சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Lessons of the European strike wave

ஐரோப்பிய வேலைநிறுத்த அலையின் படிப்பினைகள்

Alex Lantier
11 November 2010

Use this version to print | Send feedback

பிரான்சில் சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதானது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாக ஐரோப்பிய அரசாங்கங்களால் கைக்கொள்ளப்பட்ட சமூக வெட்டுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போராட்டங்களின் அரசியல்ரீதியான கணக்கெடுப்பு ஒன்றினை வரைந்துகொள்வதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிரான்சில் அக்டோபர் மாதத்தில் வெடித்த துறைமுக மற்றும் எண்ணெய் துறை வேலைநிறுத்தமானது, பரவலான உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆர்ப்பாட்டங்களின் ஆதரவுடன் சார்க்கோசிக்கான தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்கு உத்வேகமளித்தது, அத்துடன் கடுமையான பெட்ரோல் பற்றாக்குறைக்கும் துரிதமாய் கொண்டு சென்றது. வேலைநிறுத்தங்கள் ஆற்றல்மிக்கதாக இருந்ததோடு மிகவும் பிரபலமும் பெற்றன, அரசாங்கம் வெகுவிரைவிலேயே அரசியல்ரீதியாக தான் தனிமைப்பட்டிருப்பதைக் கண்டது.

ஆயினும், கலகத் தடுப்பு போலிசாரைக் கொண்டு வேலைநிறுத்தத்தை உடைப்பதில் வெற்றி கண்ட சார்க்கோசி நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் தொடர்ந்து நடத்தி வந்திருந்த எதிர்ப்புப் பேரணிகளை உதாசீனப்படுத்தி வந்திருக்கிறார்.

தொழிலாள வர்க்கத்தின் செறிந்த சமூக சக்தியை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கும் வர்க்க போராட்டத்தின் உலகளாவிய மீள்எழுச்சியின் ஆரம்ப கட்டங்களின் பகுதியே பிரெஞ்சு வேலைநிறுத்தங்கள் ஆகும். சனிக்கிழமை அன்று லிஸ்பனில் 100,000க்கும் அதிகமானோர் சோசலிஸ்ட் கட்சியின் பிரதமரான José Sócrates இன் சமூக வெட்டுக்களுக்கு எதிராக பேரணி நடத்தினர். நேற்று, லண்டனில் பல்கலைக்கழக கட்டணங்கள் மும்மடங்காய் அதிகரிப்பு கண்டதற்கு எதிராக நடந்த ஒரு மாணவர் ஆர்ப்பாட்டத்தில் 50,000 பேர் திரண்டனர், இவர்களில் ஒரு பகுதியினர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையகத்தை ஆக்கிரமிப்பு செய்து கலகத் தடுப்பு போலிசாருடன் மோதலில் இறங்கினர்.

ஆயினும், சமூக வெட்டுகளுக்கு எதிராக பெருந்திரள் எதிர்ப்பு இருந்தும் தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டக் களத்தில் இறங்க விருப்பம் தெரிவித்தும் கூட ஒவ்வொரு இடத்திலும் உழைக்கும் மக்கள் அலட்சியத்துடன் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் கொடுமையான உண்மையாக இருக்கிறது.

அரசாங்கங்கள், அவை கன்சர்வேடிவ் அரசாங்கமாயினும் சரி சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கமாயினும் சரி, மக்களின் எண்ணத்தை சற்றும் மதியாமல் ஒட்டுமொத்த அலட்சியத்துடன் மிருகத்தனமான வெட்டுகளைத் திணிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்லாமல் அரசுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் தாங்கள் நிற்பதைக் காண்கிறார்கள். முழுமையாய் புதியதொரு முன்னோக்கும் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளும் இதற்கு அவசியமாய் உள்ளன.

தொழிற்சங்கங்களும் நடப்பு “இடது” கட்சிகளும் தொழிலாளர்கள் மீது திணித்த அழுத்தம் கொடுக்கும் திவாலான அரசியல் முன்னோக்குத் தான் தொழிலாளர்களின் தோல்விகளுக்கு பிரதான காரணமாய் இருந்திருக்கிறது. 1930களுக்குப் பிந்தைய காலத்தில் இதுவரை கண்டிராத ஒரு முதலாளித்துவ நெருக்கடியால் செலுத்தப்படுகின்ற அரசும் ஆளும் வர்க்கமும் எந்த சலுகையும் அளிக்க நோக்கம் கொண்டிராத நிலைமைகளின் கீழ் இத்தகையதொரு முன்னோக்கு வழங்குவதற்கு எதுவும் இல்லை.

போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் போலவே கிரீஸிலும் தொழிற்சங்கங்கள் பல ஒருநாள் தேசிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. இந்த இளவேனில் காலத்தில் கிரேக்க கடன் நெருக்கடியின் போது தனது கடனுதவியாளர்களைத் திருப்திப்படுத்த சமூக ஜனநாயக அரசாங்கம் திணித்து வந்த வெட்டுகளை திருத்துவதற்கு அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் நோக்கமாகக் கொண்டிருந்ததாய் கூறப்பட்டது. எதிர்பார்த்தவண்ணம், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அரசாங்கமானது, பொருளாதார வாழ்வில் ஒரு தற்காலிக தடங்கலை மட்டும் சந்திக்க அவசியமாக்கிய அந்த ஆர்ப்பாட்டங்களை அலட்சியப்படுத்தியது.

விளைவுகள் தொழிலாளர்களுக்கு பேரழிவானதாய் அமைந்திருக்கின்றன. ஊடக மதிப்பீடுகளின்படி, கிரேக்க தொழிலாளர்கள் சராசரியாக 30 சதவீத ஊதிய வெட்டினை பெற்றுள்ளனர்.

பிரான்சில், அரசாங்கமும் ஊடகங்களும் இதேபோன்ற எதிர்ப்புகளை பகிரங்கமான அலட்சியத்துடன் அணுகியுள்ளன. இவை எல்லாம் “சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் ஒரு அத்தியாயம்” என்பதாக ஒரு வர்ணனையாளர் Le Monde பத்திரிகையில் கருத்துக் கூறினார். இத்தகைய ஆர்ப்பாட்டங்களின் பலனற்ற தன்மை குறித்த தொழிலாளர்களின் விரக்தியைப் பிரதிபலிக்க முனைந்த ஒரு தொழிற்சங்க நிர்வாகி, “சும்மா தெருக்களில் நடந்து திரிந்து அலுத்துப் போய் விட்டோம்” என்று விளக்கினார்.

இவ்வாறிருப்பினும், வெட்டுகளுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களின் முக்கியமான பணி இந்த பேரணிகளில் பெரும் எண்ணிக்கைகளில் கலந்து கொள்வது தான் என்று நடுத்தர வர்க்க முன்னாள்-இடது கட்சிகள் (கிரேக்கத்தில் SYRIZA அல்லது பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி) வலியுறுத்தின. இந்த சிடுமூஞ்சித்தனமான கொள்கையின் மூலமாக, பிற்போக்குவாத அரசாங்கங்களுக்கு எதிராக போராடுவதற்கான வெகுஜனங்களின் விருப்பத்திற்கு விண்ணப்பிக்கும் அதே வேளையில் அதனை தொழிற்சங்கங்களின் பின்னால் செலுத்துவதற்கு (தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்கும் ஆர்ப்பாட்டங்களின் முட்டுச் சந்து முடிவுகளில் தொழிலாளர் வர்க்கம் வெறுப்படைந்து வருவது அதிகரித்து வரும் நிலையிலும்) இவை பாதையமைத்தன.

தொழிலாள வர்க்கத்தின் நெடிய தொழிற்துறைப் போராட்டங்களின் வெடிப்பானது, உண்மையான போராட்டத்தின் காலங்களில் அரசின் பிரதிநிதிகளாக செயல்படுகின்ற இந்த அமைப்புகளின் முகமூடிகளை கிழித்தெறிந்துள்ளது. கிரேக்கத்தில் ஜூலை-ஆகஸ்டு பார வண்டி வேலைநிறுத்தத்தை உடைக்க இராணுவத்தை PASOK பயன்படுத்தியதற்கு தொழிற்சங்கங்கள் பகிரங்கமாய் ஆதரவளித்தன. சென்ற மாதத்தில் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எதிரான சார்க்கோசியின் வேலைநிறுத்த-உடைப்பு முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு பக்கபலமான வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவில்லை.

மற்ற இடங்களில், அடையாள வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கும் கூட சங்கங்கள் மறுத்து வந்துள்ளன. அயர்லாந்தில் அரசு பாரிய வேலைநீக்கங்களுக்கும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும் தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில், பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நான்கு ஆண்டுகளுக்கு வேலைநிறுத்தம் செய்வதில்லை என்பதற்கான உறுதிப்பாட்டினை வழங்கும் பேச்சுவார்த்தையில் இந்த ஏப்ரலில் பங்குபெற்றன.

பிரிட்டனில், சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் டேவிட் கேமருனின் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாடு தழுவிய வேலைநிறுத்த நடவடிக்கைக்கான எந்த திட்டங்களையும் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவில்லை. 83 பில்லியன் பவுண்டு செலவின வெட்டுகளுக்கு கேமரூன் உறுதியளித்திருக்கிறார், 500,000 பொதுத் துறை வேலைகளை அகற்றுவதும் இதில் அடங்கும், மில்லியன்கணக்கில் செல்லும் ஒட்டுமொத்த வேலை இழப்புகளில் இந்த எண்ணிக்கையே முன்னிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் செய்பவர்களைத் தனிமைப்படுத்தி வர்க்க போராட்டத்தை அடக்கும் தொழிற்சங்கங்களின் கொள்கை குறித்து மவுனம் காப்பதின் மூலம் நடுத்தர வர்க்க கட்சிகள் காட்டிக் கொடுப்புகளில் துணைபோகின்றன. தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து தப்பிக்கும் தொழிலாள வர்க்கத்தின் எந்த இயக்கத்துக்கும் இந்த நடுத்தர வர்க்க கட்சிகள் காட்டும் எதிர்ப்புடன் இது பிணைபட்டு இருக்கிறது.

ஐரோப்பாவிலும் சர்வதேசரீதியாகவும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான தொழிற்துறை மற்றும் அரசியல் போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுகளை இழுப்பதற்கு அவசியமான அரசியல் முன்னோக்கையும் புதிய அமைப்புகளையும் அபிவிருத்தி செய்வது தான் மிக முக்கிய கேள்வியாகும். இந்த காரணத்தின் பொருட்டு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான மற்றும் சோசலிசக் கொள்கைகளுக்கான ஒரு போராட்டத்தின் அடிப்படையிலமைந்த போராட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்க உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

மேற்கு ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர்கள் வென்றிருந்த போருக்குப் பிந்தைய சமூக தேட்டங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன, ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தங்களது வர்க்க சகோதரர்களுக்கு எதிராக தொழிலாளர்களை ஒரு கீழ்நோக்கிய சுழல் போட்டிக்குள் தள்ளி ஆளும் வர்க்கம் தன்னை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் நிலைமையை நஞ்சாக்கி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு ஐரோப்பா முழுவதிலும் இஸ்லாமிய-விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத மேலாதிக்கத்தை ஊக்குவிப்பதும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் தேசியப் போராட்டங்கள் அல்ல, மாறாக ஐரோப்பிய அளவிலான மற்றும் உலக அளவிலான போராட்டங்கள் ஆகும், அந்த அடிப்படையில் மட்டுமே போராடப்பட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் சேவைக்கு உறுதியெடுத்துக் கொண்ட அமைப்புகளின் வழியே அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாக்க முடியாது. அதே சமயத்தில், அனைத்து கட்சிகளுமே வரலாற்று அளவிலான வெட்டுகளை திணிப்பதற்கு உறுதியுடன் இருக்கும் நிலைமைகளின் கீழ், இது அந்தந்த நாடுகளில் மாற்று முதலாளித்துவ அரசாங்கங்களை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதான பிரச்சினையும் அல்ல.

சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலமைந்த தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் பகுதியாக ஜனநாயக-விரோத முதலாளித்துவ அரசாங்கங்களை தூக்கியெறிவதற்கு தொழிலாளர்கள் போராட வேண்டும். ஐரோப்பாவில், இந்த வேலைத்திட்டமானது முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கியெறிந்து ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும். இந்த போராட்டம், தன் பங்கில், சர்வதேசரீதியாக தொழிலாளர் அதிகாரத்திற்கான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துபட்டு இருக்கிறது.

தொழிலாள வர்க்கம் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு சர்வதேச அளவில் நிதிப் பிரபுத்துவத்தால் நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை நிகழ்த்துவதற்கு ஒரு கட்சியைக் கட்டும் பணிக்கு முகங்கொடுக்கிறது. ஐரோப்பாவில் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து வாசித்து வருவதற்கும், அதனைத் தொடர்பு கொள்வதற்கும், மற்றும் ஐரோப்பிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டுவதற்காகப் போராடுவதற்கும் உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக்கு ஊக்கமளிக்கிறது.