சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China and Russia strengthen strategic ties

சீனாவும் ரஷ்யாவும் மூலோபாய உறவுகளை பலப்படுத்துகின்றன

By John Chan
6 October 2010

Use this version to print | Send feedback

ரஷ்ய ஜனாதிபதி திமெதி மெட்வெடேவ் செப்டெம்பர் 26-28ம் திகதிகளில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தமை, மொஸ்கோவும் பெய்ஜிங்கும் அமெரிக்காவுக்கும் மற்றும் வடகிழக்கு ஆசியாவில் அதன் பிரதான பங்காளியான ஜப்பானுக்கும் சவால் விடுப்பதன் பேரில் தமது உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கான இன்னுமொரு அறிகுறியாகும்.

மெட்வெடேவ் மற்றும் சீன ஜனாதிபதி ஹூ ஜின்டாவோவும் கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர். அது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் குவிந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களின் மத்தியில் “சகலதையும் உள்ளடக்கிய உறுதியடைந்துவரும் மூலோபாய ஒத்துழைப்புக்கு” அழைப்பு விடுத்தது. தாய்வான், திபெத் மற்றும் சிஞ்சியான் மீதான பெய்ஜிங்கின் இறையான்மைக்கு ரஷ்யாவின் ஆதரவு, மற்றும் காக்கசியின் பிராந்தியம் பூராவும், பொதுநலவாய சுயாதீன அரசுகள் முழுவதிலும் சமாதானத்தையும் ஸ்திரநிலைமையையும் முன்னிலைப்படுத்தும் மொஸ்கோவின் முயற்சிகளுக்கு” சீனாவின் ஆதரவு என்ற முறையில், ஒவ்வொருவரதும் முக்கிய நலன்களுக்கு பரஸ்பரம் ஆதரவளிப்பதை அந்த அறிக்கை வலியுறுத்தியது.

அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அந்த அறிக்கை வாஷிங்டனை இலக்குவைத்திருப்பது தெளிவு. 2008ல் இரு ஜோர்ஜிய மாகாணங்களின் சுதந்திரத்துக்கு ஆதரவளிப்பதற்காக, அமெரிக்க ஆதரவிலான ஜோர்ஜிய அரசுடன் ரஷ்யா யுத்தத்தை முன்னெடுத்தது. கடந்த ஆண்டு ஆசியாவில், தென் சீனக் கடலில் சீனாவுடன் பிராந்திய முரண்பாடுகள் கொண்டுள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது முதல், ஒபாமா நிர்வாகம் ஒரு தொகை விவகாரங்களில் இந்தப் பிராந்தியத்தில் உக்கிரமாக தலையிட்டுள்ளது.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்து 65வது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட இரண்டாவது கூட்டறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். “நாஸிகளை, இராணுவவாதிகளை மற்றும் அவர்களுக்கு உடந்தையாய் இருந்தவர்களை மேன்மைபடுத்தவும், மற்றும் மீட்பர்களின் மதிப்பை அழிக்கவும்” எடுக்கும் முயற்சிகளை இரு நாடுகளும் கண்டனம் செய்தன. இந்த அறிக்கை, கிழக்கு ஐரோப்பா மீதான சோவியத் ஆக்கிரமிப்பு பற்றிய மேற்கத்தைய விமர்சனங்களை மட்டுமன்றி, யுத்தகால இராணுவவாத அரசாங்கத்தின் குற்றங்களை பூசிமெழுகும் ஜப்பானின் வலதுசாரி தேசியவாதிகளையும் குறிவைத்திருந்தது.

“பாசிஸ்டுகளும் இராணுவவாதிகளும் எமது இரு நாடுகளையும், ஏனைய நாடுகளையும் மற்றும் ஒட்டுமொத்த [யூரோஏசியன்] கண்டத்தையும் வெற்றிகொண்டு அடிமையாக்குவதற்கு திட்டமிட்டிருந்தனர். இந்த இரு சக்திகளையும் தடுத்த வீரச்செயலை சீனாவும் ரஷ்யாவும் மறக்கப்போவதில்லை,” என அந்த அறிக்கை பிரகடனம் செய்தது. ஜப்பானுக்கு எதிரான யுத்தகால சோவியத்-சீன ஒத்துழைப்பின் “வரலாற்றை மேன்மைபடுத்துவது சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் இன்றைய மூலோபாய இணைப்புக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை இட்டுள்ளது” என அந்த அறிக்கை பெருமைகொள்கின்றது.

குறிப்பாக இந்த அறிக்கை ஜப்பானை இலக்காகக் கொண்டுள்ளது. கிழக்கு சீனக் கடலில், சீன ட்ரோலர் படகொன்றின் காப்டனை ஜப்பான் தடுத்து வைத்ததால் கிளர்ந்த, தயோயு தீவுகள் (ஜப்பானில் சென்காகு என்றழைக்கப்படுவது) தொடர்பான பிரச்சினையில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் கசப்பான இராஜதந்திர மோதல்கள் இடம்பெறும் நிலையிலேயே இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

வடகிழக்கு சீன நகரான டாலியனுக்கு பயணிப்பதுடனேயே மெட்வெடேவ் தனது விஜயத்தை தொடங்கினார். அங்கு அவர் 1945 ஆகஸ்ட்டில் ஜப்பான் இராணுவத்தை மன்சூரியாவில் இருந்து வெளியேற்றுவதற்குப் போராடி உயிரிழந்த சோவியத் சிப்பாய்களுக்கு அஞ்சலி செலுத்தினார். குறிப்பிடத்தக்க வகையில், இரு பேரரசுகளுக்கு இடையிலான முரண்பாடாக, ஷாரிஸ் ரஷ்யா மற்றும் ஏகாதிபத்திய ஜப்பானுக்கும் இடையில் 1904-05ல் நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட ரஷ்ய சிப்பாய்களுக்கும் அவர் புகழ் அஞ்சலி செலுத்தினார்.

மெட்வெடேவின் வருகையை அடுத்து, “ஆசியாவில்” குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர் ஜப்பானில் “பெருந்தொகையான இராணுவவாத யுத்தக் குற்றவாளிகளை பாதுகாப்பதாக” சீனாவின் உத்தியோகபூர்வ சின்ஹுவா செய்தி முகவரமைப்பு வாஷிங்டனை குற்றஞ்சாட்டியது. சீனாவையும் உள்ளடக்கிய பங்காளிகள் மத்தியில் யுத்தத்துக்குப் பின்னர் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை காட்டிக்கொடுத்துவிட்டதாகவும் அந்த பத்தி அமெரிக்காவை குற்றஞ்சாட்டியது. 1945 போஸ்ட்டாம் உடன்படிக்கையின் கீழ், யுத்தத்தின் போது மற்றும் அதற்கு முன்பும் அதனுடன் இணைந்திருந்த சகல பிராந்தியங்களையும் திருப்பித் தரவேண்டும் என்ற உண்மையை சின்ஹூவா வெளிச்சம்போட்டுக் காட்டினார். ஆயினும் 1971ல், சீனாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தயோயு தீவுகளை ஜப்பானுக்கு அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக கையளித்தது.

ஜப்பானில், ரஷ்யா மற்றும் சீனாவினது கூட்டறிக்கை, ஜப்பானுக்கு எதிரான ஒரு பொது கூட்டாக விளக்கப்படுகிறது. வடக்கு ஜப்பானிய தீவான ஹொக்கய்டோவுக்கு நெருக்கமாக உள்ள குரில் தீவுகளில் நாங்கு தீவுகள் சம்பந்தமாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நீண்டகால பிராந்திய முரண்பாடுகள் உள்ளன. சீனாவும் ரஷ்யாவும் “ஜப்பானிய பிராந்தியங்கள் மீதான தமது உரிமைகோரலில் ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைக்கின்றன” என கடந்த வாரம் யொமியுரிய் ஷிம்பன் ஊடகம் எச்சரித்தது.

மெட்வெடேவ் மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் போது குய்ரில் தீவுகளுக்கு செல்வதற்கு முதலில் திட்டமிட்டிருந்தார் –அங்கு செல்லும் முதலாவது ரஷ்யத் தலைவர். ரஷ்ய தூதருக்கு அறிவித்தல் ஒன்றை அனுப்பியதன் மூலம் பிரதிபலித்த டோக்கியோ, குயிரில்சுக்கு செல்வது ரஷ்ய-ஜப்பானிய உறவுகளுக்கு “கடும் முட்டுக்கட்டையிடுவதாகும்” என எச்சரித்தது. அந்தத் தீவுகளுக்கு செல்வதற்கு ரஷ்ய ஜனாதிபதிக்கு அல்லது எந்தவொரு பிரஜைக்கும் “அங்கீகாரம் தேவையில்லை” என கூறி மொஸ்கோ பதிலிறுத்தது. அந்தப் பயனம் “மோசமான காலநிலையின்” காரணமாக ஒத்திவைக்கப்பட்டதோடு விரைவில் அந்த தீவுகளுக்கு செல்வதாக மெட்வெடேவ் அறிவித்தார்.

ஜூலை மாதம், 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து கிழக்கில் அதன் மிகப்பெரும் “வெஸ்டொக் 2010” என்ற இராணுவப் பயிற்சியை ரஷ்யா மேற்கொண்டது. குயிரில் தீவுகளைச் சூழ நடந்த இந்த கடற்படை சூழ்ச்சிகள், ஜப்பானிடமிருந்து எதிர்ப்புக்களை தூண்டின. ரஷ்ய பசுபிக் கடற்படையை அடுத்த தசாப்தத்தில் விரிவுபடுத்தும் இலட்சியத் திட்டங்களுடன், இந்த பயிற்சியானது மொஸ்கோ பசுபிக்கில் பலமான பிடியை மீண்டும் ஸ்தாபித்துக்கொள்ள உறுதிபூண்டுள்ளதற்கான அறிகுறியாகும்.

மொஸ்கோவும் பெய்ஜிங்கும் கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு மத்திய ஆசிய குடியரசுகளுடன் 2001ல் ஸ்தாபிக்கப்பட்ட ஷங்ஹாய் கூட்டுத்தாபன அமைப்பின ஊடாக மத்திய ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கை எதிர்ப்பதில் ஏற்கனவே ஒத்துழைக்கின்றன. கடந்த மாதம், ஷங்ஹாய் கூட்டுத்தாபன அமைப்பு, கஸ்கஸ்தானில் “2010 சமாதான குழு” என்ற பெயரில் ஒரு பெரும் 16 நாள் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது. “பயங்கரவாதத்தை எதிர்த்தல்” என உத்தியோகபூர்வமாக குறிப்பிடப்பட்ட அதே வேளை, அந்தப் பயிற்சியின் மட்டம், மரபொழுங்குசார்ந்த யுத்த நடவடிக்கைக்கான ஒரு கூட்டுப் பயிற்சியை காட்டியது. இதில் கிட்டத்தட்ட 5,000 துருப்புக்கள், 1,600 தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் அதே போல் 50 யுத்த விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.

ரஷ்ய-சீன “மூலோபாய இணைப்பு” பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிழக்கு சைபீரியாவில் இருந்து சீன நகரான டாகிங்குக்கு ஒரு எண்ணெய் குழாய்த் திட்டத்தை முழுமைப்படுத்துவதையும் மெட்வெடேவின் பயணம் குறிக்கின்றது. இந்த திட்டத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு 15 மில்லியன் டொன் எண்ணெய் விநியோகிக்கப்படும். சீனா கடந்த ஆண்டு ரஷ்ய அரசுக்குச் சொந்தமான எரிசக்தி இராட்சதர்களுடன் செய்துகொண்ட 25 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான “எண்ணெய்க்கு கடன்” உடன்படிக்கையின் ஒரு பாகமாகவும் இந்த குழாய் திட்டம் உள்ளது.

நிலத்தினூடாக எண்ணெயை பெற்றுக்கொள்வதன் மூலம், தற்போது அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க கடல்வழிப் பாதையில் சீன தங்கியிருப்பதை குறைத்துக்கொள்கின்றது. சீனாவுக்கு மட்டுமன்றி, ஜப்பான் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுக்குமான விநியோகத்துக்கு குழாய்களை கட்டுவிப்பதன் மூலம் ரஷ்யா ஐரோப்பிய எரிசக்தி சந்தையில் தங்கியிருப்பதை குறைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது.

மெட்வெடேவின் விஜயத்துக்கு முன்னதாக சீனாவில் இருந்த ரஷ்ய துணை பிரதமர் இகோர் செசின், ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக அபிவிருத்தி செய்யவிருக்கும் 5 பில்லியன் டொலர் செலவிலான எண்ணெய் சுத்தீகரிப்பை தொடக்கிவைப்பற்கான ஆரம்ப விழாவுக்காக டியான்ஜினில் இருந்தார். “சீனாவின் முழு எரிவாயு கோரிக்கையையும் இட்டுநிரப்ப” ரஷ்யா தயாராக உள்ளது என தனது சீன விருந்தினர்களுக்கு செசின் கூறினார். 2011ல் இருந்து சீனாவுக்கு ஆண்டுதோரும் 60 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை விநியோகிப்பதற்கான 2006 உடன்படிக்கை, விலைகள் தொடர்பான முரண்பாட்டால் கிடப்பில் போடப்பட்டது. அண்மைய பேச்சுவார்த்தைகளில், தொடர்ந்துவரும் 30 ஆண்டுகளுக்கு எரிவாயு விநியோகத்தை 2015ல் தொடங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

தனது நாட்டில் அழிந்துவரும் தொழிற்துறை தளத்தை நவீனமயப்படுத்த பெருமளவில் ரஷ்யாவில் முதலீடு செய்யுமாறு சீனாவுக்கு மெட்வெடேவ் அழைப்பு விடுத்தார். மெட்வெடேவின் பயணத்தின் போது, சீனாவின் FAW குழுவுக்கும் ரஷ்யாவின் GAZ குழுவுக்கும் யூரல்ஸில் கனரக ட்றக்குகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு துணிச்சல் மிக்க கூட்டு முயற்சியும் இருந்தது. உலகில் பயன்படும் ட்றக்குகளில் பாதியை சீனா இப்போது உற்பத்தி செய்வதோடு வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் தொடங்கியுள்ளது. கடந்த தசாப்தத்தில் 12 மடங்காக அதிகரித்த ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம், ரஷ்யாவின் மிகப்பெரும் வர்த்தக பங்காளியாக சீனா ஜேர்மனியை விஞ்சுவதற்கு வழிவகுத்துள்ளது.

பிராந்தியத்தில் சீன செல்வாக்கை கீழறுப்பதற்காக, ஜப்பான் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள கடந்த ஆண்டு பூராவும் ஒபாமா நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கான பதில் நடவடிக்கையே சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த மூலோபாய பொருளாதார உறவாகும். இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் ஆசியாவில் பதட்ட நிலைமைகளையும் ஆபத்தான மோதல்களுக்கான சாத்தியத்தையும் உக்கிரமடையச் செய்கின்றன.