சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French union leaders seek to wind down opposition to pension cuts

ஓய்வூதிய வெட்டுக்களுக்கான எதிர்ப்புக்களை பிரெஞ்சு தொழிற்சங்கத் தலைவர்கள் முடிவுக்கு கொண்டுவர முயல்கின்றனர்.

By Alex Lantier and Kumaran Ira
6 November 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஒய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான இன்றைய ஒருநாள் தேசிய நடவடிக்கை தினத்திற்கு முன்னதாக தொழிற்சங்கத் தலைவர்கள் வெட்டுக்களுக்கான எதிர்ப்பைத் தொடர்வதற்கு தாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று அடையாளம் காட்டியுள்ளனர். பல தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இருந்தாலும், சார்க்கோசியின் ஓய்வூதியச் சட்டம் ஆழ்ந்த முறையில் உள்ளது, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகள் வெட்டுக்கு எதிராக எடுக்கப்படுவது முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர், மற்றும் அவற்றிற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும் முயல்கின்றனர்.

கடந்த மாதம் துறைமுக மற்றும் எண்ணெய்த்துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு இயக்கத்தைப் போலவே, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தவும் இன்றைய எதிர்ப்புக்களில் கலந்து கொள்ள வருவதை விரும்பாத செயல்களைச் செய்யவும் முயல்கின்றனர்—இவர்களே எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தும் கூட.

பரந்த எதிர்ப்பையும் மீறி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தங்களை தொழிலாளர்களின் கணிசமான பிரிவினர் தொடர்கின்றனர்: மக்களில் 70 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் இந்த வெட்டுக்களை எதிர்க்கின்றனர்.

பாரிசில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் இன்னமும் வேலைநிறுத்தத்தில் தான் உள்ளனர். பாரிசிற்கு அருகேயுள்ள Saint-Quen ல் உள்ள குப்பை எரிப்பு நிலையம் புதன்கிழமை முதல் ஆக்கிரமிப்பில் உள்ளது. அக்டோபர் 21 முதல் வேலைநிறுத்தத்திலுள்ள Ivry-sur-Seine குப்பை எரிப்பு நிலையத்துடன் இதுவும் சேர்ந்துள்ளது.

நேற்று காலை முதல் தொழிலாளர்கள் PACA பிராந்திய விநியோக அரங்கு ஒன்றை முற்றுகையிட்டனர். அது Carrefour பேரங்காடிக்குப் புதிய பொருட்களை வழங்கி வருவதாகும். அவர்கள் மோசமான பணிநிலைமைகளை எதிர்த்தும், தங்கள் தொழில் வழங்குனர்கள் நலன்களை அகற்றிவிட்டது குறித்தும் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

அடுத்த வாரம் Pôle Emploi தேசிய வேலையளிக்கும் நிலையத்தில் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு நிர்வாகம் சமீபத்தில் 2011 இறுதிக்குள் 1,800 வேலைகள் கிட்டத்தட்ட தகர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது. நாடு தழுவிய வேலைநிறுத்தமானது பணிநிலைமைகள் சரிந்துவருதல் மற்றும் வேலைப்பளு அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோனில் நகரவை ஊழியர்கள், பள்ளிச் சிற்றுண்டி விடுதிகளில் பணிபுரிபவர்கள் மூன்று வாரங்களாக மோசமான பணிநிலை, குறைந்த ஊதியங்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். அவர்கள் இன்னும் கூடுதலான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

துலூஸ் மற்றும் லியோன் உட்பட, பல நகரங்களில் பல்கலைக்கழகங்கள் முற்றுகைக்கு உட்பட்டுள்ளன.

ஆனால் இந்த எதிர்ப்பை வளர்த்தெடுக்கும் விதத்தில் பரந்த தொழிலாள வர்க்க ஆதரவிற்கு அழைப்புவிடுவதற்கு முற்றிலும் மாறாக தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக்களைக் கைவிட்டு வணிகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன.

வியாழனன்று வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை ஒன்றின்படி, தொழிற்சங்கங்கள் “வேலைகள், ஊதியங்கள், வாங்கும் சக்தி, பணி நிலைமைகள் பற்றிக் கூட்டாக உழைக்க” உறுதி எடுத்துக் கொண்டன. அதே நேரத்தில் பல தொழிற்சங்கங்கள்—பிரெஞ்சு ஜனநாயக உழைப்பாளர் கூட்டமைப்பு (CFDT), பிரெஞ்சு கிறிஸ்தவத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CFTC), தொழிலாளர்கள் சக்தி (FO)—ஏற்கனவே வணிகக் கூட்டமைப்பான மெடப் உடன் (Medef-Movement of French Enterprises) திட்டமிட்டுப் பேச்சுக்களை தொடங்கிவிட்டன. இத்தகைய பேச்சுவார்த்தைகள் இன்னும் கூடுதலான சமூக வெட்டுக்களைத்தான் ஏற்படுத்தும்.

நேற்று தொழிற்சங்க அதிகாரிகள் ஓய்வூதியச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தைக் கொண்ட அறிக்கைகளை வெளியிட்டனர்.

CFDT தலைவர் பிரான்சுவா செறெக் அறிவித்தார்: “நாம் துரதிருஷ்டவசமாக, சிறிது சிறிதாக ஓய்வூதியங்கள் பற்றியவற்றில் இருந்து நகர்ந்துவிடப் போகிறோம்.”

சார்க்கோசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இனி நம்பிக்கையற்றவை என்று அவர் கைவிட்டுவிட்டார். “குடியரசின் ஜனாதிபதி பின்வாங்குவார் என்று நான் இன்று கூறினால், என்னை எவரும் நம்பமாட்டார்கள். அவர்கள் கூறுவர், ‘இது அவர் கனவு காண்பது’ என”. மாறாக செறெக் தன்னுடைய இலக்கு “வணிகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த வழி காண்பது” என்றார்.

சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்ப்பதற்கு ஒரே வழி முதலாளித்துவ “இடதின்” அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதுதான் என்றார். ஓய்வூதியங்களைப் பற்றிப் பேசுகையில், “நாம் அவற்றைப் பற்றித் தொடர்ந்து பேசுவோம்… 2012 இல்” என்றார். அதாவது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஆண்டின்போது.

தேசிய தன்னாட்சி தொழிற்சங்கங்களின் ஒன்றியத் (UNSA) தலைவர் Jean Grosset “நிலைமையை அனுசரித்து இருக்காத நடவடிக்கை முயற்சிகளுக்கு” எதிராக எச்சரிக்கை விடுத்தார். இவை “தங்கள் மீதே பெரும் தோல்வியைத் தொழிற்சங்கங்கள் ஏற்க வைக்கும் வழியை அமைக்கும்” என்றார்.

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) இரயில் அதிகாரி Didier Le Reste தொழிற்சங்கங்களின் முடிவு பற்றி “சிறிது கோபத்தை” வெளிப்படுத்தினார். முடிவு “உறுதியாக” இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார். ஆனால் CGT தலைவர் பேர்னார்ட் தீபோ “இயக்கம் ஒரு சந்தேகம் நிறைந்த காலத்தைக்” கடந்து கொண்டிருக்கிறது என்று அறிவித்தார். ”இன்னும் குவிப்பு அற்ற, பலவித வழி எதிர்ப்புக்களுக்கும்” தான் ஆதரவு தருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதாவது, CGT சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்தப் பரந்த பரிவுணர்வு நடவடிக்கையையும் எடுக்கத் தயாராக இல்லை என்பதையே தீபோ காட்டுகிறார். இது கடந்த மாதம் அவர் எண்ணெய்த்துறை மற்றும் துறைமுக வேலைநிறுத்தங்களின்போது அவற்றைத் தனிமைப்படுத்தியதை ஒத்துத்தான் உள்ளது. கலகத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் பலமுறை வேலைநிறுத்த முறியடிப்பில் ஈடுபட்டும், CGT இன்னும் மற்றய தொழிற்சங்கங்களும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வேறுவிதமாகக் கூறினால், வேலைநிறுத்தக்காரர்கள் முதுகில் மீண்டும் குத்தப்பட உள்ளனர்.

தொழிற்சங்கங்கள் பெரிய எதிர்ப்புக்கள் அல்லது சக்திவாய்ந்த அரசியல் முறையீடுகளை இன்றைய எதிர்ப்பு அணிவகுப்புக்களில் இருந்து வெளிப்படுவதை விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டில் அவர்கள் சார்க்கோசி மற்றும் அவருடைய உதவியாளர்களின் நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளனர். அனைவருமே குறைந்த எண்ணிக்கையினர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு வர வேண்டும், வெட்டுக்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு “முடிந்துவிட்டது” என்று அறிவிக்க வேண்டும் என்று நம்புகின்றனர்.

தொழிற்சங்கங்களின் தோல்வி மனப்பான்மை சார்க்கோசியின் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதின் விளைவு அல்ல. அவை எப்பொழுதும் போல் செல்வாக்கற்றுத்தான் உள்ளன. சார்க்கோசிக்கு ஆதரவான குறியீடுகள் 31 சதவிகிதத்திலேயே உள்ளன, என்று Le Parisien கருத்துக் கணிப்பு கூறுகிறது. கருத்துக் கணிப்புக்கள் பலமுறையும் வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கு 65 முதல் 70 சதவிகிதம் வரை ஆதரவைத் தெரிவித்துள்ளன.

சார்க்கோசிக்கு எதிரான உண்மையான போராட்டம் வெற்றிபெறும், வெகுஜனங்களுடைய எதிர்பார்ப்புக்களில் ஏற்றம் கொடுக்கும், தாங்கள் கட்டுப்படுத்தப்பட முடியாத அரசியல் இயக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. எனவே அவை தாங்களே அழைப்புவிடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு தங்கள் விரோதப் போக்கை அடையாளம் காட்டியுள்ளனர். செய்தி ஊடகத்தினர் பேட்டி கண்ட வல்லுனர்களின் கருத்துப்படி, தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த விளைவை எதிர்பார்த்தனர்: அவர்கள் முதலிலேயே சார்க்கோசியின் வெட்டுக்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விரும்பியதில்லை.

பொருளாதார மற்றும் சமூக ஆய்வுக்கான கழகம் (IESR) ன் Jean-Marie Pernot, Le Monde இடம் “தொழிற்சங்கங்கள் நிறைந்த பக்குவம் உடையவை…. ஏமாற்றம் ஏதும் இல்லாமல் அணிதிரள்வின் முடிவு அடையப்படுகிறது. அனைவருக்கும் அரசாங்கம் அசைந்து கொடுக்காது என்ற எதிர்பார்ப்புத்தான் இருந்தது” என்று கூறினார். ஆயினும்கூட Pernot அத்தகைய விளைவு இயக்கம் “தோற்றுவிட்டது என்ற பொருளைத்தராது”, சொல்லப்போனால் “நிக்கோலா சார்க்கோசிக்கு ஒரு அடையாளத் தோல்வி எனலாம்” என்றார்.

இத்தகைய கருத்துக்கள் தொழிலாள வர்க்கத்தை பல தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளில் அவற்றின் ஆதரவாளர்களிடம் இருக்கும் சமூகப் பிளவுகளைக் குறிக்கின்றன. இது சார்க்கோசி பெரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புக்கள் ஆகியவை இருந்தும் தன்னுடைய வெட்டுக்களை சட்டமாக்கும் திறனின் மையக் காரணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் சார்க்கோசியின் அரசாங்கத்தை வீழ்த்த இலக்கு கொள்ளவில்லை, “அடையாள” எதிர்ப்புக்களை சுமத்தத்தான் விரும்பினர், வெட்டுக்கள் இயற்றப்பட்டபின், 2012 தேர்தலில் முதலாளித்துவ “இடது” சோசலிஸ்ட் கட்சி (PS) சார்க்கோசியை வீழ்த்த உதவ விரும்புகின்றன.

உலக சோசலிச வலைத் தளத்தின் அழைப்பான தொழிலாளர்கள் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைத்து தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து போராட்டத்தை அகற்றி, பொது வெகுஜன அரசியல் வேலைநிறுத்தங்களானது சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்தி சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர் அரசாங்கம் நிறுவப் போராட வேண்டும் என்பதின் சரியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால் உண்மையான போராட்டம் இல்லாத நிலையில், இப்பொழுது அரசு தொழிலாள வர்க்கத்தை தோற்கடிக்க தொழிற்சங்கங்கள் அனுமதிக்கின்றன. உட்குறிப்பாக 2012ல் PS பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன. இது ஒரு காட்டிக் கொடுப்பு ஆகும். ஏனெனில் அரசியல் வட்டங்களில் PS ஆனது தொழிலாளர்களுக்கு எதிராக பெரும் சிக்கன நடவடிக்கைகளை, கிரேக்கத்திலும், ஸ்பெயினிலும் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் செயல்படுத்தியதற்கு இணையாக கொண்டுவரத்தான் தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது.

Reims பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் Rémi Lefebvre, Le Monde இடம் கூறினார்: “சோசலிஸ்ட் கட்சி இந்த வேலைநிறுத்தங்களில் பொதுவாக நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சங்கங்களுடன் அது கொண்டிருந்த உடைவை அடையாள வகையில் திருத்தியமைத்துவிட்டது, சமூக இயக்கத்தில் நெறித் தன்மையை மீண்டுக் கொண்டுவிட்டது.” இது 2002ல் லியோனல் ஜோஸ்பன் PS அரசாங்கம் 2002 ல் கவிழ்ந்தபின், தனியார்மயமாக்கத்திற்காகவும் ஏனைய வலதுசாரிக் கொள்கைகளுக்காவும் பெரும் அளவில் வெறுக்கப்பட்டது. அதையொட்டி அதன் தலைவர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அணிவகுப்புக்களில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

அதன் உறவுகளை தொழிற்சங்கத்துடன் நிர்வகிக்க Benoît Hamon போன்ற ஒரு சில செய்தித் தொடர்பாளர்களை கொண்டிருந்தாலும், PS ன் பெரும்பகுதியினர் ஒரு வருங்கால அரசாங்கத்தில் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

Le Monde விளக்கியது: “ஒருபுறம், Benoît Hamon ன் தலைமையில் இடதுசாரி சமூக இயக்கத்தைத் தொடர வேண்டும் என்கிறது. மறுபுறம் பிரான்சுவா ஹோலண்ட், மானுவல் வால்ஸ் அல்லது ஜெராட் கோலாம் போன்றவர்கள் “அவசியமான யதார்த்தவாதம்” வேண்டும் என்று கூறுகின்றனர்…. நிக்கோலா சார்க்கோசியைப் பின்பற்றுவது மிகக் கடினம் என்பதை அவர்கள் அறிவர், ஆனால் அவர்கள் உண்மையை பேசத்தான் விரும்புகின்றனர்.”

சமீபத்திய மாதங்களில் இந்த அலுவலர்கள்தான் பலமுறையும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கும் பிற சமூகநலச் செலவுகள் வெட்டுக்களுக்கும் அழைப்பு விடுத்தனர். (See, “Socialist Party leaders call for austerity policies)