சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The profit system and the BP oil catastrophe

இலாப முறையும் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவன எண்ணெய் கசிவுப் பேரழிவும்

Patrick Martin
24 May 2010

Use this version to print | Send feedback

மெக்சிக்கோ வளைகுடாவில் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனப் பேரழிவின் எண்ணெய் திரட்டு மிகப் பெரிய அளவில் கரையை அடையும் நிலையில், ஒபாமா நிர்வாகமானது அதன் நம்பிக்கையை மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது வலியுறுத்தியுள்ளது. எண்ணெய் மாசு நெருக்கடியில் முக்கிய அதிகாரியான கடலோரப் பாதுகாப்பு பிரிவின் அட்மைரல் தட் அலென், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்டுள்ளது என்றார். நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை பற்றிக் குறிப்பிட்ட அலென், “நான் டோனி ஹேவர்டை நம்புகிறேன். அவரிடம் நான் எது கேட்டாலும், எனக்கு விடை கிடைக்கிறது” என்றார்.

கூட்டாட்சி அரசாங்கமானது கடந்த ஒரு மாதமாக முயற்சி செய்து வெற்றி பெறாத எண்ணெய் கிணற்றை மூடி BP ஆனது ஏன் எண்ணெய்க் கசிவை தடுக்கும் முயற்சியை எடுத்துக் கொள்ளவில்லை என்று ஞாயிறன்று CNN ன் “State of the Union” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலென் கேட்கப்பட்டார். “ஒரு முன்னோடியில்லாத பொருந்தாத நிகழ்வாக என்ன இது ஆக்குவது என்றால் கசியும் இடத்தை அடைவது என்பது தோண்டுவதற்கான தொழில்நுட்பம் யார் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்பதாகும், இதுவோ தனியார் துறைக்கு சொந்தமாக உள்ளது. அவர்களுக்கு அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. அவர்கள் தான் இதற்குத் தீர்வுகாணும் விதத்தில் முன்மாதிரியாக இருக்க முடியும்.” என்றார்.

வேறுவிதமாகக் கூறினால், வளைகுடா கடலோரப் பகுதியின் விதியானது தங்கள் வாழ்க்கைக்காக மீன்பிடித்தல், படகு விடுதல், சுற்றுலாப் பிரிவு இன்னும் பல தொழில்களைச் செய்பவர்கள் அனைவரும் இந்த மாபெரும் பல்தேசிய எண்ணெய் நிறுவனத்தின் இலாப நலன்களுக்கு தாழ்ந்து இருக்க வேண்டும். தனியார் துறையானது தொழில்நுட்பத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது எனவே அந்தக் கட்டுப்பாட்டிற்கு சவால் விட முடியாது.

“பிரிட்டிஷ் பெட்ரோலியம் சிறப்பாக அறியும்” என்னும் அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றை வினாவிற்கு உட்படுத்த பல நடைமுறை நிலைப்பாடுகள் உள்ளன. பிரிட்டிஷ் பெட்ரோலியம் எண்ணெய்க் கிணற்றை தோண்டவில்லை. அது Transocean, Halliburton போன்ற ஒப்பந்தக்காரர்களை தனக்காக வேலை செய்வதற்காக நியமித்தது. கடந்த ஒரு மாத அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் இந்தப் மாபெரும் எண்ணெய் கசிவை நிறுத்திவிடக்கூடிய தொழில்நுட்ப அறிவோ அல்லது பொறியியல் திறமையோ இல்லை.

டீப்வாட்டர் ஹொரைசன் (Deepwater Horizon) வெடிப்பு அளவுத் தன்மை பேரழிவு போன்ற நிகழ்விற்கு எந்த தீவிர தயாரிப்புக்களும் இருந்ததில்லை என்பது மிகவும் உறுதியாகும். ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தொழில்துறை தொழில்நுட்ப வல்லுனர்களும் வளைகுடாப் பகுதியின் மேற்பரப்பில் இருந்து ஒரு மைலுக்கும் கீழே ஆழ்ந்த மட்டத்தில் எண்ணெய் தோண்டுவதில் உள்ள ஆபத்துக்கள் பற்றி தீவிர எச்சரிக்கைகளை கொடுத்திருந்தபோதிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிறன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு நீண்ட பகுப்பாய்வின்படி, “நிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள், தங்கள் உத்தியோகப் போக்கின் போதும் பலவற்றை கற்கின்றனர், ஆனால் தொழில்துறையோ வளைகுடாப் பகுதியில் பல ஆண்டுகளாக எண்ணெய்க் கிணறுகளை தோண்டுகின்றன, 77 தோண்டு தளங்கள் அங்கு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன…..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய தயாரிப்பற்ற தன்மை கூட்டாட்சி அரசாங்கத்தின் பல அமைப்புக்களிலும் படர்ந்திருந்தது. இவை அவை கட்டுப்படுத்தும் என்றுள்ள தொழில்களின் திறமையான கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (Environmental Protection Agency) வளைகுடாவில் தெளித்துள்ள இரசாயனப் பொருளை இல்லாது செய்யும் கலைப்பானின் சுற்றுச்சூழல் விளைவு பற்றி “இன்னும் மதிப்பீடு” செய்துவருவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அது தேவையான ஆய்விற்கு நிதியை கொடுத்ததில்லை. கசிவையும் அதன் பாதிப்பையும் அளப்பதற்காக பயன்படுத்தப்படும் விஞ்ஞானக் கருவிகள் அந்த நோக்கத்திற்கு போதுமானதாக இல்லை. மிக பாதிப்பிற்கு உட்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காணக்கூடிய வரைபடங்கள் கூட ஒரு தசாப்தம் காலம் கடந்த நிலையில் உள்ளன. ஏனெனில் தேசிய பெருங்கடல், சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கான வரவு-செலவுக் குறைப்புக்கள் அதிகமாகிவிட்டன.

பேரழிவிற்குப் பின்னான விடையிறுப்பில், எப்பொழுதும் விரிவடையும் சுற்றுச்சூழல் அழிவு பற்றிய கவலை இல்லாமல், நிறுவனத்தின் நிதிய நலன்கள் தாம் இயக்கும் உந்துதலாக இருந்தது. இந்த வாரம் எண்ணெய்க் கிணற்றை மூடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வழிவகைகள் இன்னும் முன்கூட்டியே முயற்சிக்கப்பட்டிருக்கலாம் என்று திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். நிறுவனம் இதைச் செய்யவில்லை, இன்னும் குறைந்த அணுகுமுறை மூலம் உற்பத்தி நடவடிக்கையை மீட்க முடியும் என்று அது நம்பியது. ஆனால் கசிவோ மிக அதிக எண்ணெய் திரட்டை வெளிப்படுத்தியது என்பது வெளிப்படை.

நிதி அக்கறைகளும் நிறுவனத்தின் கசிவுச் சேதத்தை கட்டுப்படுத்தும் அணுகுமுறையை நிர்ணயித்தது. டீப்வாட்டர் ஹொரைசன் தளத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் அளவு பற்றி பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆரம்பத்தில் குறைந்த மதிப்பீடுகளைத்தான் வெளியிட்டது. இது லூயிசியானாவில் மிசிசிபி டெல்டாப் பகுதியில் உள்ள எளிதில் பழுதடையும் ஈரப்பத நிலங்களைக் காப்பதற்கான முயற்சிகளை தாமதப்படுத்திவிட்டது.

லூயிசியானவின் தடுப்புத் தீவுகளைக் காக்கும் செயற்கைத் தடைகளை கட்டமைக்கும் திட்டத்தையும் நிறுவனம் நிறுத்திவிட்டது. ஏனெனில் ஏராளமான டன்கள் அளவு மண்ணை நகர்த்துவதில் செலவு மிக அதிகம் ஆகும். இப்பொழுது மிகவும் தாமதமாகிவிட்டது. லூயிசியானாவில் கிராண்ட் ஐல் இல் பிரிட்டிஷ் பெட்ரோலியம் வாடகைக்கு எடுத்திருந்த 40 ஏற்ற அடுக்குகளை அமைக்கும் படகுகள் சனிக்கிழமை இரவு கடற்கரைப் புறம் எண்ணெய் வரும்போது துறைமுகத்தில் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு உள்ளூர் அரசாங்க அதிகாரி அவற்றை அவசரப் பயன்பாட்டிற்கு உத்தரவிட நேரிட்டது.

EPA மிகவும் காலம் தாழ்த்தி இரசாயன கலைப்பான்களை பெரும் முறையில் தெளிக்கப்படுவதற்குத் தன் ஒப்புதலைக் கொடுத்து பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் அது பயன்படுத்தி வந்த Corexit 9500 ஐ விடக் குறைந்த நச்சுத் தன்மை உடைய இரசாயனங்களைப் பயன்படுத்துமாறு கூறியபின், நிறுவனம் அதற்கு மறுத்துவிட்டது. பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் இரசாயன கலைப்புப் பயன்பாடு பற்றிய கவலை வெறும் வெளிப்பூச்சுத்தான். அது டீப்வாட்டர் ஹொரைசன் பகுதியில் இருந்து வெளிப்பட்டு வரும் ஏராளமான அளவு எண்ணெய் மேற்பகுதிக்கு வருவதைத் தடுக்க முற்பட்டது. ஏனெனில் அவ்வாறு வந்தால் சேதத்தின் தன்மை உடனடியாக காணப்பட்டுவிடும். எனவே அது எண்ணெயில் பெரும் பகுதியை நீருக்குள் வைத்திருக்கும் வகையில்தான் இரசாயனத்தைப் பயன்படுத்தியது. இது நீருக்கடியிலான சூழலுக்கு கணக்கில் கூறமுடியாத விளைவுகளைக் கொடுத்துவிட்டது.

வளைகுடா எண்ணெய் பேரழிவு பற்றி பெருகிய மக்கள் சீற்றத்தை எதிர்கொண்ட விதத்தில் ஒபாமா நிர்வாகமானது பிரிட்டிஷ் பெட்ரோலியத்தைக் குறைகூறும் விதத்தில் தன்னைக் காட்டிக் கொண்டது. வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளருக்கு முன்னே ஒபாமா தோன்றி, மற்றொரு போலித்தன “சீற்றத்தை” கசிவு மூடப்படலை ஒட்டி வெளிப்படுத்தினார். மேலும் தன்னுடைய சனிக்கிழமை வானொலி உரையையும், இணையத்தள உரையையும் இப்பிரச்சினை பற்றிப் பேச பயன்படுத்திக் கொண்டார். தவிர்க்க முடியாத நீல ரிப்பன் ஆணை நியமனத்தை பேரழிவு பற்றி விசாரிப்பதற்கு அறிவித்தார். இதற்கு ஜனநாயகக் கட்சியின் ஓய்வு பெற்ற செனட் உறுப்பினர் ரோபனர்ட் கிரஹாமும் குடியரசுக் கட்சியின் முன்னாள் DPA நிர்வாகியுமான வில்லியம் ரீலியும் இணைத் தலைவர்கள் ஆவார்கள்.

ஏராளமான உயரதிகாரிகள் வளைகுடா கடலோரப் பகுதிக்கு மீண்டும் வந்து தொலைகாட்சி மற்றும் புகைப்படக் கருவிகளுக்கு முன் தோன்றி, எண்ணெய் கசிவிற்கு எதிரான “நடவடிக்கையை” விளக்க முற்பட்டனர். இவர்களுள் ஒருவரான உள்துறை செயலர் கென் சலாசர் ஹூஸ்டனில் உள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் அவசரக்கால தலைமையகத்திற்கு சென்றுவந்து, பின் அறிவித்தார்: “இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் அனைத்தையும் செய்து கொண்டிருப்பது பற்றி நான் வினா எழுப்பவில்லை. ஏனெனில் இது உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் ஒன்றின் அடிப்படை நிலைப்பாட்டுப் பிரச்சினை ஆகும்.”

நிறுவனம் செய்துவருவதை அறிந்துள்ளதா என்பதில் அவருக்கு நம்பிக்கை உள்ளதா என்று வினவப்பட்டதற்கு சலாசர் விடையிறுத்தார்: “இல்லை, முற்றிலுமாக இல்லை.” “அவர்கள் செய்ய வேண்டியதை செய்யவில்லை என்று நாங்கள் கண்டறிந்தால், அவர்களை வழியில் இருந்து நாங்கள் அகற்றிவிடுவோம்.” தெரியாத்தன்மை, மெத்தனம் இரண்டும் இணைந்த கலவையை கொண்ட இந்த அறிக்கையை விஞ்சுவது கடினம் ஆகும்.

“பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை வழியில் இருந்து அகற்றுவது” என்னும் நோக்கம் சிறிதளவும் ஒபாமா நிர்வாகத்திற்கு கிடையாது. நிறுவனத்தின் பிரத்தியேகமான தொழில்நுட்ப ஆதாரங்கள் அனுபவம் ஆகியவை இருப்பதாகக் கருதப்படுவதால் இந்த நிலைப்பாடு இல்லை. மாறாக ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியை போலவே, பெருவணிகத்தின் அரசியல் கருவி ஆகும். இது பெருநிறுவன அமெரிக்காவின் இலாப நலன்களைப் பாதுகாக்கிறது மற்றும் பல தலைமுறை மனித உழைப்பினால் தோற்றுவிக்கப்பட்ட உற்பத்திக் கருவிகளின் மீது பெருநிறுவனங்கள் கொண்டுள்ள ஏகபோக கட்டுப்பாட்டு உரிமையையும் பாதுகாக்கிறது.—மனித உயிர்களுக்கு மற்றும் சுற்றுச் சூழலுக்கு அழிவு என்பதை அவை கொடுத்தாலும் இந்த நிலைதான் நீடிக்கும்.

தன்னுடைய நீலநிற ரிப்பன் குழு பற்றிய அறிவிப்பில் ஒபாமா எண்ணெய்ப் பேரழிவிற்கு தொடர்புடைய பெருநிறுவனங்கள் மீது குறைகூறினார். இது “பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் பொறுப்புச் சிதைவு, ஒருவேளை டிரான்ஸ் ஓஷன் மற்றும் ஹாலிபர்ட்டன் ஆகியவற்றுடையதாகவும் இருக்கலாம். நாம் உரிய நிறுவனங்கள் பொறுப்பேற்பதற்கு தொடர்ந்து செயல்படுவோம்.”

ஆனால் உண்மையான பொறுப்புக் கூறுதலை செயல்படுத்துவது என்பது குற்றம் நடந்த இடத்தை குற்றவாளி கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நிலையில் முடியாத செயல் ஆகும். பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் அதன் பெருநிறுவன உடந்தை அமைப்புக்கள் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களுடைய பெரும் ஆதாரங்கள் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அது ஒன்றுதான் இந்தப் பேரழிவிற்கான எதிர்கொள்ளல். எண்ணெய் முதலாளிகளின் இலாப நலன்களை பாதுகாப்பதற்கு இயக்கப்படாமல், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வாழ்வைப் பாதுகாக்கவும், வளைகுடா கடலோரப் பகுதியின் இயற்கைச் சூழலின் பெரும் பகுதியை பேணுவதற்கும் உத்தரவாதம் அளிக்கும்.