சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Trade union bureaucracy strangles French oil strike

தொழிற்சங்க அதிகாரத்துவம் பிரெஞ்சு எண்ணெய்த்துறை வேலைநிறுத்தத்தை ஒடுக்குகிறது

By Alex Lantier
30 October 2010

Use this version to print | Send feedback

பிரான்சின் முக்கிய எண்ணெய் சேமிப்பு இருப்புப் பகுதிகளிலுள்ள துறைமுகத் தொழிலாளர்களும் கடைசியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுத்திகரிப்பு நிலையங்களின் தொழிலாளர்களும் நேற்று வேலைக்குத் திரும்புவதற்கு வாக்களித்தனர். இது ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கள், அவருடைய வெட்டுக்களுக்கான திட்டங்கள் மற்றும் எண்ணெய்த்துறையில் பகுதியான தனியார்மயமாக்குதலுக்கும் எதிரான எண்ணெய்த்துறை வேலைநிறுத்தத்தை முடித்துள்ளது.

எண்ணெய்த்துறை வேலைநிறுத்தம் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களில் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்தது. இவற்றுள் வேலைநிறுத்தங்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் முற்றுகைகள் என்று கடந்த இரு வாரங்களாக சார்க்கோசி அரசாங்கத்தை அதிர்விற்கு உட்படுத்திய நிகழ்வுகள் இருந்தன. ஓய்வூதிய வெட்டுக்களுக்கு வெகுஜன எதிர்ப்பு இருந்தபோதிலும்—சமீபத்திய கருத்துக் கணிப்புக்களில் 65 சதவிகிதம் இன்னும் அதிக வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு கொடுத்தனர், மற்றும் நவம்பர் 6ம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு ஒருநாள் எதிர்ப்பிற்கும் ஆதரவு கொடுத்துள்ளனர்—சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கள் பற்றிய சட்டம் பாராளுமன்றத்தில் புதனன்று (27/10/10) இயற்றப்பட்டுவிட்டது.

தொழிற்சங்கங்கள், பொலிஸாரின் வேலைநிறுத்த முறித்தல் நடவடிக்கைளுக்கு எதிராக தொழிலாளர்களை பாதுகாக்க மறுத்ததோடு அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே, அவை சார்க்கோசியிடம் வெட்டுக்களை திருத்த வேண்டும் என்று முறையிடும் துரோகக் கொள்கையைத்தான் தொடர்கின்றன. தொழிலாளர்களுக்கு பொருளாதார நிதிய கடின நிலை ஏற்பட அனுமதித்தன. சார்க்கோசியை தோற்கடிக்க உறுதியான தலைமையின்மை மற்றும் அரசியல் முன்னோக்கு இல்லாத நிலையில், தொழிலாளர்களை களைப்படையச் செய்து போராட்டத்திற்குப் பயன் ஏதும் காட்டாவிதத்தில் வேலைக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தியுள்ளன.

Gonfreville, Dunkerque, Grandpuits, Feyzin மற்றும் Donges என்ற ஐந்து இடங்களிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மீண்டும் பணிக்குத் திரும்ப வாக்களித்தனர். வாக்களிப்பிற்கு முன்பு பேசிய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) அதிகாரி Charles Foulard, “நாம் மீண்டும் வேலைக்குச் செல்ல உள்ளோம் என்ற உணர்வுதான் நம்மிடையே உள்ளது. அதுதான் உண்மை” என்றார்.

வேலைநிறுத்தம் பெரும் எண்ணெய் தட்டுப்பாட்டிற்கு வகை செய்தது. உற்பத்தி இயல்பான நிலைக்கு வருவதற்குக் கிட்டத்தட்ட ஒரு வாரம் பிடிக்கும். நேற்று இரவு வரை பிரான்சின் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் 22 சதவிகிதம் எரிபொருள் இல்லாமல் இருந்தன என்று zagas.com தெரிவிக்கிறது.

ஒரு முன்னணி CGT அதிகாரியாக மார்செய் துறைமுகங்களிலுள்ள Pascal Galéoté, “நாம் விரைவில் பணிக்குச் செல்லும் நிலைப்பாட்டிற்குள் நுழைந்துள்ளோம்” என்றார். இந்த வார இறுதியில் மற்றும் ஒரு வேலைநிறுத்த அழைப்பு துறைமுகத் தொழிற்சங்கங்களால் விடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், “அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றிச் சிந்திப்போம்” என்றார்.

CGT அறிக்கையானது பேச்சுவார்த்தைகள் பற்றியோ, வேலைகொடுப்போர் பணியிடப் பிரச்சினைகளில் ஏதேனும் சலுகை கொடுத்தனரா என்பது பற்றியோ விவரம் ஏதும் கொடுக்கவில்லை. சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மட்டும் வேலைநிறுத்தக்காரர்கள் எதிர்க்கவில்லை. அவருடைய திட்டங்களான துறைமுகப் பெட்ரோலிய சேமிப்பு இருப்புப் பகுதிகளில் 40 சதவிகிதம் தனியார்மயமாக்கப்படுவதையும் எதிர்க்கின்றர். இது 220 முகவர்கள் தங்கள் பொதுத்துறை அந்தஸ்தை இழக்க வைக்கும்.

பொது மார்செய் கடல்சார்ந்த துறைமுகம் (General Marseille Maritime Port -GPMM) உடைய நிர்வாகம் தொழிற்சங்கங்கள் விரைவில் பணிக்குத் திரும்ப ஏற்பாடு செய்யும் என்பதில் ஐயமில்லை. நேற்று 80 கப்பல்கள் மார்செய் துறைமுகத்திற்கு அருகே சரக்குகளை இறக்கக் காத்திருந்தன. இதில் பல டஜன் கப்பல்கள் கச்சா எண்ணெய் அல்லது சுத்திகரிப்பு செய்யப்பட்ட பொருட்களை கொண்டிருந்தன. GPMM அறிக்கை ஒன்று, “கப்பல்கள் படிப்படியாக துறைமுக நடவடிக்கையில் வெள்ளி மாலை 8 மணியில் இருந்து ஈடுபடும். சரக்குகள் ஏற்றுவது, இறக்குவது ஆகியவை தொடரும்.” என்று கூறியுள்ளது.

Le Havre ல் உள்ள Industrial Maritime Company ல், வடக்கு பிரான்சில் நான்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வினியோகம் செய்வது, பணிக்கு திரும்பி வருவது பற்றிய வாக்கெடுப்பு பற்றி CGT பிரதிநிதி Fabrice Modeste அறிவித்தார். “தொழிலாளர்கள் இயக்கம் பழையபடி சூடுபிடித்தால் புதிய வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயாராக உள்ளனர்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரெஞ்சு பெட்ரோலிய தொழிற்துறை ஒன்றியத்தின் (UFIP) தலைவர் Jean-Louis Schilansky வேலைநிறுத்தங்கள் பிரெஞ்சுப் பெட்ரோலியத் தொழிற்துறைக்கு “நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள்” இழப்பைக் கொடுத்துள்ளன என்றார். இது தொழில்துறைக்கு “மாபெரும்” சுமையைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்று அவர் கூறினார்.

ஆனால் ஷிலன்ஸ்கியின் புள்ளிவிவரங்கள் சரி என்றால், இது பிரெஞ்சு எரிசக்தி நிறுவனங்களுக்கு ஒப்புமையில் சிறிய சேதத்தைத்தான் பிரதிபலிக்கும். எண்ணெய் பெருநிறுவனமான டோட்டல் மட்டும் முந்தைய காலாண்டில் €2.47 பில்லியன் இலாபங்களை அதன் காலாண்டு வருவாயான €40.18 பில்லியனில் பெறும்.

வேலைநிறுத்தம் எண்ணெய்த்துறை தொழிலாளர்கள் மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்துவதற்கு நியாயப்படுத்தப்படும். Dunkerque, Reichstet சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கனவே மூடப்படும் என்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்றன.

Feyzin சுத்திகரிப்பு ஆலையில் செய்தி ஊடகத்தினரால் பேட்டி காணப்பட்ட தொழிலாளர்கள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களிடம் சீற்றம் கொண்டுள்ளனர். Le Monde இடம் Thierry கூறினார்: “வேலைக்கு திரும்புவதற்கு நான் ஆதரவு கொடுக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு, நவம்பர் 6ம் தேதி நடவடிக்கை தினம் வரை வேலைநிறுத்தத்தை தொடர்ந்திருப்பேன்.”

Paul 54 வயதான தொழில்நுட்ப வல்லுனர், Feyzin தொழிலாளர்கள் “இறுதி வரை நம்பிக்கை கொண்டிருந்தனர்” என்றார். “ஓய்வு என்பது எங்களுக்கு பெரும் விடுதலை. என்னுடைய 18 வயதில் இருந்து நான் ஆபத்தான இரசாயனப் பொருட்களை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். இதைத்தவிர 60 மீட்டர் உயர இடங்களில் ஏறுவதெல்லம் என் வயதிற்கு மிகச் சிரமம் ஆகும். நாங்கள் செய்யும் வேலையைப் போல் ஒருபொழுதும் செய்ய வேண்டிய தேவை இல்லாதவர்களால் நாம் ஆளப்படுகிறோம்.” என்று சேர்த்துக் கொண்டார்.

Feyzin CGT பிரதிநிதி Michel Lavastrou, மீண்டும் பணிக்குத் திரும்புமாறு வாதிடுவது “எளிதான செயல் அல்ல” என்றார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் Maurice Thorez 1935 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என்று இகழ்வான முறையில் (திருப்தி ஏற்பட்டவுடன் எப்படி வேலைநிறுத்தத்தை முடிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்”) விடுத்த அழைப்பைத் தொகுத்துக்கூறும் வகையில், இவர் கூறியது: “வேலைநிறுத்தத்தை எப்படி முடிப்பது என்பது தெரிய வேண்டியதுதான், ஆனால் திருப்தி வந்திருந்தால் அதைச் செய்வது எளிது. இப்பொழுதுள்ள நிலைமைகளில் வேலைக்குத் திரும்புவது சிறப்பைத் தராது.”

பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கூட்டு தொழிற்சங்க-நிர்வாகக் குழுவில் பிரதிநிதியாக இருப்பவர் தொழிலாளர்களிடையே ஏற்றம் பெற்றுள்ள சீற்றம் பற்றி எச்சரித்தார். “தொழிற்சங்கங்களில் இருந்து தெருக்களுக்கு செல்வதற்கான அடையாளத்திற்குத்தான் மக்கள் காத்திருக்கின்றனர். அடுத்த கட்டம் ஒரு பொது வேலைநிறுத்தமாக இருக்கும். அந்தக்கட்டத்தில் தொழிலாளர்களின் விடையிறுப்பு வன்மையாக இருக்கும்.”

வெட்டுக்கள் பற்றி வெகுஜன சீற்றம் தொடர்ந்து இருப்பது பற்றி நன்கு அறிந்துள்ள அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மக்கள் எதிர்ப்பைச் சிதைக்க முற்பட்டுள்ளன. நேற்று ஒரு சிறு அறிக்கையை சார்க்கோசி வெளியிட்டார்: “பல கவலைகள், பெரும்பாலும் முறையானவை, வெளிப்படுத்தப்பட்டுள்ளன.“ இவற்றிற்கு எப்படி விடையிறுப்பது என்பது பற்றித் தான் “சிந்திக்க உள்ளதாக” அவர் கூறினார். ஓய்வூதிய வெட்டுக்கள் நடைமுறையில் இருக்கும் என்பது உண்மையே. சமூக நலச் செலவுகளை இது 18 பில்லியன் யூரோக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைத்துவிடும்.

CGT இன் Foulard “சிந்தனைக் கருத்துப் போரில்” தொழிற்சங்கங்கள் வெற்றி பெற்றுவிட்டன” என்றார். “தொழிற்சங்கங்களின் வாதங்கள், மற்றொரு சீர்திருத்தத்திற்கான வாய்ப்பு உண்டு என்பது …. கேட்கப்பட்டுவிட்டது.” என்று விளக்கினார். “நம்முடைய இலக்கில் இருந்து அதிகம் சென்றுவிடவில்லை. இன்னும் சில பணித்துறைகள் போராட்டத்தில் நுழைந்திருக்க வேண்டியது எங்கள் தேவையாகும்” என்று சேர்த்துக் கொண்டார்.

இந்த அறிக்கை CGT தலைமையின் இழிந்த தன்மைக்கு உதாரணம் ஆகும். எண்ணெய்த் துறைத் தொழிலாளர்கள் “மற்ற வேலைத்துறை” தொழிலாளர்களால்” தோற்கடிக்கப்படவில்லை’ அவர்களும் மிகப் பெரிய முறையில் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு கொடுத்து சார்க்கோசியின் நடவடிக்கைகளை எதிர்த்தனர். ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவம்தான் தோற்கடித்தது. சார்க்கோசி வேலைநிறுத்தம் செய்த எண்ணெய்த்துறைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்த கலகத்தடுப்புப் பிரிவு பொலிசை அனுப்பியும் கூட அது சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்த அரசியல் போராட்டத்தைத் தொடக்க மறுத்து விட்டது.

எண்ணெய்த்துறை வேலைநிறுத்தத் தோல்வி தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வு இதை உறுதிபடுத்துகிறது. WSWS ஆனது தொழிலாளர்கள் ஒரு அரசியல் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்து சார்க்கோசியை வீழ்த்தி ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவப் போராட வேண்டும் என்று வாதிட்டிருந்தது. தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு பற்றி WSWS தொடர்ந்து எச்சரித்து வந்தது. தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து போராட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டது.

மிகச் சாதகமான அரசியல் நிலைமையிலும் கூட, தொழிலாளர்களுக்கு வெகுஜன ஆதரவு இருந்தும் பொருளாதாரத்தின் ஒரு மூலோபாயத்துறையின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தும் அவர்கள் இப்பொழுதுள்ள அமைப்புக்கள் மூலம் வெற்றியை அடையமுடியாது.