சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Election in Germany’s North Rhine-Westphalia-Preparation for a government of confrontation

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா தேர்தல் -அரசாங்கத்துடன் மோதலுக்கு ஒரு தயாரிப்பு

By Ulrich Rippert
11 May 2010

Use this version to print | Send feedback

நாட்டில் அதிக மக்கள் சனத்தொகை கொண்ட மாநிலமான ஜேர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் தேர்தல் முடிவுகள், ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாட்டைக் கொண்டுள்ளது. பல வாக்காளர்கள் வாக்குப் பதிவின் மூலம் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம், சுதந்திர ஜனநாயகக் கட்சி(CDU/CSU/FDP மாநில, கூட்டாட்சி அளவில் உள்ள அரசாங்கங்களின் சமூக விரோதக் கொள்கைகளுக்காக தண்டனை கொடுக்கும் விதத்தில் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது தேர்தல் முடிவுகளானது இன்னும் கடுமையான சமூக நலச் செலவு வெட்டுக்களை கொண்டுவருவதற்கான அரசாங்கத்தை அமைப்பதற்காகத் தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற வாக்குப் பதிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தல்களுக்கு பின்னர் முதன்முதலாக நடந்த மாநிலத் தேர்தல் ஆகும். இது பொதுவாக வலதுசாரி CDU அதிபர் அங்கேலா மேர்க்கெலின், தடையற்ற சந்தை சார்பு FDP உடனான கூட்டணிக்கு முக்கிய சோதனை என்று கருதப்பட்டது. வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா வில் உள்ள CDU-FDP அரசாங்கம் நிராகரிக்கப்பட்டது இதைவிடத் தெளிவாக இருக்க முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, CDU 10.2 சதவிகித வாக்குகளை இழந்து NRW இல் மிக மோசமான தன் முடிவுகளைக் கண்டது. அது பெற்றது 34.6 சதவிகித வாக்குகள்தான்.

FDP இம்முறை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்றதை விட அதிகம் இல்லை என்னும் விதத்தில் 6.7 சதவிகிதத்தைப் பெற்றது. ஆறு மாதங்களுக்கு முன்பு தேசியத் தேர்தலில் அது பெற்ற 14.9 சதவிகித வாக்குளை விட இது 8.2 சதவிகிதத்தை இழந்தது. மேலும் வாக்குப் பதிவும் வரலாற்றளவில் மிகக் குறைவாக 59.3 சதவிகிதம் என்றுதான் இருந்தது. நாற்பது சதவிகிதத்திற்கும் மேலான வாக்காளர்கள் அரசாங்கக் கொள்கை மற்றும் அனைத்துக் கட்சிகளையும் நிராகரிக்கும் விதத்தில் வாக்களிக்க முன்வரவில்லை.

விரைவாக சரிந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நிலைமையின் பின்னணியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. கடந்த ஆண்டு தேசியக் கூட்டணி அரசாங்கம் நெருக்கடியின் உண்மையான பரப்பை மூடிமறைக்கும் விதத்தில், NRW தேர்தல் முடியும் வரை திட்டமிட்டிருந்த சமூக நலச் செலவு வெட்டுக்களை தள்ளி வைத்திருந்தது. பல ஊக்கப்பொதித் திட்டங்களின் உதவியாலும், குறுகிய கால பணி நேர உதவித் தொகைகளை விரிவாக்கியதின் மூலமும், "கிளங்கர்ஸுக்கு ரொக்கம்" என்னும் ஊக்கத் திட்டத்தின் மூலமும், அரசாங்கமானது மோசமான நிலை முடிந்துவிட்டது என்ற தோற்றத்தைக் காட்ட முற்பட்டது. பல தலையங்கங்கள் ஜேர்மனிய பொருளாதாரம் சர்வதேச நெருக்கடியை "வியக்கும் வகையில் நன்றாகவே" கடந்துவிட்டது என்று கூறின.

ஆனால் கிரேக்க நிகழ்வுகள் இப்பிரச்சாரத்தை மறுக்கின்றன. சமீபத்திய வாரங்களில் கிரேக்க மக்களுக்கு எதிரான மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பொதுத் தாக்குதலுக்கு முன்னோடிதான் என்பது தெளிவாயிற்று. பேர்லினிலும் பிரஸ்ஸல்ஸிலும் NRW தேர்தல்கள் நடந்த அதே நேரத்தில் கடந்த ஞாயிறன்று அவசரக் கூட்டங்கள் நடைபெற்றன. விரைவில் முடிக்கப்பட்ட நடவடிக்கைகளில் கூட்டாட்சிப் பாராளுமன்றம் "யூரோப் பகுதியில் ஒரு கடன் நெருக்கடியை தவிர்ப்பதற்கு மகத்தான மீட்புத் திட்டத்தை" இயற்றியது என்று வாராந்திர ஏடு Die Zeit கூறியது.

இந்த இரண்டாம் பில்லியன் யூரோக்கள் மீட்புத் திட்டம், சர்வதேச வங்கிகளின் நலனுக்கு உகந்தவை, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் சமூக வாழ்க்கைத் தரங்கள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் ஆகிவற்றின் மீது இணைந்த முறையில் மாபெரும் தாக்குலையும் இணைத்துள்ளது. இந்த தவிர்க்க முடியாத தாக்குதல்களுக்காக ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கு நிறைந்த பகுதிகளானது CDU/CSU-FDP கூட்டாட்சி அரசாங்கம் மிகவும் வலுவற்றது அல்லது எதிர்பார்க்கப்படும் எதிர்ப்பை மீறி திட்டமிடப்பட்டுள்ள சமூக வெட்டுக்களை செயல்படுத்த முடியாமல் இழிவுற்றுள்ளது என்ற முடிவிற்கு வந்துள்ளன. NRW தேர்தல் முடிவை அவை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தி மாறியுள்ள நிலைமைக்கு ஏற்ப கூட்டாட்சி அரசியலை "சரி செய்ய" பயன்படுத்தின-பல தலையங்கங்களும் இதைத்தான் குறிப்பிட்டுள்ளன. இந்த அரசியல் சரி செய்தலின் முக்கிய நோக்கம் சமூக ஜனநாயகக் கட்சியை-அத்துடன் தொழிற்சங்கங்களையும்-அரசாங்க வழிக்கு நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும் என்பதாகும். இது SPD, CDU வை ஒரு பெரிய கூட்டணியாக கொண்டுவருவதை இயலச் செய்யும் என்பதுடன் பசுமைவாதிகளுடன் ஒத்துழைப்பு என்பதும் மற்றொரு ஏற்படக்கூடிய நிலமைதான்; அது SPD உடன்(சிவப்பு-பசுமைக் கூட்டணி என்று கூறப்படுவது)அல்லது CDU உடனோ(கறுப்பு-பசுமைக் கூட்டணி என்பது) செயற்றிறம் உடையதாக இருக்கின்றன.

இது NRW தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர, ஆக்கிரோஷ செய்தி ஊடகத் தலையீட்டிற்கு முக்கிய காரணமாயிற்று. SPD யின் முக்கிய வேட்பாளர்களும்(Hannelore Kraft)மற்றும் பசுமைவாதிகளும் வேண்டுமென்றே ஒரு உடன்பாடான முறையில் புலப்படுத்தினர்கள்; அதே நேரத்தில் தற்பொழுது மாநிலத்தில் பிரதமராக உள்ள ஜூர்கன் ரட்ஜெர்ஸ்(CDU) மற்றும் இன்னும் கூறிப்பாக FDP யும் எதிர்மறைத் தலையங்களை எதிர்கொண்டனர். ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் செய்தி ஊடகத் திரித்தல் இந்த அளவிற்கு வெளிப்படையாக எதிராக இருந்தது, கடந்த சில வாரங்களில் ரைன், ரூர் ஆகியவற்றில் இருந்ததைப்போல் காணப்பட்டது, அபூர்வம்தான்.

ஆண்டின் தொடக்கத்தில், கருத்துக் கணிப்புக்கள் SPD ஆனது CDU வைவிட மிகவும் பின் தங்கியிருந்ததைத்தான் காட்டின. ஆனால் பின்னர் ஒவ்வொரு வாரமும் கருத்துக் கணிப்பில் SPD உயரிடம் பெற்றது. NRW தேர்தலில் இது 34.5 சதவிகிதப் பங்கைக் கொண்டது. இது CDU பெற்றதைவிட 6,000 வாக்குகள்தான் குறைவு. கிராப்ட் தேர்தலில் "வெற்றிபெற்றவர்" என்று பாராட்டப்பட்டார். செய்தி ஊடகம் இவ்வம்மையாரை அரசியல் பரபரப்பு என்று குறிப்பிட்டது SPD யின் மிகப் பெரிய மீண்டும் வருதல் என்றும் கூறியது.

உண்மையில் SPD 1954 ல் இருந்து அதன் மோசமான தேர்தல் விளைவை முன்னாள் தொழில்துறை கோட்டையில் பெற்றுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் ஏற்பட்ட "பேரழிவுத் தேர்தல் முடிவுகளுடன்" ஒப்பிடும்போது, இக்கட்சி இப்பொழுது இன்னும் அதிகமாக 2.6 சதவிகிதத்தை இழந்துள்ளது. அத்தேர்தலின் போதுதான் அப்பொழுது அதிபராக இருந்த கெராட் ஷ்ரோடர் (SPD) தன்னுடைய 2010 செயற்பட்டியல் முடிவாக நிராகரிக்கப்பட்டது என்று எடுத்துக் கொண்டு அதை ஒரு காரணம் காட்டி SPD-பசுமை கூட்டணி அரசாங்கத்தை முன்கூட்டியே பேர்லினில் கலைக்க முன்வந்தார்.

முடிவுகளை பற்றிப் பேசுகையில் சில செய்தி ஊடக அறிக்கைகள் கடந்த ஆண்டுக் கூட்டாட்சித் தேர்தல்களின் எதிர்முறை சான்றுகளை ஒப்புமை விவரங்களாக மேற்கோளிட்டன. அப்பொழுது SPD வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் 28.5 சதவிகிதத்திற்கு சரிந்தது. ஆனால் அதனால் நிகழ்வுகள் தேர்ச்சி அடைந்துவிடவில்லை. முழுக் கணக்கின்படி, SPD பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது பல ஆயிரக்கணக்கான வாக்குகளை இழந்துள்ளது. குறைந்த வாக்குப்பதிவு என்பதால் சதவிகிதப் பங்கு உயர்வாக உள்ளது.

பசுமைவாதிகள் தங்கள் வாக்குகள் பங்கை இருமடங்காக்கி 12.1 சதவிகிதம் என்று 2005 உடன் ஒப்பிடுகையில் பெற்றனர். ஆனால் முழுக்கணக்கின்படி அவர்கள் கடந்த இலையுதிர்காலத் தேர்தலைவிட 5,000 வாக்குகள் குறைவாகப்பெற்றனர். SPD- பசுமைக்கட்சி கூட்டணி மீண்டும் தோன்றுகிறது என்பது செய்தி ஊடகத்தின் முழுப் பிரச்சாரம்தான். இதற்கு சில முதலாளிகள் சங்கங்களின் ஆதரவு உண்டு. ஏனெனில் அவை SPD-பசுமைவாதிகள் கூட்டணி FDP உடனான கூட்டணியை விட செயற்பட்டியல் 2020 க்கான வடிவமைப்பில் திட்டமிடப்படும் தாக்குதல்களை செயல்படுத்த சிறந்தது என நினைகின்றனர்.

SPD யிடம் எந்தக் குறைந்த அளவு நம்பிக்கையை தொழிலாளர் வர்க்கம் கொண்டுள்ளது என்பது இடது கட்சி பெற்ற வாக்குகளில் இருந்தும் தெரியவரும். அதன் பிரச்சாரம் SPD ஐ ஆதரிக்கும் வகையில் இருந்தது. மேலும் சமூக ஜனநாயகவாதிகளை குறைந்த தீமை என்று காட்டுவதிலும் தளராது இருந்தனர். மீண்டும் மீண்டும் இடது கட்சி தன்னை SPD யின் எடுபிடியாகக் காட்டிக் கொண்டது.

ஆனால் தேர்தல் இரவன்று அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தது. கடந்தாண்டு கூட்டாட்சி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இடது கட்சியின் ஆதரவு 8.4 ல் இருந்து 5.4 சதவிகிதமாக, 370,000 வாக்குகள் குறைவு என்று போயிற்று. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா தேர்தலுடன் ஒப்பிட்டாலும், இடது கட்சியின் தற்போதைய பகுதிகள் தனித்தனியே செயல்பட்டபோது(The Party of Democratic Socialist (PDS), Election Alternative இடது கட்சி இதைவிட 20,000 வாக்குகள் குறைவாகத்தான் பெற்றது.

சோசலிச சமத்துவக் கட்சி(PSG-The Partei fur Soziale Gleichheit தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால் சோசலிச சமத்துவக் கட்சியானது இடது கட்சியின் திவால்தன்மை மற்றும் பிற்போக்குத்தன அரசியலை நிராகரித்தது. தேர்தலுக்கு முன்பு ஒரு கட்டுரையில் நாம் எழுதியிருந்தோம்:

"நாளைய தேர்தல்களில் தேர்ந்தெடுப்பதற்கு மாற்று ஏதும் இல்லை. இத்தேர்தலில் ஒரு கட்சி கூட தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கவில்லை. மாநிலத் தலைநகர் டுசல்டோர்பில் அடுத்த அரசாங்கத்தின் வடிவமைப்பு எப்படி இருந்தாலும்-CDU-FDP, SPD-பசுமை, ஒரு பெரும் கூட்டணி, அல்லது "பச்சை விளக்கு" கூட்டணி எனப்படும் CDU-SPD-FDP அல்லது CDU-பசுமைக் கட்சி என-அரசாங்கக் கதிரைகள் அல்லது எதிர்ப்புறத்தில் இவை அமர்ந்தாலும், இது மக்களுக்கு எதிரான ஒரு கூட்டணியாகத்தான் இருக்கும். முன்பு இருந்தவை அனைத்தையும் தூக்கி எறியும் விதத்தில் இது சமூக நலக் குறைப்புக்களைச் செயல்படுத்தும்.

"பெரும் சமூகப் போராட்டங்களுக்குத் தொழிலாள வர்க்கம் தயாராக இருக்க வேண்டும். இது தேர்தல் முடிந்தவுடன் தொடங்கும். இதற்கு PSG ஐ நான்காம் அகிலத்தில் ஒரு பிரிவாகக் கட்டுதல் முக்கியம் ஆகும். 1930 களின் பெரும் சோக நிகழ்வுகள், தோல்விகள் ஆகியவற்றில் இருந்து படிப்பினைகளைப் பற்றி எடுத்துள்ள ஒரே கட்சி PSG தான். இது சர்வதேச சோசலிச கொள்கைக்காக போராடுகிறது. பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றின் சொத்துக்கள் பறிமுதல் செய்து உற்பத்தியானது தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் நிதியப் பிரபுத்துவத்தின் அதிகாரம் மற்றும் வலிமை முறிக்கப்பட முடியும்."