சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வியட்னாம்,கம்போடியா & தாய்லாந்து

Constitutional crisis looming in Nepal

நேபாளத்தில் அரசியல் நெருக்கடி சூழ்கிறது

By W.A. Sunil
27 May 2010

Use this version to print | Send feedback

நேபாள அரசியலமைப்பு நிர்ணயசபை ஒரு புதிய அரசியலமைப்பிற்கு இறுதி வடிவம் கொடுக்கும் காலக்கெடு நாளை முடிவடையும் நிலையில், அரசாங்கத்திற்கும் ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (UCPN-M) என்னும் எதிர்த்தரப்பு மாவோயிஸ்ட்டுக்களுக்கும் இடையே அவகாசத்தை நீடிப்பதற்காக பேச்சுக்கள் பரபரப்பாக நடந்து கொண்டு வருகின்றன. பேச்சுக்கள் தோல்வியுற்றால், நாடு உடனடியாக ஒரு அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடியை முகங்கொள்ளும்

இந்த வாரம் சட்டமன்றக் கூட்டங்கள் அனைத்தும் மூன்று முக்கிய கட்சிகளான ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிச லெனினிசக் கட்சி (CPN-UML), நேபாள காங்கிரஸ் (NC) மற்றும் எதிர்த்தரப்பு மாவோயிஸ்ட்டுக்கள் ஆகியவற்றிற்கு இடையே உடன்பாடு ஏற்பட வசதியளிக்கும் விதத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று CPN-UML ன் பிரதம மந்திரி மாதவ் குமார், மாவோயிச தலைவர் புஷ்ப கமல் டஹாலைச் சந்தித்தார். ஆனால் பேச்சுவார்த்தைகளில் முடக்கம்தான் ஏற்பட்டது.

நாளைய காலக்கெடுவும் உடன்பாடு இல்லாமல் கடக்கப்படும் என்றால், நாட்டின் பாராளுமன்றமாக செயல்படும் அரசியலமைப்பு நிர்ணயசபை இயல்பாகக் கலைந்துவிடும். தற்போதைய மாற்றுக்கால அரசியலமைப்பை பயன்படுத்தி காலக்கெடுவை ஓராண்டு அதிகரிக்க அரசாங்கம் முற்படுகிறது. ஆனால் அதற்கு மன்றத்தில் மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மை தேவைப்படும். இன்றுவரை விரிவாக்கத்தை தடுப்பதற்கு பொதுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட்டுக்கள் பிரதம மந்திரி இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் தங்கள் தலைமையில் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

கருத்தில் கொள்ளப்பட்ட ஒரே மாற்றீடு ஜனாதிபதி ஒரு நெருக்கடிக் காலத்தை அறிவிப்பதுதான்--அத்தகைய நடவடிக்கை ஒரு அரசியல் நெருக்கடியை உறுதியாக ஏற்படுத்தும். மாவோயிஸ்ட்டுக்கள் தங்கள் நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் ஒரு பொதுவேலை நிறுத்தத்திற்கு ஒரு அழைப்பு விடப்போவதாக எச்சரித்துள்ளனர். இம்மாதத்தில் முன்னதாக காட்மாண்டுவில் UCPN.M ஒரு வார காலம் நீடித்த வேலைநிறுத்தம், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை நடத்தியதின் மூலம் பெரும்பாலான கடைகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வணிகங்களை கட்டாயமாக மூட வைத்தது.

2006 ல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கெரில்லாப் போரை நடத்தி வந்த மாவோயிஸ்ட்டுக்கள் முதலாளித்துவ அரசைத் தக்க வைத்துக் கொள்ளுவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். அப்பொழுது அரசர் ஞானேந்திராவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பரந்த எதிர்ப்புக்கள் இருந்து வந்தன. UPCN-M ஏழு பாராளுமன்றக் கட்சிகளுடன் ஒரு சமாதான உடன்படிக்கையைக் கொண்டு வந்து அரசாங்கத்தில் சேர்ந்தது. முன்னாள் மாவோயிஸ்ட் கெரில்லாக்கள் தங்கள் ஆயுதங்கங்களைக் களைந்துவிட்டு ஐ.நா. மேற்பார்வையில் இருந்த இராணுவக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வருங்காலத்தில் அவர்கள் இராணுவத்திலும் இணைக்கப்படுவர் என்ற உறுதி மொழி கொடுக்கப்பட்டது.

இந்த உறுதிமொழி அரசியல் பூசலிலுக்கு முக்கிய ஆதாரமாயிற்று. மாவோயிச கெரில்லாக்களுக்கு எதிராகப் போரை நடத்தி முடியாட்சிகளுக்கு ஆதரவு கொடுத்திருந்த தளபதிகள் தங்கள் முன்னாள் எதிரிதிகள் இராணுவத்திற்குள் இணைத்துக் கொள்ளப்படுவது பற்றி ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டினர். இப்பிரச்சினை சட்டமன்றத்தில் 2008 தேர்தல்களுக்கு பின்னர் மாவோயிஸ்ட்டுக்கள் பெரும்பான்மை பெற்ற நிலையில் மோதலுக்கு வந்தது. ஜனாதிபதி ராம் பாரம் யாதவ் முடிவான அப்பொழுதைய இராணுவத் தலைவர் தளபதி ருக்மாங்கத் கடவாலைப் பதவியில் இருந்து விலக்குவது என்ற முடிவை ஏற்க மறுத்தபோது, மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் டால் கடந்த மே மாதம் பிரதம மந்திரி பதிவியை இராஜிநாமா செய்தார்.

தற்போதைய பேச்சுவார்த்தைகளிலும் இப்பிரச்சினை தடையைக் கொடுத்துள்ளது. பிரதம மந்திரி குமார் இணைக்கப்பட வேண்டிய கெரில்லாக்களின் எண்ணிக்கை பற்றி மாவோயிஸ்ட்டுக்கள் உடன்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் மாவோயிஸ்ட்டுகள் தங்கள் எழுச்சியின் போது பறிமுதல் செய்திருந்த சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், அவர்களுடைய இளம் கம்யூனிஸ்ட் குழுவுடன் தொடர்பு உடைய துணை இராணுவக் குழுக்கள் கலைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இராணுவமும் அரசாங்கமும் மாவோயிச மக்கள் விடுதலை இராணுவத்தில் முன்னாள் போராளிகள் 3,000 பேர்தான் உள்ளனர் என்று கூறுகின்றன. ஆனால் UPCN-M இந்த எண்ணிக்கை 19,000 என்று கூறுகிறது. இரு தரப்பினருக்கும் எண்ணிக்கை மிக முக்கியமாகும். UPCN-M அதன் உறுப்பினர்களிடம் இருந்து பெருகிய அதிருப்தியை எதிர்கொள்கிறது. அவர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக மிகவும் இழிந்த நிலையில் வாடுகின்றனர். இராணுவத்தைத் தன் பக்கம் கொள்ள வேண்டும் என விரும்பும் அரசாங்கமோ எண்ணிக்கையைக் குறைப்பதில் தீவிரமாக உள்ளது.

நேற்று பேச்சுக்கள் முறிந்தபின், மூத்த மாவோயிச தலைவர் நாராயண் காஜி ஷ்ரேஷ்டா எச்சரித்ததாவது: "ஆளும் கட்சிகள் நாட்டை மோதலின் விளிம்பிற்கு தள்ளுகின்றன. சமாதான வழிவகைகளை கவிழ்க்க சதி நடைபெறுகிறது." சமரசத்திற்கு ஆர்வத்துடன் இருக்கும் UCPN-M இப்பிரச்சினைகளை அரசியலமைப்பில் அடங்கிய ஒரு தொகுப்பில் தீர்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. அத்துடன் முன்னாள் கெரில்லாக்கள் இணைப்பிற்கும் உத்தரவாதம் நாடியது. ஷ்ரேஷ்டா கருத்துப்படி ஆளும் கட்சிகள் இந்த ஏற்க முடியாத நிபந்தனைகள் பற்றிய பிரச்சினையை எழுப்பினர். அதில் பாராளுமன்ற வரைகாலம் நீட்டிப்பு மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கை மாவோயிச போராளிகளை இணைப்பது ஆகியவை அடங்கியிருந்தன.

இந்த அரசியல் வேறுபாடுகள் நாட்டின் தொழிலாளர் வர்க்கம், கிராமப்புற வறியவர்களின் அவல நிலை பற்றி எந்த அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. இரு பக்கத்தினரும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள பிளவை ஆழப்படுத்தும் சந்தைச் சார்பு உடைய நிகழ்ச்சி நிரலுக்குத்தான் வாதிடுகின்றனர். இப்பிளவுகள் காத்மாண்டுவில் முக்கிய மற்றும் பிராந்திய சக்திகளுக்கு இடையே பெருகியுள்ள போட்டியைத்தான் பிரதிபலிக்கின்றன. அரசாங்கம் இந்தியாவின் கைப்பாவையாக உள்ளது என்று மாவோயிஸ்ட்டுக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புது டெல்லியுடன் தற்பொழுது உள்ள பொருளாதார உடன்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். ஆளும் கூட்டணி UCPN-M சீனாச் சார்புடையதோ என்பது பற்றி சந்தேகப்படுகிறது.

நேபாள அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் மற்றொரு நிகழ்வாக மேலைத்தேய சக்திகள் இரு தரப்பினரும் உடன்பாட்டைக் காண வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. கடந்த சில தினங்களாக அமெரிக்கத் தூதர் ஸ்காட் டிலிசி மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வாஷிங்டன் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைப்பதை எதிர்க்காது என்று கூறினார். மாவோயிஸ்ட்டுக்கள சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் UPCN-M அத்தகைய அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கலாம் என்றும் "ஜனநாயக நெறிகளை" பின்பற்றும் வரை அது அவ்வாறு செய்யலாம் என்றும் கூறினார்.

மேலைத்தேய நாட்டுத் தூதர்கள் இந்தியா மற்றும் சீனா தற்பொழுதைய அரசியல் தேக்க நிலையை முடிப்பதற்கு "ஆக்கப்பூர்வ பங்கை" கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் இரு பிராந்தியப் போட்டி நாடுகளும் நேபாளத்தில் போட்டித் தன்மை உடைய நலன்களைக் கொண்டுள்ளன. இந்தியா நீண்ட காலமாக நேபாளத்தை தன் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியாகத்தான் கண்டு வந்துள்ளது. 2006 ம் ஆண்டு சமாதான உடன்பாட்டை அது முன்னின்று உறுதி செய்தது. தன்னுடைய பங்கை அது தக்க வைக்கும் என்றும் நேபாளத்தின் கெரில்லாப் போர் அச்சுறுத்தல்கள் இந்தியாவிலேயே பிரிவினை இயக்கங்களுக்கு ஊக்கம் தருக்கூடும் என்றும் கருதுகிறது.

அமெரிக்காவுடனான மூலோபாய உறவுகள் இந்தியா கொண்டுள்ளது பற்றி சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதையொட்டி நேபாளம் சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்க முயற்சிகளில் ஒரு பகுதியாகும் திறனும் உள்ளது என்று நினைக்கிறது. நேபாளத்தில் திபெத்திய அகதிகள் இருப்பது பற்றியும் பெய்ஜிங் விரோதப்போக்கு கொண்டுள்ளது. ஏனெனில் இது சீனாவின் அழுத்தங்கள் நிறைந்த திபெத்தியப் பகுதிகளில் இது அமைதியின்மைகளிற்கு ஊக்கம் கொடுக்கலாம். நேபாளத்திற்குச் சீனா பொருளாதார உதவி அளிப்பதுடன், நேபாள இராணுவத்திற்கு ஆயுதங்களையும் கொடுக்கிறது.

முக்கிய சக்திகளின் ஆதரவை மாவோயிஸ்ட்டுக்கள் ஆர்வத்துடன் நாடுகின்றனர். மே 17ம் திகதி காட்மாண்டுவில் நடைபெற்ற அனைத்து வெளிநாட்டு தூதர்கள் கூட்டத்தில், மாவோயிஸ்ட்டுக்களின் தலைவர் டாஹல் "சர்வதேச சமூகத்திற்கு" முறையிட்டு, கட்சியின் ஆதரவை இருக்கும் நேபாள முதலாளித்துவ அரச முறைக்கு உறுதிளித்தது. "பல கட்சி முறை, ஜனநாயகப் போட்டித்தன்மை, செய்தி ஊடகச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு நாங்கள் முற்றிலும் உறுதிப்பாடு கொண்டுள்ளோம் என்பதை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்." என்று அவர் கூறினார்.

நாளைக்குள் எவ்வித உடன்பாடும் ஏற்படும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. பாதுகாப்புப் படைகளை "உயர் எச்சரிக்கை" நிலையில் அரசாங்கம் இருத்தியுள்ளது. காலக்கெடு முடிவடைந்து அவசரக்காலம் அறிவிக்கப்பட்டால், இராணுவம் தன்னுடைய நலன்களுக்கு நிலைமையை ஐயத்திற்கு இடமின்றிப் பயன்படுத்திக் கொள்ளும்.