சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The WSWS speaks to workers on October 28 day of action in France

பிரான்ஸ் அக்டோபர் 28ம் திகதி நடவடிக்கை தினத்தில் WSWS தொழிலாளர்களிடம் பேசுகிறது

By Antoine Lerougetel
30 October 2010

Use this version to print | Send feedback

Paris
பாரிஸ் ஆர்ப்பாட்ட அணிவகுப்பினரில் ஒரு பிரிவு

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியச் “சீர்திருத்த” சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் வியாழனன்று 270 ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்களில் கிட்டதட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சட்டத்திற்கு புதன்கிழமை அன்று தேசிய சட்டமன்றம் அதன் இறுதி வாக்கை அளித்துள்ளது. இது ஜனவரி 1, 2011ல் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

வியாழக்கிழமை அணிதிரள்வானது செப்டம்பர் 7ல் இருந்து சார்க்கோசியின் ஓய்வூதியச் சட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்த ஏழாவது நடவடிக்கை தினம் ஆகும். இச்சட்டம் ஓய்வூதியம் பெறும் வயதை 60ல் இருந்து 62க்கு உயர்த்தி, எந்த நிதிய அபராதமும் இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 67க்கும் உயர்த்தியுள்ளது.

போக்குவரத்து வேலைநிறுத்தங்கள், பெட்ரோல் நிலையங்களில் எரிபொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு என்று பல தடைகள் இருந்தபோதிலும்கூட, வெகுஜன இயக்கம், முந்தைய நடவடிக்கை தினங்களில் மூன்று மில்லியனுக்கும் மேலான தொழிலாளர்களின் அணிதிரள்வு தொடர்ந்து மக்களில் மூன்றில் இரு பங்கினரின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றுள்ளதாகக் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

ஒப்புதல் கருத்து கணிப்பில் சார்க்கோசி அரசாங்கம் இதுவரை இல்லாத மிகக் குறைந்த 29 சதவிகிதம் ஆதரவைத்தான் பெற்றுள்ளது. ஆயினும்கூட, இது வெட்டுக்களை இயற்ற முடிந்துள்ளதற்குக் காரணம் தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ “இடது” எதிர்ப்புக் கட்சிகளான சோசலிஸ்ட் கட்சி (PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), அல்லது மத்தியதர வர்க்க முன்னாள் தீவிரபோக்குக் கட்சிகள் அதாவது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்றவற்றினால் எந்தவித உண்மையான அரசியல் எதிர்ப்பும் காட்டப்படவில்லை. மாறாக இந்த அமைப்புக்கள் அனைத்தும் சார்க்கோசிக்கு அவருடைய வெட்டுக்களைத் திருத்த வேண்டும் என்ற பெருகிய முறையில் திவாலான இழிந்துவிட்ட வெகுஜன ஆதரவு இல்லாத கொள்கையை சுற்றித்தான் உள்ளன.

WSWS குழுக்கள் பாரிஸ், மார்செய், நீஸ் மற்றும் அமியான் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு “பிரான்சில் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்றனர்.” என்னும் கட்டுரையின் பிரதிகளை விநியோகித்தனர்.

உரையாடல்களில் பல தொழிலாளர்களும் இளைஞர்களும் உத்தியோகபூர்வ “இடது”களின் திவால்தன்மை மற்றும் வர்க்க ஒத்துழைப்பு குறித்து பெருகிய முறையில் உணர்ந்து வருகின்றனர், ஒரு மாற்றீட்டை நாடுகின்றனர் என்பது தெளிவாயிற்று.

Students
பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் அணிவகுத்துச் செல்லும் மாணவர்கள். கோஷ அட்டை கூறுகிறது: சார்க்கோ, நீ 2012ல் மீண்டும் ஆரம்பிக்க முடியாது.

இரு தொழிற்சங்கங்களும் கிட்டத்தட்ட 170,000 மக்கள் வந்திருந்தனர் என்று மதிப்பீடு செய்திருந்த பாரிஸில், வீட்டில் தயாரிக்கப்பட்ட கோஷ அட்டைகளில் “அனைத்து அதிகாரங்ளும் நகரசபைகளுக்கும், “ஓய்வு பெறும் வரை பொது வேலைநிறுத்தம்” என்று எழுதப்பட்டிருந்தன.

PS ஐ அதன் வலதுசாரி, வணிகச் சார்பு கொள்கைகளுக்காக குறைகூறியிருந்த ஒரு வாசக அட்டை, DSK எனவும் அறியப்படும் டொமினிக் ஸ்ட்ராஸ் கானின் பெயர் மேற்கோளிடப்பட்டிருந்தது. அவர் இப்பொழுது தடையற்ற சந்தையின் அமைப்பான IMF ன் தலைவர் ஆவார். 2012 தேர்தல்களில் ஒருவேளை PS இன் வேட்பாளராக நிற்கலாம். அந்த வாசகத்தில் “சார்க்கோசியும் ஸ்ட்ராஸ் கானும் ஒரே போராட்டத்தில்தான் உள்ளனர், தொழிலாள வர்க்கத்தின் விரோதிகள், சோசலிஸ்ட் கட்சிக்கு வெட்கம்” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் இருந்த சுத்திகரிப்பு நிலையங்களின் தொழிலாளர்கள் அவர்களின் போராட்டம் சர்வதேசத் தன்மை உடையது என்று சுட்டிக்காட்டி பெல்ஜிய நாட்டின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தங்கள் எரிபொருள் பிரெஞ்சு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முறியடிக்கப் பயன்படுத்தப்படுவதை தடுத்த நடவடிக்கை பற்றிக் கூறினார். கிரேக்க தொழிலாளர்களும் அணிவகுப்பில் இருந்தனர். ஒருவர் WSWS இடம் கூறினார்: “நாங்கள் ஒரேவிதப் போராட்டங்களைத்தான் எல்லா இடங்களிலும் எதிர்கொள்கிறோம்.”

ஒரு ஓய்வூதியம் பெறும் கத்தரின் கூறினார்: “”நான் ஒவ்வொருவரையும் பாதுகாக்க இங்கு வந்துள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை, எந்த நாடும் பாதிக்கப்படாமல் இல்லை. நிதியியல் அனைத்தையும் ஆள்கிறது, அதைத்தான் நாங்கள் சமாளிக்க வேண்டும். அதுதான் என்னைத் தூண்டியுள்ளது.”

ஒரு இசைக் கலைஞரான நிக்கோலா ஒரு பொதுவேலைநிறுத்தக் கருத்திற்கு ஆதரவு கொடுத்தார். அவர் தொழிற்சங்கங்களை குறைகூறும் விதத்தில், “அவை போராட விரும்பவில்லை, வெறும் பேச்சுவார்த்தைகளைத்தான் விரும்புகின்றன.” என்றார்.

டானியல் ஒரு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பள்ளி நூலகராக உள்ளார். அவர் விளக்கினார்: “ஒரு நிலையான வேலை இல்லாதது மிகக் கடினம். சார்க்கோசியை பின்வாங்க வலியுறுத்தலாம் என்ற கருத்து என்னுடையது இல்லை. தொழிலாளர்கள் இயக்கத்தை, தொழிலாளர்கள் ஜனநாயகத்தை, தொழிலாளர் சக்தியைக் கட்டமைப்பது முக்கியமாகும். சார்க்கோசியை அகற்றவும், முதலாளிகளின் சக்தியை அகற்றவும் ஒரு பொதுவேலைநிறுத்தம் இயக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத் தலைமை தற்போதைய முறையுடன் இணைந்துள்ளது, எனவே அவர்கள் இந்த அகற்றுதலை விரும்பவில்லை. இடது என அழைக்கப்படுபவை, NPA உட்பட, தற்போதைய முறையுடன் பிணைந்தவை, எனவேதான் அவை ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடவில்லை.

மார்செயில் தொழிற்சங்கங்கள் 150,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என்று மதிப்பிட்டுள்ளன. மருத்துவமனைகள், பொறியியல் மற்றும் எஃகு, பெட்ரோ கெமிக்கல் தொழில்கள், மாணவர்கள் உட்பட கல்வித்துறைப் பணியாளர்கள் ஆகிய பிரிவுகளின் பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.

பலரும் தொழிற்சங்கங்கள் பற்றி WSWS உடைய விமர்சனங்களுக்கும், சார்க்கோசியை வீழ்த்தி அவருடைய அரசாங்கத்திற்கு பதிலாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதற்கு அதன் அழைப்பான தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் உடன்பாடு தெரிவித்தனர்.

Nice
நீசில் ஆர்ப்பாட்டம்

WSWS ஒரு ஆரம்பப் பள்ளி உதவியாளருடன் பேசியது: அவர் தான் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் இல்லை என்றார். “நான் மே 1968 [பொது வேலைநிறுத்தம் மற்றும் மாணவர் எதிர்ப்புக்களின்] அனுபவத்தைக் கொண்டுள்ளேன். இந்த அரசாங்கத்தை நாம் பின்வாங்க வைக்க நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை. எவரும் கேட்கவில்லை என்றாலும் நாம் போராட்டத்தைத் தொடர வேண்டும்.”

ஒரு CGT மின்னிணைப்பு தொழிலாளியான நோர்டைன், கட்டமைப்புத் தொழிலில் 1971ல் இருந்து இருப்பவர், அரசாங்கங்களை செயல்படுத்தக் கட்டாயப்படுத்துவதற்கு “பல ஆண்டுகளாக அணிதிரள்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்றார். ஆனால் இம்முறை அரசாங்கம் “சீர்திருத்தம் இயற்றப்படுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டது, ஆனால் பிரச்சினைகள் இருக்கும்” என்று உணர்ந்துள்ளார்.

மத்தியதர வர்க்கத்தின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) யின் உறுப்பினர் பிரான்சுவாஸிடம் WSWS உரையாடியது. அவர் WSWS உடைய நிலைப்பாடுகளுக்குத் தன் விரோதப்போக்கை வெளிப்படுத்தினார். “தொழிலாளர்களால் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் தொழில்துறை என்பது கற்பனையானது. தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்ளுவது பற்றி நான் அவநம்பிக்கை கொண்டுள்ளேன். NPA உடைய போக்குடன் உடன்பட்டுள்ளேன்” என்றார்.

சார்க்கோசியின் வெளிநாட்டினருக்கு எதிரான வெறி, முஸ்லிம்-எதிர்ப்புப் பிரச்சாரம் ஆகியவற்றிற்கும், குறிப்பாக பர்க்கா அணிதலை அவர் தடைசெய்திருப்பதற்கும் தன் ஆதரவைத் தெரிவித்தார். அவர் விளக்கியது: “மார்செயில் ஒரு பிரச்சினை, இனவெறி பிடித்தவர் என்று இல்லாமல் நான் கூறுவது, அங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கைதான். அவர்கள் வலுவான நம்பிக்கை உடையவர்கள், ரமழானைக் கொண்டாடுகின்றனர். நான் மதசார்பற்றவள், புரட்சிக்காக வாதிடுவேனே அன்றி, அல்லாவிற்காக அல்ல.”

அவர் மேலும் கூறினார்: “என்னால் பர்க்காவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய பணியிடத்தில் பர்க்கா அணியும் பெண்களை வைத்துக் கொள்ள மறுப்பேன்.”

தான் மார்க்சிச மரபுகளுக்கும் விரோதப் போக்கு உடையவர் என்று பிரான்சுவாஸ் தெளிவுபடுத்தினார். “நான் ட்ரொட்ஸ்கி, லெனின் நூல்களைப் படிக்க மறுக்கிறேன். என்னால் அவர்களை ஏற்க முடியாது. மார்க்ஸையும் தான்…. நான் போராட விரும்புகிறேன், சியாபஸ் கூட்டுறவு நிலையங்களில் இருந்து வரும் பொருட்களை, கொள்கைகளைப் பற்றிப் பேசுவதைவிட, விரும்புகிறேன். NPA அனைத்தையும் கலக்கும் ஒரு கட்சி, ஆனால் நல்லவற்றையே.”

47 வயதான தொழிற்சங்கத்தில் இல்லாத இரயில்வே தொழிலாளி ரோபினும் WSWS உடன் பேசினார். அவர் கூறியது: “நடவடிக்கை தினங்கள் போதிய திறனைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் குறுகிய பார்வையைத்தான் காண்கின்றீர்கள், ஒருபுறத்தில் செவிலியர்களுக்கு, இன்னொருபுறத்தில் தீயணைப்பு படையினருக்கு என. இது ஒரு உலகப் பிரச்சினை, உலகத்தை மக்கள் முதுகுகளின் மீது நின்று எல்லா மக்களையும் சுற்றிச்சூழ்ந்து ஆதிக்கம் செலுத்தும் அரசியல் மற்றும் நிதியத் தன்னலக்குழுவின் வேலை.”

தொழிற்சங்கங்களையும் “இடது” கட்சிகளையும் குறைகூறிய வகையில் தெரிவித்தார்: “தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருப்பவை. PS மக்களுக்கு எதிராக இராணுவத்தையும் அனுப்பக்கூடும். DSK [சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான டொமினிக் ஸ்ட்ராஸ் கான், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக PS சார்பில் நிற்கக் கூடியவர்], சார்க்கோசி என்று அனைத்தும் ஒரே முறைதான்.”

சார்க்கோசியின் இனவழி இலக்கான ரோமாக்களை நாடுகடத்துவது பற்றிப் பேசிய அவர், “ரோமாக்களை துன்புறுத்துவது என்பது மக்களுடைய நியாய உணர்வை அழிப்பது, அவர்களை சர்வாதிகாரத்தை ஏற்க வைப்பது” என்றார்.

Amiens
அமியன்: கோஷ அட்டைகள் கூறுவது: “இளைஞர்கள் வேலையின்மையில் உள்ளனர், மூத்தவர்கள் பணியில் உள்ளனர், வருங்காலத் தலைமுறைகள் – என்ன வருங்காலம்?, “உங்கள் தீர்வுகள் ஏதும் எங்களுக்கு வேண்டாம்.”

அமியானில் தொழிற்சங்கங்கள் 12,000 பேர் கூடியதாக மதிப்பிட்டுள்ளன. WSWS அமியான் குட் இயர் டயர் ஆலையில் வேலைபார்க்கும் மஜித்திடம் பேசியது. இந்நிறுவனம் 820 பணிநீக்கங்களை எதிர்கொள்கிறது. இவர் தன் ஆலையிலுள்ள இடத்தில் தொழில்துறை வளாகத்தை முற்றுகை இடுவதில் தீவிரமாக உள்ளார். இது சார்க்கோசியின் ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி ஆகும். CRS கலகத் தடுப்புப் பிரிவு பொலிசார் முற்றுகையை அகற்றப் பயன்படுத்தப்பட்டனர்.

தொழிற்சங்கங்கள் ஜனநாயக உரிமைகள் மீதான இத்தாக்குதலை எதிர்க்கின்றனர் என்று எங்களிடம் அவர் கூறினார். “அவர்கள் 300 முற்றுகையிடுபவர்களை கலையுமாறு உத்தரவிட்டனர். CGT தலைமை ஏதும் கொடுப்பதில்லை. தன் நிதிகளைப் பயன்படுத்துவது இல்லை. வேலைநிறுத்த நிதிகள் இல்லை. ஆயினும்கூட தொழிற்சங்கங்கள் மில்லியன் கணக்கில் பணம் கொண்டுள்ளன. தொழிற்சங்கங்கள் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. Donges சுத்திகரிப்பு நிலையத்தில் சாதாரண குடிமக்கள் தான் வேலைநிறுத்தக்காரர்களுக்கு நிதி கொண்டுவந்தனர், தொழிற்சங்கங்கள் அல்ல.”

அரசியல் கட்சிகள் பற்றிப் பேசிய அவர் கூறினார்: “PS ஆனது 35 மணி நேர வாரம் என்பதைக் கொண்டு வந்தது ஆனால் அத்துடன் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அறிமுகப்படுத்தி எங்கள் பணி நிலைமைகளை அழிக்க வகை செய்தது…. எந்தக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நான் முத்திரைகளை நம்புவதில்லை: மார்க்ஸிஸ்ட், ட்ரொட்ஸ்கிஸ்ட், லெனினிஸ்ட் என. திட்டம் தான் முக்கியம். நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், அரசாங்கத்தை வீழ்த்தி அதற்குப் பதிலாகத் தொழிலாளர்கள் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதற்குப் போராடும் ஒரு பொது வேலைநிறுத்தம் தேவை என்று கூறும் WSWS கருத்துடன் உடன்படுகிறேன். நாம் அரசியல் வகையில் கண்டிப்பாகக் கற்றாக வேண்டும்.

புதன்கிழமை அன்று அவர்கள் தடுப்புக்கள் போட்டு, மறியல் நடத்திவரும் அமியானில் கிடங்கிற்கு வெளியே இரயில் தொழிலாளர்களிடம் WSWS பேசியது. அவர்கள் இத்தடுப்புக்களை அக்டோபர் 12 வேலைநிறுத்தத்தில் இருந்து தக்க வைத்துள்ளனர். அவற்றை அன்று பிற்பகல்தான், இருவார வேலைநிறுத்தத்திற்கு பின்னர் அகற்றினர்.

டொமினிக் சீற்றமாக இருந்தார்: “தொழிற்சங்கத் தலைமைகள் எங்களுக்கு எந்த ஆதரவும் கொடுக்கவில்லை. அவர்கள் எங்களைத் தனிமைப்படுத்தி விட்டனர்.”

சில்வி கூறினார்: “SUD (Solidarity-Unity-Democracy, முக்கிய இரயில் தொழிற்சங்கங்களில் ஒன்று) தன்னை ஒரு போராளித்துவ சங்கமாக காட்டிக் கொண்டது, CGT யிடம் இருந்து சுயாதீனமாக இருப்பதாக, ஆனால் அதுவும் அதிகாரத்துவம் வாய்ந்ததாகிவிட்டது.”

வியாழன் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியில் இரயில் தொழிலாளர்களின் வலுவான நிலைப்பாடு இருந்தது. சிக்னல் பிரிவிலுள்ள இளைஞர் ஆர்னோ தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்துவிட்டதாக உணர்ந்தார். “இப்போராட்டத்தில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ளப் போகிறோம்.”

ஒரு இளம் ஆசிரியையான ஜூலியன், நண்பர்கள் குழுவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர், “தொழிலாள வர்க்கத்திடம் ஒற்றுமை இல்லாதது” குறித்து ஏமாற்றம் அடைந்தார். “தொழிற்சங்கங்கள் சார்க்கோசி அரசாங்கத்தை அகற்ற ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதை மறுத்துள்ளதை WSWS சுட்டிக் காட்டியபோது, அவர் இதற்கு மாபெரும் விடையிறுப்பு ஏற்படும் என்று ஒப்புக் கொண்டார். “உங்கள் துண்டுப் பிரசுரங்களை நான் படித்துள்ளேன். உங்கள் பகுப்பாய்வுகளுடன் உடன்படுகிறேன். ஒரு சர்வதேசப் போராட்டம் வர உள்ளது.”