சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greek union calls off rail strike

கிரேக்கத் தொழிற்சங்கம் இரயில் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்கிறது

By Robert Stevens
2 November 2010

Use this version to print | Send feedback

அக்டோபர் 28ம் தேதி POS எனப்படும் பான்ஹெலலெனிக் இரயில்வே தொழிலாளர்கள் கூட்டமைப்பு (கிரேக்கம் தழுவிய இரயில் தொழிலாளர்கள் கூட்டமைப்பு) சமீபத்திய கிரேக்க இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் ஏற்கனவே திங்கள் முதல் புதன் வரை கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, இன்னும் ஒரு நாள் கடந்த வெள்ளி வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக இருந்தது. கடைசி வேலைநிறுத்தம் இரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்த நடவடிக்கை தொழிற்சங்கங்களின் மிகச் சமீபத்திய நாச வேலை ஆகும். இவை கடந்த ஆண்டு முழுவதும் ஆளும் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் அதன் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கையை செயல்படுத்துவதற்குத்தான் உழைத்துள்ளன.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் சட்டவரைவான OSE (ஹெலெனிக் இரயில்வே நிறுவனம்) மறுகட்டமைப்பு, இறுதியில் தனியார்மயமாக்குதலுக்கு உட்படுத்துவது பற்றிய விவாதம் நடக்கும் நேரத்தில் POS முதலில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அக்டோபர் 26ம் தேதி பாராளுமன்ற உயர்குழு சட்டவரைவின் விதிகளுக்கு ஒப்புதல் அளித்தபிறகு அச்சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. சட்டவரைவில் OSE யின் சொத்துக்களை விற்பது பற்றி, இலாபம் இல்லாத இரண்டாவது பாதைகளைக் குறைத்தல், கூட்டுத் தொழிலாளர் உடன்படிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் ஊழியர்களுடைய ஊதிய நிலைப்பாடு பற்றியவையும் அடங்கியிருந்தன.

இது இரயில்வே முறையை இரு நிறுவனங்களின் பொறுப்பில் அளிக்கும்—Trainose மற்றும் Geose என. அவை இரயில் உள்கட்டுமானத்தை உடைமையாக கொள்ளும். திட்டம் இரயில் சேவைகள் நிறுவனம் TrainOSE த்தின் 49 சதவிகிதப் பங்குகளை தனியார் முதலீட்டிற்கு விற்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

OSE ன் தொழிலாளர் தொகுப்பை அதன் பின் தற்பொழுதைய 6,000க்கும் மேற்பட்டதிலிருந்து 3,700 ஆக அரசாங்கம் வெட்டுவதற்குத் திட்டம் கொண்டுள்ளது. போக்குவரத்து மந்திரி டிமிட்ரிஸ் ரெப்பாஸ் சமீபத்தில் ஊதியக் குறைப்புச் சட்ட வரைவு OSE யின் வருங்கால விற்பனைக்கு அடிப்படைக் கூறுபாடு என்றார். “OSE உடைய வருமானங்கள் 106 மில்லியன் யூரோக்கள் ஆனால் ஊதியச் செலவுகள் 116 மில்லியன் யூரோக்கள் 2009ல் என்பதை நாம் ஏற்கமுடியாது” என்றார் அவர்.

OSE/TrainOse ஆகியவற்றை விற்பது என்பது PASOK யின் மூலோபாயமான 2013க்குள் 3 பில்லியன் யூரோக்களை அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக மாற்றுவது என்பதற்கு மையத்தானம் ஆகும். OSE பெரிதும் கடன்பட்டுள்ளது, அதன் மொத்தக் கடன்கள் 10.7 பில்லியன் என்று உள்ளது. இது தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பது PASOK, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கொண்ட மே மாத உடன்பாட்டின் அடிப்படையில் உள்ளது. இதற்கு ஈடாக அரசாங்கம் 110 பில்லியன் யூரோக்களைப் பிணை எடுப்புப் பொதியாகப் பெற்றது.

OSE யின் சொத்துக்களை விற்றல் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. சீனக் கடல்வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனமான Cosco China பிரயஸ் துறைமுகத்தில் இரு பகுதிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கண்டுள்ளது, ஏதென்ஸுக்கு மேற்கே திராஸ்ஸியனில் போக்குவரத்துத் தளவாடங்கள் மையத்தை கட்டமைக்கத்திட்டம் கொண்டுள்ளது. இந்த இடம் இப்பொழுது OSER இடம் உள்ளது, இந்த ஆண்டு இறுதிக்குள் விற்கப்பட இருக்கிறது. சீன அரசாங்கம் கிரேக்க அரசாங்கத்துடன் சில காலமாக நெருக்கமான பேச்சுக்களை நடத்தி வருகிறது. பிரயஸை அதன் முக்கிய சீனச் சரக்குகளை ஐரோப்பிய சந்தைகளுக்கு மாற்றியனுப்பும் மையமாக்குவதற்கு திட்டம் கொண்டுள்ளது.

வேலை நிறுத்தத்தை முடிக்கையில், தொழிற்சங்கத்தின் தலைவரான Nikolaos Kioutsoukis கூறினார்: “இரயில் தொழிலாளர்கள் ஒரு நேர்மையான, கூட்டான, கௌரவமான முறையில் போராடினர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பொதுநலனுக்கு, சமூகத்தின் தேவைகளுக்குப் பணிபுரியும் ஒரு பொது, நவீன, போட்டித்தன்மை உடைய இரயில்வேக்கு போராடினோம் என்பதை நிரூபித்தோம்.”

மற்ற விருப்பத் தேர்வுகளையும் அது இப்பொழுது பரிசீலனை செய்யும், அதில் “இச்சட்டம் செயல்படுத்துவைத் தடுக்க கிரேக்க, ஐரோப்பிய நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களில் அனைத்து வாய்ப்புக்களையும் தீர்க்க முற்படுவோம்.” என்று தொழிற்சங்கம் கூறியுள்ளது.

உண்மையில் இச்சட்டம் இப்பொழுதுஅரசாங்கத்தால் இயற்றப்பட்டு OSE விற்பனை பற்றி சர்வதேச நிறுவனங்களுடன் விவாதங்கள் மிகமுன்னேறிய நிலையில் உள்ளன. கடந்த வாரம் புதன்னன்று போக்குவரத்து மந்திரி பிரெஞ்சு போக்குவரத்து மந்திரி Dominique Bussereau பாரிஸில் சந்தித்து கிரேக்க இரயில்வேக்களின் செயற்பாட்டுப் பிரிவான Trainose ன் 49 சதவிகிதப் பங்குகளை பிரெஞ்சு இரயில் SNCF மற்றும் Alstom Transport க்கு விற்கக்கூடிய வாய்ப்பு பற்றிப் பேசினார்.

கூட்டம் முடிந்தபின் ரெப்பாஸ், “இப்பொழுது நாங்கள் கோருவது கிரேக்கப் பாராளுமன்றம் இயற்றியுள்ள சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் ஒரு செயல்திட்டத்திற்கு தளம் அமைக்கும் விதத்தில் சட்டத்தைச் செயல்படுத்துவது ஆகும். கிரேக்க இரயில்வேயைச் சீராக்குவதற்குத் தேவையானவை அனைத்தையும் நாங்கள் செய்து அதை செயற்பாடு உடையதாகச் செய்வோம். இதனிடையே நம்பகத்தன்மை உடைய நாடுகளால் இதன்மீது அக்கறை காட்டப்பட்டால் பின் உடன்பாட்டிற்கு வகை செய்வோம்” என்றார்.

இப்படி தனியார் முதலீட்டாளர்களைக் கவர்தல் பற்றிக் கருத்துக் கூறிய கிரேக்க நாளேடு, Eleftherotypia எழுதியது: “சாராம்சத்தில் இது பிரெஞ்சுக்காரர்களை புதிய சட்டத்திற்குப் பிறகு கிரேக்க இரயில்வேக்களில் முதலீடு செய்வது அவர்களுக்கு இலாபகரமாக இருக்கும் என்று நம்ப வைப்பதுதான். …பிரெஞ்சுக்காரர்கள் ஏதென்ஸ் புறநகர் இரயில்வேயில் அக்கறை காட்டியதாகத் தோன்றியது, அதை ஒட்டி மெசோகியாவில் இருந்து லாவிரோ வரை வலையமைப்பு விரிவாக்கப்படக்கூடும்.

POS வேலைநிறுத்தத்தை அத்தகைய முக்கியமான கட்டத்தில் முறித்தல் என்பது பிரதம மந்திரி ஜோர்ஜிஸ் பாப்பாண்ட்ருவின் அரசாங்கத்திற்கு அதன் தனியார்மயமாக்கத்திற்கும் திட்டங்களுக்கு பச்சை விளக்கு காட்டப்படுகிறது என்ற பொருள் ஆகும். இரயில்வே தொழிற்சங்கங்கள் தாம் பெருவணிக மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தின் நலன்களைத்தான் பாதுகாக்கின்றன என்பதை நிரூபித்துள்ளன. தொழிலாளர்கள் நலன்களை ஒரு முக்கியமான, உயர்ந்த மூலோபாயத் தொழிலை POS சேதப்படுத்தியுள்ளது PSXEM பார வாகனக் கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு தன் வேலைநிறுத்தத்தை முடித்து கொண்டதைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. அவ்வேலைநிறுத்தமோ எரிபொருள் விநியோகம் பெரிதும் குறைந்துவிட்ட நிலையில் நாடு முழுவதிலும் இயல்பு வாழ்க்கையை நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது.

PSXEM பார வாகனக் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தை முடிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டது. அதுவும் சாரதிகளின் பிரிவுகள் தொழிற்சங்கத்தை மீறி வேலைநிறுத்தத்தை தொடர வாக்களித்த பின்னர். அரசாங்கம் “சிவில் அணிதிரள்வு கட்டளை” அவசரக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்ததை தொடர்ந்து பார வாகனச் சாரதிகளின் தொழிற்சங்கத் தலைவர் ஜோர்ஜியோஸ் ஜோர்ட்ஜடோஸ் நடவடிக்கையை கீழ்க்கண்ட சொற்களுடன் முடித்தார்: “நாம் இப்பொழுது கிரேக்க அரசாங்கத்தின் வீரர்கள், அதன் உத்தரவுகளுக்குக் காத்திருப்போம்.”

இரயில் தொழிலாளர்கள் இந்த ஆண்டு பல வேலைநிறுத்தங்களில் பங்கு பெற்றனர். அவற்றுள் ஜூன் மாதம் நூற்றுக்கணக்கானவர்கள் ஏதென்ஸ் அமைச்சரகத்தின் உள்கட்டுமானத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ததும் அடங்கும். அந்த நேரத்தில் நிக்கோஸ் கௌட்சௌகிஸ் ஜனரஞ்சக வனப்புரை முறையில் அறிவித்தார்: “அவர்கள் எந்தப் பாதையையும் இரத்து செய்ய அனுமதியோம். நம்முடைய இரத்தம், வியர்வையைக் குடிப்பவர்களுக்கு எதிராகப் போராடுகிறோம். OSE ன் கல்லறையை, அவர்கள் கைகளினாலேயே கட்டப்பட்டதின் மீது, கல்லறைக் கல்லைப் பதிக்க அவர்களை அனுமதிக்க மாட்டோம்.”

அதைத்தான் துல்லியமாக தொழிலாளர் சங்க அதிகாரத்துவம் செய்துள்ளது, அதுவும் நான்கு மாத கால இடைவெளிக்குள்.

அக்டோபர் 25ம் திகதி பாப்பாண்ட்ரூ வரவிருக்கும் நவம்பர் 7 உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு முன்னதாகவே அவருடைய அரசாங்கம் “முக்கூட்டு”, ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதிய நாணயம், கோரியுள்ள தேவையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பிரதம மந்திரி கூறினார்: “ஐரோப்பாவில் மிகுந்த சர்வாதிகாரத்தை உடைய அரசாக கிரேக்கம் உள்ளது. இதற்குக் காரணம் ஒரு நலிந்த அரச முறையில் வேலைகள் புரவலர் முறையில் அளிப்பதுதான் …. அதுவும் வாடிக்கையாளருக்கு ஆதரவு என்ற தன்மை நிறைந்து. இதுதான் சர்வதேச கடன் கொடுப்போரின் மீது நம்பகத்தன்மையை வைக்க வழிவகுத்துள்ளது.”

“புரவலர் முறை வேலைகள்” என்பவை முக்கியமாக பொதுத்துறையில் நிர்வாக மேலாண்மை மட்டத்தில் இருப்பவை ஆகும். ஆனால் இந்த அடுக்குகளை மட்டும் சாடுவது பொதுத்துறை முழுவதும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் “சலுகைகள்”, “பிற நலன்களை” கண்டிப்பதற்கு மற்றொரு வழிவகையாகும்.

ஜனவரி 1ம் திகிதி முதல் அரசாங்கம் எஞ்சியுள்ள 1,000க்கும் மேலான நகரசபைகள் மற்றும் டஜன் கணக்கான மாவட்ட அரசாங்கங்களில் மூன்றில் இரு பகுதிகளைத் தகர்க்க உள்ளது. இது உள்ளூர் அரசாங்கங்களுக்கு மத்திய அரசாங்கம் மாற்றிக் கொடுக்கும் நிதியத்தின் மீது கடுமையான கட்டுப்பாட்டைச் சுமத்துவதுடன் இணைந்து செயல்படுத்தப்படும். தற்பொழுது மத்திய அரசாங்கம் ஆண்டு ஒன்றிற்கு 6 பில்லியன் யூரோக்களை மானியமாக வழங்குகிறது. இது உள்ளூர் அரசாங்கங்களுக்கான மொத்த செலவினங்களில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் ஆகும். இது உள்ளூர் அரசாங்கங்களின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் ஆகும். உள்துறை மந்திரி ஜியன்னிஸ் ராக்கௌசிஸ் எச்சரித்தார்: “அதிகாரம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் அனைத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், நகரசபைகள் மற்றும் அவற்றின் உள்ளூர் நிறுவனங்கள் இனி ஒரு யூரோ கூட முன் ஒப்புதல் இல்லாமல் செலவழிக்க முடியாது.”

இன்னும் ஒரு 6,000 அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள் 1,500 ஆக குறைக்கப்படும். இதையொட்டி ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்கள் இருக்கும். இது பெருகியுள்ள வெகுஜன வேலையின்மை நிலைக் காலத்தில் சுமத்தப்படுகிறது. தொழிலாளர் தொகுப்பில் 600,00 க்கும் மேற்பட்டவர்கள் (12 சதவிகிதம்) இப்பொழுது வேலை இல்லாமல் உள்ளனர்.

“கனத்த தனியார் மயத் திட்டத்திற்கு” ஒப்புதல் கொடுத்து நிக் ஸ்க்ரேகஸ் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் செப்டம்பர் 30ம் திகதி இது “மந்தநிலையால் பாதிக்கப்பட்ட வருவாய் இலக்குப் பற்றாக்குறைகளை ஏற்றம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களின் கிரேக்கத்தை பற்றிய முன்னோக்குகளை மாற்ற ஒரு தூண்டுதலாக இருந்து தனியார் மயமாக்கப்பட்டுள்ள துறைகள் இன்னும் வளர வகை செய்யும்.”

இதை எளிதாக்கும் விதத்தில்தான் தொழிற்சங்கங்களின் பங்கு உள்ளது. POS மற்றும் GSEE தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. இதில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அரசாங்கத் திட்டங்களை எதிர்க்க இது ஏதும் செய்யவில்லை. பெயரளவு (அடையாள) வேலைநிறுத்தங்களைத்தான் தொடர்ச்சியாக நடத்தி தொழிலாளர்கள் தங்கள் சீற்றத்தைக் காட்ட வைத்துள்ளது. அதே நேரத்தில் அரசாங்கம் ஒவ்வொரு சிக்கன நடவடிக்கைச் சட்டமாக இயற்றிக் கொண்டு வருகிறது. செப்டம்பர் மாதம் GSEE தலைவர் யானிஸ் பானகோபௌலௌஸ் கூறினார்: “நாங்கள் பல வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளோம், ஆயினும்கூட கடுமையான கொள்கைகள், EU/IMF அறிக்கையில் குறிப்பிடப்படுபவை செயல்படுத்தப்பட்டுள்ளன, மாற்றீட்டுத் தீர்வுகள் ஏதும் இல்லை என்பது வெளிப்படை.”

GSEE அதன் சமீபத்திய ஒருநாள் அடையாள வேலைநிறுத்த நடவடிக்கைக்கு டிசம்பர் 15ம் தேதி என அறிவித்துள்ளது.

பாப்பாண்ட்ரூவினால் சுமத்தப்படும் பெரும் தாக்குதல்களுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டி மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் ஒவ்வொரு அரசாங்கத்துடனான மோதலும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. தொழிற்சங்க அதிகாரத்துவம் ஐரோப்பா முழுவதும் இதே அணிதிரள்வைத் தகர்க்கும் செயலைத்தான் புரிகிறது. கடந்த வாரம் பிரான்ஸில் எண்ணெய்த்துறை தொழிலாளர்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது, தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் மூலோபாயப் பிரிவைக் கட்டுப்படுத்துபவர்கள், மக்களின் பரந்த ஆதரவைப் பெற்றவர்கள்கூட, இருக்கும் அமைப்புக்களின் மூலம் வெற்றி அடைய முடியாது என்பதைத்தான் நிரூபித்துள்ளது. வரவிருக்கும் போராட்டங்களில் தொழிலாளர்கள் அனைத்து தொழிலாளர்களும் அடங்கிய நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, PASOK ஆட்சியை வீழ்த்தி ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவுவதற்கான அரசியல் போராட்டத்தைத் தளமாகக் கொண்ட முற்றிலும் வேறுபட்ட முன்னோக்கில் தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும்.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:

Greece: Union betrayal of truck driver’s strike sets stage for further attacks

Trade union bureaucracy strangles French oil strike