சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Labour brings Tory-Lib Dem coalition to power

டோரி-லிபரல் டெமக்ராட் கூட்டணியை தொழிற்கட்சி அதிகாரத்திற்குக் கொண்டுவருகிறது

By Chris Marsden
12 May 2010

Use this version to print | Send feedback

டேவிட் கமரோனின் தலைமையில் ஒரு புதிய கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணி மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மீது பேரழிவுப் பாதிப்பைத் தரக்கூடிய காட்டுமிராண்டித்தன வெட்டுக்களைச் சுமத்த உள்ளது.

இது அதிகாரத்திற்கு வருவதற்கான பாதை தொழிற் கட்சியால் அமைக்கப்பட்டது. தொழிற் கட்சி கடந்த 13 ஆண்டுகளாக கொழுத்த பணக்காரர்களை பாதுகாத்து வருகிறது என்பது மட்டும் இல்லாமல், ஒரு வெறுப்பிற்கு உட்பட்டிருந்த டோரிக் கட்சிக்கு அரசியல் புறக்கணிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு எவ்வித அரசியல் வெளிப்பாட்டையும் மறுத்த நிலையில் தொழிற் கட்சி இவ்வாறு நடந்து கொண்டுள்ளது. இன்னும் நேரடியான முறையில் கமரோன் ஒரு சக்திவாய்ந்த தொழிற் கட்சி தலைமையின் பிரிவு ஒன்றினால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் விளைவாக பிரதம மந்திரியாகப் பதவி சூடுவார். இது திங்களன்று கோர்டன் பிரௌன் அளித்த “முற்போக்குக் கூட்டணி” என்னும் தொழிற் கட்சி-லிபரல் டெமக்ராட் திட்டத்தை சேதப்படுத்தியதின் விளைவு ஆகும்.

லிபரல் டெமக்ராட் தலைவர் நிக் கிளெக் தன்னுடைய கட்சியின் ஒரு பகுதியினருக்கு டோரிகளுடன் கூட்டணி என்ற கருத்தை ஏற்க வைப்பதில் சிரமம் இருப்பதால், பிரௌன் ஒரு தொழிற் கட்சி-லிபரல் டெமக்ராடிக் கூட்டணிக்கு பாதை அமைப்பதை எளிதுபடுத்தினார். இதில் இவர் கூட்டணி நிறுவப்பட்ட பின் செப்டம்பர் மாதம் தன்னை தொழிற் கட்சித் தலைவராக இருப்பதை அகற்றிக் கொள்ளுதல், மற்றும் ஆறு கபினெட் பதவிகள் அளித்தல், பாராளுமன்றத்தில் Alternative Vote (AV) எனப்படும் மாற்றீட்டு வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றி வாக்கெடுப்பு நடத்துதல் ஆகியவை அடங்கியுள்ளன.

இந்த அளிப்பு லிபரல் டெமக்ராட்டுக்களின் ஒரு பிரிவிற்கு ஏற்புடைத்ததாக இருந்தது. 2004ல் அமைந்த ‘ஆரஞ்சுக் குழுவில் கிளெக் ஒரு உறுப்பினர் ஆவார். இது தங்கள் சமூக தாராள வாதத்தை கைவிட்டு தடையற்ற சந்தைக்கு ஆதரவு கொடுப்பதற்கு வாதிட லிபரல் டெமக்ராட்டுக்களால் பயன்படுத்தப்பட்டது. எப்படியும் டோரிக்களுடன் ஒரு உடன்பாடு காணவேண்டும் என்ற பெரும் ஆர்வத்தை இவர் கொண்டிருந்தார். இதேபோன்ற விளைவைத்தான் இவருடைய நிழல் நிதி மந்திரி வின்ஸ் கேபிளும் கொண்டிருந்தார். அவர் தொழிற் கட்சியை விட்டு நீங்கி சமூக ஜனநாயக கட்சியுடன் 1982 ல் சேர்ந்திருந்தார். ஆனால் பிரௌனின் அளிப்பு தீவிரமாகவும், ஏன் ஆர்வமாகவும் கூட, பல உயர்மட்ட லிபரல் டெமக்ராட்டுக்களால் வரவேற்கப்பட்டது. இதில் முன்னாள் தலைவர்கள் டேவிட் ஸ்டீல், பட்டி ஆஷ்டௌனும் அடங்குவர். கடந்த டோரி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திடையே ஏற்படுத்தியிருந்த வெடிப்புத் தன்மை நிறைந்த வெறுப்பை இவர்கள் நன்கு நினைவு கொண்டுள்ளனர்.

பீட்டர் மண்டெல்சன், அலஸ்டர் காம்ப்பெல் மற்றும் அடோனிஸ் பிரபு ஆகியோரைக் கலந்து தயாரிக்கப்பட்டுள்ள பிரௌனின் திட்டம் குறிப்பிடத்தக்க இடர்களை கொடுத்தது. 258 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு லிபரல்கள் மற்றும் அவர்களுடைய 57 இடங்களையும் கூட்டில் வைப்பது என்பது தொழிற் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் செய்திருக்கும். ஆனால் பிரௌனின் குழு வட அயர்லாந்தின் சமூக ஜனநாயக தொழிற் கட்சி மற்றும் ஒரு அலையன்ஸ் எம்.பி.ஐயும் கூட்டில் சேர்க்கும் வாய்ப்பையும் தேசியவாத ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி மற்றும் டோரிக்களுடன் வாக்களிக்க தயாராக இல்லாத வேல்ஸின் பிளயட் சிம்ருவையும் கொண்டுவரும் கணக்கை கொண்டிருந்தது.

இத்தகைய கூட்டணி அமைக்கும் வாய்ப்பு பிரிட்டனின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் மற்றும் நிதியச் சந்தைகளின் பிரிவுகளாலும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. ஏனெனில் இவை, ஒரு டோரி அரசாங்கம் தான் தொழிலாள வர்க்கத்துடன் மோதும் தேவையான அரசியல் உறுதியைக் கொண்டிருக்கும் என்று நம்புகின்றன.

கடந்த 24 மணி நேர டோரி ஆதரவு செய்தி ரூபர்ட் மர்டோக்கின் தலைமையிலான News International ஊடகத்தின் வெறித்தன பிரச்சாரத்தைக் கண்ணுற்றது. இது பிரௌனை இன்னும் இலக்கம் 10ல் இருப்பதற்கு கண்டித்தது. Telegraph ஆனது பிரௌனின் அரசியலமைப்பு நெறியின்படி சரியான செயல்களை gஒரு முழு தொழிற் கட்சி வகை ஆட்சி சதிh என்று விவரித்தது. (உடன் வந்துள்ள கட்டுரையையும் பார்க்கவும்.)

அதே நேரத்தில் பவுண்டிற்கு எதிராக குறிப்பிடத்தக்க வணிகம் இருந்தது. இது டாலருக்கு எதிராக ஒரு சென்ட் மதிப்பில் குறைந்தது. FTSE 100 ஒரு சதவிகிதம் குறைந்தது.ஆனால், இறுதியில், ஆளும் உயரடுக்கின் விருப்பங்கள் தொழிற் கட்சியின் பிளேயர் குழு தொடர்புடைய பிரிவின் முக்கிய தலைவர்களால் சுமத்தப்பட்டன.

முன்னாள் உள்துறை மந்திரி டேவிட் ப்ளங்கட் BBC இடம் லிபரல் டெமக்ராட்டுக்களுடனான எவ்வித உடன்பாடும் “தோற்றவர்களின் கூட்டணியாகும்” என்று விவரித்து, கட்சி gவரலாற்றின் விலைமகள் போல் நடந்து கொண்டிருக்கிறதுh என்றும் குற்றம் சாட்டினார்.

மற்றொரு முன்னாள் உள்நாட்டு மந்திரி ஜோன் ரீட் ஒரு தொழிற் கட்சி-லிபரல் டெமக்ராட் கூட்டணி இரு கட்சிகளுக்கும் gஒன்றை ஒன்று அழித்துவிடும் உறுதிப்பாட்டைh விளைவிக்கும் என்று எச்சரித்தார்.

நீதித்துறை மந்திரி ஜாக் ஸ்ட்ரோ “பெரும் சீற்றம்” அடைந்ததாகக் கூறப்படுகிறது, மற்ற மந்திரிகள் டோரி சார்புடைய செய்தி ஊடகத்திற்குச் சென்று திட்டத்தை gஇழிவானதுh என்று கண்டித்தனர். முன்னாள் ரீடிங் வெஸ்ட் தொகுதியின் தொழிற் கட்சி எம்.பி.யான மார்ட்டின் சால்ட்டர், Telegraph ல் ஸ்கொட்லாந்து, வெல்ஷ் தேசியவாதிகளையும் அயர்லாந்துக்காரர்களையும், gபன்றி இறைச்சிப் பீப்பாய் அரசியலை முன்வைப்பவர்கள்h என்று ஆத்திரமுட்டும் விதத்தில் விவரித்தார்.

குறைந்தது நான்கு காபினெட் மந்திரிகள் பிரௌனின் திட்டதை எதிர்த்துப் பேசினர். சுகாதாரத் துறை மந்திரி ஆண்டி பர்ன்ஹாம், “பொதுத் தேர்தல் முடிவுகளை நாம் மதிக்கவேண்டும் என்று நினைக்கிறேன், தொழிற் கட்சி வெற்றி பெறவில்லை என்ற உண்மையில் இருந்து நாம் தப்ப முடியாதுh என்றார்.

பின் பெஞ்சுகளில் உட்காரும் எம்.பியும் gஇடதுh என்று சில பிரிவுகளில் சுட்டிக் காட்டப்படுபவருமான ஜோன் க்ருட்டஸ் தன்னுடைய தலைமைக்கான உரிமையை முன்வைக்கும் விதத்தில் gதொழிற்சங்கங்களுடன் இணைந்துள்ளh தொழிற் கட்சி எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் ஆளும் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்களும் எவ்வித கூட்டணி உடன்பாடு பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும்h என்றார்.

ஸ்கொட்டிஷ் தேசிய கட்சித் தலைவர் அலெக்ஸ் சால்மண்ட் கூட்டணிக்காக கொடுத்த அளிப்பு தொழிற் கட்சியின் சர்வதேச வளர்ச்சிப் பிரிவின் செயலர் டுக்லாஸ் அலெக்சாந்தரால் தூக்கி எறியப்பட்டது. அவர் இதே மூச்சில் SNP உடைய நட்பிற்குட்பட்ட Plaid Cymru வையும் ஒதுக்கி வைத்தார்.

மர்டோக்கின் டைம்ஸ், gதொழிற் கட்சியின் உட்பூசல் கூட்டணி நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டதுh என்று அறிவித்த விதத்தில் தாக்குதல் வெற்றி பெற்றது.

செவ்வாய் முழுவதும், பிரௌன் தன்னுடைய கட்சித் தலைமையில் பெரும்பான்மைப் பிரிவினால் கைவிடப்பட்டுவிட்டோம் என்பதை வேதனையுடன் உணர்ந்தார். அவர்கள் அவருடைய நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல என்பதை உறுதிபடுத்த முற்பட்டிருந்தனர். அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

அன்று மாலை இலக்கம் 10ல் இருந்து பிரௌன் வெளியே வந்து பிரதம மந்திரி மற்றும் தொழிற் கட்சித் தலைவர் என்பவற்றில் இருந்து தன் இராஜிநாமாவை உடனடியாகச் செய்வதாக அறிவித்தார். ஒரு உணர்ச்சிவசப்பட்ட அறிக்கையை அளித்தபின், அவர் அரசியாரிடத்தில் தன் இராஜிநாமாவை கொடுப்பதற்கு பங்கிங்காம் அரண்மனைக்கு அவசரமாகச் சென்றார்.

இவர் விரைவில் புறப்பட்டதன் முக்கிய பாதிப்பு, லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு டோரிக்களுடன் கூட்டு என்பதை ஏற்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை என்பதாகும். லிபரல் ஜனநாயகவாதிகள் மற்றும் டோரிக்களுக்கும் இடையே நடக்கும் பேச்சுக்கள் முடிவதற்கு முன்பே இவர் பதவியை விட்டு விலகி விட்டார். அதே போல் கிளெக் தன் கட்சிக்கு முன் வைக்கும் எந்த திட்டத்திற்கும் முன்னதாகவே விலகி விட்டார். இது பின்னர் மாலையில் ஒரு கூட்டணி அறிவிப்பை பற்றி அறிவிக்க வழி வகுத்தது. கிளெக் துணைப் பிரதம மந்திரியாக இருப்பார் என்ற அறிவிப்பைத் தவிர வேறு விவரங்கள் எதுவும் அதில் கொடுக்கப்படவில்லை.

தொழிற் கட்சியின் ஜனநாயகமற்ற தன்மையின் முழு அளவாக, பிரௌனின் நிலைப்பாடோ அல்லது அவருடைய பிளேயர் ஆதரவுகொண்ட எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடோ தொழிற் கட்சி உறுப்பினர்கள் முன் வைக்கப்படவில்லை என்பது வெளிப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்சிப் பிரிவு இன்று தான் முதல் தடவையாகக் கூடியது.

கமரோனும் கிளெக்கும் தங்கள் கட்சிகளை ஒன்றாகக் கொண்டுவந்ததற்கு ஒரே காரணம் வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் ஆணைகளைச் செயல்படுத்துவதற்குத்தான். இவர்கள் முன்னோடித் தன்மை இல்லாத சிக்கன நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றனர். அதே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், முக்கிய பணிகளான கல்வி, சுகாதாரம் போன்றவை தகர்க்கப்பட்டுள்ளன. இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் அவர்களுக்கு தொழிற் கட்சியின் முழு ஆதரவும் கிடைக்கும்.

அடுத்த சில வாரங்களில், தொழிற் கட்சிக்குள் தலைமைக்கான போட்டி நடக்கும். அப்பொழுது பல வலதுசாரி சவால்விடுபவர்கள் தங்கள் லிபரல் டெமக்ராட்டுக்களுடன் கூட்டாட்சியை எதிர்த்த முடிவுகள் gபொறுப்பானவைh, “ஜனநாயக” நெறியானவை என்று விவரித்து, பதவியில் இருந்து வெளியே உள்ள காலம் gபுத்துயிர் பெறுவதற்கும்h gமறு குழுவாக்கம்h செய்ய பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுவர்.

உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. தொழிற் கட்சியானது டோரிக்களை அதிகாரத்தில் இருத்தியதற்குக் காரணம், அது டோரி செயற்பட்டியலுடன் உடன்பாட்டைக் காண்கிறது. மற்றும் சந்தையின் ஆணைகளான தொழிற் கட்சி இனி நிதிய தன்னலக்குழுவின் அரசியல் கருவியாக விரும்பப்படவில்லை என்பதையும் ஏற்கிறது. இந்த ஆதரவைத் திரும்பப்பெற அவர்கள் எதையும் செய்வர். இந்த இலக்கை ஒட்டி, வாக்களிக்கும் விதத்திலோ, அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து உழைத்து வெளிப்படும் எதிர்ப்பை அடக்குவதிலோ தொழிற் கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆதரவைக் கொடுக்கும்

தொழிற் கட்சி ஒன்றும் ஒரு எதிர்க்கட்சி அல்ல, “தேசிய ஐக்கியத்திற்காகh உள்ள நடைமுறை அரசாங்கத்தின் ஒரு அறிவிக்கப்படாத உறுப்பு அமைப்புத்தான் அது. இது கமரோனுடன் கூட்டணித் தொடர்பு கொண்டிருந்தால் எப்படிச் செயற்படுமோ, அப்படித்தான் நடந்து கொள்ளும்.