சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

World Bank head calls for monetary system linked to gold

நிதிய முறை தங்கத்துடன் பிணைக்கப்பட வேண்டும் என்று உலக வங்கித் தலைவர் அழைப்பு விடுக்கிறார்

Barry Grey
9 November 2010

Use this version to print | Send feedback

வியாழன் மற்றும் வெள்ளியன்று சியோலில் நடக்க இருக்கும் முக்கிய நாடுகளின் G20 மாநாட்டிற்கு முன்னதாக உலக வங்கியின் தலைவர் பைனான்சியல் டைம்ஸில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, உலக நாணய முறை அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும், அமெரிக்க டாலருக்குக் குறைந்த பாத்திரமும் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட தங்க மாற்றுத்தரம் உடையதாகவும் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் பைனான்சியல் டைம்ஸ் இதைத் திங்களன்று முதல்பக்கத்தின் முக்கிய கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

தன்னுடைய கட்டுரையில், உலக வங்கியின் தலைவரும் ஒரு முன்னாள் அமெரிக்க நிதியமைச்சரக அதிகாரியுமான ரோபர்ட் ஜோலிக் தன்னுடைய திட்டத்திற்கு தூண்டுதல் கொடுத்த நெருக்கடி நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாணயப் போர்கள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பின் கொள்கையான அதிக நாணயத்தை புளக்கத்தில் விடுதல் பற்றிய பேச்சுக்கள் உள்ள நிலையில், சியோலில் இந்த வாரம் நடைபெற உள்ள முக்கிய நாடுகளின் G20 உச்சிமாநாடு சர்வதேச ஒத்துழைப்பு குறித்து சமீபத்திய சோதனையாக உருவாகி வருகிறது” என்று அவர் ஆரம்ப அவதானிப்புக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கு ஜோலிக் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு கடந்த வாரத்தில் இரண்டாம் சுற்று “அதிக நாணயத்தை புளக்கத்தில் விடுதல்'' பற்றி அறிவித்துள்ளதை குறிக்கிறார். அதாவது நூற்றுக்கணக்கான பில்லியன்கள் டாலர்களை அச்சிட்டு அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை வாங்குதல் மற்றும் இந்த நடவடிக்கைக்கு சீனா, ஜேர்மனி, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் உட்பட முக்கிய அமெரிக்க வணிகப் போட்டி நாடுகள் கூறியிருக்கும் குறைகூறல்கள் பற்றியும் தெரிவித்துள்ளார். அமெரிக்க நடவடிக்கை மிகச் சரியான முறையிலே வேண்டுமென்றே டாலரின் மதிப்பைக் குறைத்து அமெரிக்க ஏற்றுமதிகளை குறைந்த செலவில் செய்யவும் வெளிநாட்டு இறக்குமதிகள் அதிகசெலவு உடையதாகச் செய்வதாகவும் காணப்படுகிறது.

ஒபாமா நிர்வாகம் அதன் பொருளாதாரத் தாக்குதலை சீனாமீது குவிப்புக் காட்டுகிறது. இது ஐரோப்பா, ஜப்பான், இந்தியா இன்னும் பல ஆசிய நாடுகளும் G20 உச்சிமாநாட்டில் சீனா அதன் நாணய மதிப்பை அதிவிரைவில் உயர்த்த வேண்டும் என்னும் தன் கோரிக்கைக்கு ஆதரவு தர விரும்புகிறது.

ஆனால் அதன் குறைமதிப்பு டாலர் கொள்கை மற்ற ஏற்றுமதி சார்பு, உபரிகள் இருக்கும் நாடுகளுடனான உறவுகள், மிகவும் குறிப்பாக ஜேர்மனியுடன், மோத வைக்கிறது. சற்றே அசாதரணமான கடும் சொல்லாட்சியில் ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள இந்த வாரம் Spigel இதழிற்குக் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அமெரிக்காவை கண்டித்துள்ளார். அமெரிக்க “வளர்ச்சி முன்மாதிரி” “ஆழ்ந்த நெருக்கடியில்” உள்ளது என்று குறிப்பிட்டு, “அமெரிக்கா மிக நீண்டகாலமாகக் கடன் வாங்கிய பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது, தன் நிதியத் துறையை உயர்த்திக் காட்டி, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் புறக்கணித்துள்ளது” என்றும் சேர்த்துக் கொண்டார்.

“மத்திய வங்கிக்கூட்டமைப்பின் முடிவுகள் உலகப் பொருளாதாரத்திற்கு இன்னும் அதிகமான உறுதியற்ற தன்மையைக் கொண்டுவருகின்றன…. சீனாவை நாணய மாற்றுவிகிதத்தை திரிப்பதாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுவது பொருந்தாது. அதுவும் அவர்கள் செயற்கையாக டாலர் மாற்றுவிகிதத்தை அழுத்துவதற்காக நாணய நோட்டுக்களை அச்சிடும்போது.” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய கடனாளி நாடான அமெரிக்கா உலகின் முக்கிய நாணய இருப்பு மற்றும் வணிக நாணயமாக இருக்கும் சலுகை நிறைந்த நிலைப்பாட்டைப் பயன்படுத்தி, தன் போட்டி நாடுகளின் நாணய மாற்று விகிதங்களை உயர்த்த முயல்கிறது. சாராம்சத்தில் இது ஒரு வணிகப் போர் நடவடிக்கை ஆகும். இது வெள்ளப் பெருக்கென ஊக முதலீட்டை ஆசியா, இலத்தின் அமெரிக்கா, ஆபிரிக்காவில் உள்ள எழுச்சி பெற்றுவரும் நாடுகள் என்று அழைக்கப்படுபவற்றில் கட்டவிழ்த்துள்ளது. இதையொட்டி அவற்றின் நாணயத்தை உயர்த்துவதுன் மூலம் ஊகக் குமிழிகள் மற்றும் பணவீக்க அபாயத்தை ஏற்படுகின்றன.

இந்த ஆக்கிரோஷமான மற்றும் ஒருதலைப்பட்ச அமெரிக்கக் கொள்கை உலக அழுத்தங்களைப் பெருக்கி உலக நிதிய, நாணய முறைகளை உறுதியற்றதாகச் செய்கிறது. சர்வதேச உறவுகள் முறிவிற்கான வாய்ப்புக்களை இது உயர்த்துவதுடன், கட்டுப்பாடற்ற நாணய மற்றும் வணிகப் போர் தொடங்குவதற்கான நிலைமையையும் ஏற்படுத்துகிறது. அச்சூழல்தான் பெருமந்த நிலையின் தன்மையாக இருந்து இறுதியில் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.

தன்னுடைய கட்டுரையில் ஜோலிக் G20 “வெளிப்பட்டு வரும் பொருளாதார நிலைமைகளை பிரதிபலிக்கும் நிதிய முறை ஒத்துழைப்பு கட்டமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அவர் தொடர்கிறார்: “இப்புதிய முறை டாலர், யூரோ, யென், பவுண்ட், சர்வதேசமயத்தை நோக்கி வரும் சீன ரென்மின்பி ஆகியவற்றைப் பிணைந்து பின்னர் ஒரு திறந்த வகை மூலதனக் கணக்கை நிறுவும்.”

இப்புதிய முறை “தங்கம் ஒரு சர்வதேசத் தர அளவுகோலாக, பணவீக்கம், பணச்சரிவு, வருங்கால நாணய மதிப்புக்கள் ஆகியவற்றின் சந்தை எதிர்பார்ப்புக்கள் பற்றிய குறிப்பாக இருப்பது பற்றிப் பரிசீலிக்க வேண்டும். பாடப்புத்தகங்கள் தங்கத்தைப் பழைய நாணயம் என்று கருதினாலும், தங்கத்தை ஒரு மாற்றிட்டுப் பணமாகப் பயன்படுத்துவது என்பது இன்று சந்தைகளில் நடைமுறையாகியுள்ளது.” என்று அவர் எழுதியுள்ளார்.

இது 1971 வரை இருந்த நிதிய அமைப்பு முறை, இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நிறுவப்பட்ட அமெரிக்கா டாலரில் நங்கூரமிடப்பட்ட முறையில் வேர்களைக் கொண்ட இம்முறை இனி செயல்பட முடியாது என்பதை உட்குறிப்பாக ஒப்புக் கொள்வதாகும். மேலும் வேறு எந்த தேச நாணயமும் உலக நாணய உறவுளுக்கு அடிப்படையாக டாலருக்குப் பதிலாக வரமுடியாது என்பதையும் ஒப்புக் கொள்வதாகும்.

அமெரிக்க டாலர் மீதும் மற்றும் டாலரை தளமாகக் கொண்ட நிதிய அமைப்புமுறையின் மீதும் நம்பிக்கை அரிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் ஒரு வெளிப்பாடு, தங்கத்தின் விலைகளில் பிரம்மாண்டமான ஏற்றம் ஏற்பட்டுள்ளது ஆகும். திங்களன்று டிசம்பர் அளிப்பிற்கான தங்கத்தின் விலை புதிய உயர்வைக்காட்டி அவுன்ஸிற்கு 1,400 டாலர் என இருந்தது.

“1971ல் இருந்து மாற்றங்களுக்கான பரப்பு” ஒரு புதிய நாணய முறை நிறுவதலை நியாயப்படுத்துகிறது என்று ஜோலிக் வாதிடுகிறார். ஆனால் இந்த மாறுதல்களில் மிக முக்கியமானவை பற்றி அவர் மௌனமாக இருக்கிறார். அதாவது அமெரிக்காவில் உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவு பற்றியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் இழிசரிவு பற்றியும்.

இரண்டாம் உலகப் போரின் நாசங்களில் இருந்து உலகப் பொருளாதார மேலாதிக்கத்தில் சவாலற்ற நிலையைக் கொண்டு அமெரிக்கா வெளிப்பட்டது. அதன் தொழில்துறை, உலகச் சந்தைகளை ஆதிக்கம் கொண்டிருந்தது. உலக கார்த்தயாரிப்பில் அமெரிக்காவின் பங்கு 1950ல் 79 சதவிகிதம் என்று இருந்தது. 1955ல் இது உலக எஃகு உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் உலகின் தங்க விநியோகத்தின் பெரும்பகுதி போர்ட் நாக்ஸில்தான் இருந்தது.

போருக்குப் பிந்தைய உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு அமெரிக்கா வழிவகுத்தது. அதே நேரத்தில் தன்னுடைய நலன்களுக்குச் சாதகமான நிதிய, வணிகக் கட்டமைப்புக்களையும் உத்தரவாதம் செய்து கொண்டது. போருக்கு பிந்தைய மீட்பு மற்றும் விரிவாக்கத்தின் திறவுகோல் ஒரு புதிய நிதிய முறையான பிரெட்டன் வூட்ஸ் முறையை (Bretton Woods system) நிறுவியதாகும். இதன்படி நாணய மாற்று விகிதங்கள் குறிப்பிட்ட அளவில் டாலருடன் நிலைநிறுத்தப்பட்டன. டாலர், உலகின் இருப்பு நாணயம் மற்றும் வணிக நாணயமாக இருந்ததுடன், இதற்கு எந்த நேரத்திலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தை 35 டாலருக்கு மாற்றிக் கொள்ள முடியும் என்பதும் இருந்தது.

ஆனால் இந்த முறையில் ஒரு அடிப்படை முரண்பாடு இருந்தது. அதாவது ஒரு தேசிய நாணயத்தை உலக நாணயமாகப் பயன்படுத்தும் முயற்சி என்பதே அது. அமெரிக்காவின் மகத்தான பொருளாதாரச் செழிப்பும் சக்தியும் கூட உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவத்தின் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையையுள்ள அடிப்படை முரண்பாடுகளைக் கடக்க இயலவில்லை.

1960 களின் கடைசிப் பகுதியில் வெளிநாடுகளில் இருப்பாக இருக்கும் டாலரின் அளவு அமெரிக்கத் தங்க இருப்புக்களை விட மிக அதிகமாயிற்று. அமெரிக்கா எழுச்சி பெற்ற ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து பெருகிய போட்டியை எதிர்கொண்டது. ஆகஸ்ட் 1971ல் டாலரின் பலவீனமான நிலையை எதிர்கொண்டு ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க நாணயத்திற்கு தங்கப் பாதுகாப்பை அகற்றிவிட்டதும் பிரெட்டன் வூட்ஸ் முறை சரிந்தது.

இது பிரெட்டன் வூட்ஸ் II என்று அழைக்கப்பட்ட முறையைக் கொண்டு வந்தது; இதன்படி மாறிக்கொண்டிருக்கும் நாணய மாற்று விகிதங்கள், டாலருடன் பிணைந்தவை அறிமுகப்படுத்தப்பட்டன. இம்முறையில் இன்னும் அதிகமான அளவில் அமெரிக்க டாலரின் வலிமையில் சர்வதேச நம்பிக்கையை தளமாகக் கொண்டது. அமெரிக்கா இன்னும் அதிகமான கடன்களை கொண்ட வகையிலும், அதன் தொழில்துறைத் தளம் உதிர்ந்த நிலையிலும், அவற்றையொட்டி அமெரிக்க பொருளாதாரம் பெருகிய முறையில் நிதிய ஊகத்தை நம்பியிருக்க வேண்டிய நிலையிலும், அந்த நம்பிக்கை படிப்படியாக அரிக்கப்பட்டுவிட்டது.

வோல் ஸ்ட்ரீட்டின் மையம் கொண்ட செப்டம்பர் 2008 நிதியச் சரிவு டாலரின் மீதான நம்பிக்கையை எழுந்திருக்க முடியாதபடி குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. நிதிய நெருக்கடி நாணயப் போர் வடிவமைப்பு மற்றும் போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவ மீட்பில் தூணாக இருந்த நாணயமாற்றீட்டு விகித முறை முறிவு கண்டபோது தற்போதைய நெருக்கடி ஒரு தற்காலிக, எதிர்பாராத சரிவு அல்ல, மாறாக ஒரு அமைப்பு முறையின் நிலைமுறிவு என்பதை காட்டிவிட்டது.

ஒருவித தங்கமாற்றுத்தரத்திற்கு மீண்டும் திரும்புதல் என்னும் ஜோலிக்கின் திட்டம் கற்பனைத் தன்மையும் பிற்போக்குத்தனமுமானது. பொருளாதாரக் கனத்தின் வியத்தகு மாற்றம், பழைய ஏகாதிபத்திய சக்திகளுக்கும்-முதலிலும் முக்கியமானதும் அமெரிக்கா-எழுச்சி பெற்று வரும் சீனா, இந்தியா போன்ற பொருளாதாரங்களுக்கும் இடையே வந்துள்ளது, ஒரு புதிய சர்வதேச பொருளாதாரச் சமச்சீர் நிலைமை சமாதான முறையில் ஏற்பட்டும், அதில் அமெரிக்க டாலரின் பங்கு குறைவாக இருக்கும் என்று கூறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இருபதாம் நூற்றாண்டைப் போலவே, இருபத்தியோராம் நூற்றாண்டிலும், சரியும் சக்திகள் விருப்பத்துடன் கீழிறங்கும் நிலைமையை ஏற்கமாட்டா என்பதுடன் சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பிற்கான போராட்டம் தவிர்க்க முடியாமல் உலகப் போருக்குத்தான் இட்டுச் செல்லும்.

மேலும், ஒரு புதிய தங்க மாற்றுத்தர திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது கடனைப் பேரழிவுதரும் வகையில் சுருக்கிவிடுவதுடன், உலகை 1930 களில் இருந்த மந்தநிலையைவிட மோசமான மந்த நிலைக்கு உட்படுத்திவிடும்.

நாணய முறையின் நிலைமுறிவு என்பது முதலாளித்துவ முறையில் தீர்க்க முடியாத நெருக்கடியின் ஒரு வெளிப்பாடு ஆகும். இது முற்போக்கான வகையில் ஒரு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் புரட்சிகர இயக்கத்தின் மூலமும், உலக சோசலிசத்தை நிறுவுவதின் மூலம்தான் தீர்க்கப்பட முடியும்.