சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The Town: Clichés and engaging performances

The Town திரைப்படம்: சில காட்சிகளும், நடிப்பும்

By Clare Hurley
5 November 2010

Use this version to print | Send feedback

சுக் ஹோகனின் Prince of Thieves நாவலை மையமாக கொண்ட இத்திரைப்படத்தை இயக்கியவர்: பென் அஃப்லெக் (Ben Affleck), உதவி-கதாசிரியர்கள்: அஃப்லெக், பீட்டர் க்ரெய்க் மற்றும் ஆரோன் ஸ்டோக்கார்ட்.


The Town

The Town திரைப்படம் பென் அஃப்லெக்கின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தைப் போன்றே திருட்டு சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திகில் படமான அவருடைய Gone Baby Gone (2007) திரைப்படம், மஸ்ஸாச்சுசெட்ஸ்ஸில் தொழிலாள வர்க்கம் நிறைந்த போஸ்டன் பகுதியில் படமாக்கப்பட்டிருந்தது.

கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் (Clint Eastwood) இயக்கத்தில் வெளியான Mystic River (2003) மற்றும் மார்டின் ஸ்கொர்சேஸினால் இயக்கப்பட்டு, அஃப்லெக்கின் நீண்டகால நண்பரும், நடிப்புலக கூட்டாளியுமான மட் டேமோன் (Matt Damon) நடித்திருந்த The Departed திரைப்படம் உட்பட, சினிமாவில் வளர்ந்துவரும் துணை-உத்தியின் ஒரு பகுதியாக, The Town திரைப்படம் வீரதீர காட்சி நிறைந்த பொழுதுபோக்கு படமாக இருப்பதற்கு ஊடாக, அமெரிக்காவின் பொதுவான வாழ்க்கை நிலைமைகள் குறித்து சிறிது வெளிப்படுத்தவும் முயன்றிருக்கிறது. ஆனால் பிந்தைய விஷயத்தைச் செய்திருப்பதை விட முந்தையதை செய்வதில் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கிறது.

படம் தொடங்கும் போது, “ஒவ்வொரு ஆண்டும் போஸ்டனில் 300 வங்கி கொள்ளைகள் நடக்கின்றன. கொள்ளையடிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் இவர்களில் பெரும்பாலானவர்கள் 1 சதுர மைல் தூரத்திற்கு அருகிலிருக்கும் சார்லஸ்டவுன் (Charlestown) என்றழைக்கப்படும் இடத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்று நமக்கு கூறப்படுகிறது. நமக்கருகில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் பல திருடர்களை உருவாக்குவதில் நம்பமுடியாத அளவிற்குத் திறமையைப் பெற்றிருக்கலாம் என்பது அஃப்லெக் (Affleck) படத்தின் தொடக்கத்திற்கு உதவியிருக்கிறது, இதன்மூலம் அவர் முறையான கல்வியின்மை, வேலைவாய்ப்பின்மை, சமூக சீரழிவு மற்றும் (மிகவும் சிறிய சிறிய குற்றங்களை அல்லாமல்) சிறிய சிறிய குற்றங்களை கையாண்டிருக்கலாம். அத்துடன் இந்த வரலாற்றுரீதியிலான ஐரிஷ்-அமெரிக்க வாழுமிடங்களிலும் அல்லது வேறு எங்கேனும் ஏற்படும் வர்க்க பதட்டங்களையும் கூட கையாண்டிருக்கலாம்.

டௌக் மெக்ரே (அஃப்லெக்) மற்றும் ஜேம்ஸ் "ஜெம்" கௌலின் (ஜெர்மி ரென்னர்) தலைமையில், சிறுவயதிலேயே நண்பர்களாக இருக்கும் ஒரு குழுவால் மிக சாமர்த்தியமாக ஹார்வர்ட் சதுக்கத்தில் ஓர் அச்சுறுத்தும் பகல்-கொள்ளை நடத்தப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில், அவர்கள் வங்கி நிர்வாகி கிளெய்ர் கீசெய்யையும் (ரிபெக்கா ஹால்) இழுத்து வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். பின்னர் அவர் பாதிப்பின்றி விடுவிக்கப்படுகிறார், ஆனால் அந்த பெண்மணி ஓர் "இளம் திறமைசாலி” (yuppie) என்பதும், அவர் அவர்களின் அருகாமையில் தான் இருக்கிறார் என்பதும், ஒருவேளை தெருக்களில் அவர்களை அவர் பார்க்கக் கூடும் என்பதும் அந்த கூட்டத்திற்குத் தெரிய வரும்போது, சிக்கல்கள் தொடங்குகின்றன.

கொள்ளையடிக்கும் நடவடிக்கையின் போது கிளெய்ருடன் மெக்ரே மிகவும் சுமூகமாக இருப்பதுடன் (“இங்கிருப்பவை உன்னுடைய பணம் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்" என்று கூறி அவரைச் சாமாதனப்படுத்தி வங்கி காப்பறையைத் திறக்கிறார்), அவர் மீதும் ஒரு கண் வைத்து கொண்டே தான் மெக்ரே அந்த வேலையைச் செய்கிறார். சலவையகத்தில் ஒருமுறை ஏற்பட்ட திடீர் சந்திப்பிற்குப் பின்னர், (அந்த சலவையகத்தில், கிளெய்ர் தாம் சமீபத்திய அனுபவத்தால் நிலைகுலைந்திருப்பதை வெளிப்படுத்துகிறார்) மெக்ரே கிளெய்ரிடம் ஒரு டேட்டிங்கிற்கு வர முடியுமா என்று கேட்கிறார். அந்த டேட்டிங்கின் போது, கிளெய்ர் ஏற்கனவே FBI அதிகாரி ஆடம் திறவ்லேயினால் (ஜொன் ஹாம், பிரபல AMC தொடரான Mad Menஇல் டான் டிராப்பராக பார்வையாளர்களுக்கு அறிமுகமாகி இருந்தவர்) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பதைத் தெரிந்து கொள்கிறார்.

மேலும் கொள்ளை அடித்தவர்களில் ஒருவர் பச்சைக்குத்தி இருந்த அடையாளத்தை பார்த்ததாகவும் கிளெய்ர் மெக்ரேயிடம் தெரியப்படுத்துகிறார். அதை அப்போதைக்கு தற்காலிகமாக திறவ்லேக்குக் கூற வேண்டாம் என்று அவரை மெக்ரே இணங்க வைக்கிறார். மெர்ரே ஆச்சரியப்படும் வகையில் சட்ட அமுலாக்க நெறிமுறைகளில் மிகவும் பரிச்சயமாகி இருப்பதாக அவரிடம் கிளெய்ர் கூறும் போது, தாம் அவற்றை எல்லாம் CSI: Crime Scene Investigation போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதன் மூலமாக பெற்றதாக நகைச்சுவையாக கூறுகிறார் மெக்ரே. உண்மையில், The Town திரைப்படம் பெரும்பாலும் ஒரு தொலைக்காட்சி தொடரின் ஒரு பகுதியைப் போன்று தான் உணரச் செய்கிறது. ஆனால் உண்மையில், HBO இன் The Wire போன்ற தொடர்கள் இன்னும் ஆழமாக அதே அடித்தளங்களைத் தான் கொண்டிருக்கின்றன.

மெக்ரேவும் அவருடைய குழுவும் ஓர் ஐயர்லாந்து கொள்ளைக்காரரான பெர்ஜிக்கு வேலை செய்து வருவதை FBI அதிகாரி திறவ்லேயும், அவருடைய குழுவும் கண்டுபிடிக்கிறார்கள். பூக்கடை வைத்திருக்கும் பெர்ஜி (பீட் போஸ்டெல்வெய்ட்) மெக்ரேயின் தந்தையையும் (க்ரிஸ் கூப்பர்) கொள்ளையடிக்கும் தொழிலில் "ஈடுபடுத்தி" வைத்திருந்தவர். மெக்ரேயின் தந்தை அரசாங்க சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார். கிளெய்ர் உடனான மெக்ரேயின் காதலும், குற்றங்களில் இருந்தும் (மற்றும் அவருடைய ஆக்ஸ்கொடின் பழக்கத்திற்கு அடிமையான முன்னாள் பெண்தோழி கிரிஸ்டாவிடமிருந்தும் [பிளெக் லைவ்லி]) விடுபட்டு வாழ்வதற்கான அவருடைய விருப்பமும் ஊகிக்கக்கூடிய விதத்தில் அவருடைய கூட்டாளியான ஜெம்மிற்கு பதட்டத்தை உருவாக்குகிறது. அத்துடன் குடும்பத்தின் மீதான மெக்ரேயின் "பற்றுறுதியின்" மீதும் மற்றும் அவருடைய வர்க்கத்தின் மீதும், மேற்கொண்டு கொள்ளைகள் நடத்துவது மற்றும் துப்பாக்கி சூட்டுடன் கார் விரட்டல்கள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவது ஆகியவை குறித்தும் ஜெம் கேள்விகளை எழுப்புகிறார்.

காட்சிகளும், வழக்கமான சம்பவங்களும் சலிப்பூட்டுகின்றன. முடிந்தவரையில் அவை சிறந்த நடிப்புகளால் நிறைவு செய்யப்படுகின்றன. குறிப்பாக துணை கதாபாத்திரங்களில் வரும் ரென்னர் மற்றும் லைவ்லியின் நடிப்பும், அத்துடன் போஸ்டெல்வெய்டின் வடு-கொண்ட வில்லன் கதாபாத்திரமும் குறிப்பிடும்படி உள்ளன. Gone Baby Gone படத்தில் இடம்பெற்றிருந்த தவிர்க்கமுடியாத வில்லன் கதாபாத்திரங்கள் போன்றே உருவாக்கப்பட்டிருப்பதாக தெரியக்கூடும் என்றாலும், அஃப்லெக் இதில் அவற்றிற்கு முற்றிலும் எதிர்புறத்திற்குச் சென்றுள்ளார்.

ஓரளவிற்கு படம் இரசிக்கும்படியாகவே இருக்கிறது. குறிப்பாக அதன் கலங்கடிக்கும் "பொலிஸ்-கொள்ளையர்களின்" பாணிக்காக இரசிக்கும்படியாக இருக்கிறது. CSI மற்றும் The Wire போன்றவை போலில்லாமல், குறிப்பிடத்தக்க அளவிற்கு உண்மையில் யாருக்குமே துன்பம் தராத "நகர்புறவாசிகளின்" அந்த சிறிய குழுவின் பக்கம் நம்முடைய அனுதாபங்கள் குவிகின்றன. வெற்றிபெறும் நிலையில் இருக்கும் பொலிஸ் துருப்பு அதன் செயல்திட்டத்தை முடிக்கும் தறுவாயில், இங்கே அவர்கள் தோற்று போகிறார்கள். எப்போதும் அதிகரித்து வரும் FBI அதிரடிப்படைகளின் எண்ணிக்கை, SWAT குழுக்கள், கமாண்டோ பிரிவுகள், மோப்பம் பிடிக்கும் நாய்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அனைத்துவிதமான அதிசக்தி வாய்ந்த ஆயுதங்கள், இன்னும் கிடைப்பதற்கரிய பலவற்றுடன் போஸ்டன் பொலிஸ் படை வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற இந்த புள்ளியை அஃப்லெக் தெளிவாக அடிகோடிட்டுக் காட்ட விரும்புகிறார்.

Bonnie and Clyde (ஆர்தர் பென்னால் இயக்கப்பட்டது, 1967) அல்லது Dog Day Afternoon (சிட்னி லூமெட்டால் இயக்கப்பட்டது, 1975) போன்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்த படங்களோடு ஒப்பிட்டு கூறும் போது, இது இந்த படத்திற்கு அரசியல்நிர்வாக அமைப்பிற்கு எதிரான ஒரு தன்மையை அளிக்கிறது. இருப்பினும், ஏறத்தாழ குறிப்பிட்ட அளவிற்கு சோகம் மற்றும் கொடூரமான மரணங்களுக்கு இடையில், அமைப்புமுறையை தாக்குவதற்கான விடாப்பிடியான முயற்சிகளுக்குப் பின்னால் தங்கியிருக்கும் இன்றைய ஆழமான சமூக பதட்டங்களை திருப்திகரமான விதத்தில் கதையோட்டத்தினூடாக இந்த படத்தால் கொண்டு வர முடியவில்லை.

மேல்தோற்றத்தில் ஒவ்வொன்றும் மிகவும் அழகாக தோன்றும் இந்த உலகத்தில், அல்லது எளிதில் கண்டுணரக்கூடியதாக இருக்கும் இந்த உலகத்தில் மற்றும் ஒவ்வொருவரும் தோற்றத்தில் எவ்வாறு இருக்கிறார்களோ அவ்வாறே (தெளிவாக தடுப்பான்கள் எனும் முத்திரை குத்தப்பட்டவர்கள்) இருக்கும் இந்த உலகத்தில் அன்றாட பயன்பாட்டுச்சேவை தொழிலாளர்களாக, EMT தொழில்நுட்ப வல்லுனர்களாக, பேருந்து ஓட்டுனர்களாக, பொலிஸ்காரர்களாவும் கூட "கடந்து செல்வதன்" மூலமாக ஓர் ஒடுக்குமுறை அரசின் துருப்புகளைக் கொள்ளையர்களால் ஏமாற்ற முடியும் என்பது தான் எடுத்துக்காட்ட வேண்டிய ஒரேயொரு கரும்புள்ளியாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இந்த தொழில்களைச் செய்கிறார்கள், இந்த சீருடைகளை அணிகிறார்கள். இந்த உள்கட்டமைப்பைப் பற்றிய அவர்களின் அறிவினால், இங்கே தவறுக்கு இடமில்லாத ஒரு பற்றுறுதி இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தால் (இப்படத்தில் காட்டப்படுவதைப் போன்ற) ஒரு வங்கி வேலையைவிட மேலானதை செய்து முடிக்க முடியும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் பிற கட்டுரை:

Gone Baby Gone: a moral mystery