சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: May 17-May 23

வரலாற்றில் இந்த வாரம்: மே 17-மே 23

17 May 2010

Use this version to print | Send feedback

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்/ 50 ஆண்டுகளுக்கு முன்னர்/ 75 ஆண்டுகளுக்கு முன்னர்/ 100 ஆண்டுகளுக்கு முன்னர்

25 ஆண்டுகளுக்கு முன்னர்: யுனைடட் எயார்லைன்ஸ் விமானிகள் வேலைநிறுத்தம்

United Air
யுனைடட் எயார்லைன்ஸ்

யுனைடட் எயார்லைன்ஸ் விமானிகள், புதிதாக வேலைக்கு சேர்ப்பவர்களுக்கு கடுமையாக குறைக்கப்பட்ட நட்ட ஈட்டுடன் இரு-இணைப்பு சம்பள முறை ஒன்றை உருவாக்க பிரதான நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் பெரிஸ் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக 17 மே 1985 அன்று வேலை நிறுத்தம் செய்தார்கள். இது, 1981ல் பட்கோ (PATCO) விமான கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தத்தை ஏ.எஃப்.எல்-சீ.ஐ.ஓ. தொழிற்சங்கத்தின் உடந்தையுடன் ரீகன் அரசாங்கம் நசுக்கியதன் பின்னர், அமெரிக்காவை தாக்கிய புதிய பெரும் தற்காப்பு வேலை நிறுத்தமாகும். ஏ.எஃப்.எல்-சீ.ஐ.ஓ., தொழிற்சங்க உறுப்பினர்களின் தொழில் மற்றும் சம்பளத்தின் மீதான நீண்ட விளைவுகளைக் கொண்ட தாக்குதலுக்கு சமிக்ஞை செய்தது.

நாட்டின் பிரமாண்டமான விமான சேவையில் நடந்த இந்த வேலை நிறுத்தத்தின் விளைவாக, டசின்கணக்கான விமான நிலையங்களில் இருந்து அமெரிக்கா பூராவும் செயற்பட்ட ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. சகல அமெரிக்க விமானப் பயணிகளிலும் சுமார் 15 வீதமானவர்களை, அதாவது கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 120,000 பயணிகளுடன் யுனைடட் கொடுக்கல் வாங்கல் செய்தது. யுனைடட்டின் சிக்காக்கோ ஓ ஹரே மையம் அதிகம் பாதிக்கப்பட்டது. இது சகல பயணிகள் போக்குவரத்திலும் கிட்டத்தட்ட அரைவாசிக்கு பொறுப்பாக இருந்தது. ஆயினும், ஏனைய பல விமான நிலையங்களில், எதிர் விமானச் சேவைகள் யுனைடட் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, போக்குவரத்தை தொடர்வதற்காக விமானசேவை காலநிர்ணயத்தை மறு ஒழுங்கு செய்ததோடு வேலை நிறுத்தத்தை கீழறுத்தது.

நாட்டின் விமானி அறை உறுப்பினர்கள் மத்தியில் 95 வீதமானவர்களை தொழிற்சங்கத்தினுள் வைத்திருப்பதாக பெருமைபட்டுக்கொண்ட போதிலும், விமானச் சேவை விமானிகள் சங்கம் (ALPA) என்ற தமது தொழிற்சங்கத்தால் யுனைடட் விமானிகளுக்கு அத்தகைய ஒத்துழைப்பு மறுக்கப்பட்டது. இது போன்ற இரு-இணைப்பு சம்பள முறை ஏற்கனவே அமெரிக்கன் எயார்லைன் விமானிகள் மீது திணிக்கப்பட்டிருந்ததோடு, டெல்டா, டி.டிபிள்யூ.ஏ., மற்றும் யூ.எஸ். எயார்வேஸைச் சேர்ந்த விமானிகளுடன் அடுத்து வந்த மாதங்களில் பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேசிய ரீதியிலான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க மறுத்த ALPA அதன் விமானிகள் சங்கத்தை தனிமைப்படுத்த அனுமதித்ததோடு கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியடையச் செய்தது.

ஜனநாயகக் கட்சிக்காரர்களான செனட்டர் எட்வேட் கென்னடியால் காங்கிரஸ் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, ஜனாதிபதி ஜிம்மி காட்டரால் சட்டமாக கைச்சாத்திடப்பட்ட, 1978 விமானசேவை ஒழுங்குபடுத்தல் விதி கொண்டுவரப்பட்ட உடன், யுனைடட்டின் போட்டித்தன்மையை பேணிக்காக்க இந்த வெட்டுக்கள் தேவை என்ற கொள்கையை ALPA ஏற்றுக்கொண்டது. சிவில் விமானிகள் சபையின் ஒழுங்குபடுத்தல் அதிகாரம் இறுக்கப்பட்டதோடு, யுனைடட் போன்ற பிரதான "பாரம்பரிய உரிமைகொண்ட" சேவைகள், குறைந்த செலவில் இருந்து மேலெழும்புவதற்காக சந்தை பங்குகளை இழக்கத் தொடங்கின.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: கொங்கோ தேர்தலில் லுமும்பா வெற்றிபெற்றார்

Lumumba
பெற்றிஸ் லுமும்பா

கொங்கோவின் முதலாவது சுதந்திர அரசாங்கத்தை உருவாக்கக் கூடிய மே 11-25 நடந்த தேர்தல் வாக்கெடுப்பு தொடர்ந்த நிலையில், தேசிய கொங்கோலீஸ் இயக்கத்தின் (என்.சி.எம்.) தலைவர் பெற்றிஸ் லுமும்பா முன்னணியில் இருந்தார். பெல்ஜியத்தில் இருந்து இறைமையை கையளிக்க ஜூன் 30 திகதி குறிக்கப்பட்டிருந்தது. லுமும்பா பெரும்பான்மையை வெல்லாத போதிலும், ஏனைய வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தார். அதனால், அரசாங்கத்தை அமைக்கும் உரிமையையும் பெற்றிருந்தார். தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு முன்னதாகக் கூட, பெல்ஜியம் சார்பு மற்றும் பிராந்திய அரசியல் குழுக்கள் லுமும்பாவுக்கு எதிரான கூட்டணியொன்றை அமைக்கத் தொடங்கின.

தேர்தலின் போது லுமும்பா மேற்கொண்ட பயணத்தின் போது, பெல்ஜியத்தால் சிறை வைக்கப்பட்டிருந்த 34 வயது தேசியவாத தலைவரை காண ஆயிரக்கணக்கில் கூட்டம் விதிக்கு வந்து ஆர்ப்பரித்த நிலையில், ஆங்காங்கே பரவியிருந்த மற்றும் பலவகையான காலனிகளில் கணிசமான தேசிய ஆதரவுடன் ஒரே கொங்கோலிச அரசியல்வாதியாக அவர் ஸ்தாபிக்கப்பட்டார்.

அமெரிக்க அரசாங்கத்தின் அங்கீகார மறுப்பின் ஒரு அறிகுறியாக, தேர்தல்கள் தொடங்கிய நிலையில், இந்த இளம் தேசியவாதிக்கு கேடுபயக்கவல்ல பிச்சாரம் ஒன்றை நியூ யோர்க் டைம்ஸ் முன்னெடுத்தது. ஒரு தொகை கட்டுரைகளில், லுமும்பா மீண்டும் மீண்டும் ஒரு "சர்வாதிகாரியாக", ஒரு "ஆட்சியாளராக", மற்றும் ஒரு "மீட்பாளராக" குறிப்பிடப்பட்டதோடு கிட்டத்தட்ட ஒவ்வொரு செய்தியறிக்கைகளும் அவர் ஒரு அஞ்சல் எழுத்தராக இருந்த போது "பண மோசடிக்காக ஒரு முறை குற்றஞ்சாட்டப்பட்டதை" சுட்டிக்காட்டின. லுமும்பா தேர்தல் மோசடியில் ஈடுபட்டதோடு பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து 200,000 டொலர்களை பெற்றதாகவும் கூட ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுக்களையும் டைம்ஸ் வெளியிட்டது.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: ஹிட்லர் "சமாதானம் மற்றும் சினேகம்" பற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கினார்

Mussolini, Hitler
ஹிட்லர் மற்றும் முசோலினி

மே 21, 1935 அன்று ஜேர்மன் அதிபர் அடொல்ஃப் ஹிட்லர் ரிச்ஸ்டக் ஜேர்மன் பாராளுமன்றம் முன்னிலையில் உரையாற்றினார். அதில் அவர் தனது தேசிய சோசலிச அரசாங்கம் சமாதானத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக வலியுறுத்தினார். "ஜேர்மன் ரிச்சுக்கு (Reich), குறிப்பாக தற்போதைய ஜேர்மன் அரசாங்கத்துக்கு, சகல அயல் நாடுகளுடன் சமாதானம் மற்றும் நேசம் என்ற பதங்களின் கீழ் வாழ்வதைத் தவிர வேறு விருப்பங்கள் கிடையாது" என அந்த நாஸி தலைவர் தெரிவித்தார். ஐரோப்பாவில் சமாதானத்துக்கு உண்மையில் அச்சுறுத்தல் விடுப்பது போல்ஷிவிசம்தான் என ஹிட்லர் பிரகடனம் செய்தார்.

தனது உரையில், வேர்சாய் உடன்படிக்கையையும் அது முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜேர்மனி மீது சுமத்திய கட்டுப்பாடுகளையும் கண்டனம் செய்த ஹிட்லர், "சகலருக்கும் சமத்துவம் என்பதற்குப் பதிலாக, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையில் வகுப்புமுறை வந்தது; சம உரிமைகளின் இடத்தில், உரிமை உடையவர்களுக்கும் உரிமை இல்லாதவர்களுக்கும் இடையிலான வேறுபாடு வந்தது; சகலவிதமான சமரசங்களுக்கும் பதிலாக, தோற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது; சர்வதேச ஆயுதக்களைவு வருவதற்கு முன்னர், தோற்கடிக்கப்பட்டவர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டார்கள்," எனத் தெரிவித்தார்.

உலகின் பெரும் வல்லரசுகளுடன் ஜேர்மன் பொருளாதார மற்றும் இராணுவ சமநிலையை இப்போது மீண்டும் ஸ்தாபிப்பதாக ஹிட்லர் எச்சரித்தார்.

அதே தினம், பாதுகாப்பு அமைச்சை நாஸி அரசாங்கம் ரீச் யுத்த அமைச்சு என பெயர் மாற்றியது. யூதர்கள் தவிர்ந்த, 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சகல ஜேர்மன் பிரஜைகளும் இணையக்கூடியவாறு ஒரு இராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை ஸ்தாபிக்கும் ஒரு புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டது. யுத்தத்துக்கான தயாரிப்பில் ஜேர்மன் இராணுவத்தை ஹிட்லர் தொடர்ந்தும் கட்டியெழுப்பிய நிலையில், "ஐரோப்பாவில் யுத்த தீயை பற்றவைக்கும் எவரும், குழப்பத்தை மட்டுமே விரும்ப முடியும்," என அவர் பிரகடனம் செய்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: ஏழாம் எட்வேர்டின் மரணச் சடங்கிற்காக ஐரோப்பிய அரச குடும்பம் ஒன்றுகூடியது

Royalty
ஏழாம் எட்வேர்டின் மரண ஊர்வலம்

20 மே 1910 அன்று நடந்த பிரிட்டிஷ் அரசர் ஏழாம் எட்வேர்டின் மரணச் சடங்கு, ஐரோப்பிய அரச குடும்பங்களின் பெரும் ஒன்றுகூடலுக்கு வாய்ப்பளித்தது. ஊர்வலத்தில் இருந்த சகல அரசர்களும் மற்றும் அரச குடும்பங்களில் பெரும்பாலானவர்களும் எட்வேர்டின் இரத்த உறவுகளாகும். சகல ஆடம்பரங்களும் ஐக்கியக் காட்சிகளும், ஐரோப்பாவை பகுதிகளாக கிழிப்பதற்கு அச்சுறுத்தும் அழுத்தங்களை மட்டுமே கொஞ்சம் மறைத்திருக்க முடியும்.

தனது பாட்டி விக்டோரியாவின் வெற்றிக்காக தசாப்த காலங்களாக காத்திருந்ததை மட்டுமே புகழாகக் கூறிக்கொள்ளக்கூடிய, நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்கவராக அல்லாத, எட்வர்டின் மரண ஊர்வலத்தின் பின்னால் எட்டு அரசுகளின் அரசர்கள் சென்றனர். அவர்கள் ஸ்பெயின், டென்மார்க், கிரேக்கம், பல்கேரியா, போர்த்துக்கல், நோர்வே மற்றும் ஜேர்மன் அரசர்களுமாவர். எட்வேர்டின் சகோதரனின் மகனான கெய்சர் வில்ஹெல்ம் ஜேர்மனியை பிரதிநிதித்துவம் செய்தார். அரசர்களின் பின்னால் ஏனைய முன்னணி உயர்குடியினரான, ஆஸ்திரிய-ஹங்கேரியன் சிம்மாசனத்தின் வாரிசான பிரன்ஸ் பெர்டினன்ட், ஒட்டோமான் இராச்சியத்தின் வாரிசான இளவரசர் செஹஸேட் யூசுஃப் லஸீடின் எபென்டி மற்றும் ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கலஸின் தாயும் ஏழாம் எட்வேர்டின் மைத்துனியுமான மாரியா பீயொடோரோவ்னா போன்றவர்களும் பயணித்தனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டெஃபென் ஆகிய இருவர் மட்டுமே குடியரசுகளை பிரதிநிதித்துவம் செய்தனர்.

இந்த மரணச் சடங்கு, குவிந்துகொண்டிருந்த ஏகாதிபத்திய உள் முரண்பாடுகள் மற்றும் எழுந்துகொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் பின்னணியிலேயே இடம்பெற்றது. முன்னைய ஆண்டுகளில், எட்வேர்டின் பிரிட்டன், வில்ஹெல்மின் ஜேர்மனியின் வளர்ச்சிகண்டு வந்த செல்வாக்கை கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் பிரான்சுடன் ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டதோடு இரு நாடுகளும் செலவுமிக்க ஆயுதக் கொள்வனவுக்குள் பிரவேசித்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் ரஷ்யாவின் மன்னர் 1905 புரட்சியால் கிட்டத்தட்ட கவிழ்க்கப்பட்டிருந்தார். அத்தோடு, ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் தொழிலாள வர்க்கப் போராட்டம் உக்கிரமடைந்து வந்தது.