சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Police Chief vows to step up spying on workers

இந்தியா: தொழிலாளர்களை உளவுபார்ப்பதை அதிகரிக்க போலிஸ் அதிகாரி உறுதியெடுக்கிறார்

By Arun Kumar
4 November 2010

Use this version to print | Send feedback

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை உள்ளிருப்புப் போராட்டங்களின் அலைகளுக்கு நடுவே, சென்னையில் சென்ற மாதத்தில் ஒரு வர்த்தக மாநாட்டில் பேசிய தமிழக டிஜிபி, “இடதுசாரி தீவிரவாதத்தை” தடுக்க தொழிலாளர்கள் மீதான போலிஸ் கண்காணிப்பை அரசு அதிகப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வேலைக்கு வருகின்ற தொழிலாளர்களின் பின்புலங்களை ஆராய வேண்டும் என்றும் தங்களிடம் வேலை செய்கிறவர்களைக் கண்காணித்து வர வேண்டும் என்றும் அப்போது தான் “தீவிரவாதிகளையும்” ”சமூகவிரோத” தொழிலாளர்களையும் அடையாளம் காண முடியும் என்றும் டிஜிபி லத்திகா சரண் முதலாளிகளை வலியுறுத்தினார்.

இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் அக்டோபர் 23 அன்று பேசிய டிஜிபி லத்திகா சரண், ‘இடது சாரி தீவிரவாதம்’ தான் இந்தியாவின் மாபெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கின்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் திட்டவட்டமான வாதத்தை தொடர்ந்து கூறினார். இந்தியாவின் காட்டுப் பகுதிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான பழங்குடியின கிளர்ச்சிக்கு எதிராக பல மாநிலங்களில் தொடுக்கப்பட்டிருக்கும் கிளர்ச்சித் தடுப்பு போரான தனது பசுமை வேட்டை நடவடிக்கைக்கு (Operation Green Hunt) ஆதரவு திரட்டுவதற்காக மன்மோகன் சிங் அதனை கூறியிருந்தார். லத்திகா சரணோ போர்க்குணமிக்க தொழிலாளர்களை கண்காணிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் அரசு மற்றும் முதலாளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு “தீவிரவாத” அச்சுறுத்தலை கொண்டு வந்தார்.

“எந்த வடிவத்திலுமான இடதுசாரி தீவிரவாதம் தான் நாம் முகம் கொடுக்கும் மாபெரும் அச்சுறுத்தல்” என்று சரண் அறிவித்தார்.

“எப்போதும் அவர்கள் நமது மாநில எல்லைக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் நமது சமூகத்தில் அவர்கள் தொழிலாளர்கள் என்னும் போர்வையில் உள்ளே நுழைகிற அச்சுறுத்தல் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இது நாம் கவலைப்பட வேண்டிய அம்சமாகும்.... அப்படியொரு விடயம் நடவாமல் இருப்பதை உறுதி செய்ய நமது உளவு எந்திரத்தை முடுக்கி விடுவதற்கு நாங்கள் முயற்சி செய்துள்ளோம்.”

கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பிற கருவிகளில் முதலீடு செய்வதற்கு சரண் முதலாளிகளை வலியுறுத்தினார். ஆயினும் தொழிலாளர்களின் எண்ணங்களிலும் மனப்போக்குகளிலும் சிறப்பான கண்காணிப்பு அவசியம் என அவர் ஆலோசனையளித்தார். “ஊழியர்களின் முன்வரலாறுகளை நீங்கள் கட்டாயம் சோதிக்க வேண்டும்” என்று சரண் அறிவித்தார். “வெறுப்புணர்வுள்ள ஒரு ஊழியர் வெளியில் சதித் திட்டத்துடன் காத்திருக்கும் ஒருவருக்கு எளிதாக இலக்காகி விடுவார்.”

அடுத்த மூன்று வருடங்களில் தமிழக போலிஸ் படையில் 30,000 பேர் அதிகரிக்கப்பட இருப்பதற்கான ஒரு திட்டத்தை இந்த மாநாட்டில் லத்திகா சரண் அறிவித்தார்.

அரசு ஒடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க திட்டமிட்டு மாவோயிச அச்சுறுத்தலைக் கையிலெடுக்கின்ற முதல் இந்திய அதிகாரி லத்திகா சரண் அல்ல. உண்மையில், அமெரிக்காவில் “பயங்கரவாதத்தின் மீதான போர்” போல, இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் எழுகின்ற எதிர்ப்பை வெல்வதற்கும் இந்தியாவின் ஆளும் உயரடுக்கினர் எப்போதும் எழுப்புகிற ஒன்றாக மாவோயிச அச்சுறுத்தல் ஆகி வருகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், தெலுங்கானா உருவாக்கத்திற்கான வெகுஜனப் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் கலந்து விட்டதாகக் கூறி ஹைதராபாத்தில் பிரதான பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதற்கு துணை இராணுவப் படைகளை ஆந்திரப் பிரதேச அரசாங்கம் குவித்தது.

மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் “தொழிலாளர்களாய்” ஊடுருவ முயல்வதாகவும் தொழில்துறையை முடக்கும் பரப்புரைக்கு தயாரிப்பு செய்வதாகவும் கூறுவது ஒரு தந்திரம் ஆகும். 1960களின் பிற்பகுதியில் நக்சலைட்டுகள் எழுந்த காலத்தில் இருந்து அவர்கள் தங்களது செயல்பாட்டை ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மீதே குவித்து வந்திருக்கின்றனர், மிக சமீபத்தில் இந்தியாவின் மிக பின்தங்கிய பகுதிகளில் வாழ்கின்ற வேட்டையாடி சுள்ளி பொறுக்கிப் பிழைக்கும் பழங்குடி மக்களின் குழுக்களின் மீது கவனம் செலுத்தி வந்திருக்கின்றனர். விவசாயிகளே சமகால இந்தியாவின் பிரதான புரட்சிகர சக்தி என்றும் எதிர்வரும் இந்தியப் புரட்சி “மக்கள் ஜனநாயக”ப் புரட்சியாக இருக்குமே அன்றி ஒரு சோசலிசப் புரட்சியாக இருக்காது என்றும் அறிவிக்கும் மாவோயிஸ்டுகளின் தேசியவாத-ஸ்ராலினிச முன்னோக்கின் பாதையில் இந்த நோக்குநிலை அமைந்திருக்கிறது.

அவ்வப்போதான சந்தர்ப்பங்களில் மட்டுமே மாவோயிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை சம்பிரதாயமாய் குறிப்பிடுகின்றனர். ஆனால் அவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை திட்டமிட்டு புறக்கணித்து வந்துள்ளதோடு, தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளாலும் அவற்றின் தொழிற்சங்க கூட்டாளிகளாலும் மேலாதிக்கம் செய்யப்படுவதற்கு ஒரு அரசியல் சவாலை முன்வைக்க தவறுகின்றனர். அத்துடன் முதலாளித்துவ கட்சிகளுடன் பல்வேறு சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குள்ளும் நுழைந்திருக்கின்றனர். உதாரணமாக, மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு மறைமுகமான கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் தமிழகத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்களின் அலை குறித்து தமிழக அரசாங்கம் மற்றும் இந்திய உயரடுக்கின் உள்ளே உண்மையான கவலைகள் எழுந்துள்ளன. இந்த புதிய போர்க்குணம் குறித்த ஆளும் வர்க்கத்தின் கவலைகள் அக்டோபர் 17 பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தகவலறிக்கையாய் வந்தது. “தொழிலாளர் பிரச்சினைகள் இந்தியாவின் ‘டெட்ராயிட்’டை உலுக்குகின்றன” என்ற தலைப்பில் வந்த இந்த தகவலறிக்கையின் ஒரு பகுதி இப்படி செல்கிறது: “வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஏராளமாய் உள்ளதன் காரணமாக இந்த நகரம் [தமிழக தலைநகர் சென்னை] இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படும் அளவுக்கு வந்திருக்கிறது. ஆனால் தொடர்ச்சியான தொழிலாளர் பிரச்சினைகள் அதனை உலுக்கியெடுத்துள்ளதோடு தொழிற்துறை அமைதியின் மீது ஒரு கேள்விக்குறியை இட்டுள்ளன.” சென்னையில் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் ஏராளமான வேலைநிறுத்தங்கள் அந்த செய்தியில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தன. ஹூண்டாய், நோக்கியா மற்றும் டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எப் ஆகிய நிறுவனங்களில் நடந்த வேலைநிறுத்தங்களும் இதில் அடங்கும்.

லத்திகா சரண் பேசியதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளைக் கொண்டு பார்த்தால், தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குவதில் தமிழக போலிஸ் செய்து கொண்டிருக்கும் சுறுசுறுப்பான பாத்திரத்தை இந்த கருத்தரங்கில் லத்திகா சரண் பேசியபோது குறிப்பிடவில்லை.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தமிழக அரசாங்கத்தின் உத்தரவுகளின் பேரில் போலிஸ், முற்றுகையிடும் தொழிலாளர்களை தொடர்ந்து கைது செய்து வந்துள்ளதோடு ஆலை உள்ளிருப்புப் போராட்டங்களை உடைக்க வன்முறையை அல்லது வன்முறை அச்சுறுத்தலைப் பயன்படுத்தியது. சென்ற சனிக்கிழமையன்று, ஒரகடத்தில் உள்ள ஒரு BYD எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ’தொழிலாளர்கள் இரண்டு நாளாக நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்தை 30 நிமிடங்களுக்குள் முடித்துக் கொள்ளா விட்டால் தாங்கள் உள்ளே நுழைய வேண்டியது வரும்’ என்று போலிஸ் அச்சுறுத்தியது. (காணவும். ”இந்தியா: போலிசார் தர்ணா போராட்டத்தை உடைத்தபின் BYD எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது தொழிலாளர்கள் பலரையும் நீக்கியிருக்கிறது”)

திமுக அரசாங்கத்தின் மற்றும் போலிசின் உண்மையான கவலை பயங்கரவாதமோ அல்லது தொழிற்துறை சதிகளோ அல்ல, மாறாக பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்கள் எழுச்சி காணுவதும் இந்திய மற்றும் உலகளாவிய மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நலன்களை எடுத்துக் கூறி ஒரு அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்டு அதனை ஆயுதபாணியாக்க புரட்சிகர சோசலிஸ்டுகள் முயலுவதும் தான் என்பதை ”எந்த வடிவத்திலும் வரக்கூடிய இடதுசாரி தீவிரவாதம்” என்கின்ற வார்த்தையை லத்திகா சரண் பயன்படுத்தியிருப்பதானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் கருத்தரங்கில் லத்திகா சரண் கூறிய கருத்துகளை அடுத்து வந்த சென்னையில் இருக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த லெப்டினெண்ட் ஜெனரல் கவுதம் பானர்ஜியும் எதிரொலித்தார்.

”எந்த இடத்திலும் ஒரு நாலைந்து பேர் உள்ளிருந்து போராடுவது (தர்ணா) ஒரு அரசையே ஸ்தம்பிக்க செய்து விடும்” உண்மை குறித்து அவர் வருந்தினார். இந்தியா பொருளாதார ரீதியாக தொடர்ந்து முன்னேறும் வகையில் (அவர் குறிப்பிடுவது உலக முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு உழைப்பு உற்பத்தியகமாய் இந்தியாவை மாற்றுவதில் இந்திய முதலாளித்துவம் கண்டிருக்கும் ஒப்பீட்டளவிலான வெற்றியை) சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க இராணுவம் எப்போதும் தயார்நிலையில் இருப்பதாக அவர் பின் உறுதியளித்தார்.