவர் - ரிச்சார்ட் டௌகின்ஸ், பதிப்பகம் - ஹாக்டன் மிஃப்ளின், 2006, 416 பக்கங்கள்.

ரிச்சார்ட் டௌகின்ஸின் THE GOD'S DELUSION, புத்தகத்தைப் பார்ப்பது உற்சாகமளிக்கிறது. உலகின் முன்னணி பரிணாம உயிரியியல்வாதிகளில் ஒருவர், நாத்திகத்திற்கு ஆதரவான கருத்துக்களுடன் ஒவ்வொரு நாளும் எழுத்துக்களை அர்பணித்துவிடுவதில்லை. மதமும், விஞ்ஞானமும் ஒன்றோடொன்று முரண்பட்டிருக்கிறது, அதில் விஞ்ஞானமே வெற்றி பெறும் என்ற வழக்குமொழியை டௌகின்ஸ் ஏற்புடையதாக செய்திருந்தால், அவர் நமக்கு ஓர் உதவியைச் செய்தவராக இருப்பார்.

THE GOD'S DELUSION, புத்தகம், அமெரிக்கா உட்பட பொதுவாக தொழில்மயமான நாடுகளின் மிக மதவாத மக்களிடமிருந்தும் கூட, ஓர் உற்சாகமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நியூயோர்க் டைம்ஸின் திகில்-சாராத விஞ்ஞான புத்தகப்பிரிவில் சிறந்த விற்பனையைப் பெற்ற புத்தகங்கள் பட்டியலில் டௌகின்ஸின் புத்தகம் முதல் 15 இடங்களில் 24 வாரங்களுக்கு இடம் பெற்றிருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, (கான்சாஸ் போன்ற) சில மாகாணங்கள் உட்பட, மத அடிப்படைவாதத்தோடு மிக அதிகமாக தொடர்புடைய, பெருமளவிலான அனுதாபிகளை டௌகின்ஸ் கவர்ந்திருந்தார்.

சந்தேகத்திற்கு இடமின்றி, டௌகின்ஸிற்காகவே இந்த புத்தகத்தின் மீது சிறிது ஆர்வம் கூடியிருந்தது. The Selfish Gene உட்பட, இவருடைய புத்தகங்கள் பரிணாம உயிரியியலில் ஒரு தரமான எழுத்துக்களாக இருக்கின்றன. அவர் கூறும் பரிணாம (evolution) கோட்பாட்டைக் குறித்து எல்லாவற்றையும் ஒருவர் ஏற்றுக்கொள்கிறாரோ, இல்லையோ, ஆனால் நிச்சயமாக சிக்கலான விஷயங்களை நேரடியாகவும், தெளிவான மொழியிலும் விவரிக்கும் திறமையைப் பெற்ற ஓர் எழுத்தாளராக டௌகின்ஸ் இருக்கிறார்.

எவ்வாறிருப்பினும், இதற்கு மேற்பட்டும் பல விஷயங்கள் உள்ளடங்கி உள்ளன. ஊகிக்கக்கூடிய வகையில், உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடைமொழிகளுக்கு சவால்விடும் கண்ணோட்டங்களுக்கும், மாற்று முன்னோக்கிற்கும் ஒரு தேடல் இருக்கிறது. வெளிப்படாத மற்றும் பரவலான எதிர்ப்புணர்வும் இருக்கிறது. மேலும் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொடர்ந்து அரசாங்கங்களைப் பாத்திரப்படுத்தி வரும் மத அடிப்படைவாதத்திற்கும், பின்தங்கிய நிலைக்கும் டௌகின்ஸின் புத்தகம் ஓர் ஆழ்ந்த எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. மதத்தின் "ஆற்றுப்படுத்தலுக்கு" எதிராக மதம் குறித்த டௌகின்ஸின் வெளிப்பாடுகள், குறிப்பிடத்தக்க அளவிற்கும் அதிகமாகவே வரம்பிற்குட்பட்டு இருப்பதைக் காண முடிகிறது, இவற்றைப் பின்னால் பார்ப்போம். எவ்வாறிருப்பினும், பல்வேறு பிரிவுகளின் மத மரபுகளுக்கு மட்டுமே சவால்விடுவதாக அமைந்துவிடாமல், மாறாக விஞ்ஞான சமூகத்திற்குள் மதம் மற்றும் விஞ்ஞானம் இரண்டையும் இணக்குவிக்க முயற்சிப்பவர்களுக்கும் சவால்விடும் வகையில் இந்த புத்தகத்தின் பெரும்பாலான எழுத்துக்கள் அமைந்துள்ளன. அடிப்படைவாதமல்லாத மத உட்கூறுகளை இணைப்பதன் மூலம் அடிப்படைவாதிகளிடமிருந்து (பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இருந்து பரிணாமக்கல்வியைத் தடுக்க விரும்புபவர்களைப் போன்றவர்கள்) விஞ்ஞானத்தைக் காப்பாற்றி விடலாம் என்பதே இந்த சிந்தனையாளர்களின் (விஞ்ஞானத்தையும், மதத்தையும் இணைவிக்க முயல்பவர்கள்) முன்னோக்காகும். இவர்களை டௌகின்ஸ் "Neville Chamberlain School of Evolutionists" என்று குறிப்பிடுகிறார். இந்த சிந்தனையாளர்களைப் பொறுத்த வரையில், மதமும், விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லை, ஒருவேளை அவை இணைந்து முழுமையாக இருக்கின்றன, அல்லது குறைந்தபட்சம் அவை வெவ்வேறு கேள்விகளைக் கையாள்கின்றன என்று கூறுவதன் மூலம் செய்யப்படுகிறது.

மறைந்த பரிணாம உயிரியியல்வாதி ஸ்டீபன் ஜெ. கௌல்டு இந்த முன்னோக்கோடு மிகவும் நெருக்கமாக தொடர்புபட்டவர். ஒரு மேலெழுந்தவாரியான சிந்தனையைக் கொண்டு மூடி மறைக்க, "ஒன்றில் ஒன்று குறிக்கிடாத மேலாண்மைத்தன்மை" என்ற வெற்று வார்த்தையைப் பயன்படுத்தி அவர் எதைக் குறிப்பிட்டாரோ, அதன் மூலமாக விஞ்ஞானமும், மதமும் ஒன்றுக்குள் ஒன்று பொருந்துகின்றன என்று அவர் வாதிடுகிறார். கௌல்டு ஒருமுறை எழுதியதை டௌகின்ஸ் மேற்கோளிட்டு காட்டுகிறார், "பழைய கூற்றுக்களை மேற்கோளிட்டுக் காட்டுவதானால், விஞ்ஞானம் பாறைகளின் காலத்தை ஆராய்கிறது, மதம் காலங்களில் இருந்து பாறைகளைப் பெறுகிறது; சொர்க்கங்கள் எவ்வாறு செல்கின்றன என்று விஞ்ஞானம் ஆராய்கிறது, மதம் சொர்க்கத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று எடுத்துக்காட்டுகிறது" என்றார். டௌகின்ஸ் இதற்கொரு பொருத்தமான பதிலை அளிக்கிறார்: "இதைப் பற்றி உடனடியாக நீங்கள் சிறிதாவது சிந்திக்காத வரை---இந்த வார்த்தைகள் அருமையாக தான் இருக்கும்."

டௌகின்ஸின் முக்கிய முறையீடுகளில் ஒன்று, "ஒரு படைப்பாற்றல்மிக்க பேரறிவு நடைமுறையில் இல்லாமல் ---அல்லது இப்போதைக்கு நடைமுறையில் இல்லாமல்--- தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றாலும் கூட, அது இருக்கிறது அல்லது இல்லையென்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு விஞ்ஞான கேள்வியாக இருக்கிறது. அற்புத கதைகளில் ஒவ்வொருவருக்கும் சரியென்றோ அல்லது தவறென்றோ கருதுகோள் இருக்கிறது, நம்பிக்கையாளர்களின் கூட்டத்தைக் கவர்ந்திழுக்க அத்தகைய அற்புத கதைகளையே மதங்கள் சார்ந்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுள் இருக்கிறார் என்றால், அதுவும் அவர் அனைத்துவிதமான கருத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்கிறார் என்றால், அவரோ/அதுவோ உலகில் ஆதிக்கம் கொண்டிருக்கிறது. நிச்சயமாக, இதுவே உலகில் கடவுளின் தலையீடு இருக்கிறது, அற்புதங்களைச் செய்கிறார், பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கிறார் என்பது போன்ற இதர பிறவற்றை நம்பும் பெரும்பாலான மத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பிரார்த்தனைகளைப் பெறாத நோயாளிகளை விட பிரார்த்தனைகளைப் பெறும் நோயாளிகள் சிறப்பாக குணமடைந்துவிடுவதில்லை என்று காட்டும் ஓர் ஆய்வு கண்டுபிடிப்பை டௌகின்ஸ் மேற்கோளிட்டு காட்டுகிறார். இது ஏதோவொருவகையில் சிறுபிள்ளைத்தனமான ஆய்வாக தோன்றலாம் (உண்மையில் இந்த ஆய்வு மத ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வாகும்), ஆனால் மத தோற்றப்பாடு இருக்கிறது என்றால், அவற்றை விஞ்ஞானப்பூர்வமாக பரிசோதிக்க முடியும் என்ற அடிப்படை புள்ளியையே இது எடுத்துக்காட்டுகிறது.

இதுவொரு முக்கிய கருத்தறிவிப்பாக இருந்த போதினும், விஞ்ஞானம் மற்றும் மதம் குறித்த டௌகின்ஸின் வெளிப்பாட்டில் ஏதோவொன்று குறைகிறது. எடுத்துக்காட்டாக, "கடவுளின் புனைவுகோள்" என்பதை, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் தேனீர்கோப்பை சுழல்கிறது என்ற வாதத்திற்கு (இந்த கருத்து பெர்ட்ரண்ட் ருஸ்ஸெல் என்பவரால் அளிக்கப்பட்டது, இதுபோன்ற ஒரு தேனீர்கோப்பை இருக்கவில்லை என்பது அவருக்கு விஞ்ஞானரீதியாக தெரியவில்லை என்பதால். அவர் இதைக் குறிப்பிட்டு காட்டினார், அவர் அதுகுறித்து அறியொணாமையில் இருக்க வலியுறுத்தவில்லை) சமன்பட்டதாக அவர் கையாள்கிறார். செவ்வாய்கிரகத்தை எந்த தேனீர்கோப்பையும் சுற்றவில்லை என்பதைப் போலவே, கடவுளும் இல்லை என்பதே நாத்திகம் குறித்த அவரின் இறுதியான நியாயப்பாடு இருக்கிறது. கடவுள் இல்லை என்பதையே மிதமிஞ்சிய ஆதாரங்கள் குறிப்பிட்டு காட்டுகின்றன என்று டௌகின்ஸ் கூறுகிறார். உண்மையில், இந்த "99 சதவீத நாத்திகத்திற்கு" தீவிரமாக சவால்விடுக்கப்படுமானால், இது அவநம்பிக்கைவாதத்திற்கே (skepticism) கதவை திறந்துவிடும்.

எவ்வாறிருப்பினும், கடவுள் புனைவுகோள், தேனீர்கோப்பை புனைவுகோளில் இருந்து மிகவும் வேறுபட்ட புனைவுகோள் வகையாகும். விஞ்ஞான ஆய்வின் செயல்முறையால் ---புனைவுகோள்களை பரிசோதிப்பது உட்பட --- நிஜத்தை (அல்லது ஒரு குறைந்தபட்ச முழுமையான உண்மையை) எட்ட முடியாது என்ற வாதமே அதன் மையக்கருவாக இருப்பதால், உண்மையில், இதுவொரு புனைவுகோளே அல்ல. நிஜம் விஞ்ஞான ஆய்விற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது என்ற நம்பிக்கையை மதக்கொள்கைகள் கொண்டிருக்கின்றன, ஆகவே ---மதத்தைச் சார்ந்த தனிநபரின் கண்ணோட்டத்திலிருந்து--- மத நம்பிக்கையானது விஞ்ஞான நியாயப்பாட்டிற்கும் அப்பாற்பட்டு இருக்கும் என்ற கருத்து விவாதத்தைக் கடந்து நிற்கிறது. "ஆனால் நீங்கள் விஞ்ஞானத்தில் நம்பிக்கையில்லாமல் இருப்பதற்கான உங்களின் விஞ்ஞான அடித்தளங்கள் என்ன?" என்று வேண்டுமானால், ஒருவர் வெறுமனே கேட்டுக் கொண்டிருக்கலாம்.

விஞ்ஞானத்திற்கும், மதத்திற்கும் இடையிலான மோதல் டௌகின்ஸின் அனுபவவாதத்திற்கும் மேலாக மிகவும் அடிப்படை மட்டத்திலேயே நிலவுகிறது. நாத்திக நம்பிக்கையின் அடித்தளம் உண்மையில் கடவுள் என்றவொரு விருப்பமற்ற வார்த்தையில் அல்ல (இந்த புனைவுகோளை ஒரு விஞ்ஞான புனைவுகோளாக ஏற்று கொண்டாலும் கூட, இது ஒருவரின் மிக விருப்பமற்ற புனைவுகோளாக தான் இருக்கும்), மாறாக நாத்திகம் ஒரு சடவாத உலக கண்ணோட்டத்தில் இருந்து ---அதாவது விதிகளுக்கு உட்பட்ட மூலஅணுத்துகளின் அபிவிருத்தியில் இருந்தும், அதன் வெவ்வேறு வடிவங்களில் இருந்தும்--- பாய்கிறது. மூலஅணுத்துகள் விதிகளுக்கு உட்பட்டது என்பதால், அதை விஞ்ஞானரீதியாக ஆராய முடியும், மேலும் அதே நேரத்தில் விஞ்ஞான ஆய்வின் புறநிலைகள் இணக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன என்ற அனுமானமும் விஞ்ஞானத்திற்குத் தேவைப்படுகிறது. இறுதியில், இதுவே விஞ்ஞானத்திற்கும், மதத்திற்கும் இடையிலான மைய முரண்பாடாக, சடவாதத்திற்கும் கருத்துமுதல்வாதத்திற்கும் இடையிலான முரண்பாடாக, பகுத்தறிவிற்கும், பகுத்தறிவின்மைக்கும் இடையிலான முரண்பாடாக அமைகிறது.

மனிதயினம் இயற்கையுடன், குறிப்பாக கடந்த பல நூறு ஆண்டுகளில் கொண்ட விஞ்ஞான அறிவின் அசாதாரண அபிவிருத்தியில் அது பெற்ற முழுமையான வரலாற்று அனுபவத்தின் அடித்தளத்தில் தான் சடவாத உலக கண்ணோட்டத்தின் ஆதாரம் தங்கி இருக்கிறது. சடவாதத்தின் ஆதாரம் இந்த வரலாற்றுரீதியான நடைமுறையில் தான் எடுத்துக்காட்டப்படுகிறது, இதில் மனிதயினம் புனைவுகோள்களை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக சடவாத உலகில் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலமாக அந்த புனைவுகோள்களை உணர்ந்தும் இருக்கிறது.

விஞ்ஞானமும், மதமும் சமரசப்படக்கூடியதே என்றும், அதேவேளையில் பாடசாலைகளில் பரிணாமத்தைப் போதிக்க வேண்டும் என்றும் ஆழமாக முறையிட்டு வருபவர்கள் (இவர்களில் மிக முக்கியமான ஒருவர், விஞ்ஞான கல்விக்கான தேசிய ஆணையத்தின் செயல் இயக்குனரான EUGENIE SCOTT ஆவார்) மத்தியில் முறைப்படுத்தப்பட்ட இயற்கைவாதத்திற்கும் (METHODOLOGICAL NATURALISM), மாறாநிலைவாத இயற்கைவாதத்திற்கும் (METAPHYSICAL NATURALIS) இடையிலான வேறுபாட்டைக் காட்டுவதில் போலித்தனம் இருக்கிறது. இந்த சிந்தனையாளர்களைப் பொறுத்தமட்டில், விஞ்ஞானமானது முறைப்படுத்தப்பட்ட இயற்கைவாதத்தை ---அதாவது சட உலகின் செயல்விளைவுக்கு அப்பாற்பட்டு எதனுடைய இருப்பும் இல்லை என்ற விஞ்ஞான பரிசோதனையின் போது கிடைக்கும் அனுமானத்தை--- சார்ந்திருக்கிறது. இந்த சடவாத உலகின் செயல்விளைவுக்கு அப்பாற்பட்டு உண்மையில் ஒன்றுமே இல்லை என்ற வாதத்திலிருந்து இது வேறுபட்டதாகும்.

விஞ்ஞான கல்விக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களால் எடுக்கப்பட்டிருக்கும் பின்வருவதைப் போன்றவொரு வாதம், விஞ்ஞான ஆய்விற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான எவ்வித திடமான தொடர்பையும் தட்டிக்கழிக்கிறது என்பதால், இது உண்மையில் விஞ்ஞானத்தின் அடித்தளத்திற்கு ஒட்டுமொத்தமாக குழிபறிக்கிறது. அதாவது, பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு முழுமையான புரிதலை மனிதயினம் எட்டச்செய்யும் அல்லது எட்டாமலேயே செய்து விடக்கூடிய, அடிப்படையான தொடர்புகளின் அனுமானத்தையும், இயற்கையின் விதிக்கு உட்பட்ட நிகழ்முறைகளையும் விஞ்ஞானம் சார்ந்திருப்பதால், கடவுள் ---அல்லது ஏதோவொரு பேரறிவு பொருள்--- இருக்கக்கூடும் என்ற இந்த அடிப்படை உண்மையை விஞ்ஞானத்தால் ஒருபோதும் கண்டறிய முடியாது (இதைத் தான் காண்ட் Naumena என்று வார்த்தையில் குறிப்பிடுகிறார்).

எவ்வாறிருப்பினும், சடவாத உலகத்தை அனுமானித்து மாற்றும் திறமை ஒரு பயனுள்ள முறை மட்டுமல்ல, மாறாக அது யதார்த்த உலகைப் பற்றிய புரிதலை எட்டுவதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது. ஆய்வு, பகுத்தறிவு, புனைவுகோள் மற்றும் பரிசோதனை ஆகியவற்றின் ஒரு நெறிதவறாத முறையின் மூலமாக, மனிதயினம் "உள்ளது உள்ளவாறே" உலகைப் பற்றிய நிஜங்களை எட்டுவதற்கு விஞ்ஞானம் அனுமதிக்கிறது. இது உலகுடனான நடைமுறை தொடர்புகள் மூலமாக நம்முடைய கருத்துக்களின் உண்மைகளைப் பரிசோதிப்பதற்கான ஒரு நெறிப்படுத்தப்பட்ட முறையாக இருக்கிறது. அதன் பகுத்தறியும்தன்மை தான் ஒருவகையிலோ அல்லது வேறுவகையிலோ பகுத்தறிவின்மையை, மூடநம்பிக்கையை, "நம்பிக்கையைச்" சார்ந்திருக்கும் மதத்திலிருந்து விஞ்ஞானத்தை வேறுபடுத்தி காட்டுகிறது.

மத நம்பிக்கையும், சமூக வரலாறும்

முக்கியமாக இருந்தபோதினும், இந்த மெய்யியல் பிரச்சினைகள் குறித்தும், மற்றும் நாத்திகத்திற்கான தம்முடைய ஆதரவு குறித்தும் டௌகின்ஸ் மிக ஆழமாக குறிப்பிடாதது சமரசப்பட முடியாமலும், மேலெழுந்தவாரியாகவும் இருக்கிறது. கடவுள் இருக்கிறாரா என்பதன் மீதான பல்வேறு "ஆதாரங்களை" விவாதிக்க (அண்டவியல் வாதம், படைப்பு குறித்த வாதம், இன்னபிற) டௌகின்ஸ் தம்முடைய புத்தகத்தில் கணிசமான அளவிற்கு இடத்தை ஒதுக்கி இருக்கிறார், ஆனால் இது ஏற்கனவே பல நூறு முறை மறுக்கப்பட்டிருக்கிறது என்பதுடன் இவற்றில் அவர் புதிதாக ஒன்றையும் சேர்த்துவிடவும் இல்லை. பெரும்பாலான இந்த ஆதாரங்கள் (ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் உண்டு, ஒரு பின்னடைவு இறுதியாக ஒரு காரணமற்ற காரணத்தை இட்டுச் செல்லும், அதுவே கடவுள் என்பது போன்றவை) ஏற்கனவே கடவுளை மறுக்கும் ஒருவரை எள்ளளவும் சமரசப்படுத்துவதாகவும் இல்லை, கடவுளை நம்புபவரை மறுப்புரைகள் மாற்றிவிடக்கூடியதாகவும் இல்லை.

அடிக்கடி எழுப்பப்படும் "படைப்பு குறித்த வாதத்தைப்" பொறுத்தமட்டில், டார்வின் அவருடைய பரிணாம கோட்பாட்டின் மூலமாக இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டதாக டௌகின்ஸ் குறிப்பிட்டுக்காட்டுகிறார். மிகவும் சிக்கலாகவும், புத்திசாலித்தனமாகவும் வடிவமைப்பைப் பெற்ற மரபணுக்கள் இயற்கையின் ஒரு நீண்ட நிகழ்முறையின் விளைவாக உருவாகி இருக்கின்றன என்பதை அது எடுத்துக்காட்டியது.

மத நம்பிக்கைகளின் தோற்றங்களையும், நிறைபேறாக்கத்தையும் பற்றிய விவாதத்தில், கடவுளின் இருப்பு பற்றிய பல்வேறு ஆதாரங்களின் மீதான ஒரு மதிப்பாய்வைவிட அதற்கும் மேலாக தேவைப்படுகிறது. இந்த நம்பிக்கைகள் ஏன் ஏற்பட்டன என்பதையும், அவை ஏன் நிலைத்து நிற்கின்றன என்பதையும் கூட ஒரு விஞ்ஞானி ஆராய வேண்டும். இவ்விடத்தில், ஏதோவொரு வகையில் அன்னியப்பட்ட பகுதிக்குள் டௌகின்ஸ் நுழைகிறார், இங்கே அவர் அடிக்கடி தடுமாறுகிறார், மேலும் மத நம்பிக்கைகளை வடிவமைத்ததிலும், நிலைபேறுடையதாக செய்ததிலும் சமூக உறவுகளின் பங்களிப்பை ஆழமாக கையிலெடுக்க பெரும்பாலும் அவர் தவறிவிடுகிறார்.

மதத்தை ஒரு சடவாதரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும் அணுக வேண்டுமானால், முதலில் மதம் அடிப்படையில் சமூகத்தின் ஒரு விளைபொருள் என்பதை உணர வேண்டும். கலாச்சாரம் என்பது சமூகமயமானது, தனிப்பட்டதோ, தோற்றப்பாடோ கிடையாது, மேலும் ஒருவரின் அபிவிருத்தியின் நிகழ்முறையில் அவர் ஒரு வடிவத்திலோ அல்லது வேறொரு வடிவத்திலோ பரந்த சமூக சூழ்நிலையில் நிலவும் சிந்தனைகளையே கைகொள்கிறார். ஆகவே மத நம்பிக்கைப் பற்றிய ஒரு சடவாத விளக்கமானது, சமூகத்தைப் பற்றிய ஒரு சடவாத அணுகுமுறையில் வேரூன்றி இருக்கிறது. எவ்வாறிருப்பினும், பல்வேறு இயற்கை விஞ்ஞானிகளூடாக, டௌகின்ஸ் அவரின் சடவாதத்தை சமூக மற்றும் கலாச்சார வரலாற்றோடு கொண்டு செல்லவில்லை. அவர் மத நம்பிக்கையின் பல்வேறு கருத்துவாத விளக்கங்களுக்குள் புகுந்து கொண்டு முடித்து விடுகிறார்.

வரலாற்று சடவாதம் அதாவது, மார்க்சிசக் கருத்தாய்வானது மதம் உட்பட, உற்பத்திக்காக மனிதர்கள் இறங்கும் உற்பத்தி உறவுகளின், மற்றும் சமூக உறவுகளின் நிகழ்வுமுறைகளில் வேரூன்றி இருப்பதைக் காண்கிறது. A CONTRIBUTION TO THE CRITIQUE OF POLITICAL ECONOMY என்பதில் எழுதிய தம்முடைய பிரபலமான முன்னுரையில் மார்க்ஸ் எழுதியதாவது, "சடவாத வாழ்வின் உற்பத்தி முறை சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவிய வாழ்வின் பொதுவான நிகழ்முறைகளை நிபந்தனைக்குட்படுத்துகிறது. மனிதர்களின் இருப்பைத் தீர்மானிப்பது அவர்களின் நனவல்ல, மாறாக அவர்களின் சமூக இருப்பே அவர்களின் நனவைத் தீர்மானிக்கிறது."

ஒருபுறம், வரலாற்று அபிவிருத்தியின் பல்வேறு கட்டங்களில், குறிப்பிட்ட சமூக அமைப்புகளை நியாயப்படுத்தும் வகையில் ஆளும் மேற்தட்டுக்களால் மதம் நிலைநிறுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக, மத்திய காலங்களில், ஐரோப்பாவில் கத்தோலிக்க தேவாலயம் தான் நிலப்பிரபுத்துவத்தின் முதன்மை பயிலகங்கள் மற்றும் சித்தாந்த தூண்களில் ஒன்றாக இருந்தது. அது மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒருவருடையது என்பதைக் கூற வேண்டியதே இல்லை. உற்பத்தி சக்திகள் மீதான கட்டுப்பாட்டுடன், ஆளும் மேற்தட்டு தேவாலயங்களின் கூட்டுடன், மத நம்பிக்கைகளை பல்கி பெருகச் செய்ததன் மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்த முடிந்தது. பல்வேறு படிநிலைகளை நியாயப்படுத்தியோடு கூடுதலாக, இந்த உலகில் முக்தி இல்லை, வேறு உலகில் இருக்கிறது என்று ஏழைகளுக்குப் போதிக்கவும், அவர்களைச் சுரண்டவுமே மதம் பயன்படுத்தப்பட்டது.

மற்றொருபுறம், மதம் வெகுவாக "மயக்கமூட்டும்" பாத்திரத்தையும் நடத்தியது. அதாவது, மதம் ஏழைகளுக்கு சௌகரியங்களைத் தருகிறது, முக்தியின் மீதான நம்பிக்கையையும், வேறு உலகில் ஒரு சிறந்த வாழ்வையும் தருகிறது என்று கூறி ஏமாற்றியது. இந்த காரணத்தினால், மத கருத்துக்கள் மக்களின் பரந்த பிரிவுகளிடையே ஓர் ஏற்புடைய பிரதிபலிப்பைப் பெற்றன. ஹெகலுடைய Philosophy of Right என்பதை விமர்சிக்கையில் மார்க்ஸ் எழுதினார், "மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் ஏக்க பெருமூச்சு, ஓர் இதயமற்ற உலகின் இதயம், அது ஆன்மாவற்ற நிலைமைகளில் ஆன்மாவாக இருக்கிறது."

நிச்சயமாக, ஏனைய சித்தாந்த தோற்றப்பாடுகளைப் போலவே, மதத்தின் வரலாறும் சிக்கலானது தான். மத சித்தாந்தம் அதன் சொந்த உள்-தர்க்கத்துடன் (internal logic) பாதி சுயாதீனமான இருப்பில் நுழைந்துவிடுகிறது. மத பரிணாமத்திலும் ஒரு பாணி இருக்கிறது. விஞ்ஞான விளக்கங்களின் நிகழ்முறையின் மூலமாக மனிதர்கள் இயற்கை உலகைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்திருக்கும் வேளையில், கடவுள் பற்றிய கருத்து மிகவும் அருவமாகவும், ஒவ்வொரு நாள் நிகழ்வுகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் மாறி இருக்கிறது. முழுமையாக நேர்கோட்டிலுள்ள சோகமாக இல்லாமல் இருந்தாலும் கூட, விஞ்ஞான அறிவு மேலும் ஊடுறுவ வேண்டும் என்ற மனித அனுபவ ஆளுமையை மதம் ஆக்கிரமிக்க முயல்கிறது. எவ்வாறிருப்பினும், பொதுவாக சமூக நிகழ்முறை என்பது விஞ்ஞானத்தின் அபிவிருத்தி மற்றும் மதத்தின் பின்னடைவு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.

மதத்தைப் பற்றிய இந்த விளக்கம், அதைப் புரிந்து கொள்ளும்தன்மைக்குத் தேவையான சமூக கருத்துக்களோடு அனைத்துவிதமான மத விவாதத்தையும் ஊக்குவிக்கிறது என்பதே விஷயமாகும். டௌகின்ஸ் முழுமையாக இந்த முன்னோக்கை அகற்றிவிடுகிறார். "அடிமட்ட வர்க்கத்தை அடிமைப்படுத்த ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட கருவியே மதம் என்பது போன்ற, அரசியல் விளக்கங்களால் டார்வினியவாதிகளும் திருப்தி அடையவில்லை," என்று அவர் எழுதுகிறார். "அமெரிக்காவில் கருப்பு அடிமைகள் மற்றொரு வாழ்க்கை குறித்த வாக்குறுதிகளால் தேற்றப்பட்டிருந்தார்கள் என்பது உண்மையிலேயே நிஜமாகும். அவர்களின் அதிருப்தி இதனுடன் மழுங்கடிக்கப்பட்டு, அவர்களின் உரிமையாளர்களுக்கு ஆதாயங்களைத் தேடித் தந்தது. மதங்கள் எரிச்சலூட்டும் மதகுருமார்கள் அல்லது ஆட்சியாளர்களால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பது ஓர் ஆர்வத்தைத் தூண்டும் கேள்வியாகும், வரலாற்றாளர்கள் நிச்சயம் இதைக் கையாள வேண்டும். ஆனால் இது, அதற்குள்ளாகவே, ஒரு டார்வினிய கேள்வியாக இல்லை. மக்கள் ஏன் மதத்தினால் ஈர்க்கப்பட்டு காயப்படுகிறார்கள், அதன்மூலம் மதகுருமார்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசர்களால் ஏன் சுரண்டப்படுகிறார்கள் என்பதைத் தான் இன்றும் டார்வினியவாதிகள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்" என்று எழுதுகிறார்.

(சிடுமூஞ்சித்தனமான மதகுருமார்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பேச்சுக்கள் இயந்திரத்தனமாகவும், பெயரைக் குறிப்பிடாமல் டார்வினியவாதிகளால் குறிப்பிட்டுக் காட்டப்படும் மதத்தைப் பற்றிய மார்க்சிய கோட்பாட்டின் வெளிப்பாட்டிற்கு ஒருதலைபட்சமாகவும் இருந்தாலும் கூட) மனித பரிணாமத்தில் மத நம்பிக்கைகளின் வரலாற்றுரீதியான தோற்றங்கள் குறித்து விவாதிக்கையில் இது போதியளவிற்கு ஒரு சிறந்த புள்ளியாக அமைகிறது. பெரும்பாலும் ஒவ்வொரு சமூகத்திலும் பல்வேறு காலகட்டங்களில் ஏதோவொருவகையில், கிடைத்த வழியில், மத நம்பிக்கைகள் தோன்றி இருக்கின்றன, மனிதனின் பிந்தைய அபிவிருத்தியில் சமூக பரிமாணம் முன்னுரிமையைப் பெறுகிறது என்று ஒருவர் வலியுறுத்தினாலும் கூட, மனித சமூகத்தை மதக்கருத்துக்களைக் கைக்கொள்வதை நோக்கித் தள்ளும் ஏதோவதொன்று நம்முடைய உயிரியியல் பண்பிலேயே இருக்கிறதா என்று கேட்பது நிச்சயமாக நியாயமான கேள்வியாக இருக்கும். மதம் செய்யும் அதே சமூக வேலைப்பாட்டைச் செய்யும் வேறு சித்தாந்தங்களும் இருக்கலாம், ஆகவே, மதம் ஏன் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கேட்கும் நிலைக்கு ஒருவரை தள்ளிச் செல்கிறது. மத சித்தாந்தத்தைக் குறிப்பாக உலகளாவியதாக ஆக்கும் மத விளக்கங்களைக் கவர்ந்திழுக்கச் செய்யும் எது, நம்முடைய பரிணாம மரபில் கலந்திருக்கிறது என்பதை விவாதிக்க டௌகின்ஸ் விரும்பி இருக்கக்கூடும். இந்த அணுகுமுறையில் இருக்கும் குறைபாடுகளை நாம் பின்னால் பார்ப்போம், முதலில் டௌகின்ஸ் கவனம் செலுத்த விரும்பும் விஷயத்தில் அவருடைய கண்ணோட்டங்கள் குறித்து சில விபரங்களைப் பார்ப்போம்.

என்னுடைய சொந்த பதிலை அளிக்க வேண்டுமானால், மத நம்பிக்கை மீதான ஒரு பரிணாம விளக்கமானது மதத்தைப் பற்றிய ஒரு பரிணாம விளக்கத்தை எடுத்துக்காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை என்று டௌகின்ஸ் குறிப்பிடுகிறார். "மதத்தை வேறு ஏதோவொன்றின் விளைபொருளாக பார்க்கும், அதிகரித்து வரும் பல உயிரியல்வாதிகளில் நானும் ஒருவன்," என்று எழுதும் அவர், தொடர்ந்து குறிப்பிடுகையில், "மேலும் பொதுவாக, டார்வினிய வாழ்வின் மதிப்பு தேவையை 'சிந்தனையின் விளைபொருளாகவே' நாம் ஊகிக்கிறோம் என்று நான் நம்புகிறேன். எதனுடைய வாழ்வு மதிப்பைக் குறித்தும் நாம் கேள்வி எழுப்பும் போது, நாம் தவறான கேள்வியைத் தான் நாம் எழுப்புகிறோம்" என்று குறிப்பிடுகிறார்.

மத நம்பிக்கையின் ஒரு பரிணாம அடித்தளத்தைக் குறித்த டௌகின்ஸின் முன்மொழிவு ஆழமாக இல்லை: நம்முடைய மூதாதையர்களால் நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை நம்பும்படியாக நாம் பரிணமித்திருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். பொதுவாக நம்முடைய மூதாதையர்கள் சரியாகவே இருக்கிறார்கள் என்பதால், இது ஆதாயமளிக்கக் கூடியதே என்றும், தங்களுக்குக் கூறப்பட்டதை நம்புபவர்கள் அவர்களின் மூதாதையர்களின் ஒன்றுதிரண்ட அனுபவத்திலிருந்து பயன் பெற்றிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இது உண்மையாக இருக்கலாம், ஆனால் வேறெதும் அல்லாமல் மதம் மட்டும் ஏன் மூதாதையர்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கேள்வியைத் தான் அது திறந்துவிடுகிறது. டௌகின்ஸ் அவருடைய கோட்பாட்டில் இந்த வெளிப்படையான நிராகரிப்பைக் கண்டுகொள்ளவே இல்லை என்ற உண்மையானது, இந்த கேள்வியைக் குறித்து உண்மையில் அவர் மிக தீவிரமாக சிந்திக்கவே இல்லை என்பதற்கான ஓர் அறிகுறியாக இருக்கிறது.

அடிப்படையிலேயே மதம் என்பது திட்டமிட்டு தவறாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்ற டேனியல் டென்னெட்டால் அளிக்கப்பட்ட கோட்பாடு மிகவும் ஆணித்தரமானதாக இருக்கிறது. சில குறிப்பிட்ட செயல்பாடுகளைக், குறிப்பாக மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத செயல்பாடுகளைத் திட்டமிட்ட சிந்தனையாளர்களின் விளைவாக ஏற்பட்டது என்று அவர்கள் எடுத்துக்கூறத் தொடங்கினார்கள். மிருகங்களின் அல்லது உடனிருந்த மனிதர்களின் நடவடிக்கைகளை சிறப்பாக கணிக்க ஆரம்பகால மனிதயினத்திற்கு இது உதவியது என்பதால், உண்மையாக திட்டமிட்ட சிந்தனையாளர்களைப் பொறுத்தமட்டில் இது பயனுள்ளதாகவே இருந்தது (குறிப்பாக சமூக உறவுகள் அபிவிருத்தி அடைந்த போது, இது மிகவும் பயனுள்ள பண்பாக இருந்தது). மதம் என்பது இயற்கை உலகில் திட்டமிடுதலின் அவமானச்சின்னமாக இருக்கிறது: அதாவது கடவுள் தான் மழையைப் பெய்விக்கிறார், ஆறுகளில் வெள்ளத்தை ஓடச் செய்கிறார்; கடவுள் தான் வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கிறார், இன்னும் இதுபோன்ற இதர பிற விஷயங்களைக் கூறலாம்.

இந்த பல்வேறு முறையீடுகள் சுவாரசியமாக இருப்பினும், இவை தொல்பொருள் ஆராய்ச்சியியல் உட்பட விஞ்ஞான ஆதாரத்திற்கான ஒரு புலனாய்வில் வேரூன்றி இல்லாதவரை, குறிப்பாக இவற்றால் எவ்வித பயனும் இருக்காது. இதுவரையில், இந்த கேள்வியைக் குறித்து டௌகின்ஸூம் சரி, டென்னட்டும் சரி இருவருமே பெரும்பாலும் பரிணாம உயிரியியலில் தான் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள்.

மிக அடிப்படையாக, டௌகின்ஸ் மற்றும் டென்னெட்டால் பிரேரிக்கப்படும் இதுபோன்ற கோட்பாடுகள், மதத்தின் இன்றைய பிடிவாதத்தையும், இயல்பையும் புரிந்து கொள்ள மிக முக்கிய கேள்வியாக இருக்கும் மதத்தின் வரலாறைப் பற்றிய நம்முடைய புரிதலை மேலும் மேம்படுத்துவதாக இல்லை. திட்டமிட்டு தவறாக நிலைநாட்டப்பட்டிருப்பதில் மதம் ஓர் ஆரம்ப வெடிப்பைக் கொண்டிருந்தது என்பதற்கு ஆதரவாகவோ அல்லது அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நம்பும் சிறுபிள்ளைத்தனமான போக்கோ, திட்டமிடலே உண்மையில் தவறாக இருக்கிறது என்ற முடிவை நமக்கு விஞ்ஞானம் எடுத்துக்காட்டும் சூழ்நிலையில் மதம் ஏன் தொடர வேண்டும் என்பதை விளக்காது, மேலும் திகிலூட்டும் உயிர்களின் இருப்பு குறித்து குழந்தைகளே ஏன் ஆராய்ச்சி செய்யக்கூடாது என்பதையும் விளக்காது. பல ஆண்டுகளில் மதம் ஏன் பரிணமித்தது என்பதையும் அது விளக்குவதாக இருக்காது.

இந்த கேள்வியைக் கருத்தில் எடுக்க வேண்டுமானால், மரபணுவின் கலாச்சார சம அளவாக இருக்கும் "meme" இன் கோட்பாட்டில் டௌகின்ஸ் (மற்றும் டென்னட்டும்) நிலைநிற்க வேண்டும். ஒரு meme என்பது "கலாச்சார மரபின் ஒரு மைய அலகாகும்," மேலும் சில மீம்கள் தானாகவே மறுஉற்பத்தி செய்யும் மற்றும் இதரபிற பெரும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. Breaking the Spell: Religion as a natural phenomena என்ற டென்னெட்டின் புத்தகத்தைப் பற்றிய ஜேம்ஸ் புரூக்பில்டின் மதிப்பாய்வில் இது குறித்து மிக விரிவான ஒரு விமர்சனத்தைக் காணலாம். (சிந்தனை உருவாகி, பரவும் சமூகமாக அல்லாமல், மாறாக) சிந்தனையிலேயே ஒரு சித்தாந்தம் பரவியிருப்பதன் அடித்தளத்தைக் குறிப்பிடுவதே இங்கே போதுமானதாகும், பொதுவாக மீம் கோட்பாட்டின் ஆதரவாளர்கள், வரலாற்றின் ஓர் அகநிலை கருத்தாக்கத்திற்குள் விழுந்துவிடுகிறார்கள். இது சித்தாந்த அபிவிருத்தியைக் கணக்கிலெடுத்து விளக்குவதில் மிகவும் இடையூறாக இருக்கிறது.

தசாப்தங்களில் மாறிவரும் மற்றும் நீதி அல்லது மத கருத்துக்களின் மாற்றத்திற்கு பொறுப்பேற்கும் "ஒரு நன்னெறி சார்ந்த எண்ணப்பாங்கு'' என்று டௌகின்ஸ் குறிப்பிடும், "moral zeitgeist" குறித்து அவர் எழுதுகையில், கலாச்சார பரிணாமத்தை விளக்குவதில் அவருக்கு இருக்கும் பிரச்சினைகளை அவர் ஒத்துக்கொள்கிறார். இந்த "moral zeitgeist" குறித்து அவரிடம் நிஜமான விளக்கம் இல்லை, மாறாக டௌகின்ஸ், "இதற்கு பதிலளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பல்ல" என்று எழுதுகிறார்.

கடவுள் இல்லை என்பதற்கான ஒரு தர்க்கரீதியான ஆதாரத்தை அளிப்பதையோ அல்லது ஆரம்பகால மனித சமூகத்தின் அபிவிருத்தியில் மதம் ஏன் உருவானது என்பதற்கான கோட்பாடுகளை விளக்குவதையோ எல்லா டௌகின்ஸூம் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்றால், நாம் இந்த கருத்தை ஒத்துக்கொள்ளலாம். ஆனால், உண்மையில் டௌகின்ஸ்கள் இதற்கும் மேல் செய்ய நோக்கம் கொண்டிருக்கிறார்கள். அவர் சமகாலத்திய சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளைக் கையாள விரும்புகிறார், மேலும் மதங்கள் ஏன் நிலைத்திருக்கின்றன என்பதில் எவ்வித ஆழமான அடித்தளமும் இல்லாமல், அவர் தட்டுத்தடுமாறுகிறார், பெரும்பாலான சமயங்களில் அவர் பிற்போக்கான நிலைப்பாடுகளுக்குள் அவரின் பாதையைக் காண்கிறார்.

மதமும், அரசியலும்

மதம் மற்றும் சித்தாந்த மாற்றத்தை விளக்குவதில் டௌகின்ஸூம், ஏனையவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையானது, இறுதியில், மார்க்சிய கோட்பாட்டை எடுக்க மறுக்கும் அவர்களின் நிலைப்பாட்டில் தான் வந்து நிற்கிறது. டௌகின்ஸ் கடந்து வருகையில் ஒரேயொரு முறை மார்க்ஸை குறிப்பிடுகிறார், அதேபோல மேலே குறிப்பிட்ட பத்தியில் மட்டும் வர்க்க கோட்பாட்டைக் கையாள்கிறார். டௌகின்ஸ்களைப் பொறுத்த வரையில், மதத்திற்கு சமூக அல்லது அரசியல் முக்கியத்துவம் கிடையாது. வாழ்வின் அதிகளவிலான சடவாத நிலைமைகளோடு எவ்வித நிஜமான தொடர்பும் இல்லாமல் அது வெறுமனே ஒரு சிந்தனையாக இருக்கிறது என்று அவர் கையாள்கிறார்.

ஓர் எடுத்துக்காட்டை மேற்கோளிட்டுக் காட்ட, அவர் எழுதுகிறார், "மக்கள் அவர்களின் வேதங்களை இலக்கியங்களாகவும், தீவிரமாகவும் கையில் எடுக்கும் போது என்ன நடக்கும் என்பதற்கு ஆப்கானிய தாலிபான்களும், அமெரிக்க தாலிபான்களும் (அமெரிக்காவில் இருக்கும் கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்) சிறந்த உதாரணங்களாகும்." நிச்சயமாக வேதங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன, ஆனால் ஆப்கானிய தாலிபான்கள் மற்றும் அமெரிக்க தாலிபான்கள் இரண்டுமே முறையே அவற்றின் சமூகங்களில் ஆழமான சமூக உறவுகளின் விளைபொருட்களாகும், மேலும் இந்த சமூகங்களுக்கு இடையிலான வித்தியாசங்கள் அவற்றிற்குரிய சித்தாந்தங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பாத்திரங்களைக் கற்றுக் கொடுக்கின்றன.

மதத்தைப் பற்றிய இந்த அணுகுமுறை உறுதியான அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த புத்தகத்தின் தொடக்கத்தில், டென்மார்க் பத்திரிகையான Jyllands-Posten இல் பிரசுரமான இஸ்லாமிய எதிர்ப்பு சித்திரப்படங்களைக் குறித்து டௌகின்ஸ் விவாதிக்கிறார். இவை 2006 பெப்ரவரியில், கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தன. உலகெங்கிலும் இருந்த பத்திரிகைகளும், அரசாங்கங்களும் இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று இந்த எதிர்ப்புகளைக் குற்றஞ்சாட்டின என்பதுடன், இந்த வெறிப்பிடித்த சித்திரப்படங்களைப் பிரசுரித்தவர்களை பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவாளர்கள் என்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்த கருத்துக்களை டௌகின்ஸ் முழுவதுமாக ஏற்று கொள்கிறார். டென்மார்க் பத்திரிக்கையால் பேச்சு சுதந்திர பாதுகாப்பு மட்டுமே உண்மையில் சம்பந்தப்பட்டிருந்தது என்பதை உணர ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்திற்கு ஆதரவாளராக இருக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் ஐரோப்பாவிலும், வேறு இடங்களிலும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வைத் தூண்டிவிட அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாகும். மறுபுறம், கோபத்தைப் பிரதிபலித்த எதிர்ப்பாளர்கள் வெறுமனே மதத்தைச் சார்ந்திருந்தார்கள். பெருமளவிலான முஸ்லீம்கள் இருக்கும் நாடுகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும், அவர்களின் கொள்கைகளுக்கும் எதிராக அங்கே ஆத்திரம் கொழுந்துவிட்டிருக்கிறது.

மத்திய கிழக்கின் பெரும் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் நிலவும் அதிருப்தி ஒரு மத பாத்திரத்தை எடுக்கிறது என்ற உண்மையும் கூட வரலாற்றுரீதியான மற்றும் அரசியல்ரீதியான காரணங்களின் ஒரு விளைபொருளே ஆகும். மதசார்பற்ற முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளின் முன்னோக்குகள் முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டன, மதசார்பற்ற சோசலிச மற்றும் சர்வதேச அமைப்புகள் ஸ்ராலினிசத்தால் திட்டமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன, மேலும் மதவாத அமைப்புகளை விட மதசார்பற்ற அமைப்புகள் அமெரிக்கா மற்றும் ஏனைய சக்திகளின் நலன்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதை அவை பார்த்ததால், எல்லா வகையிலும் மதசார்பற்ற அமைப்புகளுக்குக் குழிதோண்ட அவை நீண்டகாலமாகவே வேலை செய்து வருகின்றன. ஒபாமா பின்லேடனும், தாலிபான்களும் 1980களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீட்டின் விளைவாக உருவானவர்களே. அப்போது மிக தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நிதியுதவி வழங்கி சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு மறைமுகப்போரை அமெரிக்க கையாண்டது. மறுபுறம், பாலஸ்தீன பிராந்தியங்களில் ஹமாஸ் போன்ற அமைப்பும் மேலெழுந்தவாரியாக ஆதாயம் பெற்றது. ஏனென்றால் குறிப்பாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடர்ந்து வலதிற்கு நகர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அது தன்னைத்தானே ஆட்படுத்திக் கொண்டதால், வேறுபிற தடங்களில் அளிக்கப்படாத முக்கிய சமூக ஆதாரங்களையும், சேவைகளையும் அமெரிக்கா அதற்கு அளித்தது.

மத சிந்தாந்தத்தில் வேரூன்றி இருக்கும் சமூக மற்றும் அரசியலைப் பற்றிய டௌகின்ஸின் அறியாமை, அவரை பிற்போக்கு நிலைப்பாடுகளை நோக்கி இட்டுச் செல்கிறது. அவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத ஆய்வு பயிலகத்தின் இயக்குனர் பேட்ரிக் சுக்தோவின் வார்த்தைகளை ஏற்று மேற்கோளிட்டு காட்டும் அளவிற்குச் செல்கிறார். சுக்தோ எழுதியதாவது: "தற்கொலை செய்து கொண்ட ஒரு இளைஞன் பிரிட்டனில் முஸ்லீம் சமூகத்தின் விளிம்புகளில் இருந்திருக்க வேண்டும் அல்லது அவற்றின் சத்தியங்களில் இருக்கும் தீவிர கருத்துக்களையும், சுழலியக்கத்தையும் பின்பற்றி இருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் முஸ்லீம் சமூகத்தின் அடி மையத்தில் இருந்து வந்திருக்கலாம், மேலும் அவர்கள் இஸ்லாமின் முக்கிய கருத்துக்களாலும் உந்தப்பட்டிருக்கலாம், அல்லவா?"

டௌகின்ஸால் மேலோட்டமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்த வார்த்தைகளை ஒருவர் படிக்கும் போது, நம்ப முடியாமல் அவரே அவருடைய கண்களைக் கசக்கி பார்க்கிறார். இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத ஆய்வு பயிலகம் என்பது ஒரு கிறிஸ்துவ களக்கோர்வை. அதன் முக்கிய நோக்கமே இஸ்லாமிய எதிர்ப்பு பிரிவினைக்குழுக்களை ஊக்குவிப்பதாகும். அதன் இந்த நோக்கம், மேலே குறிப்பிடப்பட்ட சுக்தோவின் வாக்கியத்தின் நோக்கமாகும். யார் இதைக் குறிப்பிடுகிறார் என்ற உண்மையான அறிவில்லாமலேயே அவர் குறிப்பிடுகிறார் என்று ஊகித்து வேண்டுமானால் ஒருவர் டௌகின்ஸை விட்டுவிடலாம், இருந்தபோதினும் ஈராக்கின் யுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்தவரும், இஸ்லாமிய சித்தாந்தத்தைப் போலவே கிறிஸ்துவ சித்தாந்தத்தையும் எதிர்த்த ஒருவரான டௌகின்ஸ், இதுபோன்ற ஒரு மதிப்பில்லாத முன்னோக்கிற்கு பொறுப்பேற்பது நிச்சயமாக ஓர் அவமானத்திற்குரியதாகும். ஆனால் பெரும்பாலான மத கேள்விகளுக்குப் பின்னணியில் இருக்கும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் குருட்டுத்தனமாக இருப்பதன் விளைவு இவ்வாறு தான் இருக்கிறது. ஒரு கருத்துமுதல்வாத முன்னோக்கிலிருந்து இதுபோன்ற விஷயங்களை அணுகுவதால், இஸ்லாம் ஒரு மதம் என்பதால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதன் விளைபொருளாகவே இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு எளிதாக டௌகின்ஸ் இட்டுச்செல்லப்படுகிறார். மேலும் இது சுக்தோ போன்ற முற்றுமுதலான பிற்போக்குவாதிகளின் அதே இடத்திற்குத் தான் இவரையும் அழைத்துச் செல்கிறது.

மத நம்பிக்கை கொண்ட மக்களிடையே (உலகளாவிய தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பான்மையினரிடேயே இருக்கும் ஒரு விஷயம்) ஒரு சமகாலத்திய மனோபாவத்தைக் கையாளும் ஒரு போக்கு நாத்திக வாதம் செய்பவர்கள் மத்தியில் (இது சாம் ஹேரீஸின் வேலைகளில் மிக தெளிவாக காணக்கிடைக்கிறது, டௌகின்ஸ் இவரையும் பல இடங்களில் மேற்கோளிட்டு காட்டுகிறார்) நிலவுகிறது. மதத்தை ஒரு சித்தாந்த தோற்றப்பாடாக மட்டும் கொண்டால், மதத்தின் பெயரில் என்ன கொள்கைகளை நியாயப்படுத்தினாலும், அது மத நம்பிக்கைக்காக இறுதியில் மக்களை மட்டும் தான் குறை கூறுவதாக முடியும். இது வழக்கமாக வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டிற்கு இட்டு செல்வதோடு மட்டுமில்லாமல், மத ஆதிக்கத்தை எவ்வாறு ஒழிப்பது என்பதற்கான ஓர் ஆலோசனையை வழங்குவதிலும் முற்றிலுமாக அது தோல்வி அடைகிறது.

மத்திய கிழக்கிலும், அமெரிக்காவிலும், மற்றும் உலகெங்கிலும் மத அமைப்புகளின் ஆதிக்கத்தை கீழறுக்கவே மார்க்சியவாதிகள் விரும்புகிறார்கள். மதம் சந்தேகத்திற்கு இடமின்றி விஞ்ஞானத்திற்கு எதிராக நிற்கிறது. அது சமூகம் மற்றும் ஒடுக்குமுறையில் நிஜமான இயல்பை நிறுத்திவிடுகிறது. அத்துடன் பெரும்பாலும் சமூக பிற்போக்குத்தனம் மற்றும் இராணுவவாதத்திற்கு ஒரு கருத்தியல் ஆயக்காலை வழங்குகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் மத நம்பிக்கையின் உண்மையான சமூக மற்றும் அரசியல் அடித்தளம் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட அதே விஷயத்தைக் குறித்து மார்க்ஸ் எழுதுகையில், "மக்களின் கற்பனை சுகமாக இருக்கும் மதத்தை அழிப்பதென்பது தான் அவர்களின் நிஜமான சுகத்திற்கான தேவையாக இருக்கிறது. அவர்களின் நிலைமைகளில் அவர்களின் கற்பனைகளை விட்டுவிட அவர்களுக்கு அழைப்பு விடுப்பதென்பது, அந்த கற்பனைகளைக் கொண்டிருக்கும் நிலைமைகளை விட்டுவிடுங்கள் என்று அவர்களுக்கு அழைப்பு விடுவதாகும்... இவ்வாறு, சொர்க்கத்தைப் பற்றிய விமர்சனமானது, பூமியைப் பற்றிய விமர்சனமாகவும், மதத்தைப் பற்றிய விமர்சனம் விதிகளைப் பற்றிய விமர்சனமாகவும், இறையியல் பற்றிய விமர்சனம் அரசியலின் விமர்சனமாகவும் அமைகிறது."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெருந்திரளான மக்களிடையே விஞ்ஞான நனவிற்கான, மற்றும் அதனுடன் ஒரு சடவாத உலக கண்ணோட்டத்திற்கான போராட்டம் என்பது சமூகம் மற்றும் ஒடுக்குமுறையின் நிஜமான இயல்பை மக்களுக்கு விளங்க வைக்கும் முயற்சியோடு பிணைந்துள்ளது. அது ஒரு அரசியல் போராட்டத்தோடும், ஒரு சோசலிச இயக்கத்தோடும் பிணைந்துள்ளது.