சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

One million march in eighth national protest against Sarkozy’s pension law

சார்க்கோசியின் ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக எட்டாவது தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அணிவகுப்பில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்பு

By Antoine Lerougetel
8 November 2010

Use this version to print | Send feedback

Paris
பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவினர்

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான எட்டாவது தேசிய நடவடிக்கை தினத்தில் சனிக்கிழமையன்று ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் ஆர்ப்பாட்ட அணிவகுப்புச் செய்தனர்.

ஒரு முன்னைய நடவடிக்கை தினமான அக்டோபர் 28ம் திகதி 2 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர் என்று தொழிற்சங்கங்கள் கணித்துள்ளன. ஆனால் பொலிஸ் இந்த எண்ணிக்கையை 560,000 என்றுதான் மதிப்பிட்டுள்ளது. சனிக்கிழமை தொழிற்சங்கங்களின் மதிப்பீடு 1.2 மில்லியன், ஆனால் பொலிசார் அது 375,000 தான் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இப்படிப் பங்குபெற்றதில் ஏற்பட்டுள்ள குறைவு சார்க்கோசியின் ஆழ்ந்த செல்வாக்கற்ற ஓய்வூதியக் வெட்டுச் சட்டத்திற்கு ஆதரவு பெருகிவிட்டது என்பதைக் குறிக்கவில்லை. மாறாக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டு (Intersyndicale) மற்றும் அதன் அரசியல் ஆதரவாளர்கள் குறிப்பாக சோசலிஸ்ட் கட்சி (PS) அதன் நட்பு அமைப்புக்கள் ஆகியவற்றின் தந்திரோபாயங்கள், அரசியல் மற்றும் கடந்த மாதம் எண்ணெய்த்துறை வேலைநிறுத்தத்தின் தோல்வி ஆகியவை பற்றிப் பெருகியுள்ள பெரும் ஏமாற்றத்தையும் தான் வெளிப்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆதரவுடன் ஐரோப்பிய மூலதனத்தின் சிக்கனத்திற்கான உந்துதலுக்கு எதிராகப் போராடும் இந்த உறுதிப்பாடு ஐரோப்பா முழுவதும் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. இதே நாளில் லிஸ்பனில் ஒரு சக்திவாந்த 100,000 பேர்களின் ஆர்ப்பாட்டம் அங்கே நடந்தது. அரசாங்கத் தொழிலாளர்களின் ஊதியங்களை 10 சதவிகிதம் குறைத்தல், சமூக நலன்களுக்கு உச்சவரம்பு கட்டுதல் மற்றும் விற்பனை வரியில் உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக நடக்கவுள்ள இந்த ஆர்ப்பாட்ட எதிர்ப்பு நவம்பர் 24ம் திகதி தேசிய வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பு ஆகும்.

கிரேக்கத்தில் ஞாயிறன்று நடைபெற்ற பிராந்தியத் தேர்தல்கள் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக அரசாங்கத்தினால் அவருடைய சிக்கன நடவடிக்கை உந்துதல் குறித்த வாக்கெடுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இதில் மற்றவைகளுடன் சேர்ந்து ஊதியங்கள் 30 சதவிகிதம் வெட்டப்படுகின்றன. ஏராளமான மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தொழிலாளர்களும் இளைஞர்களும் பாப்பாண்ட்ரூவின் வலதுசாரி செயற்பட்டியலில் இருந்து ஒதுங்கிவிடுவர்.

students
பாரிஸில் மாணவர்கள்

தொழிற்சங்கங்களும் “இடது” கட்சிகளும் பிரான்சில் சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிரான இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் பிரிவுகள் —இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்கள், Fos மற்றும் Le Havre எண்ணெய் சேமிப்பு இருப்புப் பகுதித் தொழிலாளர்கள்—பொருளாதாரத்தின் மீது பிடியை இறுக்கிய நேரத்தில், அரசாங்கம் வேலைநிறுத்தங்கள் மற்றும் முற்றுகைகளை CGT தலைமையிலான தொழிற்சங்கங்கள் முறியடிக்க உதவத் தொடங்கின.

அரசாங்கம் வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஐந்து ஆண்டுக்கால சிறைவாசம் என்ற அச்சுறுத்தலைக்காட்டி, மீண்டும் பணிக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தியபோது, அக்டோபர் 27ம் திகதி CRS கலகத்தடுப்புப் பிரிவு பொலிசை சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகளின் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் முற்றுகைகளை அகற்றுமாறு உத்தரவிட்டபின், முற்றுகைகள், வெகுஜன மறியல்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்களை கலைக்குமாறு தொழிற்சங்கங்கள் ஆணையிட்டன. இவை எந்தவித வெகுஜன எதிர்ப்பையும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் காட்டவில்லை, ஒரு மாதம் வரை ஊதிய இழப்பு ஏற்பட்டிருந்த வேலைநிறுத்தக்காரர்களின் வேதனையைக் குறைக்கும் விதத்தில் நிதியளிக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

வேலைநிறுத்தங்களின் தனிமைப்படுத்தலை முறியடிக்க அவை எந்தவித பொது வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஏனெனில் அது அரசாங்கத்துடன் ஒரு அரசியல் மோதல் என்ற பொருளைக் கொடுத்துவிடும். அவை தப்பிப் பிழைப்பதே பின்னர் கடினமாகிவிடும். எனவே தொழிற்சங்கங்கள் ஓய்வூதியச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காட்டிக் கொடுத்தனர்.

ஓய்வூதியம் பெறத் தகுதியான வயது இப்பொழுது 60ல் இருந்து 62க்கு உயர்த்தப்படும். எந்தவித பெரிய அபராதங்களும் இல்லாமல் ஓய்வூதியங்களை பெறும் வயது 65ல் இருந்து 67 என்று உயர்த்தப்படும். இது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றில் கணிசமான இழப்பைப் பிரதிபலிக்கிறது. இவர்கள் விரிவாக்கப்பட்ட பணிக்காலம் மற்றும் பாதுகாப்பற்ற வேலைகள் ஆகியவை வறுமை நிறைந்த மூப்புக் காலத்தில் முடியும் என்று அஞ்சுகின்றனர்.

இந்த இழப்புக்கள் தெருக்களில் இருந்து அழுத்தம் கொடுப்பதின் மூலமோ, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே பேச்சுக்கள் மூலமோ மீண்டும் ஈடுகட்டப்பட முடியாது என்பது இப்பொழுது முகம் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தை வீழ்த்தி அதற்குப் பதிலாக ஒரு தொழிலாளர்களின் அரசாங்கம் அமைப்பதற்கு அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களின் அணிதிரள்வு மற்றும் தொழிற்சங்கங்கள் அவற்றின் அரசியல் கூட்டுக்கள் இவற்றில் இருந்து சுயாதீனமான முறை மூலம்தான், அது சாதிக்கப்பட முடியும்.

சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) தொடர்புடைய பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CFDT) இப்பொழுது பாராளுமன்றம் சட்டத்தை இயற்றிவிட்டதால் எதிர்ப்புக்களை நிறுத்திவிடும் என்று தன் விருப்பத்தை தெளிவாக்கியுள்ளது. தொழிற்சங்கங்கள் இதையொட்டி அடுத்த செயலில் ஈடுபடலாம், அதாவது முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் ஊதியங்கள் மற்றும் சமூக நலன்கள் பற்றி பேச்சுக்கள் நடத்தி பிரெஞ்சுப் பெரு வணிகங்களின் இலாபத்தையும் போட்டித் தன்மையையும் தக்க வைக்கலாம் என்பது பற்றி.

Dominique Paillé, ஆளும் UMP யின் செய்தித் தொடர்பாளர் கூறியது போல், “இன்னும் அதிக தொழில்துறை நடவடிக்கை மற்றும் எதிர்ப்புக்கள் ஆகியவை ஏற்பட்டால், நம் கடமைகளைச் செய்வதற்கான பெரும் அடியாகி விடும். ஆகவே நாம் எமது பொறுப்புக்களை நாம் செய்ய வேண்டும். நெருக்கடியில் இருந்து நாம் வெளிப்பட்ட பின்னர், பிரான்ஸ் சர்வதேச அரங்கில் முக்கிய அரசாக இருக்க முடியும்.”

Nice
நீஸ்: கோஷ அட்டகைகள் கூறுவது, “இங்குதான் கல்வி,சுகாதாரம், நீதி, வேலைநிறுத்தம் செய்யும் உரிமை, ஜனநாயகம், சிந்திக்கும் உரிமை, வெளிப்படுத்தும் உரிமை, செய்தி ஊடக உரிமை, மனித உரிமை, சிறார் உரிமை, சமத்துவம் ஆகியவை புதைக்கப்பட்டுள்ளன. நாம் கண்டிப்பாகச் செயல்படவேண்டும்!!!

கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) அல்லது சோசலிஸ்ட் கட்சியோ இக்கருத்துடன் அடிப்படை வேறுபாடு கொண்டிருக்கவில்லை. ஆனால் CGT செயற்பாட்டை இழந்துவிட்டதாகக் காட்டிக் கொள்ளத் தயக்கம் கொண்டுள்ளது, ஏனெனில் தொழிலாளர் வர்க்கம், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரின் சில பிரிவுகளில் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும் என்று அது அஞ்சுகிறது. உண்மையில் 2007ல் சார்க்கோசி தேர்தலில் வெற்றி அடைந்தபின் அவருடைய சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட அது பெரிதும் உதவியுள்ளது. அதையொட்டித்தான் பிரான்சின் பெருவணிகத்தின் திறன் நீடிக்கும். CGT பொதுச் செயலாளர் பேர்னார்ட் தீபோ சனிக்கிழமை அன்று செய்தி ஊடகத்திடம் கூறினார்: “இறுதி வரை நாம் போராடுவோம், நம் ஓய்வூதியங்களின் வருங்காலம் பற்றி மற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பேச்சுவார்த்தைகளை நடத்திப் பெறும் வரை… இப்புதிய நடவடிக்கைகள் செயலில் வராமல் தடுப்பதற்கு இயன்றதைச் செய்வோம்.”

CGT பாரிஸ் ஆர்ப்பாட்ட அணிவகுப்பில் கட்சித் தலைவர்களுடன் முன்னணியில் சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளரான Martine Aubry செய்தி ஊடகத்திடம் கூறினார்: “நாம் இதை ஏற்கவில்லை, இறுதிவரை சோசலிஸ்ட்டுக்கள் பிரெஞ்சு மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஆதரவாக நிற்பர்.” இது 2012 ஜனாதிபதித் தேர்தல்களில் PS வேட்பாளராக வரக்கூடிய டொமினிக் ஸ்ட்ராஸ் கானுக்கு ஒருவித நம்பகத்தன்மையைக் காப்பதற்காக கூறப்படுகிறது. அவர் IMF ன் தலைமை இயக்குனர் ஆவார். ஆனால் சார்க்கோசியின் ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு அவர் ஆதரவைத்தான் தெரிவித்திருந்தார்.

WSWS ஆதரவாளர்கள் அதன் கட்டுரைகளின் பிரதிகளை பாரிஸ், நீஸ் மற்றும் அமியானில் வழங்கினார்கள்.

பெரும் மழை பொழிவு இருந்தபோதிலும், 80,000 மக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வழிநடத்த பாரிசில் ஆர்ப்பாட்டத்தில் அணிவகுத்தனர். இவற்றின் உறுப்பினர்கள் WSWS விநியோகங்களுக்கு விரோதப் போக்கை காட்டினர். ஆயினும்கூட அணிவகுத்தவர்கள் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் விற்றுவிட்டதற்கு விரோதமாக இருந்தனர் என்பது தெளிவு. ஒருவர் தொழிற்சங்கங்களை எதிர்த்த கோஷ அட்டையில், “அவர்கள் நம்மை மீண்டும் காட்டிக் கொடுக்க விட்டுவிடாதீர்கள்” என்று எழுதப்பட்டிருந்ததை அசைத்துக் காட்டினார்.

மற்றொரு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோஷ அட்டை கூறியது: “பிரெஞ்சுக் குடியரசின் ஜனநாயகம்: சகிப்புத்தன்மை அற்ற நிலை, ஊழல், அரசியல்வாதிகள் மற்றும் அரச அமைப்புக்களின் குற்றம் சார்ந்த தன்மை.”

Nice
நீஸ்: பதாகை கூறுகிறது: CGT தொழிற்சங்கம் – Alpes-Maritimes பகுதி

5,000 பேருக்கு மேற்பட்டோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நீசில், மிக அதிகமாக பொலிஸ் சமூகமளிப்பு இருந்தது. இதற்குக் காரணம் இந்நகரத்தில் சார்க்கோசிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தது. எதிர்ப்பாளர்களை மிரட்டும் வகையில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தாலும், காலநிலை பாரிசில் இருந்ததைவிட WSWS நிருபர்களுடன் கருத்துப் பறிமாற்றங்களை எளிதாகச் செய்ய அனுமதித்தது.

WSWS ன் பகுப்பாய்வுகளையும் முன்னோக்குகளையும் பலரும் வரவேற்றதுடன் 2012ல் ஒரு PS அரசாங்கம் என்பதைத் தவிர மற்றொரு மாற்றீட்டைப் பரிசீலிக்கவும் விரும்பினர்.

சார்க்கோசிக்கு இப்பிரிவுகள் காட்டிய ஆழ்ந்த விரோதப் போக்கு இரயில்வே தொழிலாளர்கள் குழு ஒன்றின் மூலம் வெளிப்பட்டது. 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் கரவொலி எழுப்பி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சார்க்கோசியின் குற்றங்களை போலி விசாரணைக்கு தெருவில் உட்படுத்தினர். பிரெஞ்சுப் புரட்சி மற்றும் பண்டைய ஆட்சி அகற்றப்பட்டதை நினைவுறுத்தும் தோரணயில், சார்க்கோசியின் உருவப் பொம்மை “கில்லட்டின்” இயந்தரத்தின் மூலம் தலைதுண்டிக்கப்பட்டு, தலை ஒரு கம்பின் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது.

Mock trial
நீசில் சார்க்கோசி மீதான ஒரு போலி விசாரணை

தொழிற்சங்கத்தில் சேராத ஒரு ஆலைத் தொழிலாளி கூறினார்: “ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்வோம், 2012 தேர்தலில் அவரைத் தோற்கடிப்போம்.” PS சார்க்கோசியின் சட்டத்தை மாற்றும் என்று அவர் நினைத்தாலும், கட்சியின் முக்கிய ஜனாதிபதி வேட்பாளரின் கொள்கைகளைப் பற்றி அவரிடம் கூறியபோது அவர் தன்னுடைய நிலைப்பாட்டைப் பற்றி மறு சிந்தனை செய்வதாகக் கூறினார்.

சுயாதீனமாக பங்கு பற்றிய இரு ஓய்வூதியக்காரர்கள் சுயாதீன நடவடிக்கை குழுக்கள் கட்டமைப்பதற்கும் தொழிற்சங்கங்களில் இருந்தும் முதலாளித்துவ “இடது” கட்சிகளிடம் இருந்தும் முறிப்பதற்கும் ஆதரவை வெளிப்படுத்தினர். ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கியப்படும் எமது கொள்கை பற்றி அவர்கள் பெரும் ஆர்வத்துடன் ஆதரவைக் காட்டினர்.

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர், நீசிஸ் நகரத்திற்கு வெளியே இருந்து வந்தவர் தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளை நிராகரித்த வகையில், தான் சார்க்கோசி செய்வது அனைத்திற்கும் எதிர்ப்புக் காட்டுவதாகக் கூறினார். “நாம் ஒரு போரை எதிர்கொள்கிறோம் —ரோமாக்களை நாடுகடத்தியதானது இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை வெளியே அனுப்பியதற்கு ஒப்பானதாகும்.” என்றார்.

Amiens
அமியன்: பதாகை கூறுகிறது: “தலைமுறைகளுக்கு இடையே ஒற்றுமை.

பிக்கார்டி பிராந்தியத்தின் தலைநகரான அமியானில் 3,000 மக்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். இந்த எண்ணிக்கை முந்தைய வாரம் விடுமுறை நாட்களில் வந்த 10,000 உடன் ஒப்பிடுகையில் குறைவு ஆகும். நகரத்தின் ஊடாகச் சென்ற ஆர்ப்பாட்ட அணிவகுப்பு CGT தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த 50 இளைஞர்களால் வழிநடத்தப்பட்டது “தலைமுறைகளுக்கு இடையே ஒற்றுமை” என்ற பதாகையும் தாங்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சற்றே அமைதியாக இருந்தனர். ஆனால் சட்டத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் உறுதி கொண்டிருந்தனர்.

ஒரு ஆசிரியர் பயிற்சியிலுள்ள டேவிட் கூறினார்: “தொழிற்சங்கங்கள் இடைவெளி விட்டு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பினாலும், இளைஞர்கள் இடைவெளியை இட்டு நிரப்புவார்கள். கட்டுப்பாட்டை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.”

ஆர்ப்பாட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் WSWS இடம் அவர்களுள் பலருக்கும் UNEF (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் மாணவர் சங்கம்) கொடுத்துள்ள அழைப்பிற்கு விடையிறுப்பது பற்றிச் சந்தேகம் என்றனர். ஏனெனில் அது 2008ல் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி சட்டத்திற்கு எதிரான மாணவர்களின் நான்கு மாத வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்துவிட்டது.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் பிரச்சாரத்துடன் —ஓய்வூதியங்களைக் பாதுகாத்தல் என்னும் மறைவில் நடப்பது பற்றி— 2012 ஜனாதிபதித் தேர்தலில் சார்க்கோசிக்கு பதிலாக தங்களுக்கு ஆதரவைக் காட்டுவதில் தொடர்பு கொள்ளுவதை மேலும் பல மாணவர்கள் எதிர்த்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் ஓய்வூதிய வயது “ஒரு மாற்றமுடியாத கொள்கை” அல்ல என்று கூறியுள்ளார்.